விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பா.நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமேஷ் ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரின் மகன் சார்ள்ஸ் அன்டனியின் சடலம் என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சடலமும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பில் அறிவிக்கப்படுகிறது.
அத்துடன், விடுதலைப் புலிகள் 100 மீற்றர் x 100 மீற்றர் பரப்பளவில் ஒடுக்கப்பட்டுவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைமை குறித்து தமக்கு இதுவரை எதுவும் தெரியாது எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.