தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்து விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
கனடா, சுவிட்சர்லாந்து, மலேசியா, பிரிட்டன்,நோர்வே, சுவீடன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் காணப்படும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளார்.
அதிகளவான சொத்துக்கள் கனடாவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்பொருள் அங்காடிகள், வாகன விற்பனை நிலையங்கள், குத்தகை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மக்களுடைய சொத்துக்களை மக்களுக்கானதாக அறிவிக்காமல் முடக்கி வைத்திருக்கும் கே.பி உட்பட புலம்பெயர் மாபியா குழுக்கள் இனிமேல் அவற்றை இலங்கை அரசிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவர்கள் காலம் தாழ்த்தாமல் சொத்துக்களை மக்கள் சொத்தாக அறிவிப்பார்களானால் இனக் கொலையாளிகளிடம் சொத்துக்கள் சென்றடைவதை தவிர்க்கலாம்.
உலகம் உன்னிப்பாக கவனிக்கவுள்ள KP யின் மாவீரர்தின உரை