சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி இந்தியாவில் மிக முக்கியமான மூத்த ஓவியக் கல்லூரிகளில் ஒன்றாகும்.இக்கல்லூரியில் பயின்றவர்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியர்களாக மிளிருந்துள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டின் பயனால் முன்னேறி வந்து இக்கல்லூரியில் உயர் பதவிகளில் அமர்கிறவர்களின் சாதி வெறி காரணமான தலித் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாக இக்கல்லூரியின் மீது சுமத்தப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இக்கல்லூரியில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் தலித் மாணவர்களாகவோ சிறுபான்மை கிறிஸ்துவ மாணவர்களாகவோ இருக்கிறார்கள். இதற்கு இக்கல்லூரியில் பதவியில் இருக்கும் சாதி வெறி பேராசிரியர்களே காரணம்.
இந்நிலையில் சரண்ராஜ் என்ற சிற்ப மாணவர் இக்கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றுள்ளார். அவர் இப்போது முதுகலைப்பட்டக் கல்விக்கு விண்ணப்பித்தார் ஆனால் அவர் பெயரை திட்டமிட்டு கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர் சரண்ராஜ் எழுதியுள்ள பதவி பரவலாக கவனம் பெற்றுள்ளது.
நான் சரண்ராஜ்.வ
சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் 2017-ல் BFA (சிற்பம்) இளங்கலைப் பட்டம் பெற்றேன். அதிலிருந்து இன்று வரை கலைப்படைப்புகளை உருவாக்குவது உலகலாவிய அளவில் கண்காட்சியில் பங்கு பெறுவது என்று கலை சார்ந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறேன்.
தற்பொழுது முதுகலைப்பட்டம் பெறுவதற்காக அதே சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் விண்ணப்பித்திருந்தேன். நுழைவுத் தேர்விற்காக காத்திருந்தேன்.
நுழைவுத் தேர்வு குறித்து எனக்கு எந்த ஒரு தகவலும் ஆதாவது தபாலோ, மின்னஞ்சலோ அனுப்பவில்லை. இந்நிலையில் நண்பர்கள் மூலமாக அறிந்து 14.12.2021 நுழைவுத் தேர்வில் பங்கேற்றேன். மறுநாள் 15.12.2021 அன்று நேர்காணல் (Viva) தேர்விலும் பங்கேற்றேன். இதனுடைய முடிவுகள் நேற்று 6:30 க்கு கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டினார்கள். அதில் வ. சரண்ராஜ் க்கு தகுதி இல்லை (V SARANRAJ Disqualified) என்று குறிக்கப்பட்டு பெயர் இடம்பெற்றிருந்தது.
சிற்ப துறையில் மொத்த இடம்- 8.
தேர்வு எழுதியவர் மொத்தம்- 6 பேர்.
இதில் தேர்வானவர்கள்- 5 பேர்.
மேற்கண்ட 8 சீட்டுக்கும் போட்டியே இல்லாத நிலையில் எனக்கு சீட்டு தர மறுத்துவிட்டார்கள்.
Viva -வில் 5 மார்க் கொடுத்திருந்தாலும் நான் கல்லூரிக்குள் வந்துவிடுவேன் என்று திட்டமிட்டே 0- சுழியம் (zero)
போட்டுவிட்டார்கள். இவர்கள் என்னை திட்டமிட்டே சூழ்ச்சி செய்து சீட் தர மறுக்கிறார்கள். இவன் கல்லூரிக்குள் வந்தால் அடிக்கடி மாணவர்களை திரட்டி பேராசிரியர்களை கேள்வி கேட்பான். போராட்டம் நடத்துவான். முற்போக்கு அரசியல் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் போன்ற பல அமைப்புகளின் தொடர்பில் இருக்கிறான். எனவே இவன் கல்லூரிக்குள் வந்தால் அடிப்படை வசதி குறித்து, கட்டமைப்பு வசதிகள் குறித்து, கல்லூரியில் நடக்கும் குழறுபடி குறித்து, மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் ரீதியாக பேராசிரியர்களின் தொந்தரவு குறித்து என எல்லாவற்றையும் கேள்வி கேட்பான் என்ற பயத்திலயே எனக்கு சீட் தரமால் புறக்கனித்து, மிகவும் மலிவான காரணங்களை சொல்லி என்னை நிராகரிக்கிறார்கள்.
இதுபோன்று கடந்த காலங்களில் பல மாணவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேள்வி கேட்கக்கூடிய, நன்கு படிக்கக்கூடிய, கலையில் ஆர்வமுள்ள, அதிகமாக வெளி தொடர்பு உள்ள பலருக்கும் இந்த அவலம் நடந்துள்ளது. இதெற்கெல்லாம் காரணம் அங்கு சரியான பேராசிரியர்கள் இல்லாதது தான்.
சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் யாருமே ஓவியர்கள் இல்லை. அவர்களிலில் பலர் Drawing diploma course முடித்தவர்கள் தான்.
மற்ற மாநிலங்களில் இருக்கும் கவின் கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருப்பவர்கள் கலைஞர்களாக, நவீன உலகில் கலை குறித்த பார்வை கொண்டவர்களாக , பல கண்காட்சிகளில் பங்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு கவின் கலைக்கல்லூரி (fine art college) பேராசிரியரின் பெரிய தகுதியே ஒரு மாணவனை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வதுதான். அது இங்கே உள்ள ஒருவருக்கும் கிடையாது. அதற்கு சான்று அங்கே இதுவரை தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் சாட்சி. மேலும் அங்கே படித்துவிட்டு சென்றவர்கள், இப்பவும் படித்துக்கொண்டு இருப்பவர்களை தனித்தனியே சந்தித்து உரையாடினால் புரிந்து கொள்ள முடியும்.
இவையெல்லாம் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தால் எழுதவில்லை. நான் முன்பு கல்லூரியில் இருந்த காலத்திலயே இதற்கெல்லாம் தான் போராடி இருக்கிறேன். ஆதங்கப்பட்டிருக்கிறேன். இப்பவும் அந்த ஆதங்கம் இருக்கிறது.
அரசு இந்த கல்லூரியை என்றைக்குதான் கண்டு கொள்ள போகுதோ என்று இப்பவும் கல்லூரி குறித்து மிகுந்த கவலையும், வேதனையும் எனக்கு உண்டு.
தோழர்கள் இது குறித்து ஒரு நல்ல தீர்வு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
இப்படிக்கு
வ.சரண்ராஜ்
(Artist)
9597727479