யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் புதிய வாழ்வை ஆரம்பித்திருக்கின்றீர்கள் இந்த நாட்டில் வடக்கு மக்கள் தெற்கு மக்கள் மலையக மக்கள் என்ற பேதத்திற்கு இடம் கிடையாது. ஆனால் நீண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கே நாம் அதிகளவு உதவிகளைச் செய்து வருகின்றோம் இன்று உங்களுக்கு சகலதும் கிடைத்திருக்கின்றது.
என இனப்படுகொலையாளியும், சர்வதேசப் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இராணுவச் சிறைக்குள் வாழும் யாழ்ப்பாண மக்களிடம் புதிய வாழ்வை ஆரம்பித்திருக்கிறீர்கள் என சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச தெரிவித்தமை கேலிக்குரிதாக அமைந்திருந்தது.
மகிந்த ராஜபக்சவுடன் அரச துணைக்குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவும் பிரசன்னமாகியிருந்தார்.
மகிந்தவின் யாழ் வரவை ஒட்டி யாழ்ப்பாணத்தில் முன்னதாக எதிர்ர்புப் போராட்டங்களை எச்சரிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பலத்தில் தங்கியிராமல் கோழைத்தனமாகக் கோரும் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட வழங்கமுடியாது என ராஜபக்ச கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.
மகிந்த ஒன்றுமே தரப் போவதில்லை என்பது தன் வாயால் சொல்லித்தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற நிலை அங்கு இல்லை. ஏற்கனவே றெட்குறெஸ் மற்றும் நெதர்லாந்து போன்றவை தங்கள் பெயர் பொறித்து கட்டிக் கொடுத்து திறக்கப்பட்ட வைத்தியசாலையை மகிந்த கலர் மாற்றி முதல் இருந்த பெயர் பலகையை உடைத்து விட்டு தான் திறந்து வைத்தார். யாழ் மக்கள் இது குறித்து கேலியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் றெட்குறொஸ் போன்றவை கோபத்தில் கலந்து கொள்ளவில்லை. இது போலவே நெல்லியடி மீன் சந்தையை மரக்கறி சந்தையாக மாற்றி விட்டு போனார்கள.