இந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன.
இலங்கையில் துவம்சம் செய்யப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தை புதிய திசைவழி நோக்கித் திட்டமிடுவதற்கான ஆரம்பம் புலிகளின் சிந்தனை முறையையும், அதன் தொடர்ச்சியும் நிராகரிக்கப்படுவதிலிருந்தே உருவாக முடியும்.
பொதுவாக இலங்கையிலும் அதற்கு வெளியிலும் நான் கு வகையான சக்திகளை இனம்காண முடியும்.
1. புலிகளின் சிந்தனை முறையின் தொடர்ச்சியை ஏற்றுக்கொள்வோர்.
2. இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் உளவியல் யுத்ததின் அடிமைகள்.
3. புதிய போராட்ட வழிமுறை குறித்துச் சிந்திப்போர்.
4. சீரழிவு வாதிகளும் லும்பன்களும்.
சீரழிவு வாதிகளும் லும்பன்களும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைச் சீர்குலைப்பதில் அரசிற்கு மறைமுகமாகச் சேவையாற்றும் போக்கைக் கொண்டிருந்தாலும் அரசியலில் இவர்கள் தீர்மானகரமான சக்திகளாக இல்லை. தாமாகவே அழிந்துபோகும் நிலையிலுள்ல இவர்களிடம் குறிப்பான சிந்தனை எதுவும் இல்லை. போராட முயலும் ஒவ்வொருவரையும் அனைத்து வழிகளிலிலு அழிக்க முயல்வதற்கு தம்மை சமூகத்தின் புனிதமான அடியாட்களாகக் கட்டமைக்க் முனையும் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களைப் புறக்கணிபது என்பதே இன்றைய சூழலில் இவர்களை எதிர்கொள்ளும் தந்திரோபாயமாக அமைய முடியும்.
தவிர முதல் இரு பகுதியினரும் அழிவை மறுபடி முன்னிறுத்தும் சக்திகளாக உருவாகும் வாய்ப்புக்களைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றனர். அதிகார வர்கத்தின் பொருளாதார நலன்கள் வரலாறு முழுவதும் பல ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில், ஆபிரிக்காவில், ஆசியாவில் என்று எங்கெல்லாம் தமது அதிகார நலன்களுக்காக அப்பாவிகளைக் கொன்று போட வேண்டுமோ அங்லாம் மனிதக் கொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
அதிகார வர்க்கத்தைச் சார்ந்த கருத்தியல் என்பது புலிகள் போன்ற போராட்டக் குழுக்களின் அரசியலாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது ஒரு புறம், மறுபுறத்தில் அதுவே இன்னுமொரு வடிவத்தில் உலக மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது துரதிர்ஷ்ட வசமானது. இது தான் மக்களை அழிக்கும் பாசிசமாக வளர்ச்சி பெறுகிறது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற பாசிசம் என்பது தான் தமிழ் பேசும் மக்களின் சிறீ லங்கா அரசிற்கு எதிரான நியாயமான போராட்டத்தையும் சீர் குலைத்துச் சிதைத்து விட்டிருக்கிறது.
அதிகாரம் சார்ந்த இந்தச் சிந்தனை முறை தகர்த்தெறியப்பட வேண்டும். உலகம் முழுவதும் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் மக்களே பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தின் சிந்தாந்தங்களால் சிதைக்கப்படுகின்றது. இவ்வாறான சித்தாந்தங்கள் ஒடுக்கப்படுகின்ற மக்களின் பெரும்பான்மையைச் சிதைத்து அதன் ஒருபகுதியை அதிகாரத்திற்குச் சார்பானதாக மாற்றிவிடுகிறது.
ஆசியாவின் ஒரு மூலையில் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட பின்னர், இனச் சுத்திகரிப்பு திட்டமிட்டு நடத்தப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேச அதிகாரவர்க்கம் தம்மை நிர்வாணமாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியிருக்கிறது.
இலங்கை, இந்திய, அமரிக்கா போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தோடு மட்டும் தான் நாம் இன்னமும் நம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லை உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப்போகிறோமா என்பது தான் இங்கு தொக்கி நிற்கும் பிரதாக கேள்வி.
அதிகாரவர்க்கத்தை நம்பியிருந்த புலிகளை அவ்வர்க்கம் கைகழுவி விட்டு, மனிதப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பின்னரும் அதே ஆதிக்க வர்க்கத்தோடு மட்டும் தான் இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் தம்மை அடையாள்ப்படுத்துவதென்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம் மட்டுமல்ல இன்னொரு தோல்வியின் ஆரம்பத்திற்கான அத்திவாரம்.
காரணமின்றி வலிந்து சிறைவைக்கப்பட்டிருந்த கால் மில்லியன் மக்களை விடுவிக்க வேண்டுமென்று எந்தச் சர்வதேச அமைப்புக்களும் கோரிக்கை விடவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களெல்லாம் சிறை முகாம்களில் மனித உரிமை குறித்தும், அவற்றின் வசதிகள் குறித்தும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டபடி அவ்வப்போது தமது இருப்பைப் பறைசாற்றிக்கொண்டன.
ஐ.நா தனது விசாரணக் குழு நாடகத்தை இன்னும் நிறுத்தவில்லை. இன்று, மண்ணோடு வாழ்ந்த வன்னி மக்கள் இன்று தெருவிலே அனாதைகளாகத் தூக்கிவீசப்பட்டுள்ளனர்.
இவர்களெல்லாம் இலங்கை அரசிற்கு மறைமுக அங்கீகாரம் மட்டும்தான் வழங்குகின்றனர். நீங்கள் மக்களைக் காரணமின்றிச் சிறை வைத்திருக்கலாம் ஆனால் மனித உரிமை மீறல்களின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். அறுபது வருட காலமாக திட்டமிட்டு நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பை “மனித உரிமைக்கு” மதிப்பளித்துத் தொடரச்சொல்கின்றனர்.
இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளில் புலிகள் களின் அதிகாரம் சார்ந்த சிந்தனை முறையே இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாகத் தான் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்றும் இதற்கு மாறாக இந்திய அரசிற்கு தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்று அதிகார வர்க்கச் சிந்தனை முறைகுட்பட்ட இன்னொரு பகுதியினர் கோருகின்றனர்.
காஷ்மீரிலும், மேற்கு வங்கத்திலும், இன்னும் இந்தியா முழுவதும் எந்த மனிதப்பெறுமானக்களுக்கும் மதிப்பளிகாது மனிதப்படுகொலை நிகழ்த்தும் இந்திய அதிகாரம் உலக முதலாளித்துவத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதற்காக இலங்கையில் மட்டுமல்ல தனது சொந்த எல்லைக்குள்ளேயே மக்களைக் கொன்று குவிக்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள் இவர்கள்.
உலகம் முழுவதையும் தனது பொருளாதார ஆகிரமிப்பிற்குள் உட்படுத்துக் நோக்கோடு இரத்தம் தோய்ந்த வரலாற்றை இன்றுவரை எழுதிவைத்திருக்கும் பிரித்தானிய வாக்குக் கட்சிகளோடு இலங்கைப் பிரச்சனை பற்றி மணிக்கணக்கில் விலையுயர்ந்த உணவு விடுதிகளுள் பேச்சு நடத்தும் பிரித்தானிய தமிழ் fபோரம் போன்ற புலி சார் அமைப்புக்கள், பிரித்தானியாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக, பிரித்தானியாவிற்குள்ளேயே போராட்டம் நடத்தும் இலட்சக்கணக்கான இடது சாரிகளை இனம் கண்டுகொள்வதில்லை.
பாலிஸ்தீனய மக்களின் விடுதலைக்காகவும், ஈராக்கிய, ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்புக்களுகெதிராகவும் நடத்திய வீரம்மிக்க எதிர்ப்பியக்கங்கள் பல தடவைகள் பிரித்தானிய அதிகாரத்தை அதிரவைத்திருக்கின்றன. ஐரோப்ப்பியப் போராடும் மக்கள் தமக்காக மட்டுமல்ல உலகம் முழுவதும் மனிதப்படுகொலைகள் நடைபெறும் போதெல்லாம் போராடி தமது அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்த வரலாறுகளை எம் கண்முன்னே காணலாம்.
இலங்கை இனப்படுகொலை குறித்து பிரச்சார அடிப்படையில் கூட இவர்கள் அணுகப்படவில்லை. மாறாக, மக்களின் எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் புலிகளின் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.
ஒடுக்கப்படுகின்ற, இனப்படுகொலைக்கும், இனச்சுத்திகரிப்பிற்கும் முகம்கொடுக்கும் தமிழ் பேசும் மக்கள் அதிகாரத்தின் பக்கமல்ல, மாறாக ஒடுக்கப்படுகின்ற ஏனைய மக்களின் பக்கத்தில் தான் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும்.
நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக இணைத்துக்கொள்வதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்க்குப் புதிய உயிர்ப்பை வழங்க முடியும்.
மக்கள் எல்லாம் கொல்லப்பட்டபோது மெளனம் காத்த உலகம் இனவெறீ கொண்டதோ என என்னை எண்ண வைத்தது.இரக்கமே இல்லாமல் முகமூடி அணீந்து வேட்டை நாய்களூக்காக வரிந்து நின்றது.இராணூவ உடை அணீந்து வந்து ஆலோசனைகளயும் அள்ளீ வழங்கி கொலைகள செய்து முடித்தது,இன்னும்,இன்னும் பாசாங்கு செய்யும் உல்கை நம்பித் தமிழர் பிதற்றூம் மனநிலையில் நிற்பதே வேதனை தருகிறது.மாவீரர் நாளூக்கு ஆள் சேர்ப்பதற்காய் பழய, பட்ங்கள் போட்டு மக்கள உண்ர்ச்சி வசப்படுத்தாது மக்களாய் வந்து மாவீரரான எல்லாப் போராளீகளூக்கும் அஞ்சலி செய்யும் நாளாக மாற,தமிழர் இணந்தால் மாத்திரமே நாம் ஒற்றூமையாய் சிந்திக்க முடியும்.
//மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுவது புலி அரசியல்மட்டும்தான்…. அதிகார வர்க்கத்தைச் சார்ந்த கருத்தியல் என்பது புலிகள் போன்ற போராட்டக் குழுக்களின் அரசியலாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது ஒரு புறம், மறுபுறத்தில் அதுவே இன்னுமொரு வடிவத்தில் உலக மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது துரதிர்ஷ்ட வசமானது. // நச் சென்று தமிழர் தலையில் குட்டுகிறஒரு கட்டுரை. ஆனாலும் இவர்கள் மேய்ப்பர்களாகவே இருக்கத்துடிப்பதால் மந்தைகளைப்பற்றிக கவனத்தில் எடுப்பதில்லை. கால்மில்லியன்மந்தைகள் சிறையிலிருந்தாலும் கண்டுகொள்ளாமல் மௌனமாயிருக்கிற மேய்பர்கள், தங்களது மீட்பர்கள் மாத்தளனில் இருந்த போது வீதியில் இறங்கிப் போராடிக் களைத்தது நல்லதோர் உதாரணம்.நல்ல கட்டுரை தொடருங்கள் நாவலன்
.
நாவலன்! புலிகளின் சிந்தனைமுறைக்கும் அவர்களின் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் முன்வைத்த தழிழீழக் கோரிக்கை என்பது முதலில் அறியப்படல் வேண்டும். எனவே நீங்கள் இந்த தமிழீழக் கோரிக்கையை அம்பலப்படுத்தாமல் மேற்கொண்டு என்ன கூறினாலும் அது எந்த பயனையும் தரப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரை. கடந்தகாலத் தவறுகளைப் பாராமல் புதிய வடிவத்தை எம்மால் எடுக்கமுடியாது என்பது உண்மையேயானாலும் யாரையும் புண்படுத்தாமல் விவாதங்களை முன்வைப்பதனூடாகவே அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்லமுடியும். ஒதுங்கியிருக்கும் கல்வியாளர்கள் அறிஞர்கள் அனைவரையும் உள்வாங்கிய தமிழர் தலைமை உருவாக வேண்டும். உலகத்தில் மட்டுமல்ல இலங்கைக்குள்ளேயே ஒடுக்கப்படுகின்ற மக்களுடன் நாமும் ஒன்றிணைய வேண்டும். ஜே.வி.பி. போன்ற கட்சிகளே தமிழர்களுக்காகக் கதைக்க ஆரம்பித்திருப்பது நல்ல ஆரம்பமாகும். கட்டுரைகளுடன் நில்லாது அனைவரையும் அழைத்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். மாவீரர் நாளின் போது அனைத்துத் தமிழப் போராளிகளுக்கும் வணக்கம் செலுத்துவதனூடாக விடுதலைப்புலி ஆதரவாளர்களும் புதிய சிந்தனைh ஓட்டத்துக்கு வழிசமைக்க முன்வர வேண்டும். செய்வார்களா?
தேவன் தமிழ் ஈழ கோரிக்கையை அம்பலப் படுத்த வேண்டும் என்பதன் விளக்கம் தான் என்ன? (மன்னிக்கவும், நீங்கள் நாவலனின் நாலாம் வகையோ?). தமிழீழ கோரிக்கை தவறானது அல்ல, அதனை எந்த வித நெகிழ்ச்சியும் இன்றி முன்னெடுத்த விதமும், விட்டுகொடுப்புகள், காலச் சூழல், உலக அரசியல் என்பவற்றை கணக்கில் எடுக்காது 30 வருடங்களாக நீட்டித்து சென்றதுமே தவறானது.
ராகவனின் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். தமிழர்களுக்கு எதுவுமே கொடுப்பதற்கு இலங்கையின் பலம் பொருந்திய தலைவர்கள் விரும்பாதமையே கடந்தகால வரலாறு. விடுதலைப்புலிகள் இருக்கும்போது சமஷ்டி பற்றிப் பேசியதாகவும் ஆனால் அவர்கள் அழிக்கப்பட்ட பின்னர் அதற்கான தேவை இல்லை எனச் சமீபத்தில் பீரிஸ் கூறியிருந்தார். இதனையே ஐ.தே.க. செயலாளரும் கூறியிருந்தார். சிங்களவருக்கு இருக்கும் உரிமையைத் தற்போதைய பலம் வாய்ந்த தலைவரான மகிந்த விரும்பினால் தமிழருக்கும் வழங்கலாம். இதனால் ஏதாவது எதிர்ப்புகள் தென்பகுதியில் ஏற்பட்டால் அதனை அடக்கும் வல்லமையும் அவரிடம் உண்டு. சம உரிமை கிடைத்தால் தமிழீழக் கோரிக்கை தானாக அடங்கிவிடும்.
விடுதலைப் புலிகள் ராணுவ பலத்தைக் கட்டியெழுப்புவதில் காட்டிய கரிசனையில் ஒரு வீதத்தைத்தானும் அரசியலுக்குப் பயன்படுத்தவில்லை. ஒற்றுமையை மாற்றுக் கருத்தாளரையும் இணைத்துப் பணிசெய்யும் ராஜதந்திரத்தை நாங்கள் சிங்களவரிடம்தான் படிக்க வேண்டும்.
புலிகளின் சிந்தனை முறை தேவைதானா? என்பது அருமையான தலைப்பு பின்னோட்டம் செய்வோர் தலையங்கத்தில் இருக்கும் கருப்பொருளை மையமாக வைத்து நகர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
திரு. நாவலன் அவர்களின் கட்டுரை கனதியான விடயத்துடன் உள்ளது.
எப்போதும் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுவதில் திரு.நாவலன் தயங்கியதில்லை. அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கவும் எழுதவும் பலர் தயங்கும் போதெல்லாம் அது பற்றிய உங்களின் ஆக்கங்கள் வெளிவரும். அது கண்டு வியந்துள்ளேன். அத்துடன் நடைமுறைச் சாத்தியமான விடயங்களைத் தொட்டுச்செல்வதுடன் சீர்திருத்தப்பட வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டுவதிலும் உங்கள் திறமை அலாதியானது.
உங்கள் மீது நான் கொண்டிருக்கும் பெருமதிப்பு இன்னும் அதிகரிக்கின்றது.
புலிகளின் சிந்தனை விதைப்பின் அறூவடையாய் புலிகளே ஆனார்கள் இந்தச் சிந்தனை இன்னும் தேவையா?கிரோசிமாவுக்கு பிறகும் எழுந்து நிற்கும் யப்பான்,கிட்லரால் வீழ்ந்தும் உயர்ந்து நிற்கும் ஜேர்மணீ, அது போல தமிழரின் வாழ்க்கையும் மீட்சி பெற வேண்டும் எனும் புதிய சிந்தனையே நாவலன் கட்டுரை.
சிந்தனை நன்று. ஆனால் சிந்தனை மட்டுமே ஈழத்தமிழரின் வாழ்வை உயர்த்திவிடுமா?
செயல் வடிவம் தரும் அடுத்தநிலைக்கு நாம் செல்வதெப்படி? நாவலரின் அடுத்த கட்டுரையை ஆவலாய் எதிர்பார்க்கின்றேன்.
இந்த உலகம் தான் நினைத்த நேரம் தூங்கி நினைத்த நேரம் விழித்தெழட்டும். அது பற்றி
அக்கறைப் படவில்லை.நானும் தமிழ் சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் சமூகத்திற்கு வருகிற இழுக்கு அவப்பெயர் பெருமைகளும் என்னை சார்ந்ததுவே!. அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. நினைப்பது என்ன அதுவே உண்மை.
இருபது வருடங்களுக்கு மேலாக புலியை ஆக்ரோசமாக எதிர்த்து வந்தவனாகவோ அல்லது 2009 மேமாதம் 19ம் திகதிவரைக்கும் ஏதோ நம்பிக்கையில் புலிக்கு ஆதரவு
கொடுத்தவர்களாக இருக்கட்டும் சரி.எல்லாம் எம் இனத்தைச் சேர்ந்ததுவே!.இதில் குறைவுமில்லை நிறைவும் இல்லை.
சமீபத்தில் ஒரு செய்தி என்னை அமைதியில்லாமல் பண்ணியது.அது இது தான் “வன்னியில்லுள்ள ஒருலட்சத்தி அறுபதுனாயிரம் பேர்களில் 90 வீதமானவர்களுக்கு
பொய் காலோ பொய் கையோ தேவைப் படுகிறது.தமது வாழ்வை சுயமாக கொண்டு நடத்த”
இந்த செய்தி உண்மையா? பொய்யா? என்பதை அறிய பலநாள் முயற்சித்தேன்.உண்மையாயிற்று.இதில் யாரும் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம்.
மகிந்தாவா? புலியா?? டக்கிளஸ்சா??? முழுப் பொறுப்பையும் புலம்பெயர் தமிழர்களே
ஏற்றுக் கொள்ளவேண்டும். இவர்களே குற்றவாளிகள்.
யாழ்பாணத்தில் ஒற்றை காலை இழந்த ஒரு புலிப்போராளி பெண்ணுக்கு ஒரு குழந்தை
பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு மாதம் 20 யூரோக்களை அனுப்புவதாக முடிவெடுத்துள்ளோன்.
மாஜி ஐந்துபுலி பத்துபுலிகள் சேர்ந்து ஒரு சக்கரநாற்காலியோ ஒரு பொய்கால்-கையையோ வாங்கிக் கொடுக்க முடியுமா? ஊனமுற்ற எமது இனம் வாழ்வைக் கொண்டு நடத்த.
அரசியல் தவறுகளை எல்லோரும் தான் செய்கிறோம்.ஆனால் மானிடமும்..மானிடத்தின் சிந்தனைகளும் மானிடத்தை அரவணத்துக் கொண்டு செல்வதாகவே இருக்க வேண்டும்.அப்படி இருந்தால்தான் நாம் எம் இனத்தைப்பற்றி
கதைப்பதற்கும் பெருமையுண்டு.
சந்திரன் ராஜா அவர்களது கருத்து அறீவு சார்ந்தது இதுதான் தமிழ்ச் சமூகத்திற்கு அவசியமானது.தங்களூக்கு எனது நன்றீகள்.
சரியாகச் சொன்னீர்கள். புலம்பெயர் தமிழர்கள் தாம் தப்புவதற்கு மகிந்தமேல் குற்றம் சாட்டுகிறார்கள். மகிந்த தமிழரை புலிகளின் சிறையிருப்பிலிருந்து விடுவித்து இப்போது அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களையும் பாதுகாப்பிற்கு இராணுவத்தையும் குடியிருத்தி தமிழருக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதுசரி புலம்பெயர் தமிழர் ஊருக்குப் பணம் அனுப்பித்தானே அங்கு மக்களைக் கெடுத்தார்கள். நீங்களும் பணம் அனுப்பி ஏன் அப்பெண்ணைக் கெடுக்கிறீர்கள்? மகிந்த இருக்கிறார், அவவை நன்கு கவனித்துக்கொள்வார்.
மேலும் தமிழ் மக்கள் காயப் பட்டர்கள், ஊனமானார்கள், இறந்தார்கள் என்பதெல்லாம் முழுப் பொய். இது புலம் பெயர் புலிகளின் பிரச்சாரம். மகிந்த ஏற்கனவே சொல்லிவிட்டார், ஒரு இரத்தமும் சிந்தாமல் மக்களை மீட்ட போர் என்று. இலங்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை, முக்கியமாக தமிழருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.
கடைசியில் ஒரு கேள்வி, புலிப் போராளிப் பெண்ணுக்கு பிள்ளை பிறந்ததாகச் சொல்கிறீர்கள், தகப்பன் சிங்கள இராணுவ வீரனா? மிகக் கரிசனையுடன் உதவ வெளிக்கிட்டுவிட்டீர்கள். விலைவாசி ஏறி 20 யூறோவிற்கு ஒரு அப்பிளும் ஒரு முட்டையும்தான் வாங்கலாம்.
ஏன் சூர்யா எதோ தன்னால் முடிந்ததை கொடுக்க முயற்சிக்கிறார் அவர் இணையத்தில் 200 யூறோ என்றும் புழுகி இருக்கலாம்தானே! ஓ எல்லோரும் இப்படி வெளிக்கிட்டால் பிறகு உங்கள் உண்டியலில் ஒருவரும் போடமாட்டார்கள் நல்ல சிந்தனை.
வணக்கம் மாமணி, நான் புலியுமில்லை, புலிக்கு வக்காலத்து வாங்க வரவுமில்லை. ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியுள்ளேன், ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள் என்று. நான். உண்டியல் குலுக்குபவனுமில்லை, சிறுவிடயத்தையிட்டு பல்லாயிரம்பேர் பார்க்கும் இணயத்தளத்தில் தம்ம்பட்டம் அடிப்பவனுமில்லை. சந்திரன் ராஜா இதுவரை எப்படி எழுதிவந்தார் என்று கவனித்திருந்தீர்களென்றால் இப்படி நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வக்காலத்து வாங்கியிருக்க மாட்டீர்கள். புலிகளை ஒருபோதும் ஆதரிக்காதவர்கள் பலர் நூற்றுக்கணக்கில் பணம் அனுப்பி அங்கு அல்லல்படும் மக்களுக்கு உதவுகிறார்கள். உங்களுக்கு விடயம் விளங்கவில்லை, 2 யூரோ உம் பணம்தான், அதுவும் ஒன்றுமில்லாதவனுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஆனால் அதை எப்படி செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, உங்கள் தர்மம்.
இதுவரை எப்படி எழுதிவந்தார்?
நேர்மையுள்ள மனிதனாக உங்களை
அடையாளப் படுத்த வேண்டுமென்றால் அதை அவிழ்த்து
விடுங்களேன். நிச்சியம் அந்த துணிவு
உங்களுக்கு இல்லை. இது சவால்!.
நீங்கள் புலிக்கு வக்காலத்து வாங்கவில்லையென்பது உண்மையானால் நானும் புலியை விமர்சிப்பதில்லை. உங்கள்நிலைப்பாட்டை ஒரே வரியில் கூறிவிடுங்கள் அதன்பின் நாம் ஒரே திசையில் பயணிக்கலாமா இல்லையா என்று தெரிந்துவிடும்.
இந்த புழுத்துப் போன சிந்தனையில் தானா? உயிர் வாழ்கிறீர்கள் சூரியா!
விட்டொழியுங்கள்.நஞ்சு. உங்கள்சிந்தனையே நச்சு வயப்பட்டிருக்கிறது.
நான் கணக்கு பார்ப்பது குழந்தையின் உயிர்வாழ்வைப் பற்றி..என்சக்திக்கு
உட்பட்டதை நினைத்து. நீங்களோ….கிளமோர் வெடிகுண்டுகளைப் பற்றி
கவலைப் படுகிறீர்கள். அதற்கு உங்கள் பணம் போதுமானது தான்.
இப்படி விசர்தனமான கருத்துக்களை இணையத்தளங்களில் அரங்கேற்று
வதை நிறுத்துங்கள். அது உங்கள் இனத்திற்கே அவமானகரமானது புலிகள் செய்ததையும் மிஞ்சி.
“அழகு” தமிழ் ஆளையே அடையாளம் காட்டுகிறது.
சந்திரன் ராஜா அவர்களே, எதை அவிழ்த்து விடச்சொல்ல்கிறீர்கள்? உங்கள் மகிந்த எல்லவற்றையும்தானே உரிந்துப்போட்டார். உங்கள் சவாலை ஏற்று இருக்கும் கடைசித் துண்டையும் அவிழ்க்க நான் தயார். இங்கனம் முள்ளிவாய்க்கால் முளுப்பாவத்தையும் சுமக்கும் புலம்பெயர் தமிழன்.
இதுவரை எப்படி எழுதிவந்தார்? என்பதை நீங்கள் தானே! கூறினீர்கள். எப்படி என்பதை
நீங்கள் தான் கூறவேண்டும். அதை தான் அவிழ்த்துவிட சொன்னேன். இதை கூட புரிந்துகொள்ளக் கஷ்ரமாக இருக்கிறதா சூரியா?
உங்கள் புரிந்தல் எனக்கு விளங்குகிறது. முப்பது வருட தமிழ்மக்களின் அவலத்திற்கும் மகிந்த ராஜயபக்சா காரணம் இல்லை.அதற்கு தமிழ்-அரசியல் தலைமைகளே காரணம்.
புலிகளையா? மகிந்தாவையா?? தெரிவு செய்வீர்கள் என்று கேட்டால் இன்றும் துணிகரமாக மகிந்தராஜ பக்சாவையே என்று சொல்வேன். தமிழ்மக்களின் அழிவுக்கும் முள்ளிவாய்கள் சம்பவங்களுக்கும் புலிகளும் பொருளாதரவழங்களை அள்ளி வழங்கிய
புலம்பெயர் தமிழர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இனி நான் எப்படி எழுதினேன் என்பதை புரியவையுங்கள் அல்லது அவிழ்த்து விடுங்கள்.
உங்கள் புரிதல் எனக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேவன்,
உங்களது சிந்தனை கூட எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான். கொம்யூனிசம் தோற்றால் கம்யூனிஸ்ட் கட்சியே பிழை. மார்க்சியமே பிழை என்று சொன்ன அதே வகையறாக்கள் தான் நீங்கள். ஒரு நாட்டின் சமூகச் சூழலை நீங்கள் புரிந்து கொள்வதில்லை.
நான் கட்டுரை எழுதிய நாவலனுக்கே கருத்து எழுதினேன்.அது குறித்து நாவலன் இன்னும் பதில் அளிக்கவில்லை. ஆனால் அதற்குள் ராகவன் பாரதி வகையறாக்கள் ஏன் அவசரப்படுகிறார்கள் என்று புரியவில்லை. சாத்தியப்படாத தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தமையே புலிகளின் தோல்விக்கு முக்கிய அடிப்படைக் காரணம் என்பது என் கருத்து. அந்தக் கருத்து தவறாயின் அவர்கள் தமிழீழம் எப்படி சாத்தியம் என்பதை விளக்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து நான் நாவலனின் நாலாம் வகையோ அல்லது கம்யுனிசம் தோற்றால் மாக்சியம் பிழை என்று சொல்லும் வகையறா என்றோ முத்திரை குத்துவது சிறந்த பதில் அல்ல என்பது மட்டுமல்ல அது எவ்வித பயனையும் கொடுக்கப் போவதில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழீழம் ஏன் தமிழர்களுக்கு சிறந்த தீர்வு என்பதையும் அதை எப்படி அடைவது ? நண்பர்கள் யார்? ஏதிரி யார்? பாதை எது? என்பதை மாக்சிய அடிப்படையில் நாவலனோ அல்லது இங்கு வக்காலத்து வாங்கும் ராகவன் பாரதி போன்றவர்களோ விளக்குவார்களேயானால் அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
விவசாயி எப்போதுமே நம்பிக்கையை கைவிடுவதில்லை.ஒரு விளச்சல் முடிந்தால் இன்னொரு விளச்சலுக்காக நடுகையை ஆரம்பிப்பான்.அது போல நாம் தளர்ந்து விட வேண்டம்.ஆற்றலும்,அறீவும், நன்மையும் ஓங்க சம்பந்தர் அய்யா உழைத்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கான அவகாசம் தேவை.இலங்கையில் இணக்கமான் ஒரு தீர்வு தமிழருக்கு நிச்சயம் மலரும்.நமது நோக்கில் நம்பிக்கை இருக்கட்டும் தமிழர் தளராது நம் நேச உறவுகளூக்கு கை கொடுப்போம்.
தமிழீழம் சாத்தியமற்றது மட்டுமல்ல தர்க்க ரீதியாகவும் தவறானது என்பதே எனது கருத்து. எனினும் புலிகளின் சிந்தனை முறை இன்னுமொரு விடயம். ஜே வி பி தமிழீழம் கேடகாவிட்டாலும் ஒத்த சிந்தனை முறையைக் கொண்டுள்ளது.
ஒன்று நோக்கம் தொடர்பானது. மற்றது அதனை அடையும் வழிமுறை தொடர்பானது.
நான் நாவலன் அல்ல. ஆனால் அதனால் அவர் பதிலளிக்கும் வரை நான் காத்திருக்க வேண்டும் எள எதிர்பார்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்
1 புலிகளின் அரசியல் போராட்டம் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டமாகவும் இருந்திருந்தால், தேசியப் போராட்டம் வென்றிருக்குமா?
2. புலி சார் அமைப்புகள், பிரித்தானியத் தமிழர் பேரவை உட்பட அதனுள் இருக்கும் புலியிசமே தேசியம் என இன்றும் நம்பும் தேசியம் சார் சக்திகளை எவ்வாறு வழி நடத்துவது? அல்லது புறக்கணிப்பதா
3.மக்கள் போராட்டங்கள் எதிர் கொள்ளப்போகும் தடைகள் எவை? தடைகளை கையாளும் வழிகள் என்ன?
4. மக்கள் போராட்டங்களால் ஏற்படக்கூடிய அதியுச்ச பலன்கள் எவை?
5.பூகோள அரசியலும் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டங்களும் சந்திக்கப்போகும் இடம் தேசியத்தின் விடுதலை ஆகுமா?
மேற் கூறிய வினாட்களுக்கு யாரும் பதில் கூறின் நன்றாக இருக்கும்.
மேலும் சில கேள்விகள்
6. 30 வருடமாக புலிகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் புலிகளிற்கு எதிராக போராடவில்லை?
7.தேசிய விடுதலைப் போராட்டத்தையும், ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தையும் கூர்மை அடைந்திருக்கும் பெருந் தேசியத்திற்கு எதிராக இணைக்கமுடியுமா?
“30 வருடமாக புலிகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் புலிகளிற்கு எதிராக போராடவில்லை? ”
போராடினார்கள் ஆனால் பல்வேறு காரணங்களால் அவை தோல்வியடைந்தன. (பல்கலைக்கழக மாணவர் போராட்டம் பற்றி பலதடவை பேசப்பட்டுள்ளது.)
“தேசிய விடுதலைப் போராட்டத்தையும்இ ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தையும் கூர்மை அடைந்திருக்கும் பெருந் தேசியத்திற்கு எதிராக இணைக்கமுடியுமா?”
இணைக்காது போனால் அதனை எதிரி தனது ஆயுதமாகப் பயன்படுத்துவான்.
// பல்வேறு காரணங்களால் அவை தோல்வியடைந்தன// அது மாதிரியான காரணங்கள் மீண்டும் வராமலும் புதுக் காரணங்கள் எவையாக இருக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு புதிய சிந்தனை முறை உருவாகவேண்டும்.
1 புலிகளின் அரசியல் போராட்டம் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டமாகவும் இருந்திருந்தால், தேசியப் போராட்டம் வென்றிருக்குமா?
அது மக்கள் போராட்டமாக இருந்திருந்தால் அதன் இலக்கும் வேறாக இருந்திருக்கும் அல்லவா! தமிழர் விடுதலை அரசியல் மக்கள் அரசியலாக அமையத் தவறியது ஏன் என்பதை நாம் விசாரிக்க வேண்டும்
2. புலி சார் அமைப்புகள், பிரித்தானியத் தமிழர் பேரவை உட்பட அதனுள் இருக்கும் புலியிசமே தேசியம் என இன்றும் நம்பும் தேசியம் சார் சக்திகளை எவ்வாறு வழி நடத்துவது? அல்லது புறக்கணிப்பதா?
எதையும் புறக்கணிப்பது என்பது அதனுடன் சேர்ந்து செயற்பட வாய்ப்பு உண்டா என்பதைப் பொறுத்தது. பல நேரங்களில் நல்ல சக்திகள் தவறான சிந்தனையால் வழிநடத்தப் படலாம். அவர்களை எப்படி வென்றெடுப்பது என்பதையும் கருத்திற் கொண்டே அமைப்புக்களுடனான உறவை முடிவு செய்யலாம்.
3.மக்கள் போராட்டங்கள் எதிர் கொள்ளப்போகும் தடைகள் எவை? தடைகளை கையாளும் வழிகள் என்ன?
இதற்கு எளிதான விடை இல்லை. பிற்போக்குச் சக்திகள் பலவாறன இடையூறுகளையும் ஏற்படுத்தியவாறே இருப்பன. ஜனநாயகமின்மை ஒரு அகப் பிரச்சனை. கடந்த காலத்திலிருந்து சில முடிபுகட்கு வரலாம். ஆனால் நடைமுறையிலிருந்து தான் சரியான அறிவு பிறக்கும்
4. மக்கள் போராட்டங்களால் ஏற்படக்கூடிய அதியுச்ச பலன்கள் எவை?
மக்கள் போராட்டங்களை விட விடுதலைக்கான நம்பகமான பாதை உள்ளதாக நான் நம்பவில்லை.
5.பூகோள அரசியலும் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டங்களும் சந்திக்கப்போகும் இடம் தேசியத்தின் விடுதலை ஆகுமா?
தேசிய ஒடுக்குமுறை என்பது மானுடத்தின் பிரச்சனைகளின் முழுமை அல்லவே. தேசிய ஒடுக்குமுறை உள்ளபோது விடுதலைப் போரட்டம் தவிர்க்க இயலாதது. போராட்டம் தன்னை எவ்வாறு பிற நியாயமான போரட்டங்களுடன் ஐக்கியப் படுத்துகிறது என்பதிலேயே பலவும் தங்கியுள்ளன.
6. 30 வருடமாக புலிகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் புலிகளிற்கு எதிராக போராடவில்லை?
மக்கள் புலிகளின் எதேச்சாதிகாரத்தை வெறுத்தார்கள். ஆனால் அவர்களை விட்டால் அரச படைகள்டமிருந்து பாதுகாப்பில்லை எனவும் (நியாயமாகவே) நம்பினார்கள். இது இருதலைக் கொள்ளி நிலை. மக்களின் அச்சம் நியாயமானது என்பதைக் கடந்த 18 மாதங்கள் காட்டி விட்டன. யார் வென்றலும் தோற்றோர் மக்களாகவே இருந்திருப்பர்.
7.தேசிய விடுதலைப் போராட்டத்தையும், ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தையும் கூர்மை அடைந்திருக்கும் பெருந் தேசியத்திற்கு எதிராக இணைக்க முடியுமா?
முடிந்தாக வேண்டும். அல்லது எல்லாருக்கும் வேதனை தான் மிஞ்சும்.
மிகக் கனமான ஆனால் மிக மிக அவசியமான கேள்விகள். – விமர்சனங்கள்.
சரியான முடிவுகளை எடுத்தல் என்பதிலிருந்தே முன்னேறுதல் சாத்தியமாகும் போல் தெரிகிறது. வரலாற்றனுபங்களை சரியாகக் கிரகித்து சரியான போராட்ட வழிமுறைகளை இனங்கண்டு போராடி விடுதலை பெறுதல் என்பது ….. உங்கள் கேள்விகள் இனியொருவின் அடுத்த கட்ட நகர்வுக்கான வழியைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. இனியொரு இது குறித்து அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியம்.
போருக்குள் நிர்மூலமாக்கப்படிருக்கிறது ஒரு இனம். இது நிச்சயமாகப் புலி இனமல்ல.30 ஆண்டுகால அறப்போரிலும்,மீதி 30 ஆண்டுகால ஆயுதப்போரிலும் ஆற்றாமையோடு அலைக்கழிந்து சிதைந்து போன இவ்வினத்தின் தலையில் பல சன்னதங்கள் உட்கார்ந்து பிடித்தாட்டிப் போய்விட்டன.இனவெறி இராணுவங்கள் குறிவைத்து அழித்தும், இனவெறிக்காடையர் வெட்டிச்சாய்த்தும்,மொழியுரிமையாளர்களால் முடக்கிப் போட்டும், இனக்காவலர்களால் எச்சிற்பட்டும் ஏளனப்பட்டுப் ஏதிலியாகிப்போனது அவ் இனம்.நம்புவது எதை, நம்பாதது எதை என்றும் சரிஎது பிழை எது என்றும் அறிய முடியாத படிக்கு காலத்திற்குக்காலம் சரிகள் பிழையாகவும் பிழைகள் சரியாகவும் இம்மக்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. சுயலாபத்திற்காக இம் மக்களிடம் வாக்கு வேட்டையாடி பாராளுமன்றம் சென்றவர்கள் தங்களையும், பிள்ளைகளையும் வெளிநாடுகளில் வளர்த்தார்கள்.மீந்திருந்தவ்ர்களையும் பின் நாளில்வந்த புலிகள் வெளிநாட்டுக்கனுப்பி நாட்டைச் சுத்தீகரித்து தங்கள் சுகபோகத்திற்காய் வழிப்பண்னார்கள்.இன்று நிர்க்கதியாக நட்டாற்றில் நிற்கிற அற்ப சொற்ப இந்த அப்பாவி மனிதர்களிடம் தான் எல்லாவற்றையும் அனுபவித்தெறிந்த மலைவிழுங்கிகள் எல்லாக்குற்றங்களையும் சுமத்தி கேள்விமேல் கேள்வி தொடுக்க நினைக்கின்றார்கள்.
தோற்றதால் ஒரு கொள்கை தவறென்பதும் வென்றதால் இன்னொன்று சரியென்பதும் நம்மை மட்டுமல்ல உலகமக்களையே பிடித்துள்ள ஒரு கொடிய நோய்.எதையும் சரியான வழியில் சூழ்நிலைகளுக்கேற்ப கையாழாமல் விடுவதாலேயே ஒரு சிறந்த கொள்கையும் தோல்வியை தழுவிவிடுகின்றது.
புலிகளின் அதிகாரம் சார்ந்த கருத்தியல் சிந்தனை முறை இனிவரும் காலங்களுக்கு பயன்படுத்தமுடியாத ஒன்று என்பதே எனது வாதம்.சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப்பின்பு உலகின் போக்கை நாம் ஊகித்திருப்போமானால் நாம் சிலவேளை இவ்வளவு விவாதங்களையும் சில வேளை தவிர்த்திருக்கலாமோ என்னவோ,தமிழ் ஈழம் கேட்டது தவறல்ல கேட்டதையே கடைசிவரை விடாது தொங்கியதே தவறு 30 வருடங்களில் உலகில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தன ஆனால் நாம் அவைகளை இட்டு அலட்சியமாக இருந்து ஒரே மந்திரத்தையே சொல்லிக்கொண்டிருந்தோம் இனிமேலும் அதை புலிகளின் சிந்தனையை முன்வைத்தே நகா்த்த முற்படுவது நிச்சயமாக நன்மை பயக்கும் என்று கூறமுடியாது,நாம் அதிலிருந்து விடுபட முயலவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்றதை செய்வது நமது கடமை செய்பவா்கள் சில வேளை மற்றவா்களையும் உற்சாகப்படுத்துவதாக எண்ணி தம்பட்டம் அடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
போராட்டமும், சுதந்திரமும் மானிட தேவைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே உள்ளன ஒன்றின் தேவைக்காக மற்றொன்றை கைவிடமுடியாது என்றே எண்ணுகிறேன்.துன்பத்தில் வாடும் மக்களுக்கு கைகொடுத்துக்கொண்டே அவா்களின் நிலையை உறுதிப்படுத்த போராடியே தீரவேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம்.
புலம் பெயா்ந்து வாழ்பவா்களில் ஒரு சிறு பிரிவினரே குடும்ப உறவுகள் நாட்டில் இன்றி வாழ்கிறார்கள் ஆனால் பெரும்பான்மையினரின் உறவுகள் நாட்டிலேயே வாழ்கிறார்கள் ஆகவே புலம் பெயா்ந்தவா்களை சிலா் மகிழ்ச்சியாக இங்கு வாழ்ந்துகொள்வதாக எப்போதும் குறிப்பிடுவதுடன் அங்குள்ளவா்களிருந்து பிரித்தும் பார்க்கின்றார்கள் இது ஆரோக்கியமான விடயம் அல்ல.
சந்திரன் ராஜா,
உங்கள் புரியதல் வேறு, எனது புரிதல் வேறு என்பது இப்பொது உங்களுக்கு புரிந்துவிட்டதே என்று இப்போது எனக்கும் புரிகிறது. புலிகள் பிழை விட்டார்கள், புலம் பெயர் தமிழர் அவர்களை வளர்த்துவிட்டார்கள், அதனால் 40 ஆயிரத்திற்கு மேலான தமிழரைக் கொன்றுகுவித்த மகிந்த உஙளுக்கு ராஜாவாக இருக்கலாம். எனக்கு அவர் ஒரு போர் குற்றவாளி. சர்வதேச நீதிமன்றில் நிறுதப்பட்டு அவரும் அவரின் கூட்டமும் விசாரிக்கப்ட்டு தண்டனை கொடுக்கப்பட வேண்டும். என்னதான் புலிகளும், புலம்பெயர் தமிழரும் பிழை விட்டிருந்த்தாலும், பல்லாயிரக்கணக்கான மக்களை இதுவரை மனித இனம் கண்டிராத கொடுமையிலும் கொடுமையாக அழித்தது எந்த வகையிலும் நியாயமாகாது. உலகம் மறந்ததுபோல் உலகத் தமிழரையும் மறந்துவிடுங்கள் என்று ஒரு கூட்டம் பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு தமது மனச்சாட்சியை விற்றூப் பிழைப்பு நடத்துகிறது. புலிகளை விமர்சிக்கிறோமென்று உண்மையான பிரச்சினையிலிருந்து விலகிப்போக முடியாது.
மனைவி சோரம் போய்விட்டாள் என்பதால் பிள்ளைகளைக் கணவன்(தந்தை) கொல்வது எந்த வகையில் நியாயம்?
யதார்த்தை தாண்டி எங்கோ போகிறீர்கள் சூரியா மணைவி சோரம் மட்டும் போகவில்லை.
தனது கையால்யாகத் தனத்தால் எல்லா பிள்ளைகளையும் பயணக் கைதியாக பிடித்து
வைத்திருந்தாள்.
இந்த விறுமாண்டியிடமிருந்து எல்லா பிள்ளைகளையும் பாதுகாக்க முடியாமல் போனது
துரதிஷ்ரமே!அது சரி.இதுவரை எப்படி எழுதினார் என்ற கேள்விக்கு பதிலை ஏன்? நழுவவிட்டு விட்டீர்கள். அதை கூறினால் இன்னும் உங்களுக்கு பல சந்தேகம் போவதற்கான விடைகள்கிடைக்கும்.
வீரம் விலை போகாது விவேகம் துணக்கு வராவிட்டால் சிவாஜி வசனம் பேசுவார் அதைப் போல உணர்வுள்ள தமிழர் சூர்யா உணர்ச்சி வசப்படுகிறார்.புலிகள் ஆண்ட காலத்தில் திரு குகநாதனிடம் நான் அண்ண நீங்கள் நடு நிலமையோட எழுதோணூம் ஆனால் படம் காட்டுறீங்கள் என்றபோது அவர் தம்பி நீர் உணர்ச்சி வசப்படுகிறீர் என்றார்.அவர் என்ர கையைப் பிடித்து கதை விடுகிறார் என்பது அப்போது எனக்குத் தெரியாது ஆனால் இதை சூர்யாவுக்கு சொல்லும் என்னை அவ்வாறூ தம்பி சூருயா நினைக்கக் கூடாது.நன்றீ.
மாமணி அவர்களே,
உங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது, புலியை விமர்சியுங்கள், எதையும் எழுதுங்கள், இனிஒரு இணயத்தில் இடமுள்ளவரை. சேர்ந்து பயணம் செய்ய ஒத்த கருத்தும், கொள்கையும் அவசியமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காதே. எண்ணங்கள் விரிவடையாதே! நம்பிக் கூட்டிப்போகும் போது வழியில் களுத்தறுப்போரும் இருக்கிறார்கள், கவனம்.
எண்னங்கள் விரிவடைய வேண்டுமென்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் சுவாரசியத்திற்காக நான் இணையத்தில் இணைவதில்லை. களுத்தறுப்போர் பலர் களுத்தறுக்க பட்டுவிட்டார்கள் ஓரளவு நம்பிக்கையுடன் பயணிக்கலாம்.
நாவலன்! கட்டுரையின் மையப்பொருளோடு உடன்படுகின்றேன். அதேவேளை புலிகளின் சிந்தனை முறை தமிழ்சமூகத்தில் புலிகளிடம் மட்டும் காணப்பட்டதொன்றல்ல. புலிஎதிர்ப்பாளர்களிடமும் , மாற்றுஅரசியல்,மாக்சியம் பேசிய பலரிடமும் கண்டு அதிர்ந்திருக்கின்றேன். மாக்கியவ்ல்லிய “இலக்கு நடவடிக்கைகள் அனைத்தையுமே நியாயப்படுத்திவிடுகின்றது.” என்பது புலிஎதிர்ப்பாளர்கள் பலரினதும்(எல்லோரும் அல்ல) போக்காக இருந்திருக்கின்றது. முடிந்த முடிபுகளில் இருந்து அதற்கு தேவையான தகவல்களை முன்னிறுத்தல் என்று ஆழ்ந்த விசாரணைகளுடான வெளிப்படையான விவாதத்தை வெறுத்தே வந்திருக்கின்றார்கள். தமிழ்தேசியம் என்றாலே அது புலியிசம்தான் எனறு அறுதிமுடிவாகவே பேசுவார்கள்.(தமிழ்தேசியம் என்பது விசாரணைக்கோ விவாதத்திற்கோ அப்பால்பட்டதென்பதல்ல)
குமார் – “சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப்பின்பு உலகின் போக்கை நாம் ஊகித்திருப்போமானால் நாம் சிலவேளை இவ்வளவு விவாதங்களையும் சில வேளை தவிர்த்திருக்கலாமோ என்னவோ,தமிழ் ஈழம் கேட்டது தவறல்ல கேட்டதையே கடைசிவரை விடாது தொங்கியதே தவறு 30 வருடங்களில் உலகில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தன ஆனால் நாம் அவைகளை இட்டு அலட்சியமாக இருந்து ஒரே மந்திரத்தையே சொல்லிக்கொண்டிருந்தோம் இனிமேலும் அதை புலிகளின் சிந்தனையை முன்வைத்தே நகா்த்த முற்படுவது நிச்சயமாக நன்மை பயக்கும் என்று கூறமுடியாது,நாம் அதிலிருந்து விடுபட முயலவேண்டும்.”
ஆம் குமார் சரியான கருத்து.
தலைவர் பிரபாகரன் சோவியத் வீழ்ச்சிக்கு முன்னர் இருந்த மாதிரி ஒரு பிடல் காஷ்ற்றோவாக, கேர்னல் கடாபியாக, ஏன் அதற்கு முதல் உள்ள மாவோ மாதிரி ஏகபோக சித்தார்த்தங்களில், கருத்தியலில் ஊறித் திளைத்தார் ஆனால் பிரபாகரனின் கருத்தியலின், போராட்ட குணாதிசயங்களின் படி கெரில்லா போர்முறைமை மூலம் குறுகிய காலத்தில் பெருமளவு மக்களை அணிதிரட்டி குறுகிய காலத்தில் தனிநாட்டை பெற்று விடலாம் என எண்ணினார் ஆனால் விடுதலையை வென்று எடுப்பற்குரிய அகப் புறச் சூழலை அவர் கவனத்தில் எடுக்கவில்லை. வெறும் ராணுவ வெற்றிகளை மாத்திரம் விடுதலையின் படிக்கற்களாக நினைத்தார். விடுதலைப்போராட்டத்தில் நண்பர்களையும் தோழர்களையும் வென்று எடுப்பதற்கு பதில் எதிரிகளை கூடுதலாக சம்பாதித்தார்.
ராமு – “புலிகளின் சிந்தனை முறை தமிழ்சமூகத்தில் புலிகளிடம் மட்டும் காணப்பட்டதொன்றல்ல. புலிஎதிர்ப்பாளர்களிடமும் , மாற்றுஅரசியல்,மாக்சியம் பேசிய பலரிடமும் கண்டு அதிர்ந்திருக்கின்றேன்.”
பலஇடங்களில் இதனை பற்றி குறிப்பிட்டிருந்தேன் நீங்கள் தான் இது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறீர்கள் அதேநேரம் மிகச் சரியான வார்த்தை பிரயோகத்தையும் செய்து இருக்கிறீர்கள். “புலிகளின் சிந்தனை முறை” இது ஆய்வுக்குரிய நல்ல தலைப்பு. இன்னும் வடிவாக என்னால் விளக்க முடியுமெனில் நான் இப்படித்தான் விளங்கி கொள்வேன் அதாவது இந்த சிந்தனை முறை ஒன்றும் புதிதாக உருவாக்கப் பட்டது அல்ல அது தமிழ் சமுகத்தின் வரட்டு குருட்டு சித்தாந்தங்களில் இருந்து வந்தது, அதனை தமிழ் மிதவாத அரசியல் வாதிகள் மிதவாதமாக சிந்தித்து பிரயோகித்தனர். ஆயுத போராளிகள் நிறுவனமயப் பட்ட வன்முறை மூலம் தமது சிந்தனை முறைகளை செயலுருவம் கொடுத்தனர்.
தெளிவான கருத்து அதே நேரத்தில் நாம் இனி செயல்வடிவம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
சிந்தனை நன்று. ஆனால் சிந்தனை மட்டுமே ஈழத்தமிழரின் வாழ்வை உயர்த்திவிடுமா?
செயல் வடிவம் தரும் அடுத்தநிலைக்கு நாம் செல்வதெப்படி? அடுத்த கட்டுரையை ஆவலாய் எதிர்பார்க்கின்றேன்.
ஆமாம் தேசியன், மாமணி இருவரும் செயல் வடிவம் குறித்த தங்களின் வேண்டுதல் இந்த தளத்திலும் காலத்திற்கும் எற்புடையது. செயல் வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்பதும் அதனை நாங்களே செயற்படுத்தலாமா? என்பதையும் இல்லாது விடின் நாம் பின்நூக்கிகளாக செயற்படலாமா? என்பதையும் சொல்லுங்கள். எனது எண்ணம் என்னவோ மாவட்ட ரீதியில் அன்னையர் முன்னணி போன்ற அமைப்புகளை உருவாக்கி (இருக்கின்ற முன்னணியை பலப்படுத்தி) புதிய உறுப்பினர்களை உருவாக்கி அதனை நன்கு பலப் படுத்தல். அதாவது அரசியல் பொருளாராதார ரீதியில் பலப் படுத்தல். வன்முறை, பொருளாதார பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கும் மக்களுக்கிடையே சென்று வேலைத்திட்டங்களை மேற் கொள்ளல். புலம் பெயர் மக்களிடையேயும் இத்தகைய அன்னையர் முன்னணி போன்ற அமைப்புகளை உருவாக்கல். இவர்களிடையே தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் என்பனவாகும். இவை ஆரம்ப செயற்பாடுகளாக இருக்கட்டும்.
ஆரம்ப செயற்பாடுகள் எவ்வளவு சிறிதாகவும் . எளிமையாகவும் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது நடைமுறை இலகுவாக இருக்கும். எமக்கு தலைமை தாங்கும் திறன் , அறிவு இல்லவிட்டாலும் ஆரம்பித்து வைக்கும் எண்ணம் ஒன்றே போதும்.
ராகவன்>
30 வருடங்களில் உலகில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தன ஆனால் நாம் அவைகளை இட்டு அலட்சியமாக இருந்து ஒரே மந்திரத்தையே சொல்லிக்கொண்டிருந்தோம் . தக்க வார்த்தைகள். முக்கியமாக தமழிர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டது குறைவு. அவர்கள் மிக ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டிவயவர்கள். ஆனால் ஆதாவாளர்களாகவே வைக்கப்பட்டிருந்தார்கள்.
மிக முக்கியமான விடயமொன்றினை ராகவன்> ராமு சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். பின்னூட்டங்களில் இது பற்றி பல தடவைகள் குறிப்பிடப்பட்டுள்து ” பலஇடங்களில் இதனை பற்றி குறிப்பிட்டிருந்தேன் நீங்கள் தான் இது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறீர்கள் அதேநேரம் மிகச் சரியான வார்த்தை பிரயோகத்தையும் செய்து இருக்கிறீர்கள். “புலிகளின் சிந்தனை முறை” இது ஆய்வுக்குரிய நல்ல தலைப்பு. இன்னும் வடிவாக என்னால் விளக்க முடியுமெனில் நான் இப்படித்தான் விளங்கி கொள்வேன் அதாவது இந்த சிந்தனை முறை ஒன்றும் புதிதாக உருவாக்கப் பட்டது அல்ல அது தமிழ் சமுகத்தின் வரட்டு குருட்டு சித்தாந்தங்களில் இருந்து வந்ததுஇ அதனை தமிழ் மிதவாத அரசியல் வாதிகள் மிதவாதமாக சிந்தித்து பிரயோகித்தனர். ஆயுத போராளிகள் நிறுவனமயப் பட்ட வன்முறை மூலம் தமது சிந்தனை முறைகளை செயலுருவம் கொடுத்தனர்.
“ஒரு சனநாயக முறையான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் சமூக பொருளாதார அரசியல் நுண்ணறிவாளர்களின் மதியுரையும் அது குறித்த கட்டு கோப்பான விவாதங்களும் இன்றி அப்பயணத்தில் வெற்றி என்பது சாத்தியம் இல்லை.
எம்மத்தியில் இருக்க கூடிய அறிஞர்கள் தமது தரத்தை உலக அளவுக்கு உயர்த்த வேண்டுமாயின் தாம் வாழும் நாடுகளில் வெளிப்படையான அமைப்புகளை உருவாக்கி ஆய்வு கட்டுரைகள் கருத்தரங்குகள் வைப்பது அவசியமாகிறது. இதன்மூலம் பரிந்துரைகள் கொள்கை விளக்கங்களை முன்கொண்டு வரமுடியும்”
நன்றி – புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் ‘ஆளும் உரிமை’ யும் ஜ புதன்கிழமைஇ 03 நவம்பர் 2010இ 12:58 புஆவு ஸ ஜ புதினப் பணிமனை ஸ ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி
புலிகளின் சிந்தனை முறை தோல்வியை தழுவியுள்ளது. தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அப்படியே இனி எமக்கு தேவையில்லை. ஆனால் அந்தச் சிந்தனை முறையில் மாற்றங்களை தேடவேண்டும். கால ஓட்டத்திற்கு ஏற்ப ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தலைமைதாங்கி போராடிய தலைவர்கள் அனைவருமே தோற்றுத்தான் போனார்கள். அவர்களையே விமர்ச்சித்து தமிழ் மக்களை தொடர்ந்தும் விரக்திக்குள் வைத்திருக்க முயல்வதுதான் இங்கு எரிச்சலூட்டுகிறது.
விமா்சிப்பது எரிச்சலூட்டுகிறது என்றால் நீங்கள் பொறுமையற்ற நிலையில் உள்ளீா்கள்போல் தெரிகிறது நமது சாபக்கேடுகளில் ஒன்று பொறுமையற்ற தன்மையும்தான்.
மக்கள் விரக்தியில் இருப்பதற்கு மக்களும் ஒருவகையில் காரணம்தான் மறந்துவிடாதீா்கள்.இங்கே நாம் விமா்சிப்பதன் மூலம் தவறுகளை கண்டறிகின்றோம் என் சிந்தனைக்கு எட்டாததை உம்மிடமிருந்தோ அல்லது இன்னொருவரிடம் இருந்தோ பெற்றுக்கொள்ள, தெளிவுபெற விமா்சனங்கள் நிச்சயம் தேவை. அவசரப்படாதீா்கள்
நாம் அவசரப்பட்டதாலேயே 30 வருடங்ககளை தொலைத்துவிட்டோம் இங்கே யாரும் விமா்சிப்பதால் இன்புறுவதாக எனக்குத்தோன்றவில்லை இங்கே விமா்சிப்பவா்களும் தம் மனதில் உள்ள ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்களேயன்றி மகிழ்ச்சிகாணவில்லை.
விமர்ச்சிப்பதன் மூலமும் தவறுகளை கண்டறிந்து அவற்றை திருத்திக்கொள்வதும் வன்முறையற்ற சிறந்த வழி. ஆனால் விமர்ச்சிப்பதற்கும் ஒரு எல்லை வேண்டும். எதற்கெடுத்தாலும் பிரபாகரன், பிரபாகரன், பிரபாகரன். இன்று குழந்தை எறும்பு கடித்து அழுதாலும் பிரபாகரன்தான் காரணம். இதுவா விமர்ச்சனம்.
கேட்டதையே கடைசிவரை விடாது தொங்கியதே தவறு என்றால், ஒருவரை விமர்ச்சிப்பதை கடைசிவரை விடாது தொங்குவதும் தவறுதான்
அவசரப்பட்டு 30 வருடங்ககளை தொலைத்துவிட்டோம். அவசரப்படாமல் தொலைத்த வருடங்களை வசதியாக மறந்துவிட்டோமா. அவசரமும், பொறுமையும் காலத்தின் தேவையைப் பொறுத்தது. தமிழனுக்கு இன்றய உடனடித்தேவை ஒரு தலைமை. அதனை உருவாக்கக் கூடியதான அல்லது உருவாகியுள்ளதை வலுப்படுத்தக் கூடியதான கருத்துக்களும், செயற்பாடுகளுமே அவசரத்தேவை. இல்லையென்றால் ஓநாய்கள் ஆறுதலாக, ஓய்வெடுத்து ஈழத்தில் தமிழனைத் தின்று பூண்டோடு அழித்துவிடும். புலம்பெயர் நாடுகளில் தமிழர் செயற்பாடுகளை முடக்க சிங்கள அரசு தமிழ்த் துரோகிகளை விலைக்குவாங்கி அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் விளக்கமாக செய்திகள் வருகின்றது. அவர்கள் தங்கள் செயற்பாடுகளை முடித்துச் செல்லும்வரை நாங்கள் பொறுமையாக இருந்து விமர்ச்சித்து தவறுகளை கண்டறிவோம்.
உண்மை இதுதான்.புலிகளீன் சிந்தனை மாற்றத்தை ஏற்றூக் கொள்ளாமல் விடாப்பிடியாக நின்றவர்.தான் ஏவும் போது ஏவும் திசையில் வெடித்துச் சிதறூம் ஏவுகண போல பிஞ்சுப் பிள்ளகள வளர்த்தவர்.எதையும் கேட் காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்தவர்.எல்லாருமே பொம்மைகளாய் இருந்தார்களே தவிர சிந்திக்கும் போராளீகளாய் இல்லை அப்படி இருக்க முடியாது என்பது எழுதாத விதி. இங் கும் பிரபாகரன் படம் வைத்துத்தான் நிதி கேட்டார்கள்,பிரபாகரந்தான் புலிகள் புலிகள் பிரபாகரன் என்பதால்தான் பிரபாகரன் குடும்பம் கொல்லப்பட்டது.
இன்னுமொரு தடவை அடுத்தவன் வழிகாட்டவேண்டும் எதைச்செய்வதென்று சொல்லவேண்டும் என்றே பலா் கேட்கிறீா்கள் ஏன் உங்களது சிந்தனையில் எதுவுமே வராதா நான் பலமுறை கூறியிருக்கின்றேன் தற்போது இருக்கின்ற ஒரே வழி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு ஒரு கைதந்து அதைப்பலப்படுத்துவதே!!இல்லை நம் பூமியெல்லாம் பறிபோவதை தடுப்பதானால் மீள்குடியேற்றம் ஒன்று நிகழ்ந்தாலே தடுக்கலாம்,நான் கூற வருவது வெளிநாடுகளில் இருந்து சென்று விட்டஇடைவெளிகளை நிரப்புவது இதற்கு எத்தனைபோ் தயாராகவுள்ளீா்கள்???
பிரபாகரனை விட்டால் வேறொன்றுமில்லை என்பது நியாயம்தான் ஆனால் அந்த முப்பது வருடத்தாக்கம் என்னும் எத்தனை காலத்திற்கு நம்மை இடையூறு செய்யப்போகின்றது என்பதை சிலா் உணரும் திறன் அற்றவா்களாகவுள்ளனா்
ஆதலால் இலகுவில் அதை தவிர்த்து அரசியல் பேசுவதென்பது முடியாத காரியம்.
நீங்கள் சிலா் தேடுகின்ற தலைமை மறுபடியும் ஒரு பிரபாகரன் போன்றது என்னைப்பொறுத்தவரை அரசியல்தெரிந்த தலைமை ஒன்று நம்மிடையே உள்ளது என்றே உணருகிறேன்.
சொல்லுவதை தன்னம்பிகையுடன்,உறூதியுடன் தெளீவாகச் சொல்லுங்கள் அவர்தான் சம்பந்தர் அய்யா.இந்த ஆளூக்கொரு வேசம் கட்டும் உலகில் எல்லோருக்கும் ஏற்ற மொழியில் பேச சம்பந்தர் அய்யாவே. அவரே தமிழர்க்கு சரியான தலைவர்.
இதோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழருக்குச் செய்யும் சேவைக்கு ஒரு உதாரணம்:
அவலம் + அதில் அரசியல் = சிவசக்தி ஆனந்தன்
அரசியல் பற்றிய கட்டுரைகளே இனி எழுதுவதில்லையென அடித்துச் சத்தியம் செய்து விட்டு எமது மக்களின் அவல வாழ்விற்கு ஆதாரமாகவும் அவர்களிற்கான பொருளாதாரத் தேடல்களாகவுமே இனிவரும் காலங்களில் இருப்பதென்ற முடிவில் நாம் நேசக்கரம் அமைப்பினுடாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுவதும் அவர்கள் உணர்வுகளை உலகிற்கு எடுத்துச் சொல்வது மட்டுமே பணியாகக் கொண்டிருந்தோம்.
ஆனாலும் மீண்டும் எழுதித் தொலைக்க வேண்டியதானதொரு சூழ்நிலை. அரசியலே எழுதுவதில்லையென முடிவெடுத்த எமக்கு ஒரு அரசியல்வாதியே அரசியலை மீண்டும் எழுதத் தொடங்குவதற்காக அரசியலில் அ எழுதி ஏடு தொடக்கிவைத்துள்ளார்.
ஏடு தொடக்கி வைத்தாலும் எழுதலாமா விடலாமா ? ஆயிரம் மனப்போராட்டங்கள் அவை ஒருநாள் இரண்டு நாளல்ல ஒன்றரைமாத காலப்போராட்டத்தின் பின்னர் மீண்டும் அந்த பாதிக்கப்பட்ட மக்களிற்காக எழுதுவதென முடிவெடுத்துள்ளோம்.
மே மாதம் 19 உலகத்தமிழர் வாழ்வில் மறக்க முடியாததொரு நாள் அன்றைய நாளில் யார் எங்கே என்ன செய்வது?? எதைச் செய்வது ?? செய்வதற்கு இனி எதுவுமே இல்லையா?? இனி என்னத்தைச் செய்து என்னவாகப் போகின்றது?? இப்படி பல்லாயிரம் கேள்விகள் பல சந்தேகங்கள் வெறுப்பு விருப்பு காழ்ப்பு இப்படியான கலவையில் தமிழர்கள் அனைவருமே துவண்டும் துடித்தும் கிடந்த காலத்தில் மனித நேயப்பணி எம்மக்களிற்கான நேசப்பணி நிறையவே கிடக்கின்றது எதுவும் முடிந்து விடுவதில்லை. துளிர்விடுவதற்காகத் தமிழர்கள் தேம்பிக்கிடக்கின்றார்கள் புலம்பெயர் தமிழர்களே தூங்கி கிடக்காதீர்கள் ; கண்ணீர் விடும் எம்மக்களிற்காய் தண்ணீர் விட்டால் துளிர்த்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையினை ஊட்டி உடனடி நடவடிக்கைகளில் இறங்கிய நேசக்கரம் அமைப்பு உறவுகளுக்கு உதவுவதில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் பல மைல்கற்களைத் தாண்டி நிற்கும் நேசக்கரம் அமைப்பிற்கு. இன்று ஒரு தடைக்கல் அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் என்கிற கல்.
சிவனாகவும் சக்தியாகவும் ஆனந்தமாகவும் அவர் வீற்றிருக்கலாம். ஆனால் அவர் எமது மக்களின் அவல வாழ்வில் தானே முழு முதல் கடவுளாக முடிவெடுத்திருப்பது வேதனையானது. இனி ஆலாபனைகள் வேண்டாம் விடயத்திற்கு நேரடியாக வருவோம்.
நேசக்கரம் அமைப்பு 2009 மே18இன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடகாலமாக தாயகத்தில் அவவலமுறும் மக்களைத் தேடி அவர்களுக்கான உதவிகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் செய்து கொண்டு வருகிறது. உதவிகளை அந்த மக்களுக்கு சிறுஅணிலாக நேசக்கரம் உறுப்பினர்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்.
இக்கட்டு நிறைந்த அந்த நாட்களில் இந்த அரசியல் வியாபாரி தனது அலுவலகத்தில் இருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். அறிக்கைகள் மட்டும் போதாது மக்களைச் சென்று சந்தித்து உதவுமாறு பலதரம் தொடர்பு கொண்டு வேண்டியிருந்தோம். ஆனால் தமக்கான அனுமதியில்லை ஆகவே தம்மால் எதுவும் செய்ய முடியாதென்று கைவிரித்தது மட்டுமல்ல தங்கள் தேர்தலுக்கான நிதியுதவியை புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெற்றுத்தரும்படியான வேண்டுதலையும் த.தே.கூட்டமைப்பின் உள்விவகாரங்களையும் தனக்கு ஒவ்வாத உறுப்பினர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக புலம்பெயர் மக்களிடமிருந்து எவ்வாறு பணம் பெற முடியுமென்ற விபரங்களையே பேசிக்கொண்டிருந்தார். ஒரு மக்கள் பிரதிநிதியான அவரால் ஒரு சிறு உதவியேனும் செல்ல வேண்டுமென்ற நோக்கில் சுயநலச் சாக்கடையில் மூழ்கிக்கிடந்த ஆனந்தன் ஊடாக எதையாவது அவலப்பட்டோருக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றே விரும்பினோம். அதனால் பல விடயங்களில் மென்போக்கையும் கடைப்பிடித்தோம்.
வவுனியா முகாம்களில் அவலமுறும் மக்களின் சில தொடர்புகள் ஊடாக சிறு உதவிகளை நமது தொடர்பாளர்கள் சிலரை வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் வவுனியா பொதுவைத்தியசாலையில் பலர் மருத்துவ உதவிகோரிய விபரங்களை எமக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கான சில உதவிகளை சிவசக்தி ஆனந்தனிடம் கோரியபோது புலம்பெயர்ந்த உங்களிடம் இல்லாத பணபலமா என்னிடம் உள்ளதெனத் தட்டிக்கழித்தார். சில உயிர்கள் நிரந்தரமாகப் படுக்கையில் போனதில் கூட பெருமதிப்புக்குரிய சிவசக்தி ஆனந்தனின் பங்குண்டு என்பதை எம்மால் மறக்க முடியவில்லை.
தான் வாழும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தனது சொந்த செல்வாக்கை வைத்தே சென்று வரக்கூடிய திறமையுள்ளதாக பீற்றியவர் குடும்பங்கள் முகாமுக்குள் இருக்க தற்கொலைக்கு முயற்சித்து தீமூட்டிய ஒருவனைச் சென்று பார்த்து அவனுக்காக சில உதவிகளைச் செய்யுமாறு வேண்டிய பொழுது என்னால் அதுவெல்லாம் முடியாதென ஒதுங்கிக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரை மிகுந்த சிரமத்தின் மத்தியில் அந்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலமையிருந்தது எமக்கு. ஆனந்தனின் சுயநல அரசியல்வியாபாரத்தில் வெளிப்படுத்த முடியாத துரோகத்தனங்கள் நிறையவே இருக்கின்றன. ஆயினும் எமது நோக்கம் அதுவல்ல. சாக்கடையில் மிதப்பவனுக்கு எல்லாம் ஒரேவகைதானே. ஆக அதைவிடுவோம்.
கிட்டத்தட்ட ஒருவருடம் வரை இந்த அரசியல்வாதிக்கு அவலப்பட்ட மக்களின் அவலங்களை வெளியில் கொண்டு வரவோ அல்லது உதவ வேண்டுமென்றோ எண்ணம் வரவில்லை. தேர்தல் நெருங்க வாக்குப் பிச்சை வேண்டி தேர்தல்கால வாக்குறுதிகளைச் சுமந்து கொண்டு மக்களிடம் சென்ற அரசியல்வாதியாகவே இவர் மக்களிடம் செல்லத் தொடங்கினார்.
ஆனால் நேசக்கரம் தன்னால் இயன்ற தன் சக்திக்கு அப்பாற்பட்டு பல திட்டங்களை செயற்படுத்திக் கொண்டிருந்தது. இது சிலரது ஓயாத உழைப்பினால் சிறுசிறுகச் சேர்க்கப்பட்ட உதவிகள். நேசக்கரம் செயற்படுத்திய பல திட்டங்களில் முக்கியமான திட்டம் வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியாசாலையில் அங்கவீனர்களாக அனுமதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கானது.
இந்தப் பம்பைமடுவில் உள்ளோரில் பலர் முன்னைநாள் போராளிகளாகவும் மற்றும் சாதாரண பொதுமக்களுமாக உள்ளனர். இவர்கள் யுத்தத்தினால் பாதிப்படைந்து உடல் அவயவங்களை இழந்தது மட்டுமல்லாது பலர் இடுப்பிற்குக்கீழ் நெஞ்சின்கீழ் கழுத்தின் கீழும் இயக்கமற்ற நிலையில் படுத்த படுக்கையாக தங்கள் வாழ்நாளின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை Mஸ்F என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனம் இன்றுவரை பராமரித்து வருகிறது.
ஆயுர்வேத வைத்தியசாலைக்குள் வெளியார் யாரும் செல்ல முடியாத நிலமையிருந்த காலங்கள் அவை. சில நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நேரம் நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக சில நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் ஊடாகவும் நோயாளிகளின் உறவினர் என்ற பெயரில் சிலரை அனுப்பி குறிப்பிட்ட முக்கிய தேவைகளைச் செய்து கொண்டிருந்தோம். சிகிச்சை பெற்று வெளியே வந்த பலருக்கான சுயதொழில் வேலைக்கான உதவி மற்றும் நிரந்தர படுக்கையில் இருப்போருக்கான மாதாந்த உதவிகள் என நேசக்கரமும் இன்னும் சில அமைப்புகளும் செய்திருந்தது.
மருத்துவமனையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு யாரும் சென்று வரும் நிலமை உருவாகிய நேரம் அங்குள்ளோரின் விபரங்களை நேசச்கரம் அமைப்புத் திரட்டியது. அவர்களில் பலருக்கான உதவிகளையும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையை விட்டு வெளியில் வருவோருக்கு கட்டம் கட்டமாக சொந்த வேலைவாய்ப்புக்கான முன்னெடுப்புகளையும் செய்யும் முயற்சிகளும் பலருக்கு தெரிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளும் சத்தமின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த உறவுகளில் குறிப்பிட்ட அளவானவர்களை 30.08.10அன்று தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட மேன்மைதகு வவுனியா த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் சந்தித்திருந்தார். அங்குள்ளவர்களின் நிலைமைகளையும் கேட்டறிந்துள்ளார். தனது சுற்றுலாவின் ஞாபகமாக படங்களும் எடுத்துவந்திருந்தார். முக்கியமாக அவர் சந்தித்தவர்கள் தனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அங்கிருக்கும் உறவு ஒருவர் தெரிவித்தார். மிகவும் பாதிக்கப்பட்ட சிலர் இச்சுற்றுலாப் பயணச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தமது எதிர்பினையும் வெளியிட்டிருந்தனர். இன்னும் சிலர் ஏதாவது தமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உரயைாடினர். அதிலும் சிலர் தமது சொந்தத் தொழிலுக்கான உதவிகளை த.தே.கூ செய்து வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.
இவ் அரசியல்வாதியை நம்பி விபரங்களைக் கொடுக்க யோசித்தவர்களை அங்கே மருத்துவம் பெறும் தனது உறவினர் ஒருவர் ஊடாக பேச வைத்து அவர்களது பெயர் விபரங்கள் தகவல்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டார். தன்னால் அரசிடமிருந்தும் தனது கட்சியிடமிருந்தும் முடிந்தளவு உதவிகளைப் பெற்று தருவதாகவும் வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் பெற்றுள்ளார். அங்குள்ளவர்களும் தங்களிற்கு ஏதாவது உதவிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்க…. அவர்களது விபரங்களைப் பெற்றுக்கொண்ட மேன்மை தங்கிய ஆனந்தன் அவர்கள் அதனை இலங்கையரசிடமோ த.தே.கூ.தலைமையிடமோ கொண்டு செல்லாமல் புலம்பெயர் தேசத்தில் இயங்கும் ஒரு இணையத்தள செய்தி ஊடகமொன்றில் அதன் விபரங்களை வெளியிட்டார். இணையத்தில் தங்கள் விபரங்கள் வரவுள்ளது என்பதை அங்கிருந்தோரில் பலர் அறியவேயில்லை. பின்னர் அது சர்ச்சையை உண்டுபண்ணத் தொடங்க இணையம் ஊடாக பலர் உதவ முன்வந்து கொண்டிருப்பதாகவும் இதோ அதோ என போக்குக்காட்டத் தொடங்கினார் பெரு மதிப்புக்கு உரிய மக்கள் பிரதிநிதி ஆனந்தன்.
ஏற்கனவே அந்த மக்களில் பலருக்கு நேசக்கரம் அமைப்பின் ஊடாகவும் வேறு அமைப்பின் ஊடாகவும் உதவிகளை வழங்கிவரும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் அந்தச் செய்தியினைப் பார்வையிட்டதும் எம்முடன் தொடர்பு கொண்டு தாங்கள் உதவி செய்பவர்கள் பலர் மீண்டும் உதவி கேட்டுச் செய்தித் தளமொன்றில் செய்தி வெளியாகியிருப்பதாகவும் உடனடியாகத் தங்களிற்கு விளக்கம் தரவேண்டும் அல்லாவில் தாங்கள் வழங்கிவரும் உதவிகளை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்கள்.
அதனையடுத்து நாம் ஆனந்தனுடன் தொடர்பு கொண்டு அச்செய்தி பற்றியும் நாம் செய்துவரும் உதவிகள் பற்றியும் தெரிவித்திருந்தோம். அத்தோடு தற்காலிகமாக அச்செய்தியினை நீக்குமாறும் வேண்டினோம். உதவி கிடைப்போருடன் தொடர்பு கொண்டு உண்மைகளை அறிய அவகாசமும் கேட்டிருந்தோம். அத்தோடு அந்தச் செய்தித்தள ஆசிரியருக்கும் அச்செய்தி பற்றி தெரிவித்து அச்செய்தியை நீக்குமாறும் கோரியிருந்தோம். அச்செய்தி தொடர்பாக உரிய செய்தியாசிரியர் தனது பக்கத் தெளிவுபடுத்தலை மேற்கொண்டிருந்தார். அவ்வாசிரியருடன் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் நாம் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றம் யாவும் மின்னஞ்சல் மடல்கள் வைத்திருக்கிறோம்.(தேவையேற்படும் பட்சத்தில் அக்கடிதங்களையும் கொண்டு வருவோம் மக்கள் அரங்கிற்கு)
நீங்கள் உதவிகோரிச் செய்தி வெளியிட்டிருப்பவர்களில் பலருக்கான உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது எனவே அந்தச் செய்தியை நீங்கள் நீக்காவிட்டால் உதவுபவர்கள் உதவிகளை நிறுத்தப்போவதாக எம்மிடம் தெரிவித்துள்ளார்கள் எனவே செய்தியை நீக்குமாறு கேட்டிருந்தோம்; அதற்கு அவர் எம்மிடம் தெரிவித்ததாவது :- இந்த செய்தி உங்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கி இருக்கலாம். ஆனால் நாம் ஒரு செய்தி ஸ்தாபனம் என்ற வகையில் எமக்கு அனுப்பப்படும் ஆதாரபூர்வமான தகவல்கள் படங்கள் கடிதங்கள் மற்றும் அனுப்பப்படும் பொறுப்பு வாய்ந்த நபர்கள் என்பவற்றின் அடிப்படையில் செய்திகளை பிரசுரிக்கிறோம். அவை மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எமது பிரதான இலக்கு. அதற்கு அப்பால் எமக்கு பின்நோக்கங்கள் எதுவும் கிடையாது. இதனை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.குறிப்பிட்ட செய்தியாசிரியர் எழுதிய மடலிலிருந்து ஒருபகுதி இது)
குறித்த ஆசிரியருக்கும் எமக்குமிடையிலான கடிதப்பரிமாற்றம் ஒரு கட்டத்தில் மிகவும் காரசாரமாகவும் அமைய ஒரு செய்தியாசிரியருடன் எம்மை முரண்படும் நிலமைக்கு தள்ளிய சிவசக்தி ஆனந்தன் பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவி நின்று போய்விடும் என்பதனை பற்றி கவலைப்படுபவராக இல்லாது தனது செய்தி பொய்யாகிவிடக்கூடாது எனவே அதனை நீக்க முடியாது என்று விட்டார். அல்லது தான் பம்பைமடு வைத்தியசாலையில் சென்று பார்த்து வந்த செய்தியை அறிந்து பலம்பெயர் உறவுகள் பலர் உதவத்தொடங்கியுள்ளனர் என குறித்த இணையத்தள ஆசிரியரிடம் கூறி செய்தியொன்றை போட முடியும் என்றார்.
சரி செய்தியினை நீக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் உதவி கிடைக்காத வேறு பலர் உள்ளனர் அவர்களிற்கான உதவிகள் தேவைப்படுகின்றது என்றொரு செய்தியினைப் போட்டாலாவது தடைப்படப்போகும் உதவிகளைத் தடுத்து நிறுத்தலாமெனக் கோரிக்கை வைத்தோம் அதனையும் மறுத்து மட்டுமல்ல எமது மக்களிற்கு என்ன செய்வேண்டும் என்பது எனக்குத் தெரியும் நான் அந்த மக்களின் பிரதிநிதி அத்தோடு ஒரு அரசியல்வாதி எவரையும் எங்கேயும் சந்திப்பேன் எப்படியும் செய்தி கொடுப்பேன் நீங்கள் எனக்கு சட்டம் போட முடியாது எனவும் தனது அரசியல் முகத்தைக் காட்ட ஆரம்பித்தார். குறித்த செய்தியை வெளியிட்ட செய்தியாசிரியர் நம்பிய பொறுப்பான நபர் ஆனந்தன் பொறுக்கித்தனமான தனது அரசியல் வியாபாரத்திலேயே கவனமாக இருந்தார்.
அத்தோடு மட்டுமல்லாது உதவி கிடைக்கின்ற உறவுகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு தன்னிடம் திரும்பவும் விபரங்கள் படங்கள் தரும்படியும் உதவிகள் பெறுகின்ற விபரங்கள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் தொல்லைகொடுத்து வருகிறார்.
உதவி கிடைக்காதவர்களுக்கும் நேசக்கரம் கட்டம் கட்டமாக உதவிகளை ஒழுங்கு செய்கிறது இவ்விடயத்தில் நீங்கள் தலைப்போட வேண்டாம் எனவும் தமது வாழ்வோடு விளையாட வேண்டாமெனவும் விபரங்களை வழங்கிய சிலர் தயவுடன் வேண்டியிருந்தார்கள்.
கிட்டத்தட்ட மேர்வின் சில்வாவின் பாணிபோல தண்டனை வழங்கும் தொனியுடன் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகிறார் தற்கால மேர்வின் சில்வாவின் வாரிசாக உருவாகியிருக்கும் மேன்மை தங்கிய சிவசக்தி ஆனந்தன். மற்றும் உதவி பெறுகின்றவர்களுக்கு தனது கட்சிமூலம் நிரந்தர வசதிகளைச் செய்து தரமுடியுமெனவும் சொந்தத் தரவுகள் படங்கள் போன்றவற்றை தன்னிடம் தரும்படியும் கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரசியல்வாதியை எதிர்த்து எதையும் சொல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலமையில் உள்ளதையும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள். இவரது தொடர் தொலைபேசியழைப்புகளின் தொல்லை தாங்காமல் சிலர் கெட்டவார்த்தைகளாலும் திட்டியதையும் வேதனையுடன் தெரிவித்த