தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இந்திய அமைதி காக்கும் படையினர் (ஐ.பி.கே.எவ்.) நிறுத்த வேண்டுமென்ற தனது கோரிக்கையை 29.07.1989 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அப்போதைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அச்சுறுத்தினார் என இந்திய முன்னாள் உயர் ஸ்தானிகர் ஒருவர் எழுதிய நூலொன்றில் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேட தூதுவர் பி.டி. தேஷ்முக்கிடம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமரின் விசேட செய்தியொன்றை தெரிவிப்பதற்காக இத்தூதுவர் இலங்கைக்கு வந்திருந்தபோது ஜனாதிபதி பிரேமதாஸ தனது முன்னிலையில் இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் லால் மல்ஹோத்ரா எழுதிய “இலங்கையில் எனது நாட்கள்” (My Days in Sri Lanka) எனும் நூலில் தெரிவித்துள்ளார். 254 பக்கங்கள் கொண்ட இந்நூல் இலங்கையில் விஜித யாப்பா புத்தகசாலையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய அமைதிகாக்கும் படையை ஆக்கிரமிப்பு படையென பிரகடனப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதாகவும் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ;தனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரை திருப்பியழைக்கப்போவதாகவும் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ எச்சரித்ததுடன் இந்திய உயர் ஸ்தானிகர் மல்ஹோத்ராவும் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லலாம் எனக் கூறியதாக அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சூழ்நிலையில் இலங்கை – இந்திய உறவு மிக கீழ் நிலையில் இருந்ததாகவும் படிப்படியாக இந்தியாவுக்கு எதிரான விரோதப்போக்கு அதிகரித்திருந்தாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தும்படி இந்திய அமைதிகாக்கும் படைக்கு உத்தரவிடுவதற்கு 9 தினங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
சிங்கள அரசுடன் ரக்சிய கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபட்ட புலிகழுடன் தற்போதயை
நாடுகடந்த தமிழீழ் அரசின் தலைவர் விஸ்வநாதன உருத்திர குமாரிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. புலிகளின் தலைவ்ர் பிரபாகரனின்
வழியிலேயே தனது போராட்டமும் அமைவதாக இந்த நா.க. அரசு கூறிவருகின்றது. அப்போ தற்போது இலங்கை அரசுடன் சேர்ந்து அரசியலிலும்
பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள புலிகளிற்கும் விஸ்வநாதன்
உருத்திரகுமாரிற்கும் உள்ள தொடர்புகளை அறிய இன்னமும் நாம் எத்தனைகால்ம் காத்திருக்க வேண்டுமோ?-துரை
துரை இங்கிலாந்து வரும் இலங்கை கிரிக்கெட் அணீயைத் தாக்குவதால் ஏதாவது நன்மை உண்டா/தொடர்ந்தும் நமது முகங்களீல் நாமே சாயம் பூசுதல் சரியா?
தமிழர்கள் தமிழர்களை ஏமாற்ரி வாழும்தமிழர்களிடமிருந்து முதலில் தப்ப வேண்டும். வடக்கில் பிறந்து வழந்து 30 காலமும் துன்ப துயரங்களை அனுபவித்தும் த்மிழனாக தலை நிமிர்ந்து வாழ்பவ்ர்களையே நாம் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.-துரை
க்நிமிரும் ஒவ்வொரு முறயும் கோதாரி விழுவார் கோடாறீயோடு லண்டன் வீதியில் அடிபட்டு வேட்டியை உருவி விடுகிறார்களே என்ன செய்யுறது.தலைவர் வரும்வரை என்றால் யாரய்யா தமிழருக்கு தலைவர்? சம்பந்தர் அய்யாதான் தலைவர் என்றால் அவருக்கு என்ன தெரியுமாம் அப்படியானால் உருத்திர குமாரனா? நீங்களே சொல்லுங்கள் துரை இது கொடுமையல்லவா?நியாயத்தை நீங்களாவது தட்டிக் கேட் க வேண்டும், மகிந்தவுக்கு ஊத்திக் குடுக்க கூடாது.
பகைமையை வளர்ப்பதன் மூலம் அழிவினையே விளைவாகப் பெறலாம்..இலங்கை அர்சும் மகிந்தாவும் தமிழர்களிடம் உருமையைப் பறித்தவ்ர்கள் என்பதை விட
தமிழர்கள் அவ்ர்களிடம் கொடுத்து விட்டார்கள் என்பதே என் கருத்து.
தமிழரைத்த் தமிழர் ஏமாற்ரி வாழ்ந்து வருகின்றார்கள். தமிழ் ஈழம் விடுதலை என்பதெல்லாம் உசுப்பேத்தும் சொற்கள். மக்களிற்கு விடிவைக் கொண்டு வர் என்ன நாங்கள் செய்யலாம். தமிழர்கள் அறியாமையிலிருந்து விடு பட வேண்டும். விடுவிக்க வேண்டும். உண்மையை அறிய வேண்டும் கருத்தால் ஒன்று பட வேண்டும். அத்ன் பின்னரே செய்யும் செயலெல்லாம் சீராகும். -துரை
வடிவேலுவால்தான் கலைஞர் கவுண்டதாய் ராஜகோபால் எழுதுகிறார்.இந்த புதினமே விளம்பரம் இல்லை என்றால் மூச்சை நிறூத்தி விடும் என்பது தெரியாமல் தன்னைக் குமுதமாய் நினைக்கும் இவருக்கு நீங்களாவது புத்திமதி சொல்லக் கூடாதா துரை?