இலங்கையின் சிங்கள பௌத்த தீவிரவாதக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
ஏகாதிபத்திய நலன்களுக்காக இலங்கையைச் சூறையாடும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட பேரினவாதம் இலங்கையைச் சூறையாடி போர் தின்ற நாடாக மாற்றியுள்ளது. ஏகாதிபத்திய நலன்களுக்காக அன்னியர்களால் அதன் உள்ளூர் தரகர்கள் ஊடாக நடத்தப்பட்ட போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியெடுக்கப்பட்டனர். இன்றும் இலங்கை அன்னியர்களால் சூறையாடப்படுகின்றது.
அமெரிக்கா, இந்தியா சீனா போன்ற நாடுகளின் அடிமையாக மாறியுள்ள இலங்கையைக் கொள்ளையிட ஜாதிக ஹெல உறுமைய போன்ற பேரினவாத அமைப்புக்கள் முகவர் நிறுவனங்களாகச் செயற்படுகின்றன.
இந்த நிலையில்., புலம்பெயர் தமிழர்களை அழைத்து இலங்கையின் வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீர விருந்தும் விழாவும் வைப்பதாகவும், தேசியவாதிகள் என்ற வகையில் தாம் அதனை அனுமதிக்க முடியாது என்று ஜாதிக ஹெல உறுமைய அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குவான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி ஈட்டப்பட்ட வெற்றியின் பலன்ளை அனுபவிப்பதற்கு உறங்கி கொண்டிருந்தால் முடியாது, விழித்துக் கொண்டிருந்தால்தான் பலன் அனுபவிக்க முடியும் என மேலும் கூறியுள்ளார்.
தேசிய வெறியும், அடிப்படை வாதமும் அயோக்கியர்களின் வாழ்விற்கான ஆயுதம் என்பதை இலங்கையைச் சூறையாடத் துணை செல்லும் பௌத்த பிக்குவின் கூற்று நிரூபித்துள்ளது.
ஜாதிக ஹல உறுமையக் கட்சியைச் சேர்ந்த பட்டலி சம்பிக்க ரணவக்கவின் அனுமதியுடனேயே சுன்னகம் அனல் மின்னிலையத்திலிருந்து அப்பிரதேசம் முழுவதும் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திலிருப்பது ஒமல்பே சோபித தேரர் இல்லை. ஒமல்பே என்று தான் அவர் அழைக்கப்படுகிறார். படத்திலிருப்பவர் சமுக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரான மாதுலுவவே சோபித தேரர். இவர் முழுஅதிகாரம் உடைய ஜனாதிபதி முறைக்கும் அந்நியத் தலையீடுகளிற்கும் தான் எதிரானவரே ஒழிய தமிழ் மக்களிற்கு எதிரானவரல்ல. பொதுவாக இலங்கை அரசியலில் மிகவும் மரியாதைக்குரியவரான இவர் தான் சோபித தேரர் என்று அழைக்கப் படுகிறார்.
அரைகுறைத் தகவல்களால் மக்களைக் குழப்ப வேண்டாம்.