வங்காளதேச அரசின் கோரிக்கையின் படி லண்டன் காவற்துறை ஆணையம் பிப்ரவரி நிகழ்ந்த றைபிள் படை கலவரத்தின் புலனாய்வுக்கு உதவும் என்று வங்காளதேசத்தில் பயணம் மேற்கொள்கின்ற சர்வதேச வளர்ச்சி விவகாரத்துக்கு பொறுப்பான பிரிட்டன் அமைச்சர் நிலை அதிகாரி பாஃஸ்டர் 10ம் நாள் டாக்காவில் கூறினார்.
நான்கு பேர் இடம் பெறும் பணிக் குழு 11ம் நாள் டாக்கா சென்றடையும். அமெரிக்க FBIயின் பணியாளர்களுடன் இணைந்து இந்த புலனாய்வுக்கு தேவையான உதவியை இக்குழு வழங்கும் என்று அவர் கூறினார்.
FBIயின் 2 பணியாளர்கள் 8ம் நாள் டாக்கா சென்றடைந்து கலவரம் பற்றிய புலனாய்வு மேற்கொண்ட போக்கில் வங்காளதேசத்துக்கு தேவைப்படும் உதவியை மதிப்பீடு செய்யும் அறிக்கையை வழங்கியது. இவ்வறிக்கையின் படி மேலும் புலனாய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை FBI அனுப்பக் கூடும் என அறியப்படுகிறது.