தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி கடந்த புதன் அவசராவசரமாஅக விடுதலை செய்யப்பட்ட பின்னர் வடமாகாண தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது புலிகளின் முன்னை நாள் முக்கிய உறுப்பினராவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
தயா மாஸ்டர் எனப்படும் முன்னை நாள் புலிகளின் முக்கிய உறுப்பினர் வடக்கு தேர்தலில் போட்டியிடுகிறார் என உறுதியாகியுள்ளது.
தமிழினியின் கட்டளைக்கு உட்படுத்தப்பட்ட, அவரால் பயிற்சியளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் சிறைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தயாமாஸ்டரால் வழி நடத்தப்பட்டவர்களில் பலர் எங்கே என்று தெரியாத நிலை உள்ளது.
பாசிச ராஜபக்ச அரச அதிகாரத்திற்கு எதிராகவும் இந்திய இலங்கை கூட்டுச் சதிக்கு எதிராகவும் அழிப்பவர்களோடு சமரசம் செய்து முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நான்கு வருடங்கள் கடந்து போயின.
இதன் வழியாக தமிழ்ப் பேசும் மக்கள் என்றும் இல்லாத ஒடுக்கு முறையையும் நில ஆக்கிரமிப்பு உட்பட இனச்சுத்திகரிப்பிற்கும் உள்ளாக்கபடுகின்றனர்.
உலகின் நட்பு சக்திகளோடு இணைந்து மக்களின் ஜனநாயக முற்போக்கு போராட்டங்களுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
அறிவார்ந்த செயல் புரிந்தால் சரி
இவர்களின் சூழ்நிலை உணராமல், அவர்கள் பிரிவதன் காரணம் அறியாமல், காரணம் உண்மையென்றால் அவற்றை சரி செய்ய முயலாமல், விலக்கி வைப்பது கடைசியில் உங்களுக்கு அதிகமான உட்பகையை உருவாக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உட்பகை மிகவும் கொடிது. அதன் கொடுமையை மே மாதத்தில் உணர்ந்தும் மேலும் தங்கள் இனத்திலேயே பகையை வளர்ப்பது சரியா?
Rajan you said it right. This is time for the three “R”s. Rehabilitaion, Reconstruction and Reconcilation.
You forgot the rest of the words that start with a R in the dictionery !
I heard Tamilini suffered a lot a Sinhala Lawyer finally appeared for her to get her out into freedom and normal life again.
So it is the straw called a Singhalese lawyer that broke the camel’s back ?
நீங்களும் எதையோஎல்லாம் கிறுக்குதனமா எழுதுறதும் அதையே இனியொரு தொடர்ந்து பிரசுரிக்கிறதும் ஒரே வேடிக்கைதான் போங்க.
எத்தனையோ துரோகத்தனம் செய்யக் கூடியவர்களை தனக்குள் வைத்துக் கொண்டு புலித்தலைமை உண்மைப் போராளிகளை ஒன்று விடாமல் புதைகுழிக்கு அனுப்பி வைத்தது. இன்று தமிழினம் உண்மை மனிதர்களின் கண்ணீரும் குருதியும் வீணாக்கப்பட்டதற்கான பலனை ஆற அமர நிதானமாய் அனுபவிக்கின்றது.