இசைப்ரியா தொடர்பாக புதிய காணொளி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னாலும் இவர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலைமையில் இறந்து கிடக்க காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் உயிருடன் படையினரால் பிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுவதான காட்சியை புதிய காணொளி காட்டுகிறது.
இந்த காணொளி ஆதாரம் உலகை உலுக்கியுள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கான பதில்களை போரை முன்னின்று நடத்திய தரப்பும், போரை நடத்துவதற்கு ஆதரவு அளித்த தரப்பினரும், இன்று அரசிற்கு உள்ளே இருந்தபடி அரசை தாங்கி பிடித்து நிற்கின்ற தரப்பினரும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும், உலக மனித உரிமை சமூகத்துக்கும் பொறுப்புடன் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நேற்று வெளியிடப்பட்டுள்ள காணொளியில் காட்டப்படும் சம்பவங்கள் மிக பாரதூரமானவை. இவை இன்று அனைத்து மொழி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுக்க வியாபித்துள்ளன. இது தொடர்பில், கண்ணை மூடிக்கொண்டு பாலை திருடி குடிக்கும் திருட்டு பூனையை போல் இந்த அரசாங்கம் நடந்துகொள்ள முடியாது. எடுத்த எடுப்பிலேயே இதை வெறும் நாடகம் என்று சொல்லி விடுவதைவிட, இதற்கு ஆதாரபூர்வமாக அரசாங்கம் பதில்கூற வேண்டும். இத்தகைய ஆதாரங்கள் படைத்தரப்பினரிடமிருந்து பெறப்பட்டவை என்றும் ஆதாரங்களை காணொளி படுத்திய ஊடக நிறுவனம் கூறுகிறது. இது அடுத்த பாரதூரமான குற்றச்சாட்டு.
முன்னாள் படைத்தளபதியும், இன்றைய எதிரணி அரசியல் கட்சி தலைவருமான சரத் பொன்சேகா, இது தொடர்பாக அரசு ஆதாரபூர்வமாக பதிலளிக்க கடமைபட்டுள்ளது என கூறியுள்ளார். போரின் இறுதி கட்டத்தில் இரானுவத்திடம் சரணடந்தவர்கள் பற்றிய ஆவணங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை பரிசீலிக்க வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.
இது பற்றிய பொறுப்பு கூறல் இலங்கை அரசாங்கத்தின் பிரதான கடப்பாடு என்பதை ஐநா சபை ஏற்கனவே எடுத்து கூறிவிட்டது. இந்நிலையில் ஆதாரங்களுடன் வரும் போர்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது கட்டாயமானதாகும். உலகத்தரம் வாய்ந்த ஒரு ஊடக நிறுவனத்தால், வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய காணொளி காட்சிகள், இந்நாட்டிலும், உலகம் முழுக்கவும் வாழும் தமிழர்களுக்கும், பெண்ணிய போராளிகளுக்கும் மிகவும் உணர்வுபூர்வமானதாகும். ஆனால், இது உணர்வுபூர்வமானது மாத்திரம் அல்ல, சர்வதேச சட்டரீதியானதாகும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சி தலைவன் என்ற முறையிலும், மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றவன் என்ற முறையிலும், இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச சட்டத்தை ஞாபக ப்படுத்துகிறேன்.
Honourabe Mano Ganeshan is also now just another loose cannon. Sarath Fonseka said that war crimes were committed at the end of the war. It is time to take on the new Army Commander Lt. General Daya Ratnayake and restore General Sarath back in the Army Head Quarters. He also survived a suicide bomber attack.
இன்றைய ஆட்சியில் உள்ளவர்களும் சரத்தும் ரணிலும் இதை மூடி மறைக்கவே முயல்வார்கள்
கொலைகாரர்க ளுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமானால் மனோ கணேசன் தலைமையில் இலங்கையில் ஆட்சி அமைய வேண்டும் அவர் அல்லது அவருடன் ஒத்துழைக்கும் விக்ரமபாகு ஜனாதிபதியாக வரவேண்டும்.
ஆனால் இந்தியா அமெரிக்க நாடுகளுக்கும் ஏன் .. தமிழ் தரப்புகளுக்கும் ஊழலற்ற நல்லாட்சி இலங்கையில் அமைவது பிடிக்காமலிருக்கலாம்
இதை வாசிக்கும் inioru வாசகர்களில் எத்தனைபேர் இந்த மூடனின் கருத்தை ஏற்றுக் கொள்வார்களோ தெரியாது.
போரை முன்னேடுத்தவர்கட்கு உற்சாகப் படுத்தி எதுவரினும் யாமிருக்கப் பயமேன் என்று உதவி புரிந்த இந்தியாவை ஏன் கேட்கத் தயக்கம்.
இந்தியாவின் போரை இலங்கை நடத்திய கூலிப்படை.