Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பீரங்கி ராஜீவ்… கேம்ஸ் கல்மாடி… டான்சி ராணி… சுரங்கம் ரெட்டி…கரி சிங். தி கல்லுளிமங்கன்.

இனியொரு... by இனியொரு...
08/02/2012
in புதிய ஜனநாயகம்
0 0
0
Home அரசியல் புதிய ஜனநாயகம்

ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை. மன்மோகன் சிங் அரசு ‘கோல் இந்தியா‘ என்ற பொதுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமாக்கியிருக்கிறது. இந்த பகற்கொள்ளையைத்தான் ‘நிலக்கரி ஊழல்‘ என்று ஊடகங்கள் அழைக்கின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் இந்த ஊழல் குறித்த செய்தி இடம் பெற்றிருப்பதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு (மார்ச் 22, 2012) அம்பலப்படுத்தியது.
2004 முதல் 2009 வரையிலான காலத்தில் நடந்திருக்கும் இக்கொள்ளையில் ஜிண்டால், டாடா, அனில் அகர்வால், ஆதித்ய பிர்லா, எஸ்ஸார், அதானி, ஆர்செலார்மிட்டல், ஜெய்ஸ்வால், அபிஜித் குழுமம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் லிமிடெட், பூஷன் பவர் அன்ட் ஸ்டீல் லிமிடெட் போன்ற பன்னாட்டுதரகு முதலாளிகளுக்கு நாட்டின் பொதுச்சொத்தை அறுத்து கறிவிருந்து வைத்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்த அயோக்கியத்தனத்தை நியாயம் போல் காட்டுவதற்காகவே, பாதி நிலக்கரி வயல்கள் மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு தாரை வார்க்கப்பட்டுள்ள நிலக்கரி வயல்களில் புதைந்திருக்கும் மொத்த நிலக்கரியின் அளவு 3316.9 கோடி டன்கள். இதைக் கொண்டு நாளொன்றுக்கு 1,50,000 மெகாவாட் வீதம் (இதுதான் இந்தியாவின் தற்போதைய மின்சார உற்பத்தி) அடுத்த 50 ஆண்டுகளுக்கு அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் 1700 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட வயல்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், 1616.9 கோடி டன் இருப்பு கொண்ட வயல்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தரப்பட்டிருக்கின்றன.
உலகச்சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.14,000. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் மூலம் மானிய விலையில் விற்கப்படுவதால் இந்தியச் சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை மேற்கூறிய காலகட்டத்தில் ரூ.2000 முதல் ரூ. 2500 வரை இருந்துள்ளது. மன்மோகன் அரசோ கருப்புத் தங்கமான இந்த நிலக்கரி இருப்பை, டன் ஐம்பதுக்கும் நூறுக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.
மார்ச் 2011 நிலவரப்படி நிலக்கரியின் இந்தியச் சந்தை விலையை வைத்துக் கணக்கிட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை.
தனியார் முதலாளிகள் பெற்றுள்ள 1700 கோடி டன் நிலக்கரி இருப்பின் மதிப்பு 42 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என்று சி.பி.ஐ அதிகாரிகள் மதிப்பிடுவதாக கூறுகிறது இந்தியா டுடே (9.12.2011). இதன் மதிப்பு 51 இலட்சம் கோடி ரூபாய் என்பது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு.
கொள்ளை போன தொகை எவ்வளவு என்பது குறித்த மதிப்பீட்டில் வேறுபாடு இருந்தாலும், இது அலைக்கற்றை ஊழலைப் போல அனுமானமாகக் கூறப்படும் இழப்பல்ல. நிலக்கரியின் சந்தை விலையில், ஒரு டன் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு கோல் இந்தியா நிறுவனம் செய்யும் செலவைக் கழித்து, குறைந்தபட்சமாக கணக்கிட்டுத்தான் இந்தத் தொகையைக் கூறுவதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது. நிலக்கரி வயல்களை ஏலத்திற்கு விட்டிருந்தால் 10.67 இலட்சம் கோடி ரூபாய் இழப்பை அரசு தவிர்த்திருக்க முடியும் என்கிறது அறிக்கை.
இச்செய்தி வெளிவந்தவுடனேயே பிரதமர் அலுவலகம் கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் இறங்கியது. சி.ஏ.ஜி. பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு, தனது கருத்தை சி.ஏ.ஜி. மாற்றிக் கொண்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்தது பிரதமர் அலுவலகம்.
அடுத்த நாளே முழுக் கடிதமும் ஊடகங்களில் வெளியானது. ஏல முறை கடைப்பிடிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள 10.67 இலட்சம் கோடி இழப்பை, அரசுக்கு ஏற்பட்ட ‘நட்டம்’ என்று அழைப்பதா அல்லது, ‘மனமறியாமல் தரப்பட்ட ஆதாயம்’ என்று அழைப்பதா (Loss or Unintended benefit) என்ற முடிவுக்கு அவர்கள் வரவில்லை என்பதுதான் சி.ஏ.ஜி. யின் கடிதம் தெரிவித்த கருத்து.
கடிதத்தை வெட்டி ஒட்டி இப்படியொரு கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் ஈடுபட்ட மன்மோகன் அரசு, ஒருபுறம் குற்றத்தை மறுத்துக்கொண்டே இன்னொருபுறம் 2006-2009 ஆண்டில் நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை விசாரிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனத்தைக் (சி.பி.ஐ) கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார், 2006-இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக இருந்து, 15 நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்தவர். எனவே இவரை சி.பி.ஐ. விசாரிக்குமா, நிலக்கரித் துறை அமைச்சரான பிரதமரை விசாரிக்குமா என்ற விடைதெரியாத கேள்விகள் எழுந்துள்ளன.
சி.பி.ஐஇன் விசாரணை வலையத்தில் நிலக்கரி வயல்கள் நிறைந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ம.பி. ஆகிய மூன்று மாநிலங்களின் பா.ஜ.க. அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள் ஆகியோரும் வருகிறார்கள். வலையை முடிந்தவரை அகலமாக விரித்துத் தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிறது காங்கிரசு அரசு. இன்னொருபுறம், மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 16 நிலக்கரி வயல்களை ஒதுக்கப் போவதாகக் கூறி, மாநிலக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு ஆசையும் காட்டி விலைபேசவும் முயற்சிக்கிறது. இந்தத் தீவட்டிக் கொள்ளையில் முக்கியமான இந்தியத் தரகு முதலாளிகள் அனைவருக்கும் பங்கு இருப்பதால், எல்லோருமே முடிந்தவரை அடக்கி வாசிக்கிறார்கள்.
கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையை இறுதியாக்கி மே 11ஆம் தேதியன்றே குடியரசுத் தலைவரிடம் தந்துவிட்டார். நிதியமைச்சகம் இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும் என்பது மரபாம். குடியரசுத்தலைவர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. எனவே, இந்த மெகா ஊழல் அறிக்கை 50 நாட்களாக ராஷ்டிரபதி பவனில் உறங்குகிறது.
சி.ஏ.ஜி. மதிப்பீட்டின்படி அலைக்கற்றை கொள்ளையைப் போல 6 மடங்கு பெரியது இந்த நிலக்கரிக் கொள்ளை. அலைக்கற்றைகளை ஏலம் விட்டு, அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு அதனை வழங்காமல், பிள்ளையார் கோயில் சுண்டலைப்போல ‘முதலில் வருவோர்க்கு முதலில்‘ என்று வழங்கிவிட்டார் என்பதுதான் ராசா மீதான குற்றச்சாட்டு. அலைக்கற்றை சுண்டலுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் வரிசையில் நிற்கவாவது வேண்டியிருந்தது. நிலக்கரி வயல்களைப் பெறுவதற்கு அந்த சிரமமும் இல்லை. அமைச்சர்கள்,அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை (Screening committee) நியமித்து, அந்தக் குழுவின் மூலம் டாடா, பிர்லா, மித்தல், ஜின்டால் போன்ற ‘தகுதியான‘ தரகு முதலாளிகளைத் ‘தெரிவு‘ செய்து, அவர்களுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை விநியோகித்துவிட்டார் மன்மோகன் சிங்.
“மலிவான கட்டணத்தில் கைபேசி சேவையை மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்காகத்தான் அலைக்கற்றையை ஏலம் விடாமல் குறைந்த விலைக்கு கொடுத்தோம்” என்பது ராசாவின் வாதம். “மின்சாரம், இரும்பு, சிமெண்டு போன்றவற்றை மக்களுக்கு மலிவாக தருவதற்காகத்தான் நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்கு சலுகை விலையில் கொடுத்தோம்” என்கிறது மன்மோகன் அரசு.
ராசாவின் வாதத்திலாவது சிறிதளவேனும் உண்மை இருக்கிறது. மன்மோகன் சிங்கின் வாதம் கடைந்தெடுத்த பொய். தொலைபேசிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராய் என்ற ஒழுங்குமுறை ஆணையம் பெயரளவிலாவது இருக்கிறது. சிமெண்டுக்கும் இரும்புக்கும் விலை நிர்ணயம் செய்பவர்கள் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.
அதேபோல, தனியார் முதலாளிகளின் கொள்ளை இலாபத்தை உத்திரவாதம் செய்யும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு, மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துவதற்குத்தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 18 ரூபாய் வரை விலை வைத்து மாநில மின்வாரியங்களைத் திவாலாக்கும் ‘மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன்கள்’ எனும் தனியார் முதலாளிகளுக்கும் நிலக்கரி வயல்களை வாரி வழங்கியிருக்கிறார் மன்மோகன்.
பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் தரப்பட்டது என்பதும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்றே பல்லாயிரம் கோடி இலாபம் பார்த்து விட்டனர் என்பதும் அலைக்கற்றை ஊழலின் குற்றச்சாட்டுகள். நிலக்கரி வயல்களையும் பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்குப் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார் மன்மோகன். தமது உற்பத்தி இலக்கை பன்மடங்கு உயர்த்திக் காட்டி, நிலக்கரி வயல்களை வளைத்துப் போட்டிருக்கின்றன பல நிறுவனங்கள்.
ம.பி. மாநிலத்திலுள்ள பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 25 கோடி டன் நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று ரூ.4000 கோடி இலாபமடைந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் நிலக்கரித் தேவை 50 இலட்சம் டன்; ஆனால் இந்நிறுவனத்துக்கு 96.3 கோடி டன் நிலக்கரி இருப்புள்ள சுரங்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒரிசாவின் நவபாரத் நிறுவனம் 1,050 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கென வாங்கிய நிலக்கரிச் சுரங்கத்தை எஸ்ஸார் குழுமத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு விற்று இலாபம் சம்பாதித்துள்ளது. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
வயல்களைப் பெற்ற 90% நிறுவனங்கள் (coal block allottees) ஒரு கிராம் நிலக்கரியைக் கூட எடுக்கவில்லை. நிலக்கரி விலை உயரும்போது நல்ல விலைக்கு விற்பதற்காக ரியல் எஸ்டேட்டுகளைப் போல போட்டு வைத்திருக்கிறார்கள். வேறு சிலர், சுரங்கம் தோண்டும் நிறுவனங்களுக்கு (Mine Developer cum Operator) வயல்களை ஏலம் விட்டு, ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டியிருக்கிறார்கள். இவை அனைத்தும் மன்மோகன் அரசுக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன.
அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, தன் கையை மீறி நடந்து விட்ட தவறு, கூட்டணி நிர்ப்பந்தம் என்றெல்லாம் சொல்லி ராசாவையும் தி.மு.க.வையும் காவு கொடுத்து விட்டு தந்திரமாகத் தப்பித்துக் கொண்டார் மன்மோகன் சிங். அதற்கு ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் துணை நின்றன. நிலக்கரிக் கொள்ளைக் குற்றத்திலிருந்து மன்மோகன் அப்படி நழுவ முடியாது.
தனியார்மயதாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதும், முன்னாள் நிலக்கரித்துறை செயலரான சாரி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிலக்கரி வயல்களைத் தனியாருக்கு விற்பதென்றால், ஒரு சுயேச்சையான குழுவின் கீழ் ஏலத்தின் மூலம்தான் விற்கப்படவேண்டும் என்று மே 1996-இல் கூறியது. அன்றைய மத்திய அமைச்சரவைக் குழு இதனை ஏற்று, சட்டத் திருத்தமாக கொண்டுவர சிபாரிசு செய்தது. ஆனால், அடுத்து வந்த பா.ஜ.க. ஆட்சி சட்டத்தை திருத்தவில்லை.
2004-இல் “அமைச்சர் சிபு சோரனிடம் ஏலமுறைதான் சரியானது என்று கூறினேன். அவர் பொருட்படுத்தவில்லை. பிறகு பிரதமரிடம் சொன்னேன் அவரும் கண்டு கொள்ளவில்லை” என்கிறார் அன்றைய நிலக்கரித்துறை செயலர் பாரிக். (எகனாமிக் டைம்ஸ், ஜூன், 13, 2012) விண்ணப்பங்கள் குவியத் தொடங்கவே, ‘28 ஜூன் 2004 வரை வந்த விண்ணப்பங்களுக்குத்தான் நிலக்கரி வயல்கள் தரப்படும் என்று திடீரென்று அறிவித்தது மன்மோகன் அரசு. அலைக்கற்றை விவகாரத்தில் ராசா வெளியிட்ட அறிவிப்பைப் போன்றதுதான் இதுவும்.
2005-இல் ‘இனிமேல் ஏலம்தான்’ என்று அறிவித்தது மன்மோகன் கையில் இருந்த நிலக்கரி அமைச்சகம். இதற்கேற்ப 1973-இல் இயற்றப்பட்ட சுரங்கங்களைத் தேசியமயமாக்கும் சட்டத்தை விரைவிலேயே திருத்தி விடுவோம் என்றும் கூறியது. ஆனால், சட்டம் திருத்தப்படவில்லை. நிலக்கரி வயல்கள் தனியார்மயமாக்கம் தொடர்ந்தது.
ஏப்ரல் 2005-இல் இரும்பு மற்றும் நிலக்கரிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (எதிர்க்கட்சியினரும் அடங்கியது) “சுரங்கங்களை ஒதுக்குவதற்கான முறை வகுக்கப்படும் வரை தனியார்மயத்தை நிறுத்த”க் கோரியது. ஜனவரி 2006-இல் முதலீட்டுக் கமிசன் ‘ஏலமுறையில் மட்டுமே நிலக்கரி வயல்கள் தரப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியது. 2006-இல் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் எழுப்பின.
“சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் சட்டம் (1957) ஐத் திருத்தி, தனியார்மயமாக்கப்படும் நிலக்கரி வயல்களில் பழங்குடி மக்களுக்கும் பங்கு தரப்போகிறோம். இச்சட்டத்திருத்தம் நிறைவேறும் வரை தனியாருக்கு நிலக்கரி வயல்களைத் தரமாட்டோம்” என்று 2006-இல் நாடாளுமன்றத்தில் மன்மோகன் அரசு அறிவித்தது. 2010 வரை சட்டத்திருத்தம் நிறைவேறவில்லை.
2006-2009 காலத்தில்தான் அதிகபட்சமான நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்குத் தாரை வார்த்திருக்கிறார் மன்மோகன் சிங். 2006-09 காலத்தில் நடந்திருக்கும் இந்தக் கொள்ளையின் மதிப்பு 51 இலட்சம் கோடி என்று கூறும் பா.ஜ.க. எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஆஹிர், இந்தக் கொள்ளையை நிறுத்தக் கோரி 2008 முதல் பிரதமருக்கு பத்து கடிதங்கள் எழுதியதாகவும், ‘வரப்பெற்றோம்‘ என்பது மட்டும்தான் பத்து முறையும் தனக்கு கிடைத்த பதில் என்றும் கூறுகிறார்.
“அலைக்கற்றை உரிமங்களுக்கான விலையைக் குறைத்து நிர்ணயித்தார்” என்பதுதான் ஆ.ராசாவின் மீது கூறப்படும் குற்றச்சாட்டு. கரித் திருடன் மன்மோகன் சிங் கும்பலோ, ‘ஏலத்தின் மூலம்தான் விற்பனை செய்யவேண்டும்’ என்பதைக் கொள்கை அளவில் ஏற்பது போல நயவஞ்சகமாக நடித்துக்கொண்டே, 1700 கோடி டன் கருப்புத் தங்கத்தை ஐம்பதுக்கும் நூறுக்கும் தரகுமுதலாளிகளின் தனிச் சொத்தாக்கியிருக்கிறது.
ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம், எரிவாயு, நிலக்கரி என ஊழல்கள் அளவில் ஒன்றையொன்று விஞ்சிச் செல்கின்றன. கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இந்த ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.
தனியார்மயம்தான் முதற்பெரும் ஊழல். ஊழலற்ற தனியார்மயம் இல்லை. தனியார்மயத்தை அமல்படுத்துபவன் எவனும் உத்தமன் இல்லை. இருக்கவும் முடியாது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளும்போதுதான், கரித் திருடன் மன்மோகன் சிங்கைத் தண்டிக்க முடியும். தனியார்மயக் கொள்ளையைத் தடுக்கவும் முடியும்.
__________________________________________
– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.
___________________________________________

அன்பு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஒரு ஜேப்படி!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In