புனிதச்சாயங்களுக்கான புலன்விசாரனை
கொஞ்சம் காரமாய் ஏதாவது இருக்கிறதா
அதோடு அதையும் எடுத்து வையுங்கள்
சொற்களுக்குச் சிறகு முளைத்தன போல
கொஞ்சம் சிரிப்போடு சித்தாத்தங்கள்
பேசலாமெனின்
நாவிலிருந்து வழுக்கி அந்த வார்த்தை தப்பிக்குமாயின்
பேசப்படாத குமைச்சலும் வாந்தியாய் வெளியேறி
வாழ்நிலைத் தத்துவங்களுக்கான புதுக்கோணங்கள் பிடிபடுமாயின்
அதைத் திறவுங்கள
குளிர் தண்ணியோ அல்லது கோலாவோ
இருக்கிறதா?
உடலிற் படிந்த நிழற்சேற்றைக் கழுவிஊற்றலாமெனின்
எங்கள் பகல்களின் பொத்தல்களையும்
இராக்கனவுகளின் விரிசல்களையும் தைக்கும் ஊசி
அறுபடாத நூலிற் கிடைக்கப்பெறுமெனின்
காவிக்கொண்டு பிறந்த எங்களுக்கான
கருணைமனுவும் புனிதச்சாயங்களும்
புலன்விசாரனைக்கு உட்படுமெனின்
அதை ஊற்றுங்கள்
காதலர்களை விபரமாய் மறக்கலாமெனின்
தனிமைப் பிரளயத்திலிருந்து தாவிக் கடக்கலாமெனின்
கூன்விழுந்த இரவுகளை
நொண்டிக் கடந்தகதைச் சொல்லலாமெனின்
யுகத்தோடு சிலநொடி தொடர்பு அறுபடுமாயின்
ஏதோவொரு வளையற்கை கெடுபிடி பெறுமாயின்
காரமானதை அருகில் வையுங்கள்
என் மூக்கின் துவாரங்கள் பழகக்கூடாதென
விஸ்கியோ வொட்காவோ
திரவத்தை ஏன் எனக்கு ஒளித்தீர்கள்?
தெரியும்… தெரியும்
ஜாக்கிரதை என்ற சமிக்ஞை
இனி நான் வர நடக்கும்
விஸ்கியோ வொட்காவோ
திரவத்தை ஏன் எனக்கு ஒளித்தீர்கள்?
உங்களை கண்டால் புன்நகையுமல்லாவா காணாமல் போகிறது.
புன்நகையுமல்லாவா காணாமல் போகிறது ஆகா புரிகின்றது, புன்னகை போனால் என்ன பொன்னகையை காப்பாற்ற முயலுங்களேன், புன்னகையில் மயங்கி பொன்னகையை பறி கொடுதவர் எத்தனையோ
http://www.enkavitai.com/index.php?option=com_content&view=article&id=177:2011-12-29-16-33-51&catid=3:miljo&Itemid=5
மூன்று கைகளும், எட்டுக் கால்களும்
தலைக்கு வெளியே மூளை தொங்குதென்றும்
கண்கள் பிடரியில் சொருகப்பட்டிருக்கின்றதென்றும்
அவர்கள் கைகளை அவர்கள் கால்களை
அவர்கள் கண்களை நோண்டினேனெனவும்
குற்றச் சிலுவையை முதுகில் எறிந்திருக்கிறார்கள்
பிறகு அவரவர் வேலையை அவரவர் பார்க்கப்
அவர்கள் போய்விட்டார்கள்… (இப்போது நீங்கள்… எல்லாம் அறிந்தது போல்.. எதுவுமே தெரியாதவர்களாய்… உங்களை சிந்தனை, செயல் குறித்து பெரும் கவலையடைகிறேன். ஒவ்வொரு மனிதனும் தனக்கு வக்கீலாகவும், பிறருக்கு நீதிபதியாகவும் இருக்கின்றான். உங்களைப் போலவே)
உங்களுக்காகவே பாரதி இப்படிச்சொன்னான்…
தேடிச் போறு நிதம் தின்று
பல சின்ன சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக உலன்று
கொடுங்கீற்றுக்கென பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!
:))))))))