இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இன் பொதுச் செயலாளர் கணபதி Open சஞ்சிகையின் October 17, 2009 பிரதிக்கு வழங்கியிருந்த செவ்வியின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. இந்திய மாவோயிஸ்டுக்கள் என அறியப்படும் இக் கட்சி இந்திய அரசிற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நடத்தி வருகிறது.
Oct 22, 2009 @ 21:50 அன்று பதியப்பட்டது| காலத்தின் தேவைக்காக மீள் பதிகிறோம்
இலங்கையில் புலிகளின் பின்னடைவிற்குக் காரணம் என்ன?
புலிகளின் தோல்லிவிக்கும் குறிக்கத்தக்க அழிவிற்கும் பின்னர் தனியான தன்னாதிக்கமுள்ள தமிழ் ஈழத்திற்கான இயக்கம் பாரிய பின்னடைவிற்கு உள்ளாகியுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. தமிழர்களும் போராட்டமும் இப்போது தலைமையில்லாதுள்ளது.
பெருந்திரளான தமிழ் மக்கள் தேசிய வேட்கையுடன் தனியான தமிழ் தேசத்தில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இன்று வரைக்கும் தமிழ் ஈழத்தை கோருவதற்காக ஏற்பட்ட அதே நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தேசத்திற்கும், கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் எதிரான தனது இனவாதக் கொள்கைகளை சிங்கள சோவனிச அரசு மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
பிரபாகரன் கொல்லப்பட்டதும் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுமான முதல் வாரத்தில் அதையொட்டி இலங்கை அரசாலும் சோவனிசக் கட்சிகளாலும் இல்லங்கை முழுவதும் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் அணிவகுப்புக்களும், கொண்டாட்டங்களும், அப்பாவிச் சிங்கள மக்களின் சிந்தனையை நச்சூட்டும் சோவனிசக் கருத்துக்களை வளர்த்தெடுக்கும் எல்லைவரை தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள அமைப்புக்கள் உருவாக்கி வளர்த்த தேசிய வெறுப்புணர்வைச் சுட்டிநிற்கிறது.
இலங்கை அரசு தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக முன்வைக்கும் அதே சதித்திட்டமுள்ள கருத்தைத் தான் இஸ்ரேலிய சியோனிச அரசும் முன்வைக்கிறது. நிலமற்ற சிங்கள மக்கள் தமிழ் பிரதேசங்களில் குடியேற்றப்படுவார்கள்.
முழு இலங்கையினதும் குடியியல் எல்லைகள் மாற்றமடையப் போகிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் புதிய எழுச்சிக்கான தளம் இன்னமும் விளைநிலம் போல எஞ்சியுள்ளது.
நீண்ட காலமெடுத்தாலும், புலிகளின் தோல்விக்கான காரணங்களின் படிப்பினைகளிலிருந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது புத்துயிர்ப்புப் பெறுவது நிச்சயமானது.
பாட்டாளிவர்கச் சிந்தனை முறையையும் பார்வையையும் முன்வைத்து, புதிய தந்திரோபாயங்களை வகுத்த்குக்கொண்டு, பரந்துபட்ட ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளுடனான இணைவைக் கட்டியெழுப்புவதனூடாக ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் விடுதலை என்பது சாத்தியமானதே.
சரியான திசையையும், தலைமையையும் வழங்குவதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு திசைவழியை ஏற்படுத்துவதற்கும் மாவோயிச சக்திகள் தேவையான அளவிற்குப் பலமடைவதனூடாக தன்னாதிக்கமுள்ள தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசை அடைய முடியும்.
தவிர புலிகள் அமைப்பிற்கும் தமது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனாலும் 1980 களின் முதல் காற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த சில நபர்களின் தொடர்புகளூடாக ஆரம்ப நிலைப் பயிற்சிகளை மேற்கொண்டோம், தவிர, தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்திற்கு எமது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்துள்ளோம் எனவும் குறிப்பிடுகிறார்.
Published on: Oct 22, 2009 @ 21:50
விமர்சனத்தை உடனடியக ஏற்றுக்கொண்டு முன்னைய இடுகையை அகற்றியமைக்கும். சரியான தகவலை வழங்க முன்வந்தமைக்கும் நன்றிகள்.
மாவோயிஸ்டுகள் கடைசி வரையும் புலிகளை தமது சகாக்களாக தான் பார்த்தார்கள். புலி ஏன், கொள்ளைக்காரன் வீரப்பனுக்கே போராளி பட்டம் சூட்டிய மார்க்சியவாதிகள் தான் மாவோயிஸ்டுகள்!! இந்த லட்சணத்தில் நோபாள மாவோயிஸ்ட் தோழர்கள் திரிபுவாத பாதைக்கு திரும்பிவிட்டார்கள் என்று விமர்சிக்கிறார்கள்! தங்களை மாபெரும் ஹீரோக்களாகவும், புரட்சியாளர்களாகவும் கருதிக்கொள்ளும் மாவோயிஸ்டுகள் மக்களை அடி முட்டாள்கள் என்று தான் கருதுகிறார்கள். மாவோயிடுகளை வறட்டுவதமும் இடது தீவிர சாகசவாதமும் தான் பிடித்தாட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சோசலிச நோக்கங்களுக்காகத்தான் போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் நடைமுறை கம்யூனிஸ்டுகளுடையதை போல இல்லை.
போலிக் கம்யூனிஸ்டுகளை போல இவர்களும் இந்திய புரட்சிக்கு இடையூறாகவே இருக்கிறார்கள்.
இவர்கள் திருந்திய மார்க்சியத்தை கடைபிடிப்பார்களா ??
sariyana marxist pattri thiriyatha parvai
“ஆனாலும் 1980 களின் முதல் காற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த சில நபர்களின் தொடர்புகளூடாக ஆரம்ப நிலைப் பயிற்சிகளை மேற்கொண்டோம்,”
மயூரன் 80 களில் புலிகளில் இருந்து பிரிந்தவர்கள் யாரென்று சொல்ல முடியுமா?
80 களில் புலியிலிருந்து பிரிந்தவர்கள் பல இயக்கத்தில் சேர்ந்தனர். பல இயக்கத்தை உருவாக்கினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) களுக்கும் புலிகளுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா? தெரிந்தால்
மு.மயூரன் அவர்களே கொஞ்சம் எழுதங்களேன்?
maoist do better than their arms and help poor in many ways.whatever grief we have against india i cannot see indian revoulation and i dont want that to happen either.i dont suppor these maoist and all the other rubbish group.india is democracy country we want things in democracy way. this is the one of reson america like india than china.chinese are mad people and they have no manners.why these maoist still follow chinese theory in their country.maoism dead in china.
முகில் வானனுக்கு___
சைனாவில் மாக்சிசம் அல்ல மாவோ இசமே வாழ்ந்தது. அது இன்று இறந்து விட்டதாகச் சொல்கிறீர்கள். நல்லது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ஏதாவது இசம் உள்ளதா? நடைமுறை ஆசானுக்கு வெளியே உலகத்தில் எந்தப் பெரிய ஆசானும் கிடையாது.
America likes things that it can eat up without choking.
If America likes India, it is something that India should worry about.
Sadly America likes some things that China does. That is bad for China.
//ப்பிரசன்னா//
இதில் நான் சொல்ல என்ன இருக்கிறதென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.
இதற்கு முன்னர் இனியொருவில் வெளியாகிய கட்டுரை பொய்யான தகவல்களை ஆதாரமின்றி பிரசுரித்ததாயிருந்தது. அதனையே சுட்டிக்காட்டினேன். தற்போது இந்நேர்காணலின் மூலத்துடன் சரியான மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதற்குத்தான் நன்றி சொல்லியிருந்தேன்.
இதில் உள்ளது என்னை நேர்கண்ட நேர்காணல் அல்ல. மாவோவிஸ்ட் தாஇவர் ஒருவருடைய நேர்காணல் 😉
I know Karuna ( he is not this karuna) who was the first incharge of East left with Ragavan is now with Indian Maoists> He trained them
TAKE ACTION AGAINST 1,00,000 CRORES DMK RAJA AND BJP 1,60,000 CRORES ! ROPERRY! YOU Y OU CAN NOT UNDER STANAD!! AFTER FULL AQUITALL, STILL, MY BELOVED POSTAL N OT REPLY FOUR YEARS!I I WAS AQUASITEED OF ROBBERRY!
THIGORE SPELERE IS NO FALTE IN MAOISM!! WHO IS BRILLIANT TO TELL ME THE CONTRTICATIONS
Saturday, October 8, 2011
சீன அரசுக்கு எதிர்ப்பு : 5 துறவிகள் தீக்குளிப்பு
சீனாவின் ஆதிக்க போக்கிற்கு கண்டனம் தெரிவித்து திபெத்திய துறவிகள் 5 பேர் தீக்குளித்துள்ளனர், இன்று ஒரே நாளில் 2 பேரும் கடந்த வாரத்தில் 3 பேரும் தீக்குளித்துள்ளனர் என்று சீன அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து தனி அதிகாரம் கேட்டு திபெத்திய பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவ்வப்போது எதிர்ப்புகள் கிளம்புவதும், பின்னர் தானாக அடங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரத்தில் இதுவரை 5 துறவிகள் தங்களுக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். நேற்று தீக்குளித்த 2 பேரும் 18 முதல் 22 வயதுள்ளானவர்கள். தென்மேற்கு சீனாவின் சிக்குவானில் அபா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இது குறித்து அந்நாட்டு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் இருவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்ப்பட்டு வருகிறது என்றார். கடந்த சில மாதங்களாக அபா என்ற பகுதியில் திபெத்தியர்கள் தொடர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தற்போது வலுப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
lankanet
ம்……… நல்ல தலையங்கம். அப்ப இன்னும் கனபேரை சாகடிக்கப்போகினம்.
good effort let them kill the tamils who are left by the ltte
Berfore trying learn from the defeat of Tiger revolution,I would like to ask these pseudo- Marxists whether they have learnt anything from the defeat of October Revolution,Chinese Revolution,Vietnamese Revolution and the Cuban revolution?
Whom are you kidding?
We know the so-called socialists who have supported the revolutions from Vietnam to Venizuvela opposed the revolution on their door step-the Eelam revolution.
Why?
Explain that first ,and then we will talk about the future revolutions later.
விடுதலை புலிகள் அழியவும் இல்லை அழிக்கபடவும் மாட்டாது மீண்டும் வீரியமனா தாக்குதலை தொடர்வோம் ,காசு கேட்டு( ப்ரொடெச்ட்)போராட்டம் செய்யும் அமைப்பு TCC ,க்கும் பாடம் புகட்டுவோம்,இனிமெல் எந்த ஒரு காட்டி கொடுக்கும் அமைப்பு, குழுக்களுக்கும் இடம் இல்லை ,இனிமேலும் எம் இனத்தை விற்க வேண்டாம்….தலைவனின் தாகம் எங்களது ஆரம்பம்
புலிகள் இருக்கிறார்கள் மீண்டும் வருவம் என்று சொல்வது அரசாங்கத்க்தின் ஏஜண்டுகள் தான். அப்படி சொன்னால் தான் யாரும் புதிதாக போராட்டம் தொடங்கவோ அதுபற்றி சிந்திக்கவோ மாட்டார்கள். ரிசிசி கூட அதத்தான் சொல்லிகிறார்கள். இலங்கைக்குப் போய் ஊரிலை பிசினஸ் தொடங்கிபோட்டு இங்க வந்து புலி இருக்குது இன்னும் அடிப்பம் என்று சொல்லுற ஒவொருத்தனையும் விலாவாரியா ஆதாரத்தோடு அம்பலப்படுத்த வேண்டும்.
விடுதலைப்புலிகள் தோற்று விட்டார்கள் என்பது தவறு ஈழத்தமிழர்களினது போராட்டத்தை அறியாத அரசியல் வாதிகள் தமது இனவாத நலனுக்காக தமிழர்களை போராடவைத்து ஈழத்தை அமைத்து கொடுப்பதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றார்கள் .
முள்ளிவாய்காலில் ஆயுதப் போராட்டம் மெளனிகப்பட்டது மட்டுமல்ல மகாவம்சமும் மெளனிக்கப்பட்டுவிட்டது. ஒரு தேசத்திக் காலம் காலமான வரலாற்றுப் போரை விடுதலைப்புலிகள் கள் அமைப்பு தீர்க்க தரிசனத் தோடுதான் ஆயுதப் போரை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார்கள் என்பதனை இந்த உலகம் ஏற்கும் காலம் நகர்ந்து கொண்டிருப்பது பலருக்கு புரியாமல் இருப்பதே இத்தன குழப்பங்களும்
மகாபாரதமும் இராமயணமும் உண்மையா இல்லையா நாம் அதனை அறியவில்லை ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத்தின் வரலாற்றின் தேவைக்காக போராடிய அமைப்பு அவர்களது போராட்டம் தோற்கப்பட முடியாது . ஒரு இனத்தின் விடுதலைப் போரில் தவறுகள் இல்லை என நிரூபிக்க முடியாது ஆனால் தர்மத்தின் அடிப்படையில் சத்திய நெறிமுறை களுக்கு உட்பட்டு வெற்றி பெற வேண்டியது வரலாற்றுப் போருக்கான கடமை .
அதனையே விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச சமாதான நகர்வை கருத்தில் கொண்டு கையளித்துள்ளார்கள் . ஒரு தனிமனித இருப்பானது வரலாற்றின் பதிவாக அமைவதற்கு மக்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும். தம்மைத்தாம் வரலாற்றின் பதிவாக தீர்மானித்தால் அதற்கான அடையாளத்தை அவரவரும் நிரூபிக்க முடியாது . எம்மை நாம் அறிந்து கொண்டாலும் அடுத்தவர்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும் அந்த வகையில் தற் போது தமிழர்களுக்கு தலமைத்துவத்தை தேடும் அனைவரும் தமக்கான ஒரு இடத்தையே தேடிக்கொள்கின்றார்கள் என்பதே அர்தமாகும். உயிர்களை அர்பணித்தவர்கள் தேடாத தலமைத்துவத்தை தற்போது புலம் பெயர்ந்தவர்கள் தேடுவதற்கான காரணம் என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் நா.க.தமிழீழ அரசாங்கத்தையும் ஏற்காதவர்களே ஊடகஅதர்மங்களின் ஊடாக தலமைத்துவம் தேடி அலைபவர்களாக தம்மைதாம் வளர்த்துக் கொள்கின்றார்கள்.
இதற்கான பதில்களை தேடாதவரை தமிழினத்திற்கு விடுதலையை தேடிக் கொடுக்க யாருக்கு தகுதி உண்டு.