24.08.2008.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சந்தர்ப்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரகசிய முயற்சி மேற்கொண்டு வருவதாக இந்தியப் பாதுகாப்பு செய்தியாளர் ஹரிஹரனை மேற்கோள் காட்டி பிரபல சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
15 ஆவது சார்க் மாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இரகசிய வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்வுத் திட்டமொன்று தொடர்பில் இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் பல தடவைகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் முடிவடைந்த உடன் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாக் கொண்டு ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளர்ர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.