டிசம்பர் 31 -ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட ஜன நெரிசலில் சுமார் 60 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட். இங்கு அபித்ஜான் என்ற பகுதியில் உள்ள ஒரு பெரிய மைதானத்தில் புத்தாண்டை வரவேற்க டிசம்பர் 31 ஆம்தேதி இரவு ஏராளமான மக்கள் குவிந்தனர்.
அப்போது வெளியிலிருந்து மைதானத்திற்குள் நுழைய முயன்ற மக்களுக்கிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 60 பேர் பலியாகியுள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
நகரின் பிரதான மைதானத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியைக் காண, மைதான வாயிலுக்கு மக்கள் முண்டியடித்தபடி சென்றதால் நெரிசல் அதிகரித்தது’ என்று ராணுவ மீட்புப் படை தலைவர் இஸா சாகோ தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் காலனியாக்விருந்த ஐவரிக் கோஸ்ட் கனிம வளமும் எண்ணை வளமும் கொண்ட நாடு. பிரான்சின் நவகாலனி ஆதிக்கம் இன்னும் இந்த நாட்டை வறிய நாடுகளில் ஒன்றாகவே வைத்துள்ளது.