உலகத்தின் மிகவும் கொடிய மனிதர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்ச என்ற கொலையாளி நூற்றுக்கு மேற்பட்ட தனது பரிவரங்களோடு இலங்கை மாணவர் அமைப்பினால் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றுவதற்காக பிரித்தானியா வந்திருக்கிறார்.
இரண்டாவது தடவையாக இந்த மாணர்வர் அமைப்பு மகிந்த ராஜபக்சவை அழைத்திருக்கின்றது. இவரின் வருகைக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களின் முதலாவது பகுதி ஹீத்ரோ விமான வாயிலில் மேற்கொள்ளப்பட்டது. பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் தமது எதிர்ப்புணர்வைத் தெரிவிக்கும் வகையில் முன்னரே திட்டமிட்ட அறிவிப்புக்கள் எதுவுமின்றி ஒன்று திரண்டிருந்தனர்.
வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு லட்சம் தமிழ்ப் பேசும் மக்கள் வரை ஒன்று திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டங்களின் எதிர்விளைவுகள் இலங்கை அரசையோ அதன் பின்னணியில் செயற்படும் இந்திய அரசையோ எந்தப் பாதிப்பிற்கும் உள்ளாக்க்கவில்லை. அனைத்தையும் கடந்து இறுதி நாள் அழிப்பின் போது மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொசுக்கள் போலக் கொல்லப்பட்டனர். போர் விதிமுறைகள் எதற்கும் உட்படாத வகையில் இலங்கை அரசு அனைத்தையும் நிறைவேற்றி முடித்திருந்தது.
ஆக, புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள், மக்களின் உணர்வுகள் அனைத்தும் “விளலுக்கிறைத்த நீர்” போலாகிவிட்டது. இதனால் போராட்டங்கள் தேவையற்றவை என்ற கருத்து உருவாகிவிடலாகாது. தவிர, மக்களின் தார்மீக உணவைக் கொச்சைப்படுத்தலும் நியாயமற்றது.
ஏனைய நாடுகளைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட இனங்கள் தமது தேசங்களின் ஒடுக்கு முறையாளர்களுக்க்கு எதிரான போராட்டங்களை புலம் பெயர் தேசங்களில் நடத்தி குறித்தளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். ஆபிரிக்க நாடுகள், பலஸ்தீனம் என்று பல வெற்றிகண்ட உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் போராட்டங்களின் பொதுத் தன்மை என்ன?
1. புலம்பெயர் நாடுகளில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் தமது நாட்டு ஒடுக்குமுறை குறித்த பொது அபிபிராயத்தை உருவாக்குதல்.
2. உருவாக்கப்பட்ட அபிபிராயத்திலிருந்து போராடும் பகுதியினரை தமது போராட்டங்களோடு இணைத்துக்கொள்ளல்.
3. பெரும்பான்மை மக்களோடு இணைந்து புலம்பெயர் நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தங்களை வழங்குதல்.
ஆக, பொது அபிபிராயத்தை உருவாக்குதலும், போராடும் சக்திகளோடு இணைதலும், அழுத்தங்களை வழங்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனினும் இவை அனைத்துமே அர்ப்பணம் மிக்க போராட்டங்களே.
வெற்றிபெற்ற வழிமுறைகளைக் கூடக் கற்றுக்கொள்ள மறுக்கும் நாம் தோல்வியின் தொடர்ச்சியை இன்னமும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.
இவ்வாறான சமூகப் பொதுப்புத்தியை புலம்பெயர் நாடுகளில் ஏற்படுத்தியிருந்தால்,
1. உலகம் முழுவது உரிமைக்காகப் போராடும் மக்கள் பகுதி எம்மையும் இணைத்துக் கொண்டிருக்கும்.
2. ராஜபக்ச போன்ற சர்வாதிகாரிகளும் இனக் கொலையாளிகளும் மக்கள் அபிபிராயத்தை மீறி நாடுகளுக்குள் உள் நுளைதல் இலகுவானதல்ல.
3. இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை புலம் பெயர் அரசுகளூடாக வழங்கியிருக்க முடியும்.
4.இந்தியா போன்ற நாடுகள் ராஜபக்ச போன்றோரை ஜனநாயகத்தின் காவலர்களாகச் சித்தரிப்பது இலகுவானதல்ல.
இவையெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் ஆரம்பம் என்பதே போராடும் தமிழர்கள் என்பது புலிகள் என்ற சிறு பகுதியினரே என்ற இலங்கை அரச பிரச்சாரம் முறியடிக்கப்படுவதிலிருந்தே உருவாகும். ஆனால் புலிகள் சார்ந்த பலர் மத அடிப்படை வாதிகள் போல அனைத்துப் போராட்டங்களையும் புலிகளின் போராட்டங்கள் என்ற விம்பத்தை வழங்க முற்படுகிறார்கள்.
ராஜபக்சவின் வருகைக்கு எதிராக ஹீத்ரோவில் நடைபெற்ற போராட்டத்தில் புலிக் கொடிகளோடு சென்ற தமிழ் அப்பாவிகள் ஒருபுறமும் அதே புலிக்கொடியைத் தமது தேசியக் கொடி என பிரச்சாரம் செய்ய்யும் புலி சார் ஊடகங்கள் மறுபுறமுமாக மக்களின் உணர்வுகளைச் செல்லாக்காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் மிக நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. ஆரம்பமே ஆயிரம் தடைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
“ஆக, பொது அபிபிராயத்தை உருவாக்குதலும், போராடும் சக்திகளோடு இணைதலும், அழுத்தங்களை வழங்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனினும் இவை அனைத்துமே அர்ப்பணம் மிக்க போராட்டங்களே.” – பொது அபிப்பிராயத்தை திரட்டுவதில் விடுதலை புலிகள் போதிய அறிவினையோ, ஆற்றலினையோ,ஆர்வத்தினையோ கொண்டிருக்கவில்லை. புலிகளை தவிர்ப்போம், போராட்டத்தை முன்னகர்த்த முற்படும் எனையவர்களாவது முற்போக்காக சிந்திக்கக் கூடாதா?
“வெற்றிபெற்ற வழிமுறைகளைக் கூடக் கற்றுக்கொள்ள மறுக்கும் நாம் தோல்வியின் தொடர்ச்சியை இன்னமும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.” – கூடிய பட்சம் எமது விடுதலைப்போராட்டம் அதிக சேதாரம் இல்லாமல் வென்றிருக்க முடியும்.
“இவையெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் ஆரம்பம் என்பதே போராடும் தமிழர்கள் என்பது புலிகள் என்ற சிறு பகுதியினரே என்ற இலங்கை அரச பிரச்சாரம் முறியடிக்கப்படுவதிலிருந்தே உருவாகும். ஆனால் புலிகள் சார்ந்த பலர் மத அடிப்படை வாதிகள் போல அனைத்துப் போராட்டங்களையும் புலிகளின் போராட்டங்கள் என்ற விம்பத்தை வழங்க முற்படுகிறார்கள்.” – ஆயிரம் அரசியல் பிரச்சாரத்தை விட ஒரு கேரில்லத்தாக்குதலே பல்லாயிரம் மக்களை அணிதிரட்டும் என்ற புலிகளின் மந்திரம் அவர்களை வேறு திசையில் சிந்திக்க விட வில்லை போலும்.
அர்ப்பணீப்பு என்பது அருகே நின்றவர் சொன்னது மாதிரி வேலையில லீவு எடுத்தது.திட்டமிடல் மனைவியை வேலையால கூட்டி வந்து வீட்டில விட்டு,பிள்ளக்கு சோறூ கொடுத்து எப்படியோ கஸ்ரப்பட்டு புலிக் கொடியோடு வந்தது.பிரச்சாரம் நல்லதை எடுத்துச் சொன்னால் புலொட்டாட நீ என அடிக்க வருவது.நானும் லீவு எடுத்துத்தான் மகிந்தாவை எதிர்க்க வந்துள்ளேன் இது செம்மறீக்கு விளங்கேல்ல அது விசர்க்கதை என குழம்புது.ஒன்றூ மட்டும் உண்மை தமிழர் மாத்தி யோசிக்காட்டி மகிந்த உலகைப் பேய்க்காட்ட வசதியாகிவிடும் ஆகவே தோழரே மாத்தி யோசியுங்கள் இனியாவது புலிக் கொடியோடு வராதீர்கள் அது வன்முறவாதிகளாகவே நம்மை உலகுக்கு அறீமுகம் செய்யும்.தமிழ் மாறன்,லண்டன் கமெரன் பக்கத்து வீடு.
வீதிச் சண்டியர் மாதிரி உணர்வற்ற எதிர்ப்பால் யாருக்கு லாபம்? கொடிக்குப் பதிலாய் இலங்கை அரசின் போர்க்குற்ற படங்கள காவி வந்திருக்கலாமே?கூடிக் கதைத்து தேத்தண்ணீர் குடித்திக் கலைந்து பொடியள அழைத்து வந்து கொடி பிடிக்க வைப்பது அழகல்ல என அங்கிருந்தவருக்குச் சொல்ல அடிக்க வருகிறார் இது அங்கிருந்த வெள்ளக்கு வேடிக்கை.நாமெல்லாம் ஒன்றாய் நின்றூ அரசு செய்த கொடுமைகள உலகுக்கு காட்ட வேண்டும்.புலிக் கொடியைப் பாருங்கள் அதில் வன்முறதான் தெரிகிறது இதுவா நமது அடையாளம்? நாமெல்லாம் மாறீ நாம் பிறந்த நாட்டிற்கு சமாதானம் ஏற்படுத்துவோம் என்பது நடக்க கூடிய காரியமா?
ஐயா புலிக்கொடி தான் தமிழர் கொடி. இதை முன்னர் ஏற்காத சர்வதேசம்>புலியின் கதை முடிந்த பின்னராவது உணரட்டும். புலி இருக்கும் வரை தான் குடியேற்றம் செய்ய சிங்களவனால் முடியவில்லை என்ற செய்தியை புலிக்கொடி பறை சாத்தட்டும். தமிழர்கள் அனைவருமே புலிகள் தான் என்பதை இனியாவது உலகம் ஏற்கட்டும். ஏனெனில் புலிகள் தான் தமிழழீழம் கேட்டார்கள் மற்றைய தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை என்ற தவறான சித்தாந்த்தை தகர்ப்போம். தமிழன் என்று சொல்வதோடு மட்டுமல்லாது புலி என்றும் சொல்வோம். வெளிநாடுகளில் மக்கள் கொந்தளிக்கும் போது புலியை காப்பாற்றவா இந்த போராட்டம் என கேட்டவர்களுக்கு இப்போது சாpயான பதில் எமது மக்கள் இன்னமும் புலியின் கொள்கை தான் எமது கொள்கை என இடித்துரைக்க எமது மாவீரர்களின் கொடியே என்றும் எமது குறியீடாக இருக்க முடியும்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை சர்வாதிகாரி என்று அழைப்பது முதல் தவறு. கொலையாளி என்று அழைக்கவும் முடியாது. ஏனென்றால் எல்லா நாட்டுத் தலைவர்களையும் அதே போல் அழைக்க வேண்டி வரும் (ஆப்கானிஸ்தானில் நேட்டோ நாடுகள் என்ன அமைதிப்பணியா செய்திகொண்டிருக்கின்றன?) பிரபாகரனை வேண்டுமானால் கொலையாளி என்று சொல்லலாம் ( யாழ் மேயர் துரையப்பாவில் இருந்து தன்னோடு இன்னும் லட்சக் கணக்கான மக்களையும் முள்ளிவாய்க்கால் வரை அவர் கூட்டிப்போனது தர்மோபதேசம் பண்ணுவதற்கு அல்ல என்று எல்லாருக்கும் தெரியும்.)
பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து ராஜபக்ச அரசுக்கு அழுத்தங்கள் கொடுப்பது நல்ல விஷயம். ஆனால் எப்படி? என்பது கஷ்டமான விஷயம். அநேகமான இலங்கைத் தமிழர்கள் காசு உழைக்க தான் வந்திருக்கிறார்கள் என்று அதே பெரும்பான்மை மக்களுக்கும் தெரியும். போயிருக்கிற பெருமக்களுக்கும் தெரியும். இந்த நிலையில் நேர்மையாக, இனத்துக்கு என்று செய்பவர்கள் வெகு சிலரே. தவிர வேலை வீடு,.. வேலை வீடு,.. என்று வாழ்க்கையே சோகமாகிப் போனவர்களுக்கு இப்படி கொடி பிடித்து கோஷம் போடுவது ஒரு பொழுபோக்காக இருப்பது ஏன் கட்டுரை எழுதிய அஜித்துக்கு பிடிக்கவில்லை? தயவு செய்து அவர்களுக்கு இருக்கிற ஒரே சந்தோஷத்தையும் கெடுத்துவிடாதீர்கள்.
சரியா சொன்னீங்க இங்க மக்கள் புலிகளால் பட்ட அவலங்கள் தெரியாது இப்பவும் புலிக்கொடி பிடித்துக்கொண்டு.,,,, ரீவிப்பெட்டிக்க தங்கட பிள்ளைகளை ஒழித்துவைத்து பிள்ளை பிடிகாரரிட்ட இருந்து பிள்ளைகளை மக்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். புலிக்கொடி என்பது பாசிசத்தின் அடையாளம் என்பதை புலம் பெயர் மக்கள் உணர வேண்டும்
ஒ அப்ப சிங்கக்கொடிதான் பாசத்தின் அடையாளமோ. சிங்களம் அடித்து ,உதைத்துக் , கொல்லும் போதெல்லாம் தமிழ்மக்கள், புலிகள் என்ற பெருவிருட்சத்திற்குக் கீழேயே ஒதுங்கினார்கள். இறுதியில் அந்த விருட்சம் வீழ்ந்தபோது அவெர்களும் அதனுள்ளே சிக்கிக்கொண்டார்கள்: சோழர் ஆட்சிக் காலமே தமிழரின் பொற்காலம். அதற்குப்பிறகு வன்னியில் புலிகளின் ஆட்சிக்காலமே தமிழரின் பொற்காலம். சிங்கக்கொடியின் கீழேயே கிருசாந்தியும், கோணேஸ்வரியும், சாரதாம்பாளும் சீரழிக்கப்பட்டார்கள். அதே சிங்கக்கொடியின் கீழேயே நிமலராஜனும் நடசனும், சிவராமும் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்.அதே சிங்கக்கொடியின் கீழேயே விக்கினேஸ்வரனும் , ரவிராஜும், ஜோசப்பரராஜசிங்கமும் சாகடிக்கப் பட்டார்கள்.இவை எல்லாம் பிந்திய சிங்கக் கொடியினது சீரளிவுகளே( புலிக் கொடியின் கீழ்- சகோதரப் படுகொலை. ம்.. இதைத் தானே சொல்லப்போறீர்கள் அல்லது வேற எதாவது இருக்கா..? )அல்லதுநீங்கள் வைத்திருக்கும் எந்தக் கொடியால் தமிழ் மக்களைக் காப்பாற்றப் போறீர்கள்.உங்களுக்குச் சொந்தமாகா கோவணம் கூடி இல்லை. ஏன் என்றால் புலிகழையும் தமிழரையும், அவெர்களின் போராட்டத்தையும் அழித்ததற்க்காக உங்களுக்கு சிங்களம் போட்ட பிச்சை-பிச்சை-பிச்சை நண்பரே. நான் சாகலாம்-நாம் சாகக் கூடாது. அர்ச்சுனன் கண்ணுக்கு கிளியின் கழுத்து மட்டுமே தெரிந்தது போல், ஒட்டுமொத்த தமிழருக்கும் தமிழ் ஈழம் என்ற ஓண்றே தெரிய வேண்டுமொழிய, தனியே தலைவரும் , புலிகளும் ,புலிக் கொடியும் அல்லத் தோழரே.
கிற்லரும் மக்களால்தான் தெரிவுசெய்யப்பட்டார். அவர் ஒரு கொலையுமே செய்யவில்லை. ஜயோ, மற்றநாட்டுத் தலைவர்களையும் அழைக்க வேண்டி வருமென்றதால் ரஜபக்செவை அப்படி ஒரு போதும் அழைக்கக் கூடாது. சின்ன பிள்ளையும் கைகொட்டி சிரிக்கும், இந்தக் கதையைக் கேட்டால். ரஜபக்செ போர்க்குற்றவாளி என்று சொன்னவுடன் அமெரிக்கா, நாட்டோ படைகள் செய்வது என்ன அவர்களுக்கு எதிராக முதல்நடபடிக்கை வேண்டும் என்று கேட்பவர்கள் ஒன்றில் ராஜபக்செ செய்வதெல்லம் சரியென்று சொல்லும் சிங்களவர் அல்லது அவரின் காலைநக்கிப் பிழைக்கும் தமிழ்கூட்டம்.
என்ன நசுக்கிடாம விசம் வைப்பது இப்படித்தான். அழுத்தம் கொடுப்பது எப்படியா? லண்டனில் தமிழர் ஒற்றுமையாகச் செய்துகொன்டிருக்கிறார்கள்.
இன்னுமொரு விடயம், பெரும்பான்மை மக்களும் காசு உழைத்துத்தான் வாழ்கிறார்கள். வேலை செய்யாமல் சும்மா இருந்து திண்டால்தான் அவர்கள் கோவிப்பார்கள். வேலை, வீடு, குடும்பம் இதைவிட வேறு வாழ்க்கை முறையும் உண்டோ? சந்தோசத்திற்கு அல்ல கொடிபிடிக்கிறார்கள், மனிதநேயத்திற்காக!
i do not know when these people learn. Struggle should necessarily follow the same way some leaders follwoed. It may be new way and new styly. Why do you want to lead our strugle in the same way of |Lenin, Ma tse tung or Fidel castrow.
Please stop telling these sort of think
போராட்டத்தில் ஈடுபடுபவர் எதைக்கொண்டு வருவது எதைக் கொண்டு வரக் கூடாது என்ற கட்டளையை நாம் பிறப்பித்துவிட முடியாது. அது கூட்டத்தில் கலந்து
கொள்ள முன்வருபவாpன் சனநாயக அரசியல் உரிமை. அரசியலில் முன்னேறிய பிரிவினராகத் தம்மைக் கருதிக் கொள்ளும் பிரிவினர் அந்த ஆரப்பாட்டத்தில் ஏன் பெருமளவில் திரண்டு காத்திரமான அரசியல் சங்கதிகளை வெளிப்படுத்தவல்ல பங்களிப்பைச் செய்யவில்லை என்பதே இங்கு எழுப்பப்பட வேண்டிய முக்கிய கேள்வி. பொதுமக்கள் தங்கள் புரிந்துணர்வுக்கு ஏற்றவகையில் அத்தகைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையைக் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக ஏற்றுக்கொண்டு அதனை மேலும் செழுமைப்படுத்திக் கொள்வதற்கான அரசியல் வேலைத்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்துவனே முற்போக்கு அரசியல் குறித்துப் பேசவும் சிந்திக்கவும் முடியும்..அதை விடுத்த அரசியல் எல்லாம் அந்த மக்கள் பங்கெடுத்த அரசியலுக்கும் கீழான அரசியல்.
நட்புடன் முரளீதரன்,
உங்கள் வாதம் வேடிக்கையாக உள்ளது. போராட்டத்தில் பொது நோக்கோடு மக்கள் கலந்து கொள்கிறார்கள். அதனைத் தமது குறுகிய நோக்கங்களுக்காகத் திசை திருப்ப முனைவதை விமர்சிக்கக் கூட முடியாதோ? தயவு செய்து இன்னும் ஒரு முள்ளி வாய்க்காலை நோக்கி எம்மை இழுத்துச் செல்லாதீர். போராடுவதானால் பொது நோக்கு வேண்டும். இங்கே மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். புலி சார்பு கூட்டம் பயன்படுத்துகிறது. இது வரை அவர்கள் சேர்த்த பணத்தைப்பற்றி எபோதாவது சொல்லியிருக்கிறார்களா? இல்லை! அவர்களுக்குத் தான் புலிக்கொடி தேவைப்படுகிறது. முரளீதரன் இன்னும் ஒரிரு வருடங்களில் மிஞ்சியிருக்கும் உணர்வுகளையும் இவர்கள் அழித்துவிடுவார்கள். அதை நிறுத்தும் ஆதங்கத்தைத் தான் அஜித் வெளிப்படுத்தியுள்ளார்.
அதே நட்புடன் ரஞ்சினிக்கு…போராட்டத்தின்போது பொது நோக்கொடு மக்கள் கலந்துகொள்கிறார்கள்: மகவும் சரி. ஆனால் அந்த மக்களில் மிக அதிகமானவர்கள் எந்த வகையினைச்சார்ந்தவர்கள் , அல்லது மிகவும் இலகு தமிழில் கூறுவதானால் , அவெர்கள் எந்த அமைப்பை அல்லது கூட்டத்தைச்சேர்ந்தவர்கள். அவெர்கள் என்ன டக்கிளசின் ஆதரவாளர்களா, இல்லை ஆனந்த சங்கரியின் ஆதரவாளர்களா, இல்லை சித்தார்த்தரின் கட்சியினரா, இல்லை வரதராசப்பெருமாளின் கட்சியினரா, கம்யூனிசவர்த்தவரா சொல்லுங்கள் தோழியே சொல்லுங்கள்: அப்படியாயின் நீங்களும் உங்கள் கட்சியின் கொடியினை எடுத்து வாருங்களேன் .நான் சவால் விடுகிறேன் உங்களுக்கு. ஆனால் நிலமை அப்படி இல்லையே உண்மையில். கனடாவிலிருந்து- அவுஸ்த்திரேலியா வரை, இத்தாலியில் இருந்து-நோர்வே வரை இன்று வரைக்கும் சிறி லங்கன் அரசுக்கு எதிராக முழு மூச்சுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், எதிர்ப்புணவர்கைக் காட்டுவதிலும் மிக மிக அதிகளமானவர்கள் புலிகளும் , புலிகளின் ஆதரவாளர்களுமே. அதனால் தான் அங்கு புலிக்கொடி-தமிழர் கொடி தவிர்க்க முடியாதுள்ளது.இதில் உங்களைப்போன்றவர்களின் பங்கு எத்தனை வீதம் உள்ளது என்று அடுத்த முறை தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.புலிக்கொடி தனியே அது புலிகளின் கொடி அல்ல, அது தமிழர் கொடியே.எனவே அடுத்த முறை தாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு வரும் போது தமிழர் கொடியாம் புலிக் கொடியை, மறக்காமல் மிகவும் மிடுக்குடன் ஏந்திவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி-வணக்கம் நட்புடன்
போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களில் சிலர் அவ்வாறான கொடிகளோடு வரத்தான் செய்வார்கள். ஏனெனில் அவ்வாறான கொடியின் பிரசன்னத்தை விரும்புபவர்கள் அவர்கள். அதற்காக அங்கு உள்ள எல்லோரையும் கொடியோடு இணைத்து முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பூச்சாண்டி பொய்யானது. இவ்வாறான சூழல்களில் பல்வேறு தரப்பட்ட அரசியல் பார்வையுடையவர்களும் மகிந்த என்ற இன ஒடுக்குமுறையாளனை எதிர்ப்பதில் குறைந்த பட்ச உடன்பாட்டுக்கு வர வேண்டியிருக்கிறது. அந்த உடன்பாடு எடுத்த எடுப்பிலே கொடி விடயத்தால் உடைவுக்குள்ளாகுவது ஒடுக்கப்படுபவர்களுக்கான தள அரசியலில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவேதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் குறித்த பிரக்ஞை உடையவர்கள் இது குறித்து நிதானமாக உரையாட வேண்டியுள்ளது. மற்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் புலி சார்பானவர்கள் கணிசமான அளவு பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையினையும் நாம் மறைத்து விட இயலாது. அவ்வாறான பங்கெடுப்பும் அது சார்ந்த தோற்றத்தை வெளிப்படுத்துவதில் முன்னிற்கிறது. எனவே மாற்றுச் சிந்தனையாளார்கள் அதையும் கருத்திற் கொண்டு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கிய முன்னணியொன்றைக் கட்டுவதற்கான சிந்தனைத் தளத்தில் இதை ஆராய்தல் அத்தியாவசியமாகிறது. எனவே இங்கு முள்ளிவாய்க்கால் குறித்த அச்சம் தேவையில்லை. உணர்வுகள் ஒடுக்குமுறைகள் தொடரும் வரைக்கும் அழிந்துபடாது. எனவே முத்திரையிடல்களுக்கப்பால் முரண்களுக்கிடையிலான இணங்குதல் எதற்காக இங்கு தேவையாக உள்ளது என்பது குறித்த பார்வையூடு விழைந்த விமர்சனமே என்னுடையது. தொடர்ந்து உரையாடுவோம்.
http://www.guardian.co.uk/world/2010/dec/03/tamils-sri-lanka-general-arrest-warrant
இந்த போராட்டங்களை ஒழுங்கு செய்பவர்கள் திரும்ப திரும்ப கூறுகிறார்கள் புலிகொடி பிடிக்காதீர் என அப்படியிருந்தும் அதனை ஏந்திவருபரின் உண்மையான நோக்கம் என்ன?
நீங்கள் புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லி அழித்தீர்கள், அவர்களின் உறவினரையும், அவர்களோடு சேர்ந்து வாழ்ந்த தமிழரில் ஒரு 40 ஆயிரம் பேரையும் சேர்த்துக் கொன்றீர்கள். ஆனால் எம்மைக் கொல்ல முடியாது, புடிப்போம் புலிக்கொடி என்று கொடிபிடித்து வருகிரர்கள்.
மாமணி, நீங்கள் முன்பு சொன்னதுபோல் சொல்கேட்காத ஒரு கூட்டமாக இருக்கலாம், இல்லை இலங்கை அரசின் பணம்வாங்கிய கைக்கூலிகளாக இருக்கலாம். இலங்கையிலேயே புலிக்கொடி புடிப்பதைத் தடுக்க முடியவில்லை, அப்படியென்றால் சுதந்திரமான நாடுகளில் எப்படித் தடுக்கப் போகிறீர்கள்? சிங்கள அரசின் பிரச்சாரத்தை முறிக்க தமிழர் எல்லோரும் புலிக்கொடி பிடிப்பதுதான் நலம் என எண்ணுகிறேன்.
சூர்யா, சரி இப்படி கேட்டுப்பாருங்கள்: புலிக் கொடியை விட்டால் மக்களுக்கு விடுதலை கிடைக்குமென்றால் கூட நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே! இலங்கை அரசு இந்தக் கொடியைப் பாவித்துத் தானே உலக மக்கள் அபிப்பிராயத்தைத் தனது பக்கம் திருப்புகிறது? மனித உரிமை வாதிகளும் ஜனநாயக வாதிகளுக்குமாவது இது புலி என்ற கருத்தைக் கொண்டவர்களின் போராட்டமல்ல மக்கள் போராட்டம் என்று அறிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அது பெரும்பாலான மக்களை அணிதிரட்டவல்ல அணுகுமுறைதானே?
புலிகளைப் பயங்கரவாதிகள் என்று அழித்தது இலங்கை அரசு தான். அவர்களிடம் போராடுவதற்கும் கருத்துச் சொல்வதற்கும் உரிமை கேட்ட எங்களைப் போலப் பலர் தான் இன்று போராடவேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள். கே.பி உள்ளிட்ட புலிகள் அரசோடு சங்கமமாகிவிட்டனர்.
இல்லை சூர்யா புலிகள் பிழையான யுத்த தந்திரோபாயத்தாலும் சில ராஜதந்திரிகளையும் நம்பி ஏமாந்துதான் இறுதி யுத்தத்தில் இவ்வளவு இழப்புகளுக்கும் காரணமானார்கள். புலம்பெயர் தேசங்களில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்களை ஒழுங்கு செய்பவர்கள் புலி ஆதரவாளர்களே. அவர்கள்தான் கூறுகிறார்கள் புலிகொடி பிடிப்பதால் போராட்டம் முழு வெற்றி பெறுவதில்லையென. அப்படியானவர்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் நீங்கள் ஏன் புலிகொடி பிடிக்கிறீர்கள்
அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி இது போனறநிகழ்வுகளை எதிர்காலத்தில் நிறுத்திவிடவா? புலிகொடி பிடித்தால் எமக்கு ஒரு விடிவு கிடைக்குமாயின் தெருவில் அல்ல எனது வீட்டிலேயே நீங்கள் புலிகொடி கட்ட அனுமதிப்பேன்
புலிக்கொடி பிடிக்க விட்டால் மாமணி போன்றோர் என்ன சொல்லுவார்கள் ” பார்த்தீர்களா புலிகளின் அழிவுக்கு பின் புலிகளை மக்களே வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் புலிகளால் உருவாக்க பட்ட அடையாளங்களை மக்கள் மறந்துவிட்டார்கள்.இதுவரை புலிகளின் அடக்கு முறைக்கு அஞ்சியே மக்கள் புலிகளை ஆதரித்தார்கள் புலிக்கொடி பிடித்தார்கள் ஆனால் இப்பொழுது மக்கள் சுதந்திரமாக போராட்டங்களிலும் ஈடுபட முடிகிறது” எலும்பில்லா நாக்கு எந்த பக்கமும் வளையும் மாமணி…..
பேசுவதும், கட்டுரை எழுதுவதும் ஆகப்பெரும் எளிதான ஒன்று என்று இந்த கட்டுரைகள் புரிய வைக்கின்றன. மக்கள் திரளை உருவாக முடியாத புத்தக புழுக்கள் அதற்க்கான முயற்சிகளை ஆராய்ச்சி மாணவன் செய்வதை போல ஏட்டு சுரைக்காயக இந்த அறிவுஜீவிகள் பேசுகிறார்கள். பாத்து புத்தகத்தை படித்து விடுவதால் மட்டுமோ அல்லது ஒரு போராட்டத்தை ஆராய்ச்சி செய்வதனால் மட்டுமோ எல்லாத்தையும் சாதித்து விட்டதாக உச்சபட்ச அறிவு திமிரில் இந்த கட்டுரைகள் இருக்கின்றன. இவ்வாறு எழுதுபவர்கள் சிறிதளவேனும் தம்மால் இயன்ற ஒரு போராட்ட உதாரணத்தை செய்து காட்டினாள் நன்றாக இருக்கும். எனக்கு மார்க்ஸ் பிடிக்கும், எனக்கு லெனின் சொன்னதில் நம்ம்பிக்கை இருக்கிறது, தேசிய இன சிக்கலை இவ்வாறு புரிந்து கொள்வது என்று லெனின் சொன்னதை கருத்தில் கொள்ள வேண்டும், மாவோ செய்ததை போல உக்திகளை நாமும் கையாள வேண்டும். புலிகள் பாசிஸ்டுகள் என்று சொல்வதால் மட்டுமே எல்லா பொறுப்புகளில் இருந்து தப்பிக முடிகிறது. டக்லஸ் , பத்மநாபா, இந்திய உளவு துறை, இஸ்ரேல் உளவுத்துறை, சோவியத்தின் உளவு துறை, 70 களில் அமெரிக்க தலையீடு என்று அனைத்தையும் இணைத்து பேச முடியாதவர்கள் தம் வசதிக்காக கட்டுரைகளையும், கருத்துகளையும் வடிவமைகிரர்கள். புலிக்கொடியுடன் வந்தால் ஏலம் தவறாகி போய்விடும் என்றால் ரஷ்ய புரட்சியில் யாரின் கொடியை இறுதியில் மக்கள் தூக்கி பிடித்தார்கள் அதை போல தான் இதுவும்… தங்களை புனித ஆத்மாக்களாக சொல்லி கொண்டு எல்லாரையும் சிலுவையில் அறைகிறார்கள். புலிக்கொடியை தூக்கி பிடிப்பதில் என்ன தவறு என்று புரிய வில்லை. எதை கொண்டு நம் விடுதலை போராட்டத்தை ஓடுகினார்கலூ அதை கொண்டு தான் நாம் திருப்பி அறைய வேண்டி உள்ளது. உலகிலேயே நம் தமிழர்கள் தான் இதனை அரைவேக்காடாக தம்மை சுய பரிசோதனை செய்கிறோம் என்று காய் அடித்து கொள்கிறார்கள். உலக அரசியிலில் காஷ்மிரி போராளிகள் முதல் பலஸ்தீன போராளிகள் வரை எல்லோரிடமும் இருந்த குறைபாடுகள் அணைத்து போராளி குலக்களிடம் இருந்ததை போல புலிகளிடமும் இருந்தது எனலாம். அனால் அவர்களை போராளிகள் அல்ல என்பதற்கு இதுதானா காரணம் என்றால் பொது மன்றத்தில் அணைத்து போராளி இயக்கத்திடம் இருந்தும் கருத்துகளை சேகரித்து பிறகு பேசலாம் . பத்து புத்தகங்களை படித்து விடுவதால் மட்டுமே எதையும் ஆராய்ந்து பேச முடிவது இல்லை.
1. உலகம் முழுவது உரிமைக்காகப் போராடும் மக்கள் பகுதி எம்மையும் இணைத்துக் கொண்டிருக்கும்.
அப்படியா தோழரே ..இந்தியாவில் எந்த மாவோ போராளிகளும் நாகலாந்து , மணிப்பூர் அடக்கு முறைக்காக போராட்டமோ அல்லது கடை அடைப்புகளோ நடத்தியதில்லை. ஏன் கசுமிரிகளின் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு. சீக்கிய படுகொலைக்கு கூட போராடியது இல்லை. அதற்காக வேணும் ஒரு போராட்டத்தை நடத்த சொல்லுங்கள் இப்போது பாப்போம். அல்லது நேபாள மாவோ போராளி அரசை கச்மிரதிற்கு ஆதரவாக அறிக்கை விட சொல்லுங்கள்\, ஐ.நா மன்றத்தில் பேச சொல்லுங்கள் பார்க்கலாம் அல்லது குறைந்த பட்சம் பத்திரிகை செய்தி வெளியிட சொல்லுங்கள் அவர்கள் அரசின் சார்பாக… அல்லது பலஸ்தீனத்தின் மீதான காஜா ஒடுக்குமுறையை கண்டித்து உதவி பொருட்களை அனுப்ப சொல்லுங்கள். ஆதாரங்கள் இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம். ஆதாரம் இல்லாமல் ஏட்டு சுரைக்காய்களை இங்கு வடிகாதீர்கள். வெட்டி கோசங்கள் எதற்கும் உதவாது.
2. ராஜபக்ச போன்ற சர்வாதிகாரிகளும் இனக் கொலையாளிகளும் மக்கள் அபிபிராயத்தை மீறி நாடுகளுக்குள் உள் நுளைதல் இலகுவானதல்ல.
ஊ ஊ ..இந்தியாவினுள் பலமுறை வந்து சென்றுள்ளார். எந்த முற்போக்கு, புரட்சிகரமும் குசு கூட போட்டதில்லை. சுவரொட்டியை மட்டுமே காட்டுவார்கள் புரட்சிகரத்தின் ஏப்பமாக. தமிழ்நாட்டு தமிழர்கள் ராஜபக்சேவை எதிர்க்க வில்லை என்ற அர்த்தம் அதற்க்கு.
நல்ல கட்டுரை எழுதும் கட் அண்ட் பேஸ்ட் திறமை உள்ளது . படித்த புத்தகங்களை அலமாரியில் வைத்து வீடிற்கு வருவர்களுக்கு காமியுங்கள் நம்புவார்கள்.
உருப்படியாக ஏதேனும் களத்தில் செய்ய முடிகிறதா என்று செய்து காண்பியுங்கள், பிறகு பார்க்கலாம். செயல் அதுவே சிறந்தது.
//அல்லது நேபாள மாவோ போராளி அரசை கச்மிரதிற்கு ஆதரவாக அறிக்கை விட சொல்லுங்கள்\// அவர்களுடைய கட்சிப்பத்திரிகையில் கஸ்மீரை மட்டுமல்ல ஈழப் போராட்டத்தை ஆதரித்துக்கூடப் எழுதுகிறார்கள். நாம் அவர்களை அணுகுவதில்லை. ஈழப்போராட்டத்திற்கு ஆதரவுத் தளம் ஒன்றை அனைத்து வகையிலும் அவர்கள் வழங்கத் தயாராக உள்ளனர். இப்படி ஆயிரம் உதாரணங்கள் உள்ளன. இனியொருவிலேயே பல கட்டுரைகள் உள்ளன படித்துப் பார்க்கலாமே. நீங்கள் உருப்படியாகக் களத்தில் செய்த வேலையில் இப்போது முழுப் போராட்டத்தையுமே அழித்துவிட்டு அமைதியாக இருக்கிறீர்கள். குறைந்த பட்சம் அழிவுகளிலிருந்தாவட்கு கற்றுக்கொள்ள முற்படுங்கள். நாளைய சந்ததிக்குப் போராட்டம் என்றால் என்னவென்று புரியும்.
//இந்தியாவினுள் பலமுறை வந்து சென்றுள்ளார். எந்த முற்போக்கு, புரட்சிகரமும் குசு கூட போட்டதில்லை. // அதையெல்லாம் விடாமல் போடுவதற்குத் தான் நெடுமாறன் வை.கோ. போன்ற சந்தர்ப்பவாதிகளைப் பிடித்து வைத்திருக்கிறீர்களே! ஜெகத் கஸ்பர் கூட புலிநடத்திய போராட்டத்தின் விளைபொருள் தானே. அவர்கள் தாராளமாக எல்லாவற்றையும் போடுவார்கள் தானே. புரட்சிகர அமைப்புக்கள் சில தான் ராஜீவ் கொலையேநடத்தியது என்று உங்கள் கிட்டு காட்டிக் கொடுத்தது எல்லம் மறந்துவிட்டதோ? அப்படியெல்லாம் செய்து விட்டு நீங்கள் நினைத்த நேரத்திற்குநினைத்ததை எல்லம் போடச்சொன்னால் என்ன இயற்கையாக வந்துவிடுமோ?
//இவ்வாறு எழுதுபவர்கள் சிறிதளவேனும் தம்மால் இயன்ற ஒரு போராட்ட உதாரணத்தை செய்து காட்டினாள் நன்றாக இருக்கும். எனக்கு மார்க்ஸ் பிடிக்கும், எனக்கு லெனின் சொன்னதில் நம்ம்பிக்கை இருக்கிறது, தேசிய இன சிக்கலை இவ்வாறு புரிந்து கொள்வது என்று லெனின் சொன்னதை கருத்தில் கொள்ள வேண்டும், மாவோ செய்ததை போல உக்திகளை நாமும் கையாள வேண்டும். //தமிழ்நாட்டிலும் பிரித்தானியாவிலும் ஒரேநேரத்தில் ஒரு போராட்டம் நடந்த்ததே. படங்களை வேண்டுமானால் இங்கு பாருங்கள். இது சிறந்த ஆரம்பம்.http://www.vinavu.com/2010/08/22/tn-london-pics/