முப்பதாண்டுத் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டம் பலி கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னமும் சரியாகக் கணிப்பிடப்படவில்லை. அது ஏதாவது ஒரு வழியில் இன்னமும் தொடர்கிறது. மக்களின் அவலங்கள் ஒரு புறத்தில் தொடர்கதையாக மறுபுறத்தில் ராஜபக்ச அரசு தனது சர்வாதிகாரத்தைத் தமிழ்ப் பேசும் மக்களின் மரண ஓலத்தின் மேல் இறுகக் கட்டமைத்துக் கொள்கிறது.
பசியால் தமிழ்ப் பேசும் மக்கள் செத்துப் போகின்ற நிலைமையை அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பேரினவாதம் திட்டமிட்டு சிறுகச் சிறுகச் சிதைத்துக்கொண்டிருக்கிறது.
பேரின வாத அரசு தனது மேல் நிலையை பேணிக்கொள்ள, அதன் ஒவ்வொரு அங்கங்களும் மேலும் வலுவாக ஒழுங்கமைத்துக்கொள்கிறது.. இலங்கை அரசு முன்னைய புலிகளின் பகுதிகளைக்கூட தனது அடக்கு முறையின் அங்கங்களாக மாற்றியிருக்கிறது. கல்வி, கலாச்சாரக நிறுவனங்கள், தொழிற்துறை, பொருளாதாரம், அரசியல் என்ற அனைத்து அங்கங்களும் பேரினவாதச் சிந்தனையின் செயற்படு கருவிகளாக மாறியுள்ளன.
சிறுகச் சிறுக வளர்ந்த பேரினவாதம் வரலாற்றில் எப்போதும்ம் இல்லாதவாறு மிக ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமாகிவருகிறது.
இறந்து போன வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்க்க முற்படுகின்ற நாம் கற்றுக்கொள்வது குறித்துப் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் கோடிட்டுக் காட்டப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.
புலிகள் குறித்த முதலாவது விமர்சன வகையானது அவர்கள் மீதான உணர்ச்சிவயப்பட்ட அவர்கள் பாணியிலான தாக்குதலாக அமைகிறது. பிரபாகரனை சூரியத் தேவன், கடவுள் என்று கட்டமைக்கின்ற அதீத விம்பங்களின் எதிர் வினையாக அவரை அரக்கன், சாத்தான் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் போன்று புனைய முனையும் ஒரு பகுதியினர் இவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர்.
பொதுவாக போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வை உருவாக்க முனையும் அரச ஆதரவாளர்கள் ஒரு புறத்திலும் தமது சொந்த நோக்கங்களை முன்னிலைப்படுத்தும் சீரழிவு வாதிகள் மறுபுறத்திலுமாக உணர்ச்சிவயப்பட்ட அரசியலற்ற அவதூறு வடிவிலான பரப்புரைகள் அபாயகரமானவை.
எதிர்விளைவுகள் குறித்தோ மக்கள் நலன் குறித்தோ சிந்திக்காத குறுகிய அரசியல் நோக்கமுடைய இவர்களின் கருத்தாடல்களின் சமூகத்தின் மீதான பாதிப்பு எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
தேசிய இன ஒடுக்கு முறை பிரதான முரண்பாடாக வளர்ச்சியடைந்த சூழலில் அதற்கான போராட்டத்தில் 80 களின் இறுதிப்பகுதியின் பின்னர் இணைந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளுடனேயே இணைந்திருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளாகட்டும், இந்திய உணர்வாளர்களாகட்டும், இலங்கையின் எல்லைக்குள்ளாகட்டும் புலிகள் என்பதைத் தவிர வேறு தெரிவு இல்லாத நிலையை புலிகள் ஏற்படுத்தியிருந்தார்கள்.
இந்தச் சூழலில் புலிகளோடு இணைந்து கொண்ட அல்லது ஆதரவு வழங்கிய பெரும்பாலானோர் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வின் அடிப்படையிலேயே இணைந்து கொண்டனர்.
இவர்கள் அன்னியப்படுத்தப்பட வேண்டியவர்களல்ல.
போராட்டத்தின் சரியான திசைவழியை நோக்கி இணைத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள். அரச வலைப்பின்னல்களினதும் சீரழிவு வாதிகளதும் அவதூறு வடிவிலான பிரசாரமானது இவர்களைத் திட்டமிட்டோ அல்லது அறியாமலோ அன்னியப்படுத்தும் செயற்பாட்டையே மேற்கொண்டுவருகிறது.
தவறான போராட்டம் அழிந்து சிதைந்து போன வரலாறு ஒரு புறமிருக்க அந்த அழிவும் போராட்ட வழிமுறையும் மக்கள் மத்தியில் பாரிய வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அலவத்துள் வாழும் மக்கள் மத்தியில் இவ்வெறுப்புணர்வு சிறிய அளவிலான எதிர்ப்பியக்கங்கள் கூட உடனடியாக உருவாக முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், புலிகளின் மீதான அரசியலற்ற தாக்குதல்கள் தேசிய இன அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் மக்களையும், தேசிய உணர்வுகொண்ட ஏனைய சக்திகளையும் அன்னிமாக்கும் நிகழ்ச்சிப் போக்கையே கொண்டுள்ளது.
இரண்டாவது வகையினர் புலிகளின் கடந்தகால அரசியல் மீதான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். புலிகளினதும் பிரபாகரானதும் அரசியல் ஏற்படுத்திய அழிவுகளின் பின்னணியிலிருந்த அரசியல் அதன் எதிர் விளைவுகள் என்பன பற்றிப் பேசுவது இன்றயை சிக்கலான காலத்தின் அவசியமான ஒன்றாகும்.
முதலில் புலிகளின் தவறான அரசியல் வழிமுறை வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டத்தை நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்நகர்த்தியுள்ளது. தேச உருவாக்கத்தை இன்று கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களைப் போராட்டங்களின் மீது விரக்திகொள்ளச் செய்திருக்கிறது.
புலிகளின் அரசியற் தவறு குறித்த கற்கை இன்று அவசியமாகிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அனைத்துத் தளத்திலும் அவசியமானது என்பதை உணர்ந்துகொள்வதும், புலிகளதும், பிரபாகரனதும் அரசியற் தவறுக்கான ஊற்று மூலத்தைக் கண்டறிவதும் அவசியமானது .
பிரபாகரன் தியாகியா துரோகியா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது என்பதே அவசியமானது.
ஆரம்பத்திலிருந்தே போராட்டம் அழிந்துபோவதற்கான கட்டமைப்புக்களையே உள்வாங்கி வழி நடத்தப்பட்டது என்பதற்கான அரசியல் கண்டறியப்பட வேண்டும்.
உலக ஒழுங்கு மாற்றமடைந்த வேளையில் பிரபாகரன் தலைமை வகித்த இராணுவம் அழிக்கப்பட்டது என்பது ஒரு வகையான வாதம். உலகம் மாற்றமடைந்த வேளையில், ஏகபோகங்களின் ஒழுங்கு மறுசீரமைக்கப்பட்ட வேளையில் போராட்டத்தை இலகுவாக அழிக்கக் கூடிய வகையில் எங்கே தவறிழைக்கப்ப்பட்டது எனபது ஆராயப்பட வேண்டும். போராட்டத்தின் பேரால் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிகளின், மக்களை நேசித்தவர்களின் வாழ்வு “சரியான வழிமுறைகளைக் கண்டறிவதற்கான விமர்சனம்” என்ற முழக்கத்தின் மீதே அர்த்தமுடையதாகும்.
மறு பதிவு : Published on: Oct 13, 2010 @ 21:45
expected death toll was 45000 and above civilianson 22nd july 2002……. everything going smooth… dont worry….target is being trapped….u calm own..
பணக்காரர்களின் போராட்டம் நியாயமான ,நீதியான விடுதலைப் போராட்டம். ஏழைகளின் போராட்டமோ அனீதியான பயங்கரவாதப்போராட்டம். அமேரிக்கா வியட்னாம் மீதும் , ஆப்கானிஸ்த்தான் மீதும் , ஈராக் மீதும்…….றஸ்யா செச்சேனியா மீதும் , இந்தியா காஸ்மீர் மீதும் தொடுத்த, தொடுக்கின்ற போராட்டம் மடும் தான் நீதியானது மக்களே….! நம்மிடம்தான் எண்ணையும் இல்லை , கஞ்சாவும் இல்லை. எமது போராட்டம் எப்பவுமே பயங்கரவாதாப் போராட்டம்தான்.
கண்டவன் நிண்டவன் எல்லாம் அரசியல் கற்றுகுட்டி பாடம் எடுக்க வெளிக்கிட்டானுகள் “பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது” நீங்கள் சொல்லவரும் தவறான போராட்ட முறை என்பதுதான் என்ன? மக்கள் விரோத ஜனநாயக விரோத ஏகத்துவ முறையா அல்லது நீங்கள் இதை உலகின் எந்த அசைவியக்கங்களிலும் காணவில்லையா ? இன்றைய உலக ஒழுங்கில் வல்லவனுக்கு முதுகு வளைக்கவேணும் எண்டதுதான் பிரபாவுக்கு தெரியாத அரசியல் எண்டால் அதை எந்தத்தருணத்திலும் பிரபா செய்த்தயாராய் இ௫க்கவில்லை இருந்திருக்கவில்லை. இந்திய மேலைத்தேய கீழத்தேய வல்லாதிக்க சக்திகளினுடனான பிரபாவின் அணுகுமறை என்பது எமது விடுதலை போராட்டத்தையும் போராட்ட அமைப்புகளையும் எப்படி இந்தியா பாவித்தது பாவிக்க முனைந்தது என்பதில் இருந்து புரிதல் அவசியம். பிரபா மீது விமர்சனம் வைக்கும் நாம் எல்லோரும் தமிழர்களின் மீட்சி என்ற தெளி ஞான நிலையில் இருந்துதான் கருத்துகளை முன்வைக்கிறோமா? அல்லது நாம் காத்திரமானது காலத்தின்தேவை என கருதும் விடயங்கள் எம்முள் மேலும் மனச்சிதைவை உண்டாக்குகிறதா?
எனக்கு என்னுடைய அப்பன், அந்த அப்பனின் அப்பன், பாட்டன், பூட்டன், கோந்துறு, பாந்துறு …, எல்லோருமே தமிழை தமிழராய், தமிழ்ப் பெயர் சூட்டி, தமிழ் கற்பித்து வாழ்ந்தவர்கள். இப்போதும் வாழ்பவர்கள். நீர் யார்..? கிறுக்கன் என மண்டை பிழைச்ச பெயர் வைத்துக்கொண்டு என்ன எழுதுகிறீர்..? யாருக்குப் பயப்படுகிறீர்..!? சொந்தப் பெயர் இருந்தால் அதைப் பதிந்து கருத்தைச் சொல்வது நலம். கண்டவன் நிண்டவன் எல்லாம் என்று எழுதுகிறீரே..!? அப்பிடியென்றால் என்ன..? நீர் எந்த நாட்டிலிருந்து எழுதுகிறீர்..? அங்கே உனைக் கண்டவன், மூல நோயால் இருக்க முடியாது நிண்டவன் எல்லோரும் இப்போது தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டார்களோ..!? உந்தப் பிரபா, பனங்கொட்டைத் தலைவா என்கிறீரே..? ஆரம்பத்தில் எனைப்போன்ற பலர் உந்த வெண்காயங்களுக்கு படிச்சுப் படிச்சுச் சொன்னோம். அந்த கிறுக்கு மண்டைகளுக்குள் மண்ணாங்கட்டி. இறுதிக் காலத்திலும் சொன்னோம், உந்த மிருகக் கொடியை கீழே வைத்துவிட்டு, இந்த உலகத் தெருக்களில் மக்களைப் போராட விடுமாறு. பன்றிக் கும்பலுக்கு அவையெல்லாம் செவிடன் காதில் சங்காக இருந்தது. பேந்தென்ன தெளிஞான நிலை என்று எழுதுகிறீர்..? பேரினவாத சிங்கள அரசுக்கு, குட்டி முதலாளித்துவ சிறுபான்மைத் தமிழரை தமது கையால் அழித்துக் கொடுத்த பிரபாவையும் புலிப் பித்தலாட்டத்தையும் கிறுக்கனான நீர்..!? எது காலத்தின தேவை தற்போது..? கிறுக்கனான நீர் சிறிலங்கா சென்று, அங்கே மனநோய்ச் சிகிச்சை பெறுவதே ஆகும்.- லோகன்.
நீர் எழுதுறதில இருந்து தெரியுது பெரிய அறிவாளியெண்டு (ஒருநாளும் என்னை நான் அறிவாளி எண்டு சொல்லிக்கொளுவதில்லை நான் சிறியவன் எளியவன் அதிகம் அதட்டினால் அழுதும்விடுவேன் அது சரி ஒரு சொல் பெயர் ஆகவும் வினையாகவும் வருமிடத்து எப்படி போருள்கொள்ளுவீர்? ) படிப்பறிவில்லாத பிரபாவுக்கு விளங்கியிருக்காதுதான்…… நீங்கள் ஏன் அவரைப்பற்றியே குலைக்கிறியள் பேசாமல் உங்கடை அறிவை பாவிச்சு தமிழனுக்கு விமோசனத்தை தேடுங்கோ…
ஒருநாளும் என்னை நான் அறிவாளி எண்டு சொல்லிக்கொளுவதில்லை .
அப்படியென்றால் நீங்கள் உங்களை கிறுக்கன் என்றுமல்லவா சொல்லமுடியாது.
எனது அறிவுக்கு எட்டியவரையில் “அறிவாளி” இல்லையெண்டால் “கிறுக்கன்” இல்லை எண்டு சொல்லமுடியாது என்பது எப்படி எண்டு தெரியவில்லை. ஒரு சொல் பெயராகவும் வினையாகவும் வருமிடத்து வேறு வேறு பொருள் குறித்து நிற்கலாம். லோகன் மனநோய்க்கும் மூலக்கொதிக்கும் தியானம் நல்ல மருந்து எண்டு சொல்லுறாங்கள்……. முயற்ச்சி செய்து பார்க்கலாம் இல்லையா ஏனெனில் ஆங்கில மருத்துவத்தை நாடும் போது அது பக்கவிளைவுகளையும் தருகிறது.
தமிழ் மக்கள் தமது விடுதலை குறித்த எதிர்கால எத்தனங்களுக்கு அஜித்தால் சொல்லப் பட்ட விடயங்கள் மிகவும் ஜதார்த்தமானது. புலி எதிர்ப்பு புலி ஆதரவு என்ற மடமைக்குள் அல்லது இருட்டுக்குள் இருக்கும் அனைவருக்கும் இங்கு அஜித் சுட்டிய விடயங்கள் கண்களை அகலத்திறந்து புதிய பாதையில் பயணிக்க உதவும் என்பதே எனது முடிவாகும். எனவே வாசகர்களே இங்கு சொல்லப்பட்ட விடயங்களை மீள மீள நினைவுறுத்தி கொள்ளுங்கள். இங்கு நான் அஜித்தால் சொல்லப்பட்ட விடயங்களை மேலும் அழுத்தி சொல்வதர்காக கீழே மீள் பதிவாக்குகிறேன்.
தேசிய இன ஒடுக்கு முறை பிரதான முரண்பாடாக வளர்ச்சியடைந்த சூழலில் அதற்கான போராட்டத்தில் 80 களின் இறுதிப்பகுதியின் பின்னர் இணைந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளுடனேயே இணைந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் புலிகளோடு இணைந்து கொண்ட அல்லது ஆதரவு வழங்கிய பெரும்பாலானோர் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வின் அடிப்படையிலேயே இணைந்து கொண்டனர்.
இவர்கள் அன்னியப்படுத்தப்பட வேண்டியவர்களல்ல. தவறான போராட்டம் அழிந்து சிதைந்து போன வரலாறு ஒரு புறமிருக்க அந்த அழிவும் போராட்ட வழிமுறையும் மக்கள் மத்தியில் பாரிய வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அலவத்துள் வாழும் மக்கள் மத்தியில் இவ்வெறுப்புணர்வு சிறிய அளவிலான எதிர்ப்பியக்கங்கள் கூட உடனடியாக உருவாக முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது. “புலிகளின் மீதான அரசியலற்ற தாக்குதல்கள் “தேசிய இன அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் மக்களையும், தேசிய உணர்வுகொண்ட ஏனைய சக்திகளையும் அன்னிமாக்கும் நிகழ்ச்சிப் போக்கையே கொண்டுள்ளது. புலிகளினதும் பிரபாகரானதும் அரசியல் ஏற்படுத்திய அழிவுகளின் பின்னணியிலிருந்த அரசியல் அதன் எதிர் விளைவுகள் என்பன பற்றிப் பேசுவது இன்றயை சிக்கலான காலத்தின் அவசியமான ஒன்றாகும். முதலில் புலிகளின் தவறான அரசியல் வழிமுறை வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டத்தை நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்நகர்த்தியுள்ளது. தேச உருவாக்கத்தை இன்று கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களைப் போராட்டங்களின் மீது விரக்திகொள்ளச் செய்திருக்கிறது. புலிகளின் அரசியற் தவறு குறித்த கற்கை இன்று அவசியமாகிறது. ”ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அனைத்துத் தளத்திலும் அவசியமானது என்பதை உணர்ந்துகொள்வதும், புலிகளதும், பிரபாகரனதும் அரசியற் தவறுக்கான ஊற்று மூலத்தைக் கண்டறிவதும் அவசியமானது “. பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது என்பதே அவசியமானது. “ஆரம்பத்திலிருந்தே போராட்டம் அழிந்துபோவதற்கான கட்டமைப்புக்களையே உள்வாங்கி வழி நடத்தப்பட்டது என்பதற்கான அரசியல் கண்டறியப்பட வேண்டும்.”
இங்கு பிரபாகரனினதும் போராளிகளினதும் எந்த அசைவியக்கத்தையும் கொச்சை படுத்தும் நோக்கம் எவருக்கும் இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து ஆகும். ஆனால் விமர்சனம் ஆக்க பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிரபாகரன் விமர்சனக்களுக்கு அப்பால் பட்டவரும் அல்ல என்பதை அனைவரும் உணர்ச்சி வசங்களுக்கு அப்பால் புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரனை எதிர்பதாக கூறி தமிழ் மக்களின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிரான எதிர்பியக்கங்களை வலுவிழக்கும் செயலுக்கு ஆதரவளிக்காமல் இருப்போம் என்ற அஜித்தின் கருத்து எங்களை ஆள் கொள்ளட்டும்.
யாருமே போராளிகளை குறை கூறவோ கொச்சைப்படுத்தவேயில்லை புலி எதிர்பு கூட்டமுற்பட.
எது எப்பிடியோ
பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கோவணத்தையும் இளந்து நிற்கின்றோம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
சுயவிமரிசனம் என்றால் தம்மீது சேறு பூச முனைவதாக சிலர் தப்பாக நினைப்பதே அரசுக்குகெதிரான பல நடவடிக்கைகளை முடக்கி போட்டுள்ளது.
ஒரு விடுதலை போராட்டம் தோற்றால் தான் ஒரு அறிவு ஜீவி என்று நினைத்து கட்டுரை எழுதி தள்ளுவதால் எந்த பயனும் விளைந்து விட போவதில்லை.
பாதிகப்பட்ட மகளுக்கு என்ன செய்யலாம் என்ற கட்டுரை தான் இப்பொது தேவையே தவிர இது மாத்ரி அறிவுரை அல்லது ஆராய்ச்சி இப்பொது தேவை இல்லை.
80களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு புத்தகம் வெளியிட்டது. ஏன் ஜேவிபியின் போராட்டம் தோற்றது என அது ஆராய்ந்திருந்தது.
அவர்கள் களத்தில் நின்று வெளியிட்டார்கள்.தாங்கள் எந்த புலத்தில் இருந்து எழுதுகிறீர்கள்.
அவர்களும் சிலகாலம் புலத்தில் களமாடினர்,
80 களில் உள்ள நிலைமை தான் இப்போது தமிழர்களுக்கு உள்ளதா?
குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்து கொண்டு அல்லவே இருக்கிறார்கள்..
இந்த நேரத்தில் ஆக்கபூர்வமாக என்ன செய்ய வேண்டும் என்பதே எனது கேள்வி
இறந்து போன வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்க்க முற்படுகின்ற நாம் கற்றுக்கொள்வது குறித்துப் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் கோடிட்டுக் காட்டப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.
உங்கள் கருத்துச் சரியானது. ஆயினும் இறந்து போன வரலாறு என்பது 1980 களில் இருந்து ஆயுத இயக்கங்களில் இருந்து எனக் கொள்ள முடியாது. அதற்கு முன்பாக தந்தை செல்வா எனப் பலரின் முக்கியமான பாத்திரம் உண்ணடல்லவா? தோல்விகளும் ஏற்பட்டிருக்கிறதல்லவா? மற்றொரு பறம் தென்னிலங்கையில் இரு முறை இளைஞர் ஆயுதக் கிளர்ச்சிகள் எற்பட்டதனையும் அது தோற்கடிக்கப்பட்டதனையும் நாம் மறந்து விட்டிருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் போன்று புனைய முனையும் ஒரு பகுதியினர் என யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
இந்தச் சூழலில் புலிகளோடு இணைந்து கொண்ட அல்லது ஆதரவு வழங்கிய பெரும்பாலானோர் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வின் அடிப்படையிலேயே இணைந்து கொண்டனர்.
இவர்கள் அன்னியப்படுத்தப்பட வேண்டியவர்களல்ல
இது குறித்து ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. புலிகளில் பிற்காலத்தில் இணைந்து, அவ்வியக்கத்தின் பெரும் முக்கியதஸ்தர்காளக மாறியதுடன் புலிகளின் அராஜக மற்றும் பாசிச வழிகளை ஆதரித்து நின்றவர்கள் பலர் பற்றிய அவதானம் தேவை. அவர்களில் பலரின் இன்றைய நிலையும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அவர்கள் புலிகள் பலமான ஒரு சக்தியாக வளர்ந்து விட்ட ஒரு காலத்தில் புலிகளுடன் இணைந்து தமது அதிகாரத்தினை தக்கவைத்துக் கொள்ள முயன்ற பிற்போக்காளர்கள்.
தவறான போராட்டம் அழிந்து சிதைந்து போன வரலாறு ஒரு புறமிருக்க அந்த அழிவும் போராட்ட வழிமுறையும் மக்கள் மத்தியில் பாரிய வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அலவத்துள் வாழும் மக்கள் மத்தியில் இவ்வெறுப்புணர்வு சிறிய அளவிலான எதிர்ப்பியக்கங்கள் கூட உடனடியாக உருவாக முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.
உங்கள் கருத்தினை மறுப்பதற்கில்லை.
ஆயினும் நீங்கள் கற்பனை செய்வது போன்ற நிலை மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பியக்கங்கள் உருவாக முடியாத நிலைக்கு பிரதான காரணம், முழுமையான இராணுவ அடக்கு முறை நிலவுவதே. முழத்திற்கு முழம் இராணுவ முகாம்கள். துணைக்குழுக்கள். கடத்தல்கள். மிரட்டல்கள். பயங்கரவாதச் சட்டங்கள். மக்கள் அகதி அமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற நிலை.
உணவு உட்பட எல்லாத் தேவைகளையும் அகதி முகாம் பொறுப்பாளர்களான இராணுவத்தினர் வழங்க வேண்டிய நிலையில் அதில் தங்கியிருக்கச் செய்யப்பட்டார்கள். பிள்ளைகள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்கள். காணமல் போயிருந்தார்கள். ஆனால் மக்கள் இராணுவத்தினருடன் மட்டுமே தொடர்பு கொள்ளக் கூடிய நிலையிருந்தது.
வெளியிலிருந்து யாரும் உள்நுழைய முடியாது உன்ற நிலையே நீண்ட காலம் நீடித்திருந்தது. வெளியிலிருந்து அரச ஆதரவாளர்கள் செல்லக்கூடிய நிலையிருந்த போதும் தொலைபேசிகளை கொண்டு போக முடியாது, கூடவே கண்காணித்துக் கொண்டு வரும் இராணுவம், தொடரும் இரகசியப் புலானாய்வு குழுவினர் என ஒரு காட்டாட்சியே வன்னியில் நடைபெற்றது. நடைபெற்றும் வருகிறது.
மக்கள் மீளக்குயேற்றப்பட்ட பின்பும் இன்றும் வெளிவருகிற செய்திகள் அத்தகையனவே.
இன்னொரு காரணம் போராடத் துணியாத தலைமை. புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு அல்லது முடக்கப்பட்ட நிலையிருந்தார்கள். த.தே.கூட்டமைப்பினர் மக்கள் அவல நிலையிலிருப்பதாகவும் அதனால் போரட முடியாதிருப்பதாகவும் கூறிவருகிறார்கள். ஆனால் த.தே.கூட்டமைப்;பினரின் வேண்டுகோளை எற்ற மக்கள் எல்லா அடக்குமுறைகளையும் தாண்டித்தான் – அச்சுறுத்தல்கள் – அபாயங்கள் வருமெனத் தெரிந்துதான் அவர்களை ஆதரித்து வாக்களித்தார்கள்.
நீங்கள் குறிப்பிட்டது போல், புலிகள் மீதான விமர்சனமற்ற அனுதாபத்தினை மக்கள் கொள்ள முடியாதளவிற்கு புலிகள் மக்கள் மீது மிகக் கொடுமைகளைப் புரிந்திருக்கிறார்கள். இதனால் மக்கள் இன விடுதலையாயவது பெற்றுத்தருவார்கள் எனப் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் ஒரு பின்னடைவான நிலை தோன்றியிருக்கிறது. ஒரு அவநம்பிக்கை காணப்படுகிறது.
ஆயினும் புலிகள் உயிர் வாழ்வதாகவும் தொடர்ந்து போரடத் தயாராகி வருவதாகவும் மக்கள் கூறிக்கொள்கிறார்கள். வன்னியில் இன்றும் தாக்குதல் நடப்பதாக கூறுபவர்களும் உண்டு. இதற்கப்பாலான பல கற்பனைக் கதைகளும் சொல்லப்படுகின்றன.
இது குறித்து விவரிவாக நோக்கவேண்டும். அதாவது அழிவின்பின்பான நிலை என்ன? என்பது குறித்து விரிவாக ஆராய வேண்டும்.
அதனை விட புலிகளிற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவின் அடிப்படைகள் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. புலிகளின் பாசிசத் தன்மையை தமிழ் மக்கள் வெளிப்படையாக உணர முற்பட்ட போதும் அவர்களடேனேயே இறுதி வரை (மே மாத ஆரம்பம் வரையாவது ) இருந்திருக்கிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் இறுதி வரை நின்று மடிந்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமானது, விமர்சனமற்ற ஆதரவுத் தளம் வழங்கப்பட்டதற்கான காரணம் என்ன?
இதன் வழியாக “தேசிய வாதம் அல்லது குறுந்தேசிய வாதம் இயல்பாகவே பாசிசமாகவே வளரும்” என்ற கருத்து நிரூபிக்கப்பட்டது எனக்கருதலாமா? என்பது முக்கியமான வினாவாகும்.
போராட்டத்தின் பேரால் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிகளின்இ மக்களை நேசித்தவர்களின் வாழ்வு “சரியான வழிமுறைகளைக் கண்டறிவதற்கான விமர்சனம்” என்ற முழக்கத்தின் மீதே அர்த்தமுடையதாகும்
என்பது மட்டுமல்ல எதிர்காலத்தில் மக்கள் விடுதலைக்கான பாதையை கண்டறிவதற்கும் அவசியமாகும்.
பிரபாகரன் தியாகியா துரோகியா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது என்பதே அவசியமானது.
ஆரம்பத்திலிருந்தே போராட்டம் அழிந்துபோவதற்கான கட்டமைப்புக்களையே உள்வாங்கி வழி நடத்தப்பட்டது என்பதற்கான அரசியல் கண்டறியப்பட வேண்டும்.
இது முக்கியமான விடயம்.
இது குறித்து ஐயர் அவர்கள் எழுதியவைகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. ‘ஈழப் போரட்டத்தின் தோல்விக்கான காரணங்கள்” என பத்துக் காரணங்கள் பொங்கு தமிழ் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்விணையத்தளத்தில் கட்டுரைகளும் வெளிவந்தள்ளன.
இது குறித்து நாவலனும் எழுதியிருக்கிறார். ரகுமான் ஜானும் தனது தளத்தில் எழுதியிருக்கிறார் என்ற நினைக்கிறேன். காலச்சுடரில் போராட்டத்தின் இறுதி நாட்கள் பற்றிய தகவல்களை அக்காலத்தில் அங்கு வாழ்ந்தவர் ஒருவர் எழுதியிருக்கிறார். இவ்விடயம் குறித்தும் ஜெயபாலனும் எழுதியிருக்கிறார். ஜெயபாலனுடைய கட்டுரை தமிழ் மணத்தில் வெளிவந்ததாக ஞாபகம். அது வேறோருn தளத்தில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் கலந்துரையாடல்கள் அவசியம். முக்கியமாக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்.
உலக ஒழுங்கு மாற்றமடைந்த வேளையில் பிரபாகரன் தலைமை வகித்த இராணுவம் அழிக்கப்பட்டது என்பது ஒரு வகையான வாதம். உலகம் மாற்றமடைந்த வேளையில்இ ஏகபோகங்களின் ஒழுங்கு மறுசீரமைக்கப்பட்ட வேளையில் போராட்டத்தை இலகுவாக அழிக்கக் கூடிய வகையில் எங்கே தவறிழைக்கப்ப்பட்டது எனபது ஆராயப்பட வேண்டும். .
இவ்விடயம் குறித்து நாவலன் எழுதியிருக்கிறார். துருவ வல்லரசுகளின் ஆதிக்கம் புலிகளை அழித்துள்ளது என்பது ஒரு வலுவான கருத்தாகவே முன்வைக்கப்படுகிறது.
கிறுக்கன் குறிப்பிடுவது ‘ இன்றைய உலக ஒழுங்கில் வல்லவனுக்கு முதுகு வளைக்கவேணும் எண்டதுதான் பிரபாவுக்கு தெரியாத அரசியல் எண்டால் அதை எந்தத்தருணத்திலும் பிரபா செய்த்தயாராய் இ௫க்கவில்லை இருந்திருக்கவில்லை. ”
பிரபாகரன் ‘வல்லவர்களுடன்” எவ்வாறான உறவுகளைக் கொணடடிருந்தார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால் பிரபாகரன் தமது போராளிகளுக்கும் – மக்களுக்கும் ‘முதுகு வளைக்காதவராகவே” இருந்தார். தனது இயக்க உறுப்பினர்களை கொன்றது, சிங்கள – முஸ்லிம் மக்களைக் கொன்றது, மாற்று அரசியலைப் பேசியவர்களை கொன்று அழித்தது. கிழக்கு மாகாணத்தில் தனது போராளிகளையே தனக்கு விசுவாசமற்றவர்கள் எனக் கொன்றழித்தது, பல இக்கட்டான கட்டங்களில் ஆதரவுத் தளமாக இருந்த வாகரை மக்கள் மீதான அழிவு, வன்னியில் இறுதியில் உயிர் வாழ தப்பியோடிய மக்களைக் கொன்றது எனப் பிரபாகரன் யாருக்குமே முதுகு வளைக்காதவராகவே இருந்தார்.
இதற்கப்பால் ராஜிவ் காந்தியைக் கொன்றால், அது தமிழ் மக்களின் விடுதலைப் போரட்டத்தின் மீது தோற்றுவிக்கக் கூடிய தாக்கங்கள் எவை என மதிப்பிட முடியாதவராகவே இருந்திருக்கிறார். கொன்று விட்டு அதற்கான நியாயங்களை முன்வைக்க முடியாதவராகவே இருந்திருக்கிறார். அதனை ‘துயரமான சங்கதி என மறப்போம்” என ஒரு வார்த்தையால் முடித்து விடலாம் என்ற அரசியலறிவு கொண்டவராய் இருந்திருக்கிறார்.
சர்வதேச ஆதரவுத் தளத்தினை ஒரு சில நபர்களைக் கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென கருதியிருக்கிறார்.
இன்னமும் இன்மும் எழுதலாம்.
தமிழர்களின் மீட்சி என்ற தெளி ஞான நிலையில் இருந்துதான் கருத்துகளை முன்வைக்கிறோமா? எனக் கிறுக்கன் குறிப்பிட்டுள்ளார். இல்லைதான். ஆயினும் இந்த தெளிஞான மீட்சியைப் பெறுவதற்கு இதற்கப்பாலான வழிமுறை இல்லை என்பதுதான் உண்மை. அதற்கான சிறு முயற்சிகள் தான் இவை என்பது உணரப்பட வேண்டும்.
S.G.Raghavan
தமிழ் மக்கள் தமது விடுதலை குறித்த எதிர்கால எத்தனங்களுக்கு அஜித்தால் சொல்லப் பட்ட விடயங்கள் மிகவும் ஜதார்த்தமானது. புலி எதிர்ப்பு புலி ஆதரவு என்ற மடமைக்குள் அல்லது இருட்டுக்குள் இருக்கும் அனைவருக்கும் இங்கு அஜித் சுட்டிய விடயங்கள் கண்களை அகலத்திறந்து புதிய பாதையில் பயணிக்க உதவும் என்பதே எனது முடிவாகும். எனவே வாசகர்களே இங்கு சொல்லப்பட்ட விடயங்களை மீள மீள நினைவுறுத்தி கொள்ளுங்கள். எனக் குறிப்பிடுவது பொருத்தமானதே. அவர்
விமர்சனம் ஆக்க பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிரபாகரன் விமர்சனக்களுக்கு அப்பால் பட்டவரும் அல்ல என்பதை அனைவரும் உணர்ச்சி வசங்களுக்கு அப்பால் புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரனை எதிர்பதாக கூறி தமிழ் மக்களின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிரான எதிர்பியக்கங்களை வலுவிழக்கும் செயலுக்கு ஆதரவளிக்காமல் இருப்போம் என்ற அஜித்தின் கருத்து எங்களை ஆள் கொள்ளட்டும் எனக் குறிப்பிட்டிருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புரவி ‘ஒரு விடுதலை போராட்டம் தோற்றால் தான் ஒரு அறிவு ஜீவி என்று நினைத்து கட்டுரை எழுதி தள்ளுவதால் எந்த பயனும் விளைந்து விட போவதில்லை. பாதிகப்பட்ட மகளுக்கு என்ன செய்யலாம் என்ற கட்டுரை தான் இப்பொது தேவையே தவிர இது மாத்ரி அறிவுரை அல்லது ஆராய்ச்சி இப்பொது தேவை இல்லை. எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
மறுக்கவில்லை. பலரும் பல்வேறு உதவிகளை நிர்ப்பந்தக்களுக்கு மத்தியிலும் செய்து வருகிறார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்சி அரசியல் விடுதலையுடன்தான் சாத்தியமாகும் என்ற நிலையிருக்கும் போது அரசியல் பேசுவதனால் எந்தப் பயனும் விளைந்து விடப் போவதில்லை என எப்படிக் கூறமுடியும். மீள்குடியோறியொருக்காக ஏதாவது செய்யலாம் என்றால் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப மீளக்குடியேற்றம் நடை பெற வேண்டும் என்ற உரிமை நிலைநாட்டப்பட வேண்டியிருக்கிறது. காணமல் போனவருக்கு என்ன செய்யலாம் என்றால், காணமல் போதல் அது தொடர்பான சர்வதேச சனநாயக நியமங்களை அரசு ஏற்றுக் கொள்ளச் செய்யும் ஒரு கடுமையான போராட்டத்தினூடாகவே எதையாவது சாதிக்கலாம்.
அரசு சனநாயக மற்றும் இன உரிமைகளை மதிக்கத்தக்கதாக மாற்றமடையச் செய்யப்பட்டால்தான் பெரும் அழிவுகளைச் சந்தித்து அடக்குமுறைக்குள் வாழவைக்கப்பட்டிருக்கிற நிலைமையிலிருந்து மக்கள் மீட்சி பெற முடியும். அரசு சனநாயக மற்றும் இன உரிமைகளை மதிக்கத்தக்கதாக மாற்றமடைவதற்கு ஒரு பெரும் போராட்டத்தினை மக்கள் நடத்த வேண்டும் என்பதே நியதியாக இருக்கிறது. எனவே ஆராய்ச்சிகள் அவசியமானவை. நாம் ஏன் தோற்கடிக்கப்பட்டோம் என்று ஆராய்வதினூடாகவே வெற்றியைப் பெறுவதற்கான சரியான வழிமுறையை அறிந்து கொள்ள முடியும்.
அஜித் விஜே உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள் எனது மனக் குமுறல்கள், ஆதங்கங்கள், மன அழுத்தங்களுக்கு உங்களது சரியான புரிதல்கள் ஒத்தடம் குடுப்பதாகவே உணர்கின்றேன். இந்த இணையத்தில் கவனம் செலுத்தும் ஏனையோருக்கும் எனது நன்றிகள், ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்துக்கு அனைவரையும் அழைக்கின்றேன் வாசகர் சார்பாக. மிகச்சரியான விடுதலைப் போராட்டம் தவறான சக்திகளால் முனகர்த்தப் பட்டதா?
மிகச் சரியான சக்திகள் விடுதலை போராட்டத்தை சரியான வழிமுறையில் முன்நகர்த்தினார்களா?
எது நடந்தது?
இனி என்ன நடக்கப் போகிறது?
நாம் என்ன செய்யப் போகிறோம்?
நாம் ஆற்றும் விடயங்களின் எதிர்கால பெறுமானம் என்ன? என்னவாக இருக்கவேண்டும்?
ஜதார்த்தத்தை விளங்கி கொள்ளாத தன்மை செத்துப் போன பிணம்களின் மூளையோடு ஒப்பிடும் தன்மை கொண்டது. எம் இனத்தின் உயிர் வாழ்தல் எங்களின் புரிதலில்தான்.
நண்பர் ராகவன்,
கனடாவில் உங்கள் அரசியல் பற்றிய சர்ச்சைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு ஒரு விவாதத்திற்கு வர நானும் தயார் தான்.
1. போராட்டம் தேவையானதே
2. போராட்ட வழி தவறானதாக இருந்தது.
3. என்ன தவறு என அனைவரும் இணைந்து தேட வேண்டும்.
4. பொதுவாக எல்லாரிலும் இருந்து அன்னியப்பட்டு குறுகிக் குறுகிப் போன போராட்டம் ஆயுதங்களை மட்டுமே நம்பும் எல்லைக்கு வந்து அழிந்தது.
5. இலங்கை நிலைமைகள் மக்களைப் போராட உந்தும்.
6. இன்னும் ஒரு போராட்டம் பிறப்பது தவர்க்க முடியாதது ஆனால் அதன் வழிமுறை பற்றி இப்போதே ஆராயலாம்.
தற்போதைக்கு இதுவே நிலைமைகள். அதாவது 1.5.6.
ஆயினும் வரலாறு ஒரே போக்கில் நகரும் எனக்கூறமுடியாது. எது எப்படியிருப்பினும் ஏனைய விடயங்கள் குறித்து விரிவான அக்கறையுடனான கருத்துப் பகிர்வுகள் எம்மையும் சமூகத்தையும் முன்னேற்ற உதவும்
யாருமே போராளிகளை குறை கூறவோ கொச்சைப்படுத்தவேயில்லை புலி எதிர்பு கூட்டமுற்பட.எது எப்பிடியோ பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கோவணத்தையும் இளந்து நிற்கின்றோம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
கோவணத்திற்கு ஆசைப்பட்டு….
பாரத பெரும் போரில் கண்ணன் அருச்சுனனுக்கு உபதேசிச்சதை உலக பெரு நன்மைக்கே எண்டார்கள் இந்தியா ஈழத்தில் போர் மேகங்களை கருக்௬ட்டியதும் போரளிக்குழுக்களை ஊக்குவித்ததும் காஷ்மீரை கையகப்படுத்தியதும் வங்கதேசத்தை பிரித்ததும் நேபாள மன்னரை போட்டதும் (இதில் பிரபா ராஜிவை போட்டது தப்பே தப்புதான் ) மேற்குவங்கத்தின் மிட்னாபூரிலும் ஜார்கண்டின் கிகுந்தி மாவட்ட காடுகளிலும் தன் சொந்தக்குடி மக்களையே வதைப்பதும் இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் நலன் சார்ந்தது என்பார்கள் ஆனால் என்ன எட்டாம் வகுப்பு கூட படித்தறியாத பிரபா விட்ட தவறுகளை துருவி துருவி ஆராயும் அதி மேதவிகள் நாம். கிடைக்கும் எலும்புத்துண்டுகளுக்காக இனி இதையேதான் செய்வோம் ஏனெனில் நாங்கள் இப்படித்தான் சொந்த குதத்தையே தோண்டி மணக்கும் கூட்டம். ஆக்க பூர்வமான கருத்துகளையும் சிந்தனைகளையும் உள்வாங்கிகொண்டு எங்கே நாம் தவறிளைத்தோம் என்பதை தெளிவுபடுத்துங்கள் விடுதலைக்கான பாதையை செப்பநிடுங்கள் அதி மேதாவித்தன சிந்தனையால் சாதாரண மக்களை குழப்பாதீர்கள் .
உண்மை கிறுக்கன், பிரபாகரன் எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை …… சீன தூதர அதிகாரிகள் கூட வன்னி சென்று புலிகளுடன் பேசினர் ஆனால் பிரபா எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை. குதத்தை தோண்டி மணக்கும் இனமாகவே தொடர்ந்தும் இருக்கின்றோம் என்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பசில் ராஜபக்சவின் ஒரு சில கோடி பணத்திற்கு சின்னையா மாஸ்டரும் தமிழ்செல்வனும் தானா மடங்கினார்கள் எனத் தெரியவில்லை. இருப்பினும் இன்றைய சூழலுக்கு இது தேவையற்ற கதை, குதத்தை தோண்டி மணப்பது போல்……..
/////ஆனால் பசில் ராஜபக்சவின் ஒரு சில கோடி பணத்திற்கு சின்னையா மாஸ்டரும் தமிழ்செல்வனும் தானா மடங்கினார்கள் எனத் தெரியவில்லை.//// உங்களை போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் அவதூறுகளுக்கு பஞ்சம் இருக்காது.பேசாமல் சினிமா கிசு கிசு எழுதலாமே நன்றாக போகும்
HELLO MR. AJITH ! DID YOU LEAD A WAR LIKE PRABHAKARAN? DID YOU GET INVOLVED IN ANY STRUGGLE TO SOLVE THE PROBLEM OF THE TAMILS? DID YOU GO OUR OF YOUR HOME AND WORK FOR YOUR COMMUNITY? WHAT THE HELL YOU GUYS ARE WRITING ABOUT WAR OF A SINGLE MAN. LEAVE IT AND FORGET ABOUT IT ALL. JUST THINK WHAT YOU CAN DO OR JUST KEEP QUET. THAT IS ALL. JUST WASTING YOUR TIME AND THERE ARE OTHERE HERE TO WRITE THEIR COMMENTS. YOU GUYS EVERYONE ACT LIKE SOME BLOODY ROCET SCEINTIST AND WRITING YOUR COMMENTS AS YOU GUYS ALSO INVOLVED IN THE THIRTY YEARS STRUGGLE. SOME OF YOU NEVER SEEN EVEN THE TRAIN BEFORE 1983 AND SOME OF YOU DO NOT KNOW EVEN HOW TO ANSWER A TELEPHON. TODAY, EVEN FOR BLOODY SIMPLY BIRTH DAY PARTY, YOU GUYS ARE FLYING TO ENLAND TO CANADA, AUSTERILA TO BRITIAN, NORWAY TO GERMANY AND FLYING AROUND THE WORLD THIS IS WHAT YOU WERE LOOKING FOR IN THE THIRTY YEARS, JUST CONTINUE YOUR DRAMA. THAT IS IT. THE LEADER FOUGHT HIS WAR BUT NOT ONLY WITH THE SRILANKAN GOVT FORCES BUT ALSO INDIA, CHINA, PAKISTAN, JAPAN, AND STILL HE WOULD HAVE WON THE WAR. BUT THERE WERE OVER SIX THOUSANDS TIGERS WHO WERE TRAINED UNDER THE SAME LEADER , JOINED WITH GOVT FOUGHT AGAINST THE LEADER. NOW IT IS A HISTORY. DON’T YOU FEEL DAMNED SHAME TO WRITE ANYTHING AGAINST TO SUCH A LEADER.? EVEN THE BLIND CAN MAKE SPEECH AND THE DEAF CAN WRITE AND STUPID CAN SAY ANYTHING BUT WHO CAN DO IT ALL? IF YOU WANT TO DO ANYTHING , DO IT THAT IS IT. DON’T WASTE YOUR BLOODY TIME IN WRITING THESE KIND OF NONSENCE. OF COURSE ,IF YOU CAN MAKE SOME MONEY, GO AHEAD. OTHERWISE DON’T SPEND YOUR TIME IN WRITING THESE KIND OF ARTICLE LIKE A F******* STUPID.
சரவணன், வேலவன் பொறுமையோடு சிந்தியுங்கள் நான் அவதூறு பரப்பவில்லை கிளிநொச்சி 55 ஆம் கட்டையில் உள்ள போக்குவரத்து கண்காணிப்பு பிரிவில் மகிந்தவின் தூது குழுவிற்கும் சின்னயா மாஸ்டர்க்கும் என்ன பேசப் பட்டது என்பதை இவ்வளவு அழிவுகளிற்கும் பின்னராவது தமிழ் மக்கள் அறியக்கூடாதா? என்ற ஆதங்கம்தான். இங்கே புலம் பெயர் நாடுகளில் புலிக்கொடியையும் பிரபாகரனின் படத்தையும் தாங்கி அதனை துஸ்பிரயோகம் செய்து கோடிகணக்கில் தட்டிசுட்டி இன்னும் தட்டிச் சுத்த திரியும் வேடதாரிகளை புலிகளின் தலைமை ஏன் அனுமதித்தது? இன்றளவும் கூட அவர்களை இனம் காட்டாது பம்மாத்து காட்டுகிறார்களே என்ற ஆதங்கம் தான். போராளிகளின் தியாகங்கள் வீணடிக்கப் பட்டதோ என்ற ஆதங்கமும் கூடவேதான்? எதனையுமே பெற்று கொள்ள முடியவில்லை என்ற வேதனை, விளிம்பில் நின்று என்னை துன்புறுத்துவதனால் தான்?
தமிழ் இனத்தின் தலைவிதி என்றுமே மாறாத ஒன்றாக இருப்பதற்குரிய காரணம் என்னவென்றால்,முதலில் நாம் நம்மை உணரமறுப்பது அல்லது உணரக்கூடிய திறமை அற்றவா்களாக(Attitude) பெரும்பான்மையினா் இருப்பது.சுயவிமா்சனம் என்ற அற்புதமான சொல்லை நாம் ஒருபோதும் சீா்தூக்கிப்பா்த்ததில்லை அல்லது அப்படியொரு கல்வி கலாச்சார வழியில் நாம் வரவில்லை. எதை எடுத்தாலும் சந்தேகத்துடனே நோக்குவது இந்த இனத்தின் மிகப்பெரிய காசநோய், போராட்டம் ஆரம்பிக்கும் போதே தோற்றுப்போய்விட்டது என்றால் சிலா் சிரிக்கக்கூடும் ஆனால் அது அசைக்கமுடியாத உண்மை இயக்கங்கள் பல கொள்கைகளை கொண்டவைகளாக உருவெடுத்தாலும் தம் உள்ளக கட்டமைப்பை ஜனநாயக ரீதியில் நிச்சயம் ஒரு அரசியல் யாப்பு போன்று எழுத மறந்ததுதும் தலைவா் என்ற ஒருவரே யாவும் என்று வணங்கும் மனோபாவ நிலைகளுமே நாம் இன்று இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு காரணம்.ஆயிரம் சிங்கள இராணுவம் ஆனை இறவில் மடிந்தபோது சிங்களதேசம் அலட்டிக்கொள்ளாத போது சிந்திக்கத்தெரிந்தவன் முடிவெடுத்திருப்பான் தாக்குதல்கள் மட்டுமே நமது விடுதலையை பெற்றுத்தராது இங்கே வேறுவளிகளை நாம் நாடவேண்டும் என்று அதுதான் அரசியல் நகா்வு ஆனால் அப்படி நடக்கவில்லை.பிரபாகரனின் போராட்டம் ஒரு சரித்திரம் ஆவது உண்மை ஆனால் தோல்வியில் முடிந்தது அது எதற்காக முன்னெடுக்கப்பட்டதோ அதை சிறிதளவு கூட நாம் அடையவில்லை அதன் காரணம் என்ன ஏன் எதனால் என்று ஆராய்வது நமது கடமை ஏனென்றால் நாம் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியுள்ளதல்லவா. இந்தக்கட்டுரை சிறப்பானது நாம் நிறைய சிந்திக்கவேண்டும் வருங்காலத்தில் இனியும் தவறாக ஒரு அடிகூட எடுத்து வைக்ககூடாது என்பது மிகவும் முக்கியம்.
தானும்தின்னான் தள்ளியும் படான், என்பதுபோல பேசவென்றே தொடர்ச்சியாக ஒரு ஐந்தாறுபேர் தொடர்ச்சியாக திண்ணைக்கு வந்து புலிகளையும் பிரபாகரனையும் விமர்சிப்பதில் சுகங்காணுகிறீர்ர்களே, இன்றைக்கு சிங்களவன் யாழ்ப்பாணம் வரை போய்விட்டான் 35 வருடமாக வெள்ளைக்காரன் கூட பிரபாகரன் காலடிக்கு வந்தே பேசினான் சிங்களவன் வடக்கே எட்டிப்பர்க்க முடியவில்லை 20/30 நாடுகள் சேர்ந்தே யுத்தத்தை வென்றதாக உலகமே ஒப்புக்கொள்ளுகிறது , சரி பிழை எல்லாவிடத்திலும் நடப்பவைத்தான் ,ஒரு வீரனை புகழாவிட்டாலும் உங்களைப்போல் வைக்கோல்பட்டடை நாய்கள் போல குலைக்காமல் இருந்தாலே உங்களுக்கு மதிப்பாகவிருக்கும் ,ஆக்கபூர்வமாக அறிவுசம்பந்தமாக கருத்துக்கூறினால் எதிராளிகூட சிந்திக்கச்சந்தற்பமிருக்கிறது,பிழையென்று சொல்லி அவற்றை நியாயப்படுத்துவதிலேயே திண்ணையைக்கழிக்கிறீர்கள்,ஊர் ஓடினால் ஒத்தோடு தனியானால் கேட்டோடு என்பார்கள் ,தயவுசெய்து உங்களை நீங்களே கேவலப்படுத்தி சுகங்காண முயற்சிக்காதீர்கள், பிரபாகரன் என்கின்ற மாவீரனை நீங்கள் சிலர் தூற்றுவதால் அவரது கீர்த்தி ஒன்றும் குறைந்து போகப்போவதில்லை(காகம் திட்டி மாடு சாவதில்லை) நாகரீகமாகநடந்துகொள்ளுங்கள் நாலுபேர் உங்களை பிந்தொடரச்சந்தற்பமிருக்கிறது, மற்றும்படி உங்கள் நிந்தனைக்கும் வஞ்சக குத்தல்களுக்கும் பதிலளிக்க எல்லாப்பக்கத்திலும் ஆளிருக்கிறார்கள், அதிக இணையத்தளங்கள் பிரபாகரனை பின்பற்றிக்கொண்டுதானிருக்கின்றன ,சிங்களவன் வடக்கே வல்லிவெட்டித்துறைக்குப்போய் பிரபாகரன் அவர்களின் வீட்டு மண்ணை வணங்கி எடுத்துச்செல்லுகின்றனர் ,வலிமையேவாழும் என்பது தியறி,
வன்னி தமிழரே நீங்கள் கூறியவற்றில் இருந்து தற்போது நாம் பெற்றுக்கொள்ளும் அறிவுரை அல்லது நாம் செல்லப் போகும் செல்நெறி அல்லது பாதை அல்லது புதிய ஒழுங்கு குறித்த தெளிவு ஏதும் இல்லையே …… தலைவரை புகழ்ந்து கொண்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் வெறும் மாயையில் வைத்திருப்பதன் மூலம் தமிழர் வாழ்விடங்கள் சிங்கள மயமாக்கலில் இருந்து தடுக்க முடியும் எனக் கருதினால் தொடர்ந்து அதனையே செய்து கொண்டிருங்கள் …… நாளடைவில் பாணமையில் இருந்து பருத்தித்துறை வரை நாம் தமிழ் வாழ்ந்தது எனத்தான் கூறமுடியும். உங்களது கூற்றில் எத்தகைய அரசியல் சாணக்கியமும் இருப்பதாக தெரியவில்லை. எல்லா இணையங்களும் பிரபாகரனின் புகழ் பாடினால் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா? தமிழர்கள் அனைத்து அடக்கு முறைகளிலும் இருந்து விடுபட்டு விடுவார்களா? பிரபாகரனின் வீட்டு முற்றத்து மண்ணை சிங்களவன் அள்ளிச் செல்வதில் தமிழர்களுக்கு என்ன அரசியல் இருக்கிறது? தங்களுக்கு ஏதேனும் தெரிந்த விடயத்தை சற்று விரிவாக சொல்லுங்களேன். பிரபாகரனின் வீட்டு மண்ணை அள்ளிச்சென்று விக்கிறானோ தெரியாது! எங்களுக்கு எமது மண் போனது தான் மிச்சம் வேறு ஒன்றும் இல்லை அகப் பெருமை பேசுவதில் தான் எமது மூளை செலவாகிறது. சிங்களவரை எள்ளி நகையாடி அகப் பெருமை பேசுவது தமிழர்களின் காலாதி கால குணம். இப்படியாக பேசி நன்றாக காலம் கடத்துங்கள்.
வன்னி தமிழா நீங்கள் திண்டதும் தள்ளி படுக்காமல் கிட்டக் கிடந்தும் பெற்ற பயன் தான் என்னவோ? தானும் தின்னான் தள்ளியும் படான் என்பது குறித்த அர்த்தம் புரியுமா உங்களுக்கு? விபச்சார விடுதிக்கு போகும் இருவர் அல்லது பலர் ஒரு பெண்ணை அனுபவிக்க முற்படும் பொது எழும் சர்ச்சையில் வரும் வார்த்தை தான் இவை. உங்களது வார்த்தைகளாலே நீங்கள் அனைவரும் நேசிக்கும் போராளிகளை கொச்சை படுத்துகிறீர்களே….. சர்ச்சைகள் வேண்டாம் தோழர்களே சமரசங்களின் மூலம் நாம் சாதிப்போம்.
புலிகளின் வரலாறே விபச்சாரம் போன்றதுதான். இந்தியாவுடன் யுத்தம் தொடங்கும் வரை இந்தியாவுட்ன் விபச்சாரம். யுத்தம் தொடங்கியதும் பிரேமதாசவுடன் விப்ச்சாரம். கருணா பிரிந்தவுடன் சந்திரிகாவுடன் விபச்சாரம். ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த, பசிலுடன் விபச்சாரம். இறுதியில் எய்ட்ஸ் முள்ளிவாய்க்காலில் ..
வன்னி தமிழரே மட்டகரமான வார்த்தை பிரயோகங்களை செய்ததன் மூலம் பல போராளிகள் புலிகளை விட்டு விலகிச் சென்றார்கள் என்பதையும் நினைவுறுத்த விரும்புகிறேன். மற்றும் நீங்கள் சொல்வதை போல் கிட்டப் படுத்து நல்லா தின் எண்டு கூக்குரல் இடவோ விளக்கு பிடிக்கவோ ஆள் தேவையானால் நீங்கள் வேறு பல இணையங்கள் இருக்கும் அதனை தேடித் பார்க்கலாம். நான் நினைக்கிறன் நீங்கள் அப்படி பட்டவர் இல்லை அறியாமை காரணமாக அவசியமில்லாமல் ஆத்திரப்பட்டு எழுதிவிட்டீர்கள் போல.
mr Ragavan.நான் எழுதிய கருத்தையும் நீங்கள் எழுதிய சொல்லாடலையும் நானும் நீங்களும் மட்டுமல்ல நிறையப்பேர் வாசித்திருப்பார்கள் இங்கு மிக மட்டமான சொல்லாடலை எவர் பாவித்திருக்கிறார் என்பது வெளிச்சமாகியிருக்கிறது, உங்கள் இயலாமையின் வெளிப்பாடு எவ்வளவு கோபமான மட்டரகத்திற்குள் உங்களை கொண்டுதள்ளிவிட்டது. நீங்கள் நிந்திப்பதிலேயே குறியாக் இருக்கிறீர்கள். எவரையும் எவரும் புகழ் பாடவேண்டுமென்று தேவைகிடையாது, நீங்கள் முதலில் இங்கு விமர்சனங்களை தூண்டி நிற்கும் கட்டுரையை திரும்ப படிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறீர்களென நினைக்கிறேன், குறிப்பாக
(//பேரின வாத அரசு தனது மேல் நிலையை பேணிக்கொள்ள, அதன் ஒவ்வொரு அங்கங்களும் மேலும் வலுவாக ஒழுங்கமைத்துக்கொள்கிறது.. இலங்கை அரசு முன்னைய புலிகளின் பகுதிகளைக்கூட தனது அடக்கு முறையின் அங்கங்களாக மாற்றியிருக்கிறது. கல்வி, கலாச்சாரக நிறுவனங்கள், தொழிற்துறை, பொருளாதாரம், அரசியல் என்ற அனைத்து அங்கங்களும் பேரினவாதச் சிந்தனையின் செயற்படு கருவிகளாக மாறியுள்ளன.(கவனித்திருப்பீர்கள்)
சிறுகச் சிறுக வளர்ந்த பேரினவாதம் வரலாற்றில் எப்போதும்ம் இல்லாதவாறு மிக ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமாகிவருகிறது.
இறந்து போன வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்க்க முற்படுகின்ற நாம் கற்றுக்கொள்வது குறித்துப் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் கோடிட்டுக் காட்டப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.(கவனித்திருப்பீர்கள்)
புலிகள் குறித்த முதலாவது விமர்சன வகையானது அவர்கள் மீதான உணர்ச்சிவயப்பட்ட அவர்கள் பாணியிலான தாக்குதலாக அமைகிறது. பிரபாகரனை சூரியத் தேவன், கடவுள் என்று கட்டமைக்கின்ற அதீத விம்பங்களின் எதிர் வினையாக அவரை அரக்கன், சாத்தான் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் போன்று புனைய முனையும் ஒரு பகுதியினர் இவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர்.(கவனித்திருப்பீர்கள்)
பொதுவாக போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வை உருவாக்க முனையும் அரச ஆதரவாளர்கள் ஒரு புறத்திலும் தமது சொந்த நோக்கங்களை முன்னிலைப்படுத்தும் சீரழிவு வாதிகள் மறுபுறத்திலுமாக உணர்ச்சிவயப்பட்ட அரசியலற்ற அவதூறு வடிவிலான பரப்புரைகள் அபாயகரமானவை.//)(கவனித்திருப்பீர்கள்)
மேலே குறிப்பிட்ட கட்டுரையின் கருவை பிரதிபலிப்பதாகவே விமர்சனங்கள் அமையவேண்டும் அதைவிடுத்து புலம்பல் தேவையில்லையென்றே எனது கருத்து,மே 19 2009 அன்றுடன் அதிகூடிய மக்கள் கூட்டத்தால் எடுத்துச்செல்லப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதென்று கருதினால் நீங்கள்தான் அடுத்த நகர்வுக்கான வழியை தெளிவுபடுத்தவேண்டிய இடத்திலிருக்கிறீர்கள், அதைவிடுத்து மிகவும் மட்டரகமாக (விளக்குபிடித்தல்) என்கிற அளவிற்கு இயலாமை உங்களை தள்ளிவிட்டதை நினைக்கும்போது வருந்துவதைத்தவிர வேறுவழியில்லை கட்டுரையாளர் மிக யதார்த்தமாக பலவிடயங்களை தொட்டிருக்கிறார், பின்பாட்டுக்காரர்கள் வேறு எங்கேயோ கொண்டுசெலுத்த முனைகின்றனர் என்பதே எனது முதலாவது கவலை,எனது கருத்திற்கு பதில் எழுத உங்களால் முடியவில்லையென்பதால் என்னை வேறு இணையத்தை நாடவேண்டுமென்று நீங்கள் விரட்டுவது எந்தவிதத்தில் நியாயம்,எல்லாவற்றிற்கும் முகங்கொடுப்பதால் ஒரு தெளிவு பிறக்கும் என்பதே எனது நம்பிக்கை,திருப்திக்காக கேள்விக்கு பதிலெழுதிக்கொண்டிருக்காமல் அதற்கான அடுத்த தெரிவு என்ன என்பதை விபரித்தீர்களானால் சிந்தனைக்குள்ளாகும், நீங்கள் விரும்புவதுபோல ஒரேகருத்துகொண்டவர்கள் கூடி அலசுவது சுகமான ஒரு மெட்டுக்கு பாடுவது போன்றது, வெறு மெட்டுக்களையும் வரவேற்று பாட்டுக்கட்டிப்பாருங்கள் நிறைய ராகங்கள் கிடைக்கும்,அவசரப்பட்டு கொதிக்காதீர்கள்.
பிரபாகரனையும், புலிகளையும் மட்டுமே குற்ரம் சொல்லும் எங்கழுக்கு
கன்ணில் தெரிகின்றது. இந்தப் போராட்டத்தின் தோல்விக்கு காரணம் உலகமுழுவதும்
வாழ்ந்து வந்த யாழ்மேலாதிக்க வர்க்கமே. புலிகளின் பிரச்சாரத்தால் தங்கள்
உறவுகளின் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து தவிக்க்க்ன்றார்கள்.
எல்லா சமூகத்தினரும்.
இவர்கள் மத்தியில் வாழ்ந்த பலர் இப்போராட்டத்தினையும் புலிகளையும் பயன்படுத்தி
உலகில் முதலாளித்து வர்க்கத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மற்ரவர்கள்
சிங்கள அரசுடன் அரசியல் பேரம் பேசுகின்றர்கள்.
துரை
என்ன துரை இரட்டை சகோதரர்களா?
போராட்டத் தோல்விக்குக் காரணம் மனிதாபிமானத்தை காலால் மிதித்துவிட்டு எங்கோ இருந்து உலகத்திற்கு வருங்காலம் எப்படியென்று எழுதும் ஒருசில மிருகக்கூட்டம் எடுத்த முடிவுதான் காரணம்.
மேலே குறிப்பிட்ட கட்டுரையின் கருவை பிரதிபலிப்பதாகவே விமர்சனங்கள் அமையவேண்டும் அதைவிடுத்து புலம்பல் தேவையில்லையென்றே எனது கருத்து,மே 19 2009 அன்றுடன் அதிகூடிய மக்கள் கூட்டத்தால் எடுத்துச்செல்லப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதென்று கருதினால் நீங்கள்தான் “அடுத்த நகர்வுக்கான வழியை தெளிவுபடுத்தவேண்டிய இடத்திலிருக்கிறீர்கள்”,
(ஆம் அதனைத்தான் நாம் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்யவேண்டும் என்பது எனது வேண்டுகோள்)
அதைவிடுத்து மிகவும் மட்டரகமாக (விளக்குபிடித்தல்) என்கிற அளவிற்கு இயலாமை? உங்களை தள்ளிவிட்டதை நினைக்கும்போது வருந்துவதைத்தவிர வேறுவழியில்லை.(மன்னிக்கவும்- தானும் படான் தள்ளியும் படான் என்பதால் வந்த கோபம் தான்)
கட்டுரையாளர் மிக யதார்த்தமாக பலவிடயங்களை தொட்டிருக்கிறார், பின்பாட்டுக்காரர்கள் வேறு எங்கேயோ கொண்டுசெலுத்த முனைகின்றனர் என்பதே எனது முதலாவது கவலை,(மிகவும் உண்மை)
எனது கருத்திற்கு பதில் எழுத உங்களால் முடியவில்லையென்பதால் என்னை வேறு இணையத்தை நாடவேண்டுமென்று நீங்கள் விரட்டுவது எந்தவிதத்தில் நியாயம், (மிகத் தவறு அதில் நியாயம் இல்லை, மற்றவர்களை வேறு தளம் ஒன்றுக்கு போங்கள் எனக் கூறுவதற்கு எனக்கு உரிமையில்லை)
எல்லாவற்றிற்கும் முகங்கொடுப்பதால் ஒரு தெளிவு பிறக்கும் என்பதே எனது நம்பிக்கை,திருப்திக்காக கேள்விக்கு பதிலெழுதிக்கொண்டிருக்காமல் அதற்கான “அடுத்த தெரிவு என்ன என்பதை விபரித்தீர்களானால் சிந்தனைக்குள்ளாகும், நீங்கள் விரும்புவதுபோல ஒரேகருத்துகொண்டவர்கள் கூடி அலசுவது” சுகமான ஒரு மெட்டுக்கு பாடுவது போன்றது, வேறு மெட்டுக்களையும் வரவேற்று பாட்டுக்கட்டிப்பாருங்கள் நிறைய ராகங்கள் கிடைக்கும்,அவசரப்பட்டு கொதிக்காதீர்கள்.
“அடுத்த தெரிவு என்ன என்பதை விபரித்தீர்களானால் சிந்தனைக்குள்ளாகும், நீங்கள் விரும்புவதுபோல ஒரேகருத்துகொண்டவர்கள் கூடி அலசுவது” ……… எம்மக்களுக்கான விடுதலையை பெற்றுத் தரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை அடக்கப் பட்ட ஒவ்வொரு மக்களின் விடுதலைக்கான ஆரம்பமாக நாம் இதனைச் செய்யவேண்டும்.
என்னிடம் சிலவளிமுறைகள் உண்டு
பரந்து பட்ட ரீதியில் தமிழர் தேசங்களில் (ஈழத்தில்) மக்களின் பொருளாதார, கல்வி,கலாச்சார, அரசியல் நிலைமைகளை மென் நிலைமைக்கு கொண்டு வருதல்
இதற்காக பல்கலைகழகங்கள், கல்லூரிகள், சமுக அமைப்புகள் என்பவற்றை அணுகி அவர்கள் மூலமாக மனித வளத்தையும் அறிவியல் வளத்தையும் பயன்படுத்தி மக்களை மேல்நிலைக்கு கொண்டு வருதல்.
இதன் மூலம் யாழ் மையவாதம் மற்றும் மட்டக்களப்பின் போடியார் நிலவுடமை கட்டமைப்புகளில் சிக்குண்டிருக்கும் வறிய மக்களை உயர் நிலைக்கு கொண்டு வருவதால் போடியார் நிலவுடமை, யாழ் மையவாத கருத்து நிலை நாளடைவில் இனந்தெரியாமல் மறைந்து போகும்.
தமிழ் சமுகம் கல்வி, பொருளாதார, அரசியல் நிலைமைகளில் முன்னேறுவதால் சிங்கள மேலாதிக்க அடக்கு முறைகளில் இருந்து மேல் எழுவதற்கும் வழிபிறக்கும் . யாழ் மேலாதிக்கச் சிந்தனையின் ஒடுக்கு முறை வடிவங்களில் ஒன்றான புறம் ஒதுக்கும் நிலைமைகளால்
கல்வி பொருளாதார சமுக அந்தஸ்த்தில் பின்னொதுக்கப்பட்ட மக்களிடையே சிங்கள பாடசாலைகள், பௌத்த கல்வி போதனைகள் என்பன சிங்கள அரசால் செய்யப்பட்டன (1948 – 1976 ). இவை யாழ்பாணம் தவிர்ந்த வேறு மாவட்டங்களிலும் செய்யப்பட்டன எனினும் வட கிழக்கில் வெற்றி அளிக்கவில்லை. இருப்பினும் மட்டகளப்பு, அம்பாறை, வவுனியா எல்லை பிரதேசங்களில் பெருமளவு தமிழ் மக்கள் சிங்கள மக்களாகவும் அவர்களின் கலாச்சாரத்துடனும் ஒன்றி விட்டனர்.
அத்தோடு மேற்படி நான் கூறும் நடவடிக்கைகள் மூலமாக இன்றைய அரசால் மேற்கொள்ளப்படும் நிறுவனமயப்பட்ட தமிழின அடக்கு முறைமைகளை இலகுவாக படிப்படியாக துடைத்தெறிய முடியும்.
அத்தோடு சமகாலத்தில் புலம் பெயர் நாடுகளில் இலங்கையின் பொருளாதார அரசியல் நிலைமைகளை பலவீனப் படுத்துவதன் மூலம் நாம் எமக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்த முடியும். அத்தோடு இலங்கையின் மனித உரிமை மீறல்களை தக்க ஆதாரங்களோடு வெளிப்படுத்தி அதற்கெதிராக வெளியுலக ஆதரவை திரட்டுதல்.
விடுதலை புலிகளால் கொண்டாடப்பட்ட பொங்கு தமிழின் முன்னோடிகளாகச் செயற்பட்டவர்கள் மட்டக்களப்பின் அன்னையர் முன்னணியினரும் டெலோ அமைப்பைச் சேர்ந்தவர்களுமே. பின்னாளில் கிழக்கு பல்கலை கழகம் அதில் இணைவை ஏற்படுத்தியது அதே காலத்தில் பிற மாவட்டங்களிலும் அன்னையர் முன்னணி இதில் இணைந்தது. இதில் மன்னார் அன்னையர் முன்னணியின் பங்கும் முக்கியமானது. இதன் பின்னர் யாழ் பல்கலை கழகம் இணைந்து கொண்டு செயற்பட இறுதியில் புலிகள் அதனை தமது அரசியல் நடவடிக்கைக்காக பாவித்தனர் இது ஒரு மக்கள் மயப்பட்ட அசைவியக்கத்தை புலிமயப்படுத்திய பிற்போக்கு நிகழ்வாகும் (இதன் உள்ளார்த்தம் அனைவராலும் புரியப்படவேண்டும் இது வசை பாடல் அல்ல) புலிகள் பல்வேறு மக்கள் மையப்படுத்திய அமைப்புகளை புலிமயப்படுத்திய (இது குரோதம் கலந்த வார்த்தை இல்லை இதற்குள் புலிகள் விட்ட பலதவறுகள் உண்டு) நிகழ்வுகள் உண்டு. புலிகளினதும் தமிழ் மக்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை நாம் புரிவதன் மூலம் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்நகரலாம். தற்போது அன்னையர் முன்னணி போன்ற அமைப்புகளின் தேவைகள் மேலெழுந்து வருகிறது. கிழக்கில் மட்டக்களப்பிலும் திருமலையிலும் வன்னியிலும் அன்னையர் முன்னணியினர் போன்ற அமைப்புகள் தோற்றம் எடுக்கும் முயற்சிகள் நடக்கக் கூடும் அதற்குள் யாரும் தமது அரசியல் சித்து விளையாட்டுகளை செய்யாமல் இருந்தால் போதுமானது. அவ்வாறான எழுச்சி ஒன்றை எமது விடுதலைக்கான படிக்கல்லாக மாற்றுவோம்.
“சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு லண்டனில் நடைபெற்றது” – Thanks for Tamilwin
சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று (ஒக்ரோபர் 23, சனிக்கிழமை) வட மேற்கு லண்டன் ஹரோவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்ரர் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
‘உலகமயமாதலில் ஊடகங்களும், தமிழ் மக்களின் பிரச்சினையும்’ என்ற கருப்பொருளுடன் காலை 10:00 மணி முதல் மாலைவரை நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் இலங்கை, இந்தியா, கனடா, யேர்மனி, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
இலங்;கையிலும், அனைத்துலகிலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் இயக்குனர் கோபி இரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து கலாநிதி சுதாகரன் நடராஜா தலைமையில் நடைபெற்ற காலை அமர்வில், வீரகேசரி வார இதழின் தலைமை ஆசிரியர் வீ.தேவராஜா தமிழரின் தேசியப் பிரச்சினையும், ஊடக சவாலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இவரையடுத்து சிங்கள ஊடகவியலாளர் றோஹித்த பாசன அபேயவர்த்தன மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத நிலையில், ஸ்கைப் வாயிலாக தமிழ் மக்களும், தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களும் எதிர்நோக்கிய பிரச்சனைகள், தமிழ் மக்கள் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கி உரையாற்றி இருந்தார். அத்துடன், தமிழ் ஊடகங்கள் போரில் நடந்ததை மட்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன் நின்றுவிடாது, போரின் சாட்சியங்களை வெளிக்கொண்டு வருவதிலும் பாடுபட வேண்டும் எனக் கூறினார்.
ரைம்ஸ் ஒஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையின் தலைமைச் செய்தி ஆசிரியர்களில் ஒருவரான அமிரித்லால் உரையாற்றும்போது, இந்திய ஊடகங்கள் எவ்வாறு ஈழத்தமிழ் மக்களின் இனப் பிரச்சினையைப் பார்க்கின்றன எனவும், தமிழ் மக்களின் பிரச்சியை தமிழ் மக்களின் பிரச்சினையாகப் பார்க்கப்படாது, விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது எனவும், தமிழ் மக்களின் புனர்வாழ்வு பற்றிப் பேசுபவர்கள் மனித உரிமை விடயங்கள் பற்றிப் பேசாது மௌனித்து இருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் போருக்குப் பின்னரான ஊடக சுதந்திரம் பற்றி உரையாற்றிய பிரான்சை தலைமையகமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் பிரித்தானியக் கிளையின் இயக்குனர் ஹெதர் பிளேக், தொடரும் ஊடகத் தடை பற்றி விளக்கிய அதேவேளை, அது தொடரபில், ஏழு முக்கிய விடயங்களை தனதுரையில் சுட்டிக்காட்டினார்.
காலை அமர்வில் இறுதியாக உரையாற்றிய பி.பி.சி தமிழோசையில் முன்னர் பணியாற்றிய ஊடகவியலாளர் ரமேஸ் கோபாலகிருஸ்ணன், ஈழப்போராட்ட அமைப்புக்கள் இந்தியாவில் இயங்கியபோது, அதன் தலைவர்களைச் சந்தித்தது முதல் தற்பொழுது வரையுள்ள நிலமைகளை விளக்கியதுடன், தமிழர்களுக்கு தற்பொழுது உலகின் எந்த நாடும் நண்பனாக இல்லை எனவும், நாடுகளின் அரசுகள் மத்தியில் நட்பை ஏற்படுத்த தமிழ் மக்கள் பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புலம்பெயர் தமிழ் அமைப்புகள், அரசியலுக்கு அப்பால், இந்திய குடிசார் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கேள்வி பதிலுடன் காலை அமர்வு நிறைவு பெற்றது.
சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் துணைத் தலைவர் தினேஸ் குமார் தலைமையில் நடைபெற்ற மாலை அமர்வின் ஆரம்பத்தில் இந்த அமைப்பின் இணைச் செயலாளர் யோகரட்ணம், மற்றும் செயலாளர் குகன் தம்பிப்பிள்ளை ஆகியோரின் ஒன்றியம் பற்றிய அறிவிப்பு மற்றும் உரைகளைத் தொடர்ந்து நோர்வே உத்ரொப் பல்கலாசார சஞ்சிகையின் ஆசிரியர் மயூரன் விவேகானந்தன் உரையாற்றினார்.
இதனையடுத்து, கனடா வின்சர் பல்கலைக்கழகத்தின் கலாநிதி சேரன் சனநாயகம், தொழில்நுட்பம், மாற்றுவழி ஊடகம் பற்றியும், தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை தகவல் தொழில்நுட்பம் தொடர்பாகவும், தமிழ்நாடு குங்குமம் இதழின் ஆசியர் பீடத்தைச் சேர்ந்த தோமஸ் அருள்எழிலன் தமிழர் இனப்பிரச்சினையும், ஊடக நிலை என்ற தலைப்பிலும், வேல்ஸ் ஸ்வான்சீ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சேந்தன் செல்வராஜா புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் பலம் பற்றியும் உரையாற்றினர்.
அருள் எழிலன் தமதுரையில், தமது அரசியல் உரிமைப் போராட்ட விடயத்தில், ஈழத்தமிழர்கள் தாங்களே முடிவுகளை எடுக்கவேண்டும், இந்தியாவையோ வெறெந்த சக்திகளை தமக்காக முடிவெடுக்க அனுமதிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தினார்.
இதனையடுத்து சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் நன்றியுரை வழங்கியதுடன், மீண்டும் கேள்வி, பதில்களுடன் இந்த ஆண்டிற்கான மாநாடு நிறைவு பெற்றது.
லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தில் 50இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அங்கத்துவர்களாக இருப்பதுடன், இதேபோன்ற மாநாடுகள் யேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் நண்பர்கள பெறூகிற முறயில் நடந்து கொள்வதற்கு பஜ்சாங்கம் பேசும் ரமேஸ் கோபால கிருஸ்ணன் போன்றோர் தவிர்க்கப்பட வேண்டும்.
இங்கு S.G.Raghavan அவர்கள் முன்னைய அவசரத்தை உணர்ந்து ஆற அமர தன்னுடைய எண்ணத்தை தெரிவித்திருக்கிறார்,அதற்கு முதலில் நான் நாகரீகமாக நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றேன்,”தானும் படான் தள்ளியும் படான்” என்று நான் குறிப்பிடவில்லை ,”தானும் தின்னான் தள்ளியும் படான்” என்றே குறிப்பிட்டிருந்தேன் அதன் அர்த்தம் வைக்கோல் பட்டறை நாய் தானும் வைக்கோலை தின்ன்னுவதில்லை வைக்கோல் தின்ன வரும் மாட்டையும் மிரட்டி உறுமி குலைத்துக்கொண்டிருப்பதைக்குறிக்கும் ,அதில் நண்பரை நாயாக சித்தரித்திருந்தாலும் எதிர்மறையில் உள்ள என்னை மாடாக சித்தரித்திருக்கிறேன்,
நண்பரால் முன்வைக்கப்பட்டிருக்கும் மாற்று திட்டங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் ஆனால் நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியம் எவ்வளவு என்பது சிந்திக்கவேண்டியது,
.
/விடுதலை புலிகளால் கொண்டாடப்பட்ட பொங்கு தமிழின் முன்னோடிகளாகச் செயற்பட்டவர்கள் மட்டக்களப்பின் அன்னையர் முன்னணியினரும் டெலோ அமைப்பைச் சேர்ந்தவர்களுமே. பின்னாளில் கிழக்கு பல்கலை கழகம் அதில் இணைவை ஏற்படுத்தியது அதே காலத்தில் பிற மாவட்டங்களிலும் அன்னையர் முன்னணி இதில் இணைந்தது. இதில் மன்னார் அன்னையர் முன்னணியின் பங்கும் முக்கியமானது. இதன் பின்னர் யாழ் பல்கலை கழகம் இணைந்து கொண்டு செயற்பட இறுதியில் புலிகள் அதனை தமது அரசியல் நடவடிக்கைக்காக பாவித்தனர் இது ஒரு மக்கள் மயப்பட்ட அசைவியக்கத்தை புலிமயப்படுத்திய பிற்போக்கு நிகழ்வாகும் (இதன் உள்ளார்த்தம் அனைவராலும் புரியப்படவேண்டும் இது வசை பாடல் அல்ல) புலிகள் பல்வேறு மக்கள் மையப்படுத்திய அமைப்புகளை புலிமயப்படுத்திய (இது குரோதம் கலந்த வார்த்தை இல்லை இதற்குள் புலிகள் விட்ட பலதவறுகள் உண்டு) நிகழ்வுகள் உண்டு. புலிகளினதும் தமிழ் மக்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்,/
இங்குதான் என் கருத்து முரண்படுகிறது,விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பல பக்கங்களிலிருந்து விமர்சனத்துக்குட்பட்டாலும் விபரிக்கமுடியாத வரவேற்பும் தமிழர்களிடத்து மட்டுமல்ல உலகமட்டத்திலும் உண்டு,இலங்கையின் வரலாற்றில் 70 களின் பின் 48க்கு மேற்பட்ட விடுதலை இயக்க அமைப்புக்கள் முளைவிட்டு ஒன்றிரண்டு மட்டும் அசைவியக்கமில்லாமல் ஒருசிலரின் சுயபாதுகாப்புக்காக முண்டு கொடுத்து காப்பாற்றப்பட்டுக்கொண்டிருந்தாலும் மற்றவை முற்று முழுதாக காணாமலும் போய்விட்டன, “விமர்சனத்துக்குட்படாத போராட்ட இயக்கம் எதுவுமிருக்கமுடியாது.”35 வருட போராட்டத்தில் புலிகள் இயக்கத்திலும் ஏகப்பட்ட தப்பு தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்.நான் மறுக்கவரவில்லை.
பொங்கு தமிழின் முன்னோடிகளாகச் செயற்பட்ட மட்டக்களப்பின் அன்னையர் முன்னணி புலிகளின் பின்னணியில் உருவானதுதான்.யாழ் பல்கலைக்கழகமும் முற்றுமுழுதாக புலிகள் ஆதரவாக நேரடியாக செயற்பட்டவர்கள்தான்.அவ்விடயங்களை இப்போ தவிர்த்தாலும் நீங்கள் கூறும் திட்டங்களை செயற்படுத்துவதற்கு நிச்சியம் ஒரு அரசியல் பின்புலம் தேவை,அதற்கு ஏற்கெனவே முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட இயக்க அரசியல் பின்புலங்களூடாக மக்களிடம் சென்று சேர்க்க முடியாது.அமைப்பு ரீதியாகவல்லாத எதுவும் சாத்தியமா என்பது பலகோடி டொலர் க்கேள்வி.
#இங்கு ஒருவருக்கொருவர் கொள்கைரீதியாக நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன, இருந்துகொண்டிருக்கும்,, சூழலும் பின்னணியும் பலரை வெவ்வேறு பாதைக்கு தள்ளியிருக்கிறது, இதுபற்றி நீட்டிக்கொண்டிருக்கத்தேவையில்லை புரிந்திருப்பீர்கள்.#நான் உண்மையில்ச்சொல்லப்போனால் புலிகளின் வழியை ஏற்றுக்கொண்டவன். நீங்கள் மாற்றுக்கருத்துக்கொண்டவராகவிருந்தாலும் கடைசியாக நீங்கள் எழுதியிருந்த கருத்துக்கு நாகரீகமாக எனது எண்ணத்தை முன்வைக்க வேண்டியதுபோல் காணப்பட்டதால் இதை எழுதுகின்றேன் நாம் எல்லோரும் “மனிதர்தானே”நல்லவை எங்கிருந்துவந்தாலும் எம்மினம் உய்வதற்கு வழியிருந்தால் விதண்டாவாதம் புரியத்தேவையில்லை என்ற நோக்கத்தை எல்லோருக்கும் முன்னுதாரணமாக காட்டவேண்டுமென எண்ணுகிறேன் உங்கள் முயற்சி வெற்றியளிக்க எனது வாழ்த்துக்கள்.உங்கள் செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்ஷத்தில் என்போன்றபலரின் ஆதரவு தானாகவே உங்களுக்குக்கிடைக்கும்.
அத்துடன் எனது தாழ்மையான வேண்டுகோள் ஒன்று தோல்வியில் முடிந்தாலும் இதுவரை எமது பெயரை உலகமட்டத்தில் கொண்டுசென்று சேர்த்துவிட்டு தம்மை அழித்துக்கொண்ட மாவீரர்களையும் போராட்டத்தையும் விமர்சித்துக்கொண்டிருக்க வேண்டாமென நம்புகிறேன்,நல்ல பாதை ஒன்று திறக்கப்படும் பட்ஷத்தில் தானாக எல்லோரும் பயணிக்க கற்றுக்கொடுக்கத்தேவையில்லை,
நன்றி,
wanni thamizhan,-
“அதில் நண்பரை நாயாக சித்தரித்திருந்தாலும் எதிர்மறையில் உள்ள என்னை மாடாக சித்தரித்திருக்கிறேன்”
நல்லது நண்பர்களை நாயாக பார்க்கும் பண்பை நீங்கள் புலிகளிடம் இருந்து கற்று கொண்டீர்களா? நல்லது நண்பரே இந்த விவாதத்தை இதனுடன் விடுவோம். ஒவ்வொரு விடுதலை இயக்கமும் நண்பர்களை சக தோழர்களை நாயாக விரட்டி விரட்டி அழித்தனர். அதில் புலிகளின் பங்கு சற்று அதிகம். நாம் எங்கள் சொந்த சகோதரரை இழந்தோம்.
நீங்கள் புலிகளின் வழியை பின்பற்றினீர்கள் ஆனால்…… நான் ……… விட்டுவிடுவோம்.
பொங்குதமிழ் நிகழ்ச்சியின் ஆரம்ப மக்கள் தன் எழுச்சியை மட்டக்களப்பில் இருந்தே தொடங்கியது அதன் ஆரம்ப கருவூட்டலுக்கு புலிகள் எவ்வித சம்பந்த்தமும் அற்றவர்கள். இங்கு அது அல்ல விடயம். புலிகள் மக்கள் தன் எழுச்சியை புலிகள் தமது சாயத்தை பூசியதால் வெளிஉலகம் இவ்வாறான முயற்சிகளை எல்லாம் புலிகளின் கிளர்சியாகா மாத்திரமே பார்த்தன. இதனை இலங்கை அரசும் புலிகளின் கிளர்ச்சியாகவே பார்த்தது. எனவே அனைத்தும் பயங்கரவாதமாகவே பார்கப் பட்டன. விடுதலை புலிகள் இவ்வாறான மக்கள் தன் எழுச்சியை பயன் படுத்திய விதம் அரசியல் ரீதியில் புலிகளிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை இன்றுவரை உணர்ந்து கொள்ளும் அரசியல் பக்குவம் ஏற்படவில்லை.
wanni thamizhan – “விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பல பக்கங்களிலிருந்து விமர்சனத்துக்குட்பட்டாலும் விபரிக்கமுடியாத வரவேற்பும் தமிழர்களிடத்து மட்டுமல்ல உலகமட்டத்திலும் உண்டு.” – மறுப்பதற்கில்லை
இங்கு விபரிக்கமுடியாத விமர்சனத்தை கொண்டிருந்த விடுதலை புலிகள் அதனை உள்வாங்கி தம்மை தகவமைத்து கொள்ளாததே புலிகளின் படு மோசமான வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்ததோடு தமிழ் மக்களின் அனைத்து அரசியல் அசைவியக்கத்தையும் அடித்து வீழ்த்தி முடமாக்கி விட்டது என்பதை உணராதவர்களின் கருத்து நிலைகளுடன் எத்தகைய
கூட்டிணைவை மேற்கொள்ளமுடியும்? அவ்வாறிணையின் மீண்டும் நாம் அவலத்தில் வீழ வேண்டி வரும் என்பதே எனது
கருத்தாகும்.
@ராகவன். தயவு செய்து அந்த பொங்குதமிழ் மட்டக்களப்பில் முதலாவதாக தொடங்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தீர்கள். தயவு செய்து அதன் விபரத்தை இங்கே அறியத்தர முடியுமா? நன்றி.
ஆனந்தசங்கரி சமீபத்தில் ஒரு தேர்தல்கூட்டத்தில் கூறியிருக்கின்றார், தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்திருந்தால் பிரபாகரனைக் காப்பாற்றியிருப்பாராம். இதன் மூலம் அவர் கூறவருவது என்னவென்றால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருப்பவர்கள் பிரபாகரனை காப்பாற்ற விரும்பவில்லை அல்லது அவர்களுக்கு பிரபாகரனை காப்பாற்றக்கூடிய திறமை இல்லை என்பதே. ஆனந்தசங்கரியின் கூற்றை ஒப்புக்கொள்வதைப்போலவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் எந்தக்கருத்தும் கூறாமல் மௌனம் சாதிக்கின்றார்கள்.
வெளியில் இருந்து கருது கூறுவது வேறு. தயவு செய்து எங்கள் நிலையை புரிந்து கொண்டு எறியும் நெருப்பில் இன்னும் எண்ணெய் உற்றாமல் அதை அணைப்பதற்கான வழியை சிந்திங்கள் சகோதரமே