தமிழ் நாட்டின் வார இதழான ஜூனியர் விகடன் செய்தியாளர் மகா தமிழ்ப் பிரபாகரன் இலங்கை அரசபடைகளால் கைது செய்து இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சுற்றுலாப் பயணிகளுக்கான விதிகளை மீறி இலங்கை அரச இராணுவ நிலைகளைப் புகைப்படம் பிடித்த காரணத்தாலேயே அவர் கைதாகியுள்ளார் என்கிறது இலங்கை அரசு. புலம் பெயர் நாடுகளில் பிரசா உரிமைபெற்று சுற்றுலா விசாவில் இலங்கைக்குச் சென்று கொலைக்கருவிகளோடும் ஆயுதங்களோடும் அலையும் புலம்பெயர் தமிழர்கள் அனைத்துப் பாதுகாப்புக்களோடும் உலா வருகிறார்கள்.
சரி தவறு என்பதற்கு அப்பால் மக்கள் முற்றாக நிராகரிக்கும் அரச துணைக்குழுக்கள் தாம் இராணுவத்துடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதாக புலம் பெயர் தொலைக்காட்சிகளில் ஒப்பதல் வாக்குமூலம் அழித்திருக்கிறார்கள். வவுனியாவில் அரசியலில் நேரடியாக ஈடுபட்ட நிமோ என்பவர் மர்மமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை சென்று ஒரு சில நாட்கள் தங்கியிருக்கும் ஊடகவியலாளர் சுற்றுலா விதிகளை மீறி நடக்கிறார்கள் என்பது கேலிக்கூத்து.
இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் சுற்றுலா விதிகளை மீறுபவர்கள், சமூக விரோதிகளும் இனக்கொலையின் ஆதரவாளரகளும் அரசின் விருந்தாளிகள்.
இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் ‘சுந்திரமாக இலக்கிச்சந்திப்பு நடத்தி’ ‘சங்கம்’ வளர்த்தவர்களும், கிழக்கு மாகணத்தில் பிள்ளையானதும் கருணாவினதும் ‘அழிவியில்’ ஆலோசகர்களும் மகிந்த சிம்மாசனத்தின் அரசவைக் கவிஞர்கள்.
கைதான பிரபாகரனுக்கான நியாயத்தை ஜுனியர் விகடன் இதிலிருந்து தேடிக்கொள்ளலாம்.
பிரித்தானியப் பிரசா உரிமைபெற்ற இரண்டு சுற்றுலாப் பயணிகளின் இலங்கை அரசியலில்:(இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்தில் சிறீ ரெலோ என்ற அமைப்புச் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இவை.)
Inioru.com. Sangam.com. They know now how to protect their Banana Republic. I should not say that now. I love my country that have seen the Banana Clips too. That is T-56 ammunition. Just like the AK – 47.
You loved your country ? Is that why you were desperate to cling yourself to Uncle Sam ? Or the Maple leaf ?? You can BS Inioru but not its readers.
சிறிதரனின் டீல் ஜூனியர் விகடனும்.. அவரது சகோதரது இணையதளமும் ஒரு புறம் இருக்கட்டும்…. (புலி பிள்ளைகளைப் பிடீக்கும் போது… முள்ளி வாய் காலிற்கு மக்களை அழைத்து செல்லும் போது இவர்கள் எங்கு இருந்தார்கள்…?) இந்த படியுங்கள்….
“ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களோ அல்லது ஈ.பி.டி.பி பெயரைப் பயன்படுத்தி வேறு எவரேனுமோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படி பொலிசாரிடம் கேட்டுக் கொள்கின்றேன். இதில் எனது தலையீடுகள் எதுவுமிருக்காது. இதுவரையில் அப்படியேதும் தலையீடுகள் இருந்ததுமில்லை. அதேநேரம் மேற்படி சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால் இங்கிருக்கும் பிரதேச செயலாளர்கள், அதேபோல் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.” http://www.epdpnews.com/news.php?id=22405&ln=tamil
இதுவரை நடைபெற்ற பல சம்பவங்களில்… சில சம்பவங்களைக் குறிப்பிடலாமே….
அப்போ ராஜா, ‘தினமுரசு’ அற்புதன், பால நடராஜா ஐயர் விடயங்களிலும்.. பாரம்பரிய அமைச்சர் தலையிடவில்லை போல… வாழ்த்துக்கள்…
“தான் தலையிடாத நடைபெற்ற பல சம்பவங்களை” பட்டியல் இட்டு அவர்களின் இணையதளத்திலும்.. தினகரனிலும் போட்டால் மக்களிற்கு இலகுவாக இருக்கும்…
பாரம்பரிய அமைச்சர் செய்வார் என நம்புவோம்…. எதிர்பார்ப்போம்…
ஐயப்பனிற்கு மாலை போடுபவர்கள்… இருமுடி கட்டி… பொதுவாக கருப்பு உடை அனநிந்து… மிக எளிமையாக இருப்பார்கள்…
இங்கோ… சிறீதர் சினிமாக் கொட்டகைக்கு ஊர்வலமாகச் சென்ற யாழ் சபரிமலை ஐயப்பன் ஆலய பக்தர்கள் அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடையும், மாலையும் அணிவித்துள்ளனர்…
இதன்போது உடனிருக்கும் முன்னாள் தீவகப் பொறுப்பாளரும்.. யாழ்.மாவட்ட பொறுப்பாளரும்… விக்கி மாமாவின் எதிர்த் தலைவரமான கறுப்புத் தாடி கமல் அண்ணை வெள்ளை உடுப்புடன் கம்பி எண்ணிக் கொண்டு இருக்க…
ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்), அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் ஆகியோர் உடனிருக்க… ஊர்வலமாக சென்ற யாழ் சபரிமலை ஐயப்பன் ஆலய பக்தர்கள் அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடையும், மாலையும் அணிவித்த்துள்ளனர்…
.
அதுவும் ஓர் பருத்தி சால்வை என்றாலும் பருவாயில்லை… பொன்னாடை….
ஆனால், ‘பொன்னாட்டை’ புகழ் பாரம்பரிய அமைச்சர் இவைற்றை என்ன செய்வாரோ… ஹ்ம்ம்…
அதோட… தேர்தல் காலங்களில சென்று நிற்கிற… சென்று நின்று அரசியல் செய்யும்… நல்லூர் கோயிலில் தேங்காய் அடிக்கும்… தேர் வடம் இழுக்கும்… சர்வதேச தோழர்களைக் காணவில்லை… கமல் அண்ணைக்கு சாப்பாடு கொண்டு போயிற்றனமோ…
என்னத்திற்கும் இந்தப் படங்களை நீங்களும் பாருங்கோ… http://www.epdpnews.com/news.php?id=22418&ln=tamil