புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்ததோடு ஆமாம் புறக்கணித்தோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதியக் கல்விக் கொள்கையை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன. திமுக தன் தேர்தல் அறிக்கையில் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என அறிவித்திருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு நடத்திய கூட்டங்களில் அதிமுக அரசு சார்பில் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்போதைய திமுக அரசின் பள்ளிக் கல்வி துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், . புதிய கல்விக் கொள்கை, இணையவழிக் கல்வி, கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கல்வியமைச்சருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என முன்கூட்டியே தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் மூலமாக புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைத்து விடலாம் என நினைக்கிறது. அமைச்சருக்கு அழைப்பு விடுக்காத நிலையில் எந்த அதிகாரிகளும் மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மாநில அரசு அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது.
தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு பதில் எதுவும் எழுதாத மத்திய அரசின் செயலைக் கண்டித்து இக்கூட்டத்தை ஒட்டு மொத்தமாக புறக்கணித்தது தமிழக அரசு.
ல் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்தியது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “குலக்கல்வி முறையை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கொண்டு வருகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த கல்விக் கொள்கை தொடர்பாக எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய அமைச்சரையும் அக்கூட்டத்தில் அனுமதிக்க கடிதம் எழுதினோம்.ஆனால் அவர்கள் அக்கடிதத்திற்கு பதிலே அனுப்பவில்லை. அதனால்தான் புறக்கணித்தோம்” என்றார் அன்பில்.