தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 15 அமைப்புக்களினால் உலக நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுகளிடம் கோரியுள்ளது.
1373ம் இலக்க ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் அடிப்படையில் புலி ஆதரவு அமைப்புக்களை ஏற்கனவே அரசாங்கம் தடை செய்துள்ளதோடு 424 தனி நபர்களையும் தேடப்படுவோர் பட்டியலில் இணைத்து அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதiவியயையும் நாடியுள்ளது.
உலகத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியன பிரிட்டனில் 8 பிரதான வங்கிகளில் கணக்குகளை பேணி வருவதாகவும், புலிகளின் சுவிஸ் வலையமைப்பு இரண்டு சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை பேணி வருவதாகவும் இலங்கை அரசாங்கம் சுட்டிக் காடம்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அரசால் கொண்டுவரப்ப்பட்ட தீர்மானமான 1373 இன் அடிப்படையிலேயே இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் வங்கிக்கணக்குகளை முடக்குவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது.
அமெரிக்க அரசு சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பயிற்சிகள், போன்றவற்றை இலங்கை அரசுடன் மேற்கொண்டுவரும் நிலையில் இதற்கான சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் மறுபக்கத்தில் புலம் பெயர் அமைப்புக்கள் குறைந்தபட்சம் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் ஆதரவுமற்று ஜெனீவா தீர்மானத்திற்கான அமைப்புக்களாகவே இயங்கி வருகின்றன. இந்த அமைப்புக்கள் தடைசெய்யப்படுகின்ற போது இவை தனிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்படும் நிலையிலேயே தமது அரசியலை வகுத்துக்கொண்டுள்ளன.