புலம்பெயர் இலங்கையர்கள் குறித்து இலங்கை இராணுவ பாசிச அரசாங்கம் தொடர்ச்சியான அச்சத்தை வெளியிட்டு வருகின்றது. இலங்கையைத் தொடர்ச்சியாக இராணுவ மயப்படுத்திவரும் ராஜபக்ச அரசு, வெளி நாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்களூடாகவும், தனி நபர் மற்றும் முகவர்களூடாகவும் புலம்பெயர் நாடுகளில் தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மூன்று பிரிவாகச் செயற்படுகின்றது. புலி ஆதரவு அமைப்புக்கள் மத்தியிலும், புலி ஆதரவற்ற அரச எதிர்ப்பாளர்கள் மத்தியிலும்,மனிதாபிமானிகள் மத்தியிலும் வெவ்வெறு தளங்களில் அரச ஆதரவு முகவர்கள் இயங்குகின்றனர்.
இனவெறி, குழுவாதம் போன்ற ஏற்கனவே காணப்படும் இயல்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் இவர்கள் பல்வேறு செயற்பாட்டுத் தளங்களில் இயங்கி வருகின்றனர்.
இதே வேளை , கோதாபாய ராஜபக்ச புலம்பெயர் இலங்கையர்கள் குறித்துத் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
உலக பத்திரிகை AFP, Reuters யில் ஒரு செய்தி செல்வராசா குமரன் பத்மநாதன் allais செல்வராசா குமரன் தர்மலிங்கம் பாங்காக் நகரில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி. அன்று ஈழ தமிழர்களிடையே ஒரு அதிர்ச்சி அலை உலகம் முழுவதும் பரவியது.
தாய்லாந்தில் இருந்த வந்த செய்திப்படி செப்டம்பர் 10 அன்று குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டார், தாய்லாந்து இவரை சிறிலங்காவுக்கு நாடு கடத்தவும் தயாராக இருந்தது ஆனால் செப்டம்பர் 13 ஆம் திகதி மீண்டும் ஒரு செய்தி, எந்த தமிழரும் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை என்ற செய்தி. இந்த 72 மணித்தியாலங்களில் என்ன நடந்தது. பாங்காக் நோக்கி ஓடியவர்கள் CIA, M15, RAW அதாவது அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் உளவு நிறுவனங்களின் அதிகாரிகள். இவர்களின் விஜயங்களும் பல ஊடகங்களில் வெளிவந்தன.
செப்டம்பர் 10 ஆம் திகதியில் இருந்து 12 ஆம் திகதி வரை அமைதிகாத்த தாய்லாந்து அரசு செப்டம்பர் 13 ஆம் திகதி விட்ட அறிக்கையில் “கடந்த 4-5 நாட்களாக தமிழர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை” என்று.
அதன் பிறகு நடந்தது என்ன?
குமரன் பத்மநாதன் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இது நடைபெற்றது 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதப்பகுதியில்.
அதே நேரத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய செய்தி செப்டம்பர் 12 ஆம் திகதி விடுதலை புலிகளின் பொருட்கள் ஏந்தி வரும் 3 கப்பல்கள் இந்து மக சமுத்திரத்தில் தகர்கப்பட்டதாகும். அக்டோபர் 7 ஆம் திகதி மீண்டும் ஒரு கப்பல் தகர்கப்பட்டது, அதே போல் 2008ஆம் ஆண்டும் பல விடுதலை புலிகளின் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
இதை வழமையான நிகழ்வு என்று அந்த நேரத்தில் நாம் எடுத்துக்கொண்டாலும் இன்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது இவையெல்லாம் அழகாக திட்டமிடப்பட்டு நடந்தது ஆகவே தெரிகின்றது.
அதற்கும் மேல் மீண்டும் பாங்காகில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின் என்ன நடந்தது என்பதை பாப்போம். மலேசியாவில் இருந்து பத்மநாதன் மீண்டும் தாயாக தொடர்புகளை ஏற்படுத்த முட்பட்டார், அவர் எடுத்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்றல் மீண்டும் விடுதலைப் புலிகளுக்குள் உடுருவவேண்டும், அங்கு தான் உருவேடுகிரார்கள் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அரசுடன் தொடர்பில் இருக்கும் விஸ்வநாதன் உருத்திரகுமாரன், மருத்துவர் ஜெரார்ட் பிரான்சிஸ் மற்றும் அவர்களின் நண்பர்கள், தாயகத்தில் இருந்து நீதி துறையில் மேல் படிப்புக்கு அனுப்பப்பட்ட சுபன், அவரும் மலேசியாவில் இருந்தார். இதில் முக்கிய விடயம் என்ன வென்றால் இவர்கள் அனைவரும் ஆரம்பகாலத்தில் இருந்து மக்கள் பணத்தில் குளிர்காய்ந்து கொண்டு இருந்தவர்கள்.
இந்த தொடர்புகள் மூலம் தாயகத்தில் விடுதலை போராட்டத்தில் உச்ச கட்டத்தில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருந்த விடுதலை புலிகளின் தலைமை பீடத்தில் பத்மநாதன் தனது அமெரிக்க தொடர்புகளை வைத்து அமெரிக்க போரை நிறுத்த வரும், தமிழீழ மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிகையை கொடுத்து ஜனவரி 2009ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட விடுதலை புலிகளின் வெளிவிவகார தொடர்புக்கு பொறுப்பாளர் ஆக்கப்பட்டார். அதன் பிறகு ஜனவரி மாதம் முதல் 16 மே மாதம் வரை அமெரிக்க கப்பல் வரும் வரும் என்று வன்னி காத்திருந்தே உயிரை விட்டனர்.
அதே போல் புலம் பெயர் மண்ணில் இருந்து வன்னி மக்களுக்கு உதவிகள் எடுத்து செல்லவென்று தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் பொறுப்பாளர் ரெஜி லண்டன் நகரில் இருந்து வணங்கா மண் என்ற செயல்திட்டத்தில் இரங்கி பல லெட்சம் பணத்தை சேர்த்த பின்பும் லண்டனில் இருந்து புறப்பட வேண்டும் என்ற கப்பல் அங்கிருந்து புறப்படவே இல்லை. ஆனால் எடுத்த செயல் திட்டத்தில் நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற நிலையில் பல ஐரோப்பிய, கனடா மக்கள் உதவியுடம் இந்த கப்பல் பிரான்சில் இருந்து புறப்பட்டது, ஆனால் இங்கிலாந்தில் சேர்க்கப்பட்ட பல லட்ச ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் பணத்துக்கு பொறுப்பாக இருந்த ரெஜி தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஐரோப்பிய கட்டமைப்புகள் எடுத்த முயற்சியில் வணங்க மண் குறிப்பிட்ட திகதியில் புறப்பட முடியாமல் சில வாரங்கள் பிந்தியே புறப்பட்டது, அதன் பின் நடந்தது எல்லோருக்கும் தெரியும்.
இதை இங்கே தெரிவிப்பதற்கான காரணம் ரெஜி, வணங்கா மண் பண சேகரிப்புக்கு உதவிய GTV தொலைக்காட்சியும் அதன் நிறுவனர்களும், சுபன், பத்மநாதன், பத்மநாதன் குழு, உருத்திரகுமாரன் ஆகியோர் பத்மநாதன் பாங்காக் யில் இருந்து நாடு கடத்தப்பட்ட நேரத்தில் இருந்து தொடர்பில் இருந்தார்கள் என்பதும் வன்னி மக்களுக்கும், விடுதலை புலிகளின் தலைமை பீடங்களுக்கு உங்களுக்கு உதவிட கப்பல் வருகிறது வருகிறது என்று மக்களை ஒரு நம்பிக்கைக்குள் வைத்திருந்தார்கள் என்பதே உண்மை.
இதில் முக்கியமாக கூற வேண்டியது உலக அரசியல் ராஜதந்திரத்தில் ஒரு நோக்கத்தை அழிக்க வேண்டும் என்றால், உள் வீட்டில் இருந்து கொண்டே ஒரே மொழியில் பேசவேண்டும், நம்பிகையை கொடுத்து அழிவு பாதைக்கு இட்டு செல்லவேண்டும்.
இவ்வாறே தமிழ் தேசியம், தமிழ் ஈழம், தேசிய கொடியை காட்டிக்கொண்டு எதிரிக்கு காட்டிகொடுப்பவனாக செயல்படுவது.
இதில் இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும், முள்ளிவாய்காலில் நடத்த பேரழிவுக்கு பின் பத்மநாதன் தனது பழைய நண்பர் வட்டங்களை சர்வே, மனோகரன், இளங்கோ, ருத்திரகுமாரன், பேரின்பநாயகம், அதாவது போராட்டகாலத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டமைப்பில் இருந்து விடுப்பு கொடுக்கப்பட்டவர்கள், வெளியே விடப்பட்டவர்களுடன் KP அரவிந்தன் போன்றோர் அவசரம் அவசரமாக மலேசியாவுக்கு அழைக்கப்பட்டனர். கூடி கதைத்தார்கள், பத்மநாதன் தன்னைதானே விடுதலை புலிகளின் தலைவர் என்று அறிவித்தார், நாடு கடந்த அரசு என்ற கட்டமைப்பை அறிவித்தார், அதில் செய்படுவதட்கு உருத்ரகுமாரிடம் பொறுப்புகளை கொடுத்தார், அதற்கு பின்னணியில் இயங்கும் பொறுப்புகளை சர்வே, மனோகரன் போன்றோர் கையில் கையளித்தார்.
இதே மனோகரன் GTV தொலைகாட்சியில் “தமிழீழ போரரட்டம் தோல்வி அடைந்து விட்டது, நாம் வென்றவர்கள் காலில் தான் விழவேண்டும்” என்றார், இப்படிப்பட்டோர் கையில் நாடு கடந்த அரசு ஒப்படைக்கப்பட்டு, இந்த நாடு கடந்த அரசு என்ற சிந்தனைவாதம் முதல் முதலாக தமிழ் நெட் இணையத்தளத்தில் அந்த ஆசிரியர் குழுவால் எழுதப்பட்டு இருந்ததையும், அதையும் அவசரமாக பத்மநாதன் தான் அறிவித்தார் என்பதையும் இதில் குறிப்பிட்டு ஆகவேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு “போராட்ட வழிமுறைகள் மாறலாம், போராட்ட லட்சியம் ஒன்று தான் என்று எமது தலைவர் சுதுமலையில் வைத்து பேசும் போது அதை அவர் சரியான வழியில் வழி நடத்தினார், ஆனால் போராட்டத்தின் புதிய சிந்தனைவாதங்களை உலக பல உளவு துறைகளுடன் தொடர்ப்பு உடையவர் இதை தமக்குள் கையடக்கி தமிழீழம், தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களிடையே பிரிவினையை வளர்ப்பதை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது.
இதுவரை காலமும் மக்கள் பணத்தில் வாழ்க்கை நடாத்தியவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதை நாம் ஆழ்ந்து பார்க்கும் போது பல உண்மைகளை அறிந்து கொள்ளலாம். இது பிரித்தானிய, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முக்கியமாக செய்யப்படுவதை பார்க்கலாம்.
KP யின் செயல் திட்டங்களை பார்க்கும் போது, மலேசியாவில் இருந்து கொண்டு இவ்வாறான கூட்டங்களை நடத்தியவர், இவர் நடமாட்டம் மலேசியா உளவு துறைக்கு தெரியாது என்று நீங்கள் எல்லோரும் சிந்திக்கிறீர்களா?
புலம் பெயர் நாடுகளில் தமிழர்களிடையே பிளவுபடுத்தும் செயல் திட்டங்களை செய்து விட்டு சிறிலங்கா அரசிடம் தன்னை ஒப்படைத்து கொண்ட KP தமது செயல்பாடுகளை சிறிலங்கா அரசுக்கு உதவியாக சிறிலங்காவிற்கு மாற்றினார், அதுதான் மலேசியாவில் நடந்த கைது என்ற நாடகம்.
சிறிலங்காவிற்கு சென்ற அவரின் செயல்பாடுகளை கவனிப்பீர்கள் ஆனால், போராளிகள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு என்று சிறிலங்கா அரசை காப்பாற்றும் செயல் திட்டங்களில் அவர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்பதை நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது.
KP க்கு பின் என்ன நடக்கிறது, மலேசியாவில் கல்வி கற்க சென்ற சுபன் (மலேசியாவில் KPயுடன் தொடர்பில் இருந்தவர்) என்பவர் தலைமை செயலகம் என்ற கட்டமைப்பை உருவாக்கி ரெஜியை இதில் சேர்த்து கொண்டு தம் உயிரை காக்க வெளியேறிய போராளிகளை சேர்த்து கொண்டு, புலம் பெயர் நாடுகளின் கட்டமைப்புகளை செப்டம்பர் 2௦௦9யில் தொடர்பு கொண்டு அவற்றை மனோகரன், சர்வே, பாஸ்கரன், இளங்கோ போன்றோர் உதவியுடன் தமது கைக்குள் கொண்டு வரும் செயல் திட்டங்களில் இறங்கினார்.
சில கட்டமைப்பின் தொடர்பாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டவர், புலம் பெயர் நாடுகளில் கட்டமைப்புகளை சிதறடிப்பேன் என்றும் கூறியவர், அந்த அடிப்படையிலேயே பிரான்சில் தமிழரசன் என்பவர் செய்படுகிறார், அவருடன் செயல்படுபவர்கள் எல்லோரும் இதுவரை காலம் மக்கள் பணத்தில் வாழ்க்கை நடத்தியவர்கள் இதை அந்த வட்டத்தில் இருப்பவர்களை பார்த்தால் உங்களுக்கு புரியும்.
ரெஜி தலைமையில் இயங்கும் பிரான்ஸ் புனர்வாழ்வு அமைப்பு இவர்களுடன் சேர்த்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா, இன்று பிரான்சிலும், லண்டனிலும் எமது தலைவர்கள் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் நடத்திய எமது மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளை தமது கைக்குள் அறிவித்து மக்களை தொடர்து ஒரு குழப்ப நிலைக்கு எடுத்து செல்லும் செயல் திட்டங்களை இவர்கள் செய்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது
இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மூன்று பிரிவாகச் செயற்படுகின்றது. புலி ஆதரவு அமைப்புக்கள் மத்தியிலும், புலி ஆதரவற்ற அரச எதிர்ப்பாளர்கள் மத்தியிலும்,மனிதாபிமானிகள் மத்தியிலும் வெவ்வெறு தளங்களில் அரச ஆதரவு முகவர்கள் இயங்குகின்றனர்………………..CORRECT