05.04.2009.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை இராணுவத்தினர் முழுமையாக மீட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்பு ஊடகநிலையம் அறிவித்துள்ளது.
இராணுவத்தின் 53வது மற்றும் 58வது படைப்பிரிவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக ஊடகநிலையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றிருப்பதாகவும், பாதுகாப்பு வலயப் பகுதியே இன்னமும் மீட்கப்படவேண்டியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான தீபன், துர்க்கா, விதுஷா, நாகேஷ் மற்றும் கடாஃபி ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாகக் களநிலைத் தளபதிகள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம், இந்த மோதல்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான பாணு கடும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
250 விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் சிலவற்றையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாகவும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
சிறீசபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், கேதீஸ்வரன், சுபத்திரன், ரஜனி திரணகம, செல்வி. விமலேஸ்வரன், விஜிதரன், மாத்தையா, இளம்திரையன், ராஜீவ் காந்தி……, 1971 ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியில் கொல்லப்பட்டவர்கள், காத்தான்குடி பள்ளிவாசலில் கொல்லப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள்…. போன்றவர்களின் மரணம் எமக்கு கண்களில் நீரை வரவழைத்தது என்றால், தீபனின், விதுஷா போன்றவர்களின் மரணம் எமக்கு புன்னகையை வரவழைக்கவில்லை. மாறாக இவ் மரணங்களுக்கான மரியாதைகளை அவர்களுக்கு நாங்கள் கொடுக்கவே விரும்புகின்றோம்.
rajkumar