பிரான்சில் வாழ்ந்த புகலிடப் படைப்பாளி ரமேஷ் சிவரூபன் 02.06.2010 அன்று பாரீசில் அகால மரணமானார். இம் மரணம் தொடாபாக தெரியவருவதாவது:
ரமேஷ் சிவரூபன் தனக்கு தெரிந்த நபர்களோடு உரையாடிக் கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் வன்முறையாகி ரமேஷ் ரூபன் இவர்களால் தாக்கப்பட்டதாகவும், பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பயனின்றி மரணமடைந்ததாகவும் தெரிவருகின்றது.
புகலிட சுழலில் வன்முறைக் கலாச்சாரம் என்பது இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் வெகு ஆழமாக புரையோடிப்போய் உள்ளமைக்கு இவ் மரணம் சாட்சி பகர்கின்றது.
சாதாரண உரையாடல்களைக்கூட சகித்துக்கொள்ளமுடியாத வன்முறைச் சமூகமாக இலங்கைத் தமிழர்கள் உருமாற்றம் அடைந்துவருகின்றனர் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய வேதனையான விடயமாகும். இது தொடர்பாக சமூக அக்கறையாளர்கள் கவனம் கொள்ளவேண்டியது அவசிய கடமையாகும்.
ரமேஷ் சிவரூபன் அவர்களின் மரணம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இலங்கை அரசு ஆதரவு இணையத்தளமான “தேனீ ” போன்றவை தம் வழமையான பாணியில் திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக இச் செய்தியை பிரசுரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
யாழ் ஏழாலை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரமேஷ் சிவரூபன் 18.08.1970ல் பிறந்தவர். இவர் ஏழாலை சைவமகாஜனா மல்லாகம் மகாவித்தியாலயம், மனிப்பாய் இந்துக்கல்லூரி, GRETA ROSSY GONESSE FRANCE IFIR Q (தொழில் பயிற்சிக் கல்லூரி) ஆகியவற்றில் கல்வி கற்றவர். ஈழத்தில் சண்டிலிப்பாய் கலைமகள் கல்வி நிலையம் ,கல்வியங்காடு Star Pupil acadamy ஆகிய தனியார் கல்வி நிறுவனங்களிலும், பிரான்ஸில் பாரீஸ் தமிழர் கல்வி நிலையத்திலும்ஆசிரியராக பணிசெய்தவர்.வான்மதிசஞ்சிகையின் தொகுப்பாசிரியராகஇருந்தவர். கவிதை மூலம் படைப்புலகில் புகுந்து சிறுகதைகள் நாடகங்கள் என்பவற்றை எழுதியதோடு திரைப்படம் நாடகம் என்பவற்றையும் இயக்கியும் நடித்தும் என பலவகையிலும் புகலிட கலை இலக்கிய திரைப்படத் துறைக்கு தன் பங்கினை செலுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
ரமேஷ் சிவரூபன் அவர்களின் மரணத்திற்கு ‘இனியொரு’ தம் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்றது.
ரமேஷ் சிவரூபன் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்னாரின் குடும்பத்தோடு
நானும் துயர்பகிர்ந்து கொள்கிறேன். எனது அஞ்சலிகள்.
சந்திரகுமார்
மறைந்த ரமேஷ் சிவரூபனிற்கு எனது அஞ்சலிகள்.
இப்படியான ஓர் எழுத்தாளர் மற்றவர்கள்
கொலைகாரராக்கும் அளவிற்கு வாயச்சண்டையோ, அல்லது கோபமூட்டும் தன்மையுடையவரா?
இதனை சாதரண கொலகழுடன் சம்பந்தப்ப்டுத்துவது அழகல்ல். பின்னணியை இன்னொரு கால்ப்போக்கில் வெளிக்கொண்டுவருமென் எதிபார்க்கின்ரரேன். க்ட்ட்ப்://ந்ந்ந்.டொப்ச்.ல்க்/அர்டிச்லெ19854-ட்நொ-டமில்ச்-அர்ரெச்டெட்-இந்பரிச்-ஒவெர்-மன்ச்-டெஅத்-டிகெர்-இன்fஇக்க்டிங்-மொஉன்ட்ச்-எஉரொபெ.க்ட்ம்ல்
துரை
http://www.tops.lk/article19854-two-tamils-arrested-in-paris-over-mans-death-tiger-infighting-mounts-europe.html
about Ramesh murder in Paris.
Thurai
உங்களுக்கெல்லாம் நாக்கில் நரம்போ, இதயம் என்பதோ கிடையாதா ?
ரமேசின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். புலம் பெயர் நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் சகல நாடுகளிலும் பரவியுள்ளன. இப்பொழுது சொத்துச் சண்டை ஆரம்பித்து விட்டது. யாருக்கு என்ன சொத்து என்பதுதான் இப்போது இவர்களிடம் உள்ள மிகப் பெரிய கேள்வி. மக்களவை தோதலும் சொத்தை பராமாரிப்பதற்கான நாடகமே. இவை பற்றிய உண்மைகள் மக்களிடம் சென்றடையவேண்டும்.
தேனீ ஏசியன் ரிபூயுன் ரெலோ நியூஸ் போன்ற மகிந்த அரச எடுபிடிகளின் பிரச்சாரப் பீரங்கிகள் ரமேஸ் சிவரூபனை புலிகளிடையேயான மோதலாகச் சித்தரிக்கின்றன. இந்த இணையங்கள் போர்க்குற்றவாளிகளின் வக்கீல்கள். துரை என்று இனியொருவில் எழுதிவரும் ஒரு தமிழனும் இவற்றுள் ஒரு வகை. ரமேஸ் சிவரூபனின் இனியொரு ஆக்கத்தினூடாகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். இன்று சுவிசிலிருந்து பிரான்சிற்கு முயற்சித்ததில் ரமேசின் நண்பர்களைத் தொடர்புகொள்ள முடிந்தது. கொலைகாரத் தேனீக்களே மக்களை வாழவிடுங்கள்.
பிரான்சில் இத்துடன் எத்தனை கொலைகள் நடந்துவிட்டன. அனைத்தும் தமிழரின்
குற்ரமா?
அல்லது புலிகளின் ஆதிக்கமா? இலங்கையில் நடப்ப்தெல்லாம் அரசியல்பழிவாங்கல்
ஒட்டுப்ப்டை, துரோகிகள். வீதியில் லட்சக் கண்க்கில் உருமைக்குக் குரல் கொடுக்கும்
மேல்நாட்டுத் தமிழர்கள் கதைத்துப் பேசி பிரச்சினகளைத்தீர்க்க முடியாத காட்டுமிராண்டிகளா?
துரை
முதலில் இந்த செய்தி தேனியில் புலிகளுக்குள்ளான முரண்பாடாக சித்தரிக்கப்பட்டு ரமேஸ் ஒரு புலி என்ற தோரணையில் வெளியாகியது. தொடர்ந்து ரெலோ நியூஸ், நெருப்பு, அதிரடி என்பனவும் தேனியின் செய்தியை மிகுந்த குதூகலமுடன் பிரசுரித்துள்ளன. உண்மை தெரிந்த பின்பும் ஒரு சிறு வருத்தத்தைக் கூட தேனி தெரிவிக்கவில்லை. புலி ஊடகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? ஒரே பொய்யும் புரட்டுமாய் இருக்கிறது.
இறந்தது ஓர் எழுத்தாளர். சமூகத்தின் ப தாக்கங்களுக்குச் சொந்தக்காரர். தவிரவும் இவ்வாறு எழுவோர் சிந்திப்போர் கொல்லப்படக்கூடிய நிலையில்தான் எங்கிருந்தாலும் எமது சமூகம் இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாதவரை நாம் மீள முடீயாது. ந
ண்பர்களுடன் சென்றவர் அவர்களாலேயே கொல்லப்பட்டார் என்னும்போது அதில் ஒருவரை மற்றவர் சாட்டிவிட்டு தப்பிக்க முடியாது. அது பொறுப்பற்ற செயல்.
முன்னர் யாரோ பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல ஒருவர் தாக்குமளவிற்கு சிவரூபன் கதை;தாரா இல்லையா என்பது அல்ல புள்ளி….
ஒருவர் கதைப்பதைக் கேுட்டு தாக்குமளவிற்கு எமது வட்டத்திற்குள்ளேயே இன்னொருவர் இருக்கிறார் என்பதுதான் புள்ளி…..
நான் கதைப்பதைக்கேட்டு அடிக்க வருவாரானால் அவருக்கு மனப்பறழ்வு இருக்கவேண்டும்.
கடந்தகாலத்தில் வன்முறைக்கு யாரையெல்லாம் குற்றம் சாட்டினோமோ அதையே நாங்களும் செய்கின்றேுhம். ஆனால் 1000 காரணம் சொல்வோம்…..
சிவரூபனின் நினைவாக செய்யவேுண்டியவை தமிழப் அய்ரோப்பிய படைப்பாளிகள் இலக்கியக்காரரிடையே நிறைய உண்டு. இவர் எக்சிலுடன் சேர்ந்து செயற்பட்டிருக்கிறார். ஈழமுரசுடன் சேர்ந்து செயற்பட்டிருக்கிறார். பாரீஸ் கல்வி சாலையுடன் சேர்ந்து சயற்பட்டிருக்கிறார். இனியொருவிலும் எழுதியிருக்கிறார். ஓர் கட்டற்ற இலக்கியக் காரரரைப்போலவே அவர் அனைத்துத் தரப்பிலும் நின்று செயற்பட்டிருக்கிறார். சிந்திக்க
எந்த வன்முறையை எதிர்த்து எழுதினீர்களோ அதே வன்முறை உங்கள் உயிரை பறித்து விட்டதே ஹ்ம்ம் ஆழ்ந்த அனுதாபங்கள்