ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டதற்கு கையளப்பட்ட வழிமுறைகள் தவறானவை என்பதால் அத் தடை செல்லுபடியாகாது எனத் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகப் புலிகளுக்கு எதிரான தடைக்கான காரணத்தை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முன்வைக்குமாறு ஐரோப்பியப் பாராளுமன்றைத்த நீதிமன்றம் கோரியுள்ளது.
புலிகள், பிரபாகரன், புலிகளின் அடையாளங்கள் என்பன இலங்கை அரசும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தலைவர்களும் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்காகப் பயன்படுகிறது என்று 2009 ஆம் ஆண்டிலிருந்து இனியொரு எழுதிவந்துள்ளது.
புலிகளின் தடை நீக்க வழக்கில் எதிர்த்தரப்பான இலங்கை அரசிடமிருந்து எவ்வகையான வாதங்களும் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அரச தரப்பிலிருந்து வழக்கில் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை. தவிர வழக்கு நடைபெறுவதற்கு சில மாதங்களின் முன்னர் கே.பி தனது பிரதிநிதிகளை ஐரோப்ப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிகள் இருக்கும் வரை தான் ஆட்சியிலிருப்பேன் என புலிகளின் தடை நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்தின் முன்பு மகிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆக, புலிகளைக் காரணம் காட்டி தொடர்ந்து ஆட்சியில் நிலைப்பதற்கான அரசியல் வெளியை மகிந்த ராஜபக்ச ஏற்படுத்திக்கொள்ள தடை நீக்கம் வழிசெய்கிறது.
இதனைத் தவிர புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் மில்லியன் கணக்கான சொத்துக்களைக் கையகப்படுத்தவும் தடை நீக்கம் சார்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் பருதி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சொத்து விவகாரம் பிரதான காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவிலான சொத்துக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சட்ட ரீதியான உரிமை முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை கைப்பற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் முயற்சி எனவும், இதன் காரணமாகவே புலிகள் மீதான தடை நீக்கப்படுவதனை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிரான தடை முற்றாக நீக்கப்பட்டால் பெருமளவு பணமும் சொத்துக்களும் கிடைக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தடை நீக்கம் என்பது இலங்கை அரசு, புலம்பெயர் புலி வியாபாரிகள் போன்றோர் இணைந்த சதியே என்பது இப்போது துலங்கத் தொடங்கியுள்ளது.
தொடர்பான பதிவுகள்:
புலிகள் மீதான தடை நீக்க உத்தரவின் பின்புலம்
திரைப்படமொன்றில் இரு நண்பர்கள் வீட்டு யன்னல் கண்ணாடி வியாபாரம் செய்வார்கள். ஒருவர் முன்னால் வீட்டு கண்ணாடிகளை கல்லால் எறிந்து உடைத்துக்கொண்டு போவார். மற்ரவர் சிறிது காலம் தாழ்த்தி அவர் போன வழியெல்லாம் கண்ணாடி விற்றுக் கொண்டு போவார்.
இதில் இலங்கை அரசு போர்காலத்தில் தமிழரின் சொத்துக்களையும்
அழித்து தமிழர்களையும் கொல்வார்கள். இந்த போரை நடத்துபவர்கள்
தம்து வியாபார முகத்தோடு இலங்கை அரசுடன் உறவோடு தான் இருப்பார்கள்.
இதில் மக்களை ஏமாற்றியவ்ர்கள் தொடர்ந்தும் அரசின் மீது போர்க்குற்ரம்
சாட்டுவதாக மக்களை ஏமாற்றி வாழ்வார்கள். மற்ரவர்கள் நிவாரணப்பணியாக தங்கள் பெயரில் இலங்கையில் கோபுரம் போல்
விடுதிகளைக்க்ட்டுவார்கள். வன்னியில் கிணறும் மலகூடமும் அமைத்து விட்டு உலகெங்கும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வார்கள்.
தமிழீழக் கொள்கை தமிழீழ கொள்ளையர்களின் கையில்.