முல்லைத்தீவு மாவட்டம், புதுமாத்தளன் கடற்கரையியில் ஆயுதங்கள் சகிதம் படையினர் பாதுகாப்பு வழங்க இன்று காலை சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளன.
அத்துடன் அக் குடும்பங்களுக்கு விசேட பாதுகாப்பும் படைத்தரப்பினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி வரும் வரையிலும் அவர்கள் காத்திருக்கவேண்டிய தேவை இல்லாமல் போயுள்ளது.
இன்று காலை வழைமை போன்று இப்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் புதுமாத்தளன் மற்றும் இரணைப்பாலை மீனவர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் மேஜர் தர படை அதிகாரியொருவர் தலைமையில் படையினர் பாதுகாப்பு வழங்க நேற்றிரவு படைமுகாமில் பதுங்கியிருந்த சிங்கள மீனவர்கள் இன்று காலை குடியேற்றப்பட்டு உள்ளனர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தலைமகள் அற்றுப்போன நிலையில் இலங்கை அரசின் இவ்வாறான இனச்சுத்திகரிப்பிற்கு எதிராகக் குரலெழுப்ப இலங்கையிலோ புலம் பெயர் நாடுகளிலோ யாரும் முன்வரவில்லை. வெற்றுச் செய்திகளாக இணையத் தளங்களுக்கு தீனிபோடு செய்திகளாக இது மாறியது. பேரினவாதத்தை இனவாதம் எனக் குறுகலாக்கும் பேரினவாத போலி இடதுசாரிகள், புலி சார் அமைப்புக்கள், ஏகாதிபத்திய எடுபிடிகள் அனைவரும் தமது மௌனமாகினர்.
It was great going to Vattapallai Amman festival. Then only I know that there are places called Mathalan and Puthumathalan. It was a pleasant surprise for me in 1982. There is a Sinhala movie called, Mathalan. Upto 1956 they were filmed in Chennai – Madras.