தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ஆயிரம் கோடி ரூபா லஞ்சம் வழங்க முற்பட்டதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு இந்த லஞ்சப் பணத்தை வழங்க பிரபாகரன் முயற்சித்தாக எப்.பி.ஐ. புலனாய்வுத் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஓருவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் 27 நாடுகளில் சுமார் 486 வங்கிக் கணக்குகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பேணி வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கனேடிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சொந்தமான கணக்கில் 4 மில்லியன் டொலர் கொண்ட கணக்கொன்றை கனேடிய காவற்துறையினரும்;, 2 மில்லியன் டொலர் கொண்ட கணக்கொன்றை ஸ்கொட்லண்ட்யார்ட் காவற்துறையினரும்; கண்டு பிடித்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
very good working