தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் தேசாய்க்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்றைய தினம் அமெரிக்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.புலம்பெயர் அமைப்புக்களை இலங்கை அரசு தடை செய்தமை தெரிந்ததே.
முன்னதாக,, இலங்கை அரசு வெற்றிகரமாகப் பயங்கரவாததை முடிவிற்குக் கொண்டுவந்ததைப் பாராட்டிய பிஸ்வால் தேசாய், நல்லிணக்கம் இலங்கையில் இன்னும் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது என்றார். ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் கூறியதாவது, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டதும் இலங்கையுடன் மேலும் இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்க அரசு விரிவாக்க உள்ளது என்றார்.
இலங்கை அரசு புலம்பெயர் அமைப்புகளைத் தடைசெய்தமையின் பின்புலத்தில் அமெரிக்க அரசு செயற்படுவதற்கான சாத்தியங்கள் பிஸ்வால் தேசாயின் ஹாவார்ட் பல்கலைக்கழக உரையின் பின்னணியில் வெளிப்பட்டது. இன்றைய சந்திப்பு எச்சரிக்கை நடவடிக்கையாக அமையலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.
இலங்கையில் தனது கடற்படைத்தளத்தை அமைக்க முயலும் அமெரிக்க அரசு அதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக ஆய்வாளர்கள் எதிர்வுகூறுகின்றனர்.
புலம்பெயர் அமைப்புக்களைப் பொறுத்தவரை சிறிய எச்சரிக்கை மட்டுமே போதுமானது. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியக் கொலைஞர்களின் ஆணையைச் சிரசின் மேல் வைத்து பிரபாகரனின் பேரால் நிறைவேற்றுவார்கள்.