சமூகத்தை மாற்றுவதற்காக மரணித்தவர்கள் நம் மத்தியிலிருக்கிறார்கள். அதனை மாற்றக்கூடாது என்று மரணித்தவர்களையும் காணலாம். பண்பாட்டின் சில பகுதிகள் புதிதாக மாற்றமடையும் போது சமூகச் சிரழிவாக பழமை சார்ந்து கூச்சலிடும் கலாச்சாரக் காவலர்களை காண்கிறோம். நமது சமூகத்தின் அதிகாரவர்க்கத்திற்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சமூகத்தை மாற்றுவதற்குப் பதிலாகச் சீர்த்திருத்தங்களை முன்வைப்பவர்களைக் காண்கிறோம். ஐரோப்பிய நாட்டு மனித உரிமை அமைப்புக்களில் பெரும்பாலானவை அந்த நாடுகளின் அதிகார வர்க்கத்தின் மீது தூசுபடிந்துவிடக்கூடாது என்பதற்காகவே மனித உரிமை சமாதானம் என்றெல்லாம் கூச்சலிடுகின்றனர். அதிகாரவர்க்கம் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மனித உரிமைகளி மீறும் போது அவற்றக் மனித உரிமை வாதிகள் கண்டுகொள்வதில்லை. அல்லது தமது எஜமானர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில்மனித உரிமை விதிகளை காதோரமாகச் சுட்டிக்காட்டுவார்கள்.
மக்கள் சார்ந்த அரசியல் என்பது மனித உரிமை, மனிதாபிமானம் போன்ற ஒற்றைப் பரிமாண தலையங்கங்களுக்குள் மட்டும் குறுக்கப்படுவதில்லை.
ராஜினி திரணகம மனித உரிமைவாதி என்ற அடையாளத்திற்கும் அப்பால் செல்ல முற்பட்ட ஒருவர். தென்னிந்திய ஆங்கிலிகன் திருச்சபையுடன் தொடர்புடைய மேல்தட்டு யாழ்ப்பாணக் கிறிஸ்தவ சமூகத்தின் மத்தியிலிருந்து மனித உரிமைக்கு அப்பால் சமூகத்தைப் பார்க்கும் தகமை படைதவராகவிருந்தார். இந்திய பார்ப்பன சமூகத்திற்கு ஈடான வேளாள கிறீஸ்தவர்கள் இலங்கை அரசியலில் ஆளுமை மிக்கவர்கள். சிங்கள கொய்கம ஆங்கிலிக்கன் தலைவர்களான டீ.எஸ்.சேனாநயக்க, டட்லி சேனநாயக்க, சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, ஜூலியட் ரிச்சார் ஜெயவர்தன போன்றோர் இலங்கையின் ஜனாதிபதிகளாகவும் பிரதமர்களாகவுமிருந்தனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட தமிழ் அரசியலில் அதிகாரம் செலுத்த முயன்ற பலர் ஆங்கிலிக்க திருச்சபையின் கிறீஸ்தவ வேளாளர்களாகவிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பை வசிப்பிடமாகவும், பொருபாலான வேளைகளில் கொழும்பில் சிங்கள அதிகாரவர்கத்தின் நெருங்கிய நண்பர்களாகவும் செயற்பட்டவர்கள்.
இவ்வாறான பின்னணியிலிருந்து வந்த ராஜனி திரணகம அதிகாரவர்க்கப் பெறுமானங்களுக்கு அப்பால், மனித உரிமை வாதி என்பதற்கு அப்பால் சமூகத்தை நேசித்தவராவிருந்தார். அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியலை முன்வைக்க முனைந்தவராகக் காணப்பட்டார். ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் செய்துகொள்ளவில்லை.
இங்கிலாந்தில் மருத்துவக் கல்லூரியில் பயின்ற போது 80 களின் ஆரம்பத்தில் புலிகளின் லண்டன் கிளையுடன் இணைந்து செயற்பட்டார். லண்டனில் தீவிர புலி ஆதரவாளராகச் செயற்பட்ட ராஜினி, யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் அனரொமி பிரிவின் தலைவராக தனது 35 வது வயதில் பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைப் புலிகளின் மறைவிடமாகவே கருதியது, முறைதவறாமல் நாளாந்தம் பல்கலைக் கழக மாணவர்களைக் கைது செய்தது. பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய இராணுவத்துடன் இது தொடர்பாகப் பேசுவதற்குக் கூட அஞ்ச்சிய நிலையில் ராஜினி திரணகம மற்றும் சில விரிவுரையாளர்களுடன் மாணவர்கள் சார்பாகச் செயற்பட்டார். கைதுசெய்யப்டும் மாணவர்களை விடுவிப்பதற்காகப் போராட்டங்களை நடத்துவதிலிருந்து பல்கலைக் கழககம் சார்பாக இந்திய இராணுவத்துடன் வாதம் செய்து விடுவிப்பது வரை உயிராபத்தான வேலைகளில் ஈடுபட்டார்.. புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக அறியப்பட்ட பல மாணவர்களை, அவர்களின் அரசியல் தொடர்பாகத் தெரிந்துகொண்டும் விடுவிப்பதற்காகப் போராடி வெற்றிபெற்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வரதராஜப்பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத்தின் அடியாள் படை ஒன்றை உருவாக்க முனைந்த இக்கட்டான காலகட்டத்தில் ராஜினி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் தமது கண்ணில் படும் மீசை அரும்பத்தொடங்கிய அத்தனை இளைஞர்களையும் கைது செய்து கட்டாயப் பயிற்சி வழங்கி விருப்பத்திற்கு மாறாக இராணுவப்படையில் இணைத்துக்கொண்டது. இது தொடர்பாகப் பேசுவதற்கு முழு சமூகமும் அஞ்சிய வேளையில். ஆள்பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் ஊடாகத் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட முன்னின்று செயற்பட்டார்.
உலகைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட நிலைகொண்டிருப்பதாக எண்ணியிருந்தது. இந்தியா முழுவதும் இலங்கையில் சமாதானத்தை நிலை நாட்டச் சென்ற இராணுவத்திற்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்றே மக்கள் எண்ணினர். இந்தக் காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் கொடூரத்தைப் பட்டியலிடும் நீண்ட ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதில் முக்கிய பங்குவகித்தார். முறிந்த பனை என்ற தலைப்பில் வெளியான அந்த ஆவணத்தில் புலிகளின் மனித உரிமை மீறல்களும் பட்டியலிடப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவை விமர்சன நோக்கிலேயே வெளியாகியிருந்தன.
புலிகளின் தலைமை கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டதில்லை. நூறுகருத்துக்கள் மோதினால் நூறு பூக்கள் மலரும் என்பார்கள். புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகள் மோதினால் ஒரு துப்பாக்கி ரவை போதுமானது என்பதே கோட்ப்பாடாக முன்வைக்கப்பட்டது.
அவ்வேளையில் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளை விமர்சித்த முறிந்த பனை வெளியான ஒருவாரத்திற்கு உள்ளாக ராஜினி திரணகம தெருவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
29.08.1989 அன்று மாலையை அண்மித்த பொழுதில் மருத்துவக் கல்லூரிக்கு முன்புற வீதியில் ராஜனி திரணகம என்ற இரு குழந்தைகளின் தாய் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி வீதியில் விழுந்துகிடந்தார்.
எமது சமூகத்திலிருந்து பெண்போராளி ஒருவர் பிடுங்கியெறியப்ப்பட்ட அந்த நாள் துயர்மிக்கது.
ரஜனி திரணகம ஆரம்பித்த மனித உரிமைகாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவரின் மரணத்தின் பின்னரும் செயற்பட்டது. புலிகளின் மனித உரிமை மீறல் மட்டுமே அவர்களின் பிரதான குறியாகவிருந்தது.
புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் பின்னர் அந்த அமைப்பின் செயற்பாடுகள் அருகிப் போயின. இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான ‘முறிந்த அரசமரத்திற்கான’ வேலைகள் முற்றாக நடைபெறவில்லை.
மக்களுக்காகப் போராடிய புலிகளின் போராளிகள் எவ்வாறு பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறார்களோ அவ்வாறே ராஜினி திரணகமவின் மரணமும் பிழைப்பு வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.
ரஜனி திரணகமவின் 20 ஆண்டு நினைவஞ்சலி இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொலையாளிகளில் ஒருவரான ராஜபக்சவின் முற்றத்தில் நடைபெற்றது. இலங்கையில் ஈ காக்காய் கூட ராஜபக்சவின் அனுமதியின்றி நுளைய முடியாது என்ற நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ராஜனியின் 20 ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. அதுவும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இரத்தவாடை இலங்கையில் எல்லைகளையும் கடந்து வீசிக்கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தினுள் ரஜனி திரணகமவின் ஆவி கூட நுளைவதற்குக் கூச்சப்பட்டிருக்கும் என்பதே உண்மை.
அதே நினைவஞ்சலியை இந்த முறை யாழ்ப்பாணப் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எப்படிப்பட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் நடத்தவிடமாட்டோம் என்ற அரசியலைக் கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாகத் தெரிய வருகிறது.
யாழ்ப்பாணத்தில் ஆங்கிலிகன் வேளாள சமூகம் தனது அதிகாரத்தை மீளுறுதி செய்வதற்கு ராஜினி திரணகமவின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுவது வழமையே. எது எவ்வாறாயினும் இன்று ராஜினியின் மரணத்தைத் தோளில் சுமந்துகொண்டு உலக உலா வரும் பிழைப்புவாதிகளை வைத்து ராஜினியை மதிப்பிடும் தவறிழைப்பது தவறு!
“ரஜனி திரணகம ஆரம்பித்த மனித உரிமைகாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவரின் மரணத்தின் பின்னரும் செயற்பட்டது. புலிகளின் மனித உரிமை மீறல் மட்டுமே அவர்களின் பிரதான குறியாகவிருந்தது.”
இந்தக் கூற்றுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஏ.சி.எப் படுகொலைகள், திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் படுகொலைகள், 2009இல் அரசு இழைத்த வன்செயல்கள் எல்லாவற்றினையும் பற்றி, ஏன் சிவராமின் படுகொலை பற்றிக் கூட அவர்கள் விரிவாக எழுதி இருக்கிறார்கள்.
ஆம், 2009ஆம் ஆண்டின் பின்னர் அவர்கள் செயற்படவில்லைத்தான். யூ.ரி.எச்.ஆர் இன் பணி, அரசுடன் சாராத, தமிழ் சமூகத்தினைச் சேர்ந்தோரால் தமிழ்ச் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழ்ச் சமூகத்தினுள் எவரும் இல்லாத நிலையில், அந்தப் பணியினைச் செய்வதே. ஆனால் அதனை அவர்கள் செய்யும் போது, அரச சார்பான நிலையில் இருந்து செய்யவில்லை என்பதனை அவர்களது ஆவணங்கள் காட்டுகின்றன. 2009இன் பின்னர் அவர்களுக்கு அந்தத் தேவை இருக்கவில்லை.
அவர்கள் ஒன்றும் அவர்கள் சாகும் வரைக்கும் இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது? இந்தக் கட்டுரையினை எழுதிய ராவணன் அவர்கள் செய்த பணியினைத் தான் செய்ய முன்வரலாமே? ஏன் இரண்டு பேர் மட்டும் தமது வாழ்க்கை முழுவதும் தலைமறைவாக இருக்க வேண்டும்? ஏன் அந்தப் பணியினை இன்னும் இரண்டு பேர் செய்யக்கூடாது.
கொழும்பிலே நினைவு தினம் நடாத்தினால் என்ன பிரச்சினை? மாநாட்டு மண்டபம் என்ன மகிந்த ராஜபக்ஷவின் சொந்தக் கட்டடமா? அல்லது ராஜனி திராணகம தமிழ் சமூகத்துக்கு மட்டுமே உரியவரா? அல்லது மாநாட்டினை யாழ்ப்பாணத்திலே நடாத்துவதற்கு வேண்டிய போக்குவரத்து வசதிகள் எல்லாம் இருக்கின்ற நிலையில் 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இருந்ததா?
I like to put a ‘like’ for Eroki…
UTHR published a retraction of ACF or the 17 Aid Worker Execution backtracking on initial accusation that the Tigers had done it. This dastardly action contributed most towards the planned execution of US schemes on Trincomalee. It was not until the collapse of the IIGEP 2 years later that Muttur related information started to get revised back to reality.
It was too late.
Even now the important Muttur case is seen hijacked by French government or by Amnesty International.
What UTHR got for this dirty work is another ‘prestigious’ breadcrumb from the NGO world
http://www.martinennalsaward.org/index.php?option=com_content&view=article&id=74&Itemid=115&lang=en
On what is wrong about BMICH know that Gotabhaya Rajapaksa’s Rakna Arakshya Lanka and other killer squads are headquartered in the building.
The event itself was seen to be taken over by the likes of Dayan Jayatilleke for burning national agenda such as how to escape in Geneva by presenting non-existent Tamil support.
http://transcurrents.com/tc/2009/09/an_absence_of_actuality_at_raj.html
That’s more of a reason to try out the relatively safe Jaffna University or Jaffna library
கட்டுரை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் எழுதப் பட்டுள்ளது. அதன் நடுநிலை தன்மைக்கு எனது பாராட்டுகள்.
“இன்று ராஜினியின் மரணத்தைத் தோளில் சுமந்துகொண்டு உலக உலா வரும் பிழைப்புவாதிகளை வைத்து ராஜினியை மதிப்பிடும், தவறிழைப்பு, தவறு!”
என்ற கட்டுரையாளரின் கருத்து மிகவும் உண்மையான கருத்து.
Eroki என்ற நபர் முதலில் தனது பெயரை பொது வெளியில் முன்வைக்க ஏன் பயப்படுகிறார்?. ஒளிந்து கொண்டே அடிவருடி விசுவாசத்தை காட்டும் கோணங்கிகளுக்கு 2009 இக்கு பிறகு தேவைகள் எதுவும் இல்லைத்தான்.
“ரஜனி திரணகம ஆரம்பித்த மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவரின் மரணத்தின் பின்னரும் செயற்பட்டது. புலிகளின் மனித உரிமை மீறல் மட்டுமே அவர்களின் பிரதான குறியாகவிருந்தது.”
இந்தக் கூற்றுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என eroki வினவுகிறார் எத்தனை ஆதாரங்கள் எந்த விதத்தில் உங்களுக்கு வேண்டும்? எனச் சொல்லுங்கள் eroki அவர்களே!
தமிழர் விரோத ஸ்ரீலங்கா அரசின் கொள்கை வகுப்பாளர்களோடு கூட்டாகச் சேர்ந்து தமிழர்கள் மீதான இனப் படுகொலைகள், கைதுகள், காணமல் போதல் என்பன புலிகள் அமைப்பின் ராணுவ போர் நடவடிக்கையாலே ஏற்படுகின்றன என்று உலகில் இருக்கும் மனித உரிமை அமைப்புகள், சர்வேதேச மன்னிப்புச் சபை, ராயதந்திரிகள் , இன்னும் பலநாடுகளுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்விளக்கம் கொடுத்து ஸ்ரீலங்கா அரசுக்கு போக்கிரித்தனமான சேவகம் செய்தவர்கள் இவர்கள்.
இவர்களை தமிழ் புத்தியீவிகள்? என்று யார் சொல்ல முடியும்? புத்தியீவிகள் என்போர் யார்? ஒரு சமூகத்தின் இயங்கியலை நேர்த் திசையில் வழிநடத்திச் செல்லும் ஆளுமையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். தாம் சார்ந்த இனத்திற்கு எதிரான இனப் படுகொலைகளை மூடி மறைத்து இலங்கை ராணுவத்திற்கு யாழ் புத்தியீவிகளின் தலைப்பில் நற்சான்றிதழ் கொடுத்தவர்களை எப்படி அறிவு உள்ளோர் எனக் கொள்ள முடியும்.
புத்தியீவிகளிடம் சமுகம் குறித்த குறைந்த பட்ச தீர்க்க தரிசனம் இருந்திருக்கவேண்டும் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டத்தை நோக்கி திரும்பிய போது இயல்பாகவே ஏற்படக்கூடிய முரண்பாடுகளும் ஆயுதம் மூலம் தீர்க்கப்படக் கூடிய சூழலும் மேலெழுந்த போது அதனை எமது சமூகமும், அச் சமுகத்தில் இருந்திருக்கக் கூடிய புத்தியீவிகள் என தம்பட்டம் அடிப்போரும் அமைதியாக பார்த்து இருந்தனரா? ஆம்! இருந்தனர், இது ஏன்? இந்த ஆசிரியர் சங்கத்தில் இருந்து பின்னாளில் குப்பை கொட்டியோர் ஆரம்பத்தில் எங்கு போயினர்? அப்போ இவர்களது அறிவியல் என்ன ஆனது?
தமிழ் சமுகம் தமிழ் ஆயுத அமைப்புகளால் அச்சுறுத்தல் ஆவதுக்கு முன்னர் அச்சமூகத்தின் இருப்பு ஆட்டத்துக்கு உள்ளானதே அப்போது உங்களது பார்வை சரியாக இருந்திருந்தால். இனப் படுகொலை தமிழர் சிறு பான்மைக்கு எதிராக நிகழ்வதுக்கு எதிராக மாணவர்களை திரட்டி போராடியோ அல்லது தங்களது புத்திகூர்மையில் உதித்திருக்கவேண்டிய ஏதாவது உத்திகளையோ பாவித்து இருந்தால். பிரபாகரன் ஒரு கண்ணிவெடியை திருநெல்வேலியில் வைத்து இருக்க மாட்டான்.
நிற்க!
எங்கே இந்த எதிர்வினையாளன் “ரஜனி திரணகம ஆரம்பித்த மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவரின் மரணத்தின் பின்னரும் செயற்பட்டது. புலிகளின் மனித உரிமை மீறல் மட்டுமே அவர்களின் பிரதான குறியாகவிருந்தது.”
என்ற ராவணணின் கூற்றுக்கு ஆதாரம் இருக்கா எனக் கேட்டவரின் பதிலுக்கு பதில் அளிக்காது தப்புகிறார் எனக் கேட்க கூடும்.
ஆதாரத்துக்கு வருகிறேன்.
செம்மணி படுகொலை உட்பட்ட பல கைதுகள் காணமல் போதல் நிகழ்ந்த காலகட்டம் சக சிங்கள மனித உரிமையாளர்களும் களத்தில் இறங்கி போராடினார்கள். அப்போது சந்திரிக்காவின் ஆட்சிக் காலம். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சந்திரிக்க அரசு கொடுத்த அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துக் கொண்டு, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை நியாயப் படுத்தியது.
மனித உரிமையாளர்கள் பங்கு கொண்ட கூட்டம் ஒன்றில், சுனந்த தேசப் பிரியா அவர்கள் தமிழர்கள் திட்டமிடப் பட்ட படுகொலைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை ஆதாரத்தோடு கூறிக் கொண்டிருந்த போது மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்ற ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் (அப்படித்தான் அங்கு அவர்கள் நடந்தார்கள்) சந்திரிக்கா கொடுத்த எச்சி வைன் வடிய வடிய திடீர் எனப் புகுந்து சுனந்தவோடு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு ராயன் கூழ்(ல்) சேட்டைப் பிடிக்க ஸ்ரீதரன் சுனந்த்தவின் கன்னத்தில் மாறி மாறி ஆராய்ந்தனர் (மனித உரிமை ஆராச்சி……. இன்னும் பல சொல்ல முடியாத……. கேவலமான…….). இல்லை அறைந்தனர்.
eroki அவர்களே இவ்வாறு யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மனித உரிமையாளர் சுனந்தவை ஆராய்ந்த கதையும் (சுனந்தவை இவர்கள் தாக்கியதை அதன் உண்மையை இனிஒரு சுனந்தவிடம் கேட்டு வெளியிடுதல் இன்றைய காலத்துக்கு பொருத்தமாக அமையும் என நினைக்கிறேன்) அதன் தேவையும் இருந்ததை மனித உரிமை சம்பந்தமான எத்தினையாம் அத்தியாயத்தில் சேர்க்கலாம்?
இவர்கள் இலங்கை அரசுடன் ஒட்டுறவாக செயல் பட்டத்துக்கு இன்னும் நிறையவே ஆதாரங்கள் உண்டு குறிப்பாக முன்னாள் யனாதிபதி சந்திரிக்கா அரசின் காலத்தில் அவருடனும் அவரின் அரசுடனும் நெருக்கமாகச் செயல் பட்டனர்.
தமிழர் விடுதலை போராட்டத்தை அழிக்கும் ஒப்பந்த கூலிகளாக இச் சங்கம் செயல் பட்டத்துக்கு நிறையவே ஆதாரங்கள் தரப் படும் . ஒப்பந்த கூலிகள் தமது பெயரில் என்னுடன் விவாதிக்க வந்தால் மாத்திரம்.
புலிகளுடன் சமகாலத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு பிரேமதாச புலிகளை பவீனப் படுத்தும் இன்னொரு அங்கமாக யாழ் பல்கலைகழகத்தில் இருந்த புத்தியீவிகளை, புலிகளை பலவீனப் படுத்தி அழிக்கும் கைங்கரியத்துக்கு பயன் படுத்திக் கொண்டிருக்கும் போதே முறிந்த பனை புத்தகம் வெளியிடப் பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மை ராகவன். சுனந்தவை டாக்குத்தர் சிறீ அடித்த சம்பவம் எனக்கும் தெரியும். அது தவிர சிறீ லங்கா டெமோகிரட்டிக் போரம், பாரிஸ் தலித் முன்னணி உட்பட சந்திரிக்காவை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்ற படாதபாடு படுகின்றனர். வன்னியில் சண்டை நடந்துகொண்டிருந்த போது டெமோகிரடிக் போரத்தைச் சேர்ந்தவரும் ரஜினி திரணகம் இன் தங்கையுமான நிர்மலா பிபிசி இல் அது இனப்படுகொலை இல்லை எனப் பேட்டி கொடுத்தார். ராஜபக்ச போன்ற நியூ ரிச் கள் இவர்களுக்கு ரவுடிகள். இவர்களுக்கு கறுவாத்தோட்டக் காரர்கள் ஆட்சிக்கு வந்தால் போதும். இதனால் சந்திரிக்கா வரும்வரை கொக்கு காத்திருக்கிறது. அதுவரை ராஜபக்சவை மைல்டாக விமர்சிபார்கள்.
இதே நீங்கள் சில வருடங்களிற்கு முன்னர் தியாகி – துரோகி என்ற இருமுனைப் பட்ட நிலைப்பாடு தவறென்று எழுதியதாக ஞாபகம்.
புலிகளிற்கு எதிராக யாராவது எழுதினால் அவர்களை அரசின் அடிவருடிகள் என்று சொல்லிவிடுவது மிகவும் இலகு.
புலிகள் தான் எந்தவொரு சுயாதீனமான குரலும் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டுமல்ல எங்கிருந்துமே வெளிவரக்கூடாது என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டார்கள்.
இதன் விளைவாக 1990களில் பல பல்கலைக்கழக மாணவர்களும் புலிகளால் கொல்லப்பட்டனர். இதன் போது பிரேமதாசவின் கைக்கூலிகள் என்று அவர்கள் மீது சேறு பூசப்பட்டதா தெரியவில்லை.
இதில் பிரேமதாச ஈடுபட்டதாகச் சொல்லுவது அளவு மீறிய கற்பனை.
உங்களைப் போல நான் கனடாவில் இல்லை எனவே சொந்தப் பெயரில் எழுத முடியாது. இதற்காக என்னையும் ஒப்பந்த கூலி என்றழைக்க முயல்வீர்களோ தெரியாது.
அப்படி நீங்கள் கருதினால் இந்த விவாதத்தைத் தொடர வேண்டியதில்லை.
கொலைகாரப் புலிகளைவிட இங்கு கருத்துக்கள் எழுதுபவர்கள் மோசமானவர்களாக இருக்கிறார்கள். ராவணன் அண்ணை உங்களீடம் ஒரு கேள்வி. ராஜபக்ச ஒலகின் மிகப்பெரிய கொலையாளையா? புலிகளை அழிக்க ராஜபசவிற்கு வேறு என்ன வ்ழி இருந்தது
If you ask me there were more than one alternatives and MR choose the one that will please him most ie killing more than 40k civilians along with. Looks like that pleases you too.
முதலில் இக்கட்டுரையில் சில தவறுகள் உள்ளன.
1. “எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட தமிழ் அரசியலில் அதிகாரம் செலுத்த முயன்ற பலர் ஆங்கிலிக்க திருச்சபையின் கிறீஸ்தவ வேளாளர்களாகவிருந்தனர்.” தவறு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆங்கிலிக்க திருச்சபையைச் சார்ந்தவர் அல்ல.
2. “ராஜினி திரணகம மனித உரிமைவாதி என்ற அடையாளத்திற்கும் அப்பால் செல்ல முற்பட்ட ஒருவர். தென்னிந்திய ஆங்கிலிகன் திருச்சபையுடன் தொடர்புடைய மேல்தட்டு யாழ்ப்பாணக் கிறிஸ்தவ சமூகத்தின் மத்தியிலிருந்து மனித உரிமைக்கு அப்பால் சமூகத்தைப் பார்க்கும் தகமை படைதவராகவிருந்தார். ” தவறு. தென்னிந்திய ஆங்கிலிகன் திருச்சபை என்ற ஒன்று கிடையாது. ராஜினி மேல் தட்டு சமூகத்தைச் சார்ந்தவர் அல்ல. சாதாரண ஆசிரியர்களின் வழித் தோன்றல் அவர். மத்திய தரத்தின் பிரதிநிதி.
3. “இந்திய பார்ப்பன சமூகத்திற்கு ஈடான வேளாள கிறீஸ்தவர்கள் இலங்கை அரசியலில் ஆளுமை மிக்கவர்கள். சிங்கள கொய்கம ஆங்கிலிக்கன் தலைவர்களான டீ.எஸ்.சேனாநயக்க, டட்லி சேனநாயக்க, சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, ஜூலியட் ரிச்சார் ஜெயவர்தன போன்றோர் இலங்கையின் ஜனாதிபதிகளாகவும் பிரதமர்களாகவுமிருந்தனர்.” அரைகுறை அறிவு என்பது இதைத்தான். வேளாள கிறிஸ்தவர்கள் ஒருபோதும் இந்திய பார்ப்பனர்கள் போல் இருக்கவில்லை. பொதுவாக வேளாளர்கள் ஆங்கிலேய ஆட்சியில் பலம்பெற்றிருந்தனர். கல்வியறிவிற்காக பலர் கிறிஸ்தவத்தைத் தழுவினர். இதில் சேனாநயக்க, பண்டாரநாயக்க, ஜெயவர்தன ஆகிய குடும்பங்களும் அடக்கம். ஆனால் அவர்களது பிள்ளைகள் பௌத்தர்களாகித்தான் அரசியலில் வலம் வந்தார்கள்.
4. “அவ்வேளையில் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளை விமர்சித்த முறிந்த பனை வெளியான ஒருவாரத்திற்கு உள்ளாக ராஜினி திரணகம தெருவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.” தவறு. ராஜினி கொல்லப்பட்ட போது முறிந்த பனை வெளியாகி சில மாதங்கள் ஆகியிருந்தன.
5. “லண்டனில் தீவிர புலி ஆதரவாளராகச் செயற்பட்ட ராஜினி, யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் அனரொமி பிரிவின் தலைவராக தனது 35 வது வயதில் பதவியேற்றுக்கொண்டார்.” -தவறு. ராஜினி புலிகளுடன் முரண்பட்டு அவர்களிடமிருந்து வெளியேறி சில வருடங்களின் பின்னரே அனடமி துறைக்கு வந்தார். அவர் மரணிக்கும் போது தான் அவரிற்கு வயது 35. துறைத்தலைவராகப் பொறுப்பேற்ற போது அல்ல.
6. “ரஜனி திரணகமவின் 20 ஆண்டு நினைவஞ்சலி இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொலையாளிகளில் ஒருவரான ராஜபக்சவின் முற்றத்தில் நடைபெற்றது. ” ஏதோ இதுவரை நினைவஞ்சலியே நடைபெறாதது போல இருக்கிறது இந்த வாசகம். அவரது மரணத்தின் 60வது நாள் யாழ் பல்கலைக் கழகத்தில் இருநாள் நிகழ்வுகள் நடந்தன. இதன் பின்னர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெற்றன. (10ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் கூட கொழும்பில் நடைபெற்றன.)
இக்கட்டுரை பேசாத பலவிடயங்கள் உள்ளன.
ராஜினி வெறுமனே மாணவர் நலனிற்காகப்போராடிய ஒருவர் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களிடையே வேலை செய்து அவர்களின் புனர்வாழ்விற்காக பூரணி இல்லம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். ராஜினியின் மரணத்தின் பின் இவ்வமைப்பு புலிகளால் பொறுப்பேற்கப்பட்டது. 1990 அளவில் இவ்வமைப்பு கலைக்கப்பட்டது.
ராஜினி ஒரு பெண்ணிலை வாதியாக மட்டுமன்றி சர்வதேச அளவில் விடுதலைக்காகப் போராடும் ஒருவராகவும் இருந்தார்.
மனித உரிமைகளிற்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு எந்த ஒரு காலத்திலும் புலிகளிற்கு எதிராக மட்டுமே அறிக்கை வெளியிட்டதில்லை. சகல தரப்புகளின் தவறுகளையும் தவறுகளைக் கண்டும் வாய்மூடி இருக்கும் “பொதுமக்களின்” தவறையும் சுட்டிக்காட்டியே வந்துள்ளது.
சுனந்த – சிறிதரன் மோதல் பற்றி வேறு எங்குமே தகவல் இல்லை. தகவல் தந்தால் உதவியாக இருக்கும்.
கடைசியாக ஒன்று: “யாழ்ப்பாணத்தில் ஆங்கிலிகன் வேளாள சமூகம் தனது அதிகாரத்தை மீளுறுதி செய்வதற்கு ராஜினி திரணகமவின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுவது வழமையே.” எனத்ற கூற்று கபடத்தனமானது. கண்டிக்கப்பட வேண்டியது. ராஜினி அப்படிப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவரோ அல்லது அதனைப் பிரதிநிதித்துவப் படுத்தியவரோ அல்ல. மாறாக மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகளே இன்று மக்களைப் பிளவு படுத்தும் வகையில் இவ்வாறான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. இதற்கு இனியொருவும் துணைபோவது கவலைக்குரியது.
அன்பின் வோட்டருக்கு!
1.செல்வநாயகம் எந்த மதக்காரர்?
2.பெரிய வளவுடன் கூடிய கல்வீடுகளிலிருந்தவர்கள் மேல்தட்டுக்காரர் இல்லையா?
3.ஆட்சியதிகாரத்தை கைவசப்படுத்தி வைத்திருத்தலில் பார்ப்பன-வேளாள கிறிஸ்தவ ஒற்றுமை தெரியவில்லையா?
4.முறிந்த பனைக்காகவா புலிகள் கொன்றனர்?
5.ராஜினி லண்டனில் தீவிர புலி ஆதரவாளராகச் செயற்படவில்லையா?இலண்டனுக்கு விரட்டப்பட்டதாக கதை போகிறதே?
6.ராஜபக்ச முற்றத்தில் நடப்பது விபரீதமானதில்லையா?
7.ராஜினியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் ‘அரசாங்க ஆதரவாளர்களாக’ மட்டும் இருப்பது பெரிதாகத் தெரியவில்லையா?
volter கல்விமான்கள் என்ற தகுதியோடு புலிகளின் பாசிசத்தை காரணம் காட்டி சிங்கள பாசிசத்துக்கு முண்டு கொடுத்தவர்கள், அந்த சிங்கள பாசிசம் மேற்கொண்ட அத்தனை அட்டூளியங்களும் புலிகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளின் விளைவு என ஒரு சுய புத்தி உள்ள கல்விமானால் கூற முடியுமா? மாறாக ஒப்பந்த கூலியால் மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.
எரோகியை நான் ஒப்பந்த கூலி என கூறவில்லை (எனது எதிர்வினையை கவனமாக வாசிக்கவும்).
UTHR இல் இருந்த சிலர் மன்னிக்க முடியாத சமூக குற்றவாளிகள். என்பது எனது நிலைப்பாடு. அவர்கள் மனித உரிமை குறித்து பேசும் தார்மிக உரிமை அற்றவர்கள். இன அழிப்பு இனப் படுகொலை அரசுக்கு, கிட்லரின் வாரிசுகளுக்கு ஆலோசனை கொடுத்தவர்கள், எவ்வாறு இன்னொரு பாசிச அமைப்பையும் விமர்சிக்கக் கூடிய தகுதியை பெறுவார்கள்?. இவர்களிடம் ஏதாவது மனித விழுமியங்கள் துளி கூட இருக்கிறதா? என்பதை சுனந்த தாக்கப்பட்ட அந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வெறிபிடித்த நாய்களாக………… இறந்த ஆனையின் குதைத்தையேனும் புசித்து வாழ்வோம் எனச் சிந்திக்கும் குணாதிசயங்களோடு………. அகச் செருக்கே அறிவியல் சொத்தாக கொண்டியங்கும்……… மானசீகமற்ற மனிதர்கள் இவர்கள்.
புலிப் பாசிசத்தை செய்தவர்கள் மாத்திரம் குற்றவாளிகள் அல்ல அதை ஊக்கிவித்தவர்களும் குற்றவாளிகள்தான். (ராஜினியும், நிர்மலாவும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்த போதே புலிகள் பல போராட்ட முன்னோடிகளை அழித்தொழித்தனர் – அப்போது இவர்களுக்கு பாசிசம் குறித்த அறிவு இல்லைபோலும் – வெறும் கவர்ச்சிக்குரிய வயது போலும்) அதே போல் சிங்கள பாசிசத்தை பூசித்தவர்களும் அதனை நியாயப் படுத்தியவர்களும் குற்றவாளிகளே.
யாழ் பல்கலைகழகம் மாத்திரம் அல்ல சில பேராதனை மாணவர்கள், உயர் வகுப்பு மாணவர்கள் இன்னும் பலர்!…. 1990 களில் புலிகள் மிகப் பெரிய மனித அவலத்தை இரகசியமாகச் செய்து முடித்தார்கள்.
இவர்களை மண்டைதீவில் உள்ள பதுங்கு குழியில் வைத்து படுகொலை செய்துவிட்டார்கள்.
இந்த படுகொலைகளை செய்தோர் இன்றும் குற்ற உணர்வற்றவர்களாக திரிகிறார்கள். 1990 இல் நடந்த புலிகளின் படுகொலை செய்யப்பட்ட நபர்களை (பேரவை / NLFT – எனது நண்பர் ஒருவரும் கொல்லப் பட்டார், காணாமல் போனார் என்பதும் சரியானது )விசாரணை செய்த நபர் ஒருவரை நான் சந்தித்த போது அவர் சொன்னார் அந்நபர்கள் மரண தண்டனை கொடுக்கக் கூடியளவுக்கு குற்றவாளிகள் அல்ல என்று அப்போது ஏன் அவர்களை கொன்றீர்கள் என்று நான் கேட்க அவர் சொன்னார் தான் அதில் சம்பத்தப் படவில்லை, ஆனால் அது இயக்க முடிவு என்று!. ஆக பாசிசம் காரணம் இல்லாமலே தனது வேலையை செய்யும். இவை குறித்து விவாதித்தால் ராவணின் கருத்துப் புள்ளியில் இருந்து நான் விலகிவிடுவேன். எனவே வாசகர்கள் ராவணின் கட்டுரை குறித்து விவாதிக்கவும்.
ராகவன்
UTHR ஐ சிங்கள பாசிசத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரலாம் என்று நான் நம்பவில்லை. ஏனனில் இவர்கள் இந்திய இலங்கை அரசுகள் மற்றும் ஜேவிபி செய்த அட்டூளியங்களையும் பகிரங்கப்படுத்தி விமர்சித்தார்கள். அவர்கள் எழுதிய அறிக்கைகளின் படி மட்டுமே இதைக் கூறுகிறேன்.
புலிகளைப்பொறுத்தவரை மக்களின் மரணத்தை ஒரு பிரச்சார ஆயுதமாகவே பார்த்தார்கள். சிறுகச் சிறுக இது மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவது -அதன் மூலம் பொதுமக்கள் மேல் இராணுவத்தின் தாக்குதல்கள் கொலைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது என அவர்களின் நடவடிக்கை வளர்ந்தது. இதனைப் பிரச்சாரத்திற்கும் ஆட்சேர்ப்பிற்கும் அவர்கள் பயன்படுத்தினர். இதனைக் கண்டிப்பது தவறா?
UTHR ல் இருந்த பலர் பல்வேறு அணுகுமுறைகளைக் கொண்டவர்கள். சிறிதரன் ஈ என் எல் எப் பின்ணணியுள்ளவர். கொஞ்சக் காலம் பேராசிரியர் துரைராஜாவும் அதில் இருந்தார். UTHRற்கு வெளியே அவர்களிது தனிப்பட்ட செயற்பாடுகள் வேறுவேறாக இருந்தன. UTHR ஒன்றும் விடுதலை இயக்கமோ அரசியல் கட்சியோ அல்ல. எனவே அதன் தனிநபர்களை வைத்து அமைப்புகளை எடைபோடக்கூடாது.
ரரஜினி நிர்மலா ஆகியோரின் புலி ஆதரவுச் செயல்கள் சில குறித்து எனக்கும் விமரிசனம் உண்டு. அவற்றில் பலவற்றை அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். (ஆனால் 1982ல் காயமடைந்த போராளிகளைப் பராமரித்தது போன்றவற்றை ஏற்றுக் கொள்கிறேன்.)
அதனால் அவர்களிற்கு மனித உரிமை பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
அன்பின் கோதாரிக்கு (தமிழில் கோதாரி ஒரு எதிர்மறை வார்த்தை. அதன் மீது அன்பு செலுத்த வைத்த முதல் நபர் நீங்கள் தான். வேறு பெயரைத் தெரிந்தெடுத்தால் என்ன?)
1. செல்வநாயகம் கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் ஆங்கிலிக்கன் அல்ல. ஆங்கிலிக்கன் இங்கிலாந்து சார் சபையைச் சார்ந்தது. செல்வநாயகம் தமிழ்நாடு பகுதியுடன் தொடர்புள்ள தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்தவர். அக்காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் மட்டுமே செயற்பட்ட ஒரு பிரிவு இது.
2. கல்வீடுகளிலிருந்தவர்கள் எல்லாரும் மேல்தட்டுக்காரர் இல்லை. செல்வநாயகம் பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்கள் உயர் தட்டினர். இவர்களிடம் பெரிய வளவுடன் கல்வீடு மட்டுமல்ல கொழும்பில் வீடு – வெளிநாடுகளில் ரப்பர் தோட்டங்கள் எனப்பல வசதிகள் இருந்தன. ரராஜினி இவர்களுடன் இல்லை. வாழ்வில் மட்டுமல்ல சிந்தனையிலும்.
3. கொஞ்சம் கூட இல்லை. யாழ் சமூகத்தில் வேளாளரின் ஆதிக்கம் இருந்ததே தவிர குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் அதிலும் இந்திய பார்ப்பன சமூகத்துடன் ஒப்பிடக் கூடிய எந்த அம்சமும் இல்லை. யாழ்ப்பாணப் பொருளாதாரமே அன்று அரச வேலைவாய்ப்பில் தான் தங்கியிருந்தது. இதில் கிறிஸ்தவ ஆதிக்கம் இந்து வேளாளரின் ஆதிக்கத்தை விட எந்த வகையிலும் மேம்பட்டதல்ல.
4. எனக்குத் தெரியாது. புலிகள் கொன்றிருப்பார்கள் என்று சந்தேகப் பட்டாலும் அப்படி நான் இந்தப் பின்னூட்டத்தில் எங்கும் சொல்லவேயில்லை. ஆரம்ப காலங்களில் ஈ பி ஆர் எல் எப் இந்தியப் படைகள் மீது தான் சந்தேகம் இருந்தது. யார் கொன்றிருந்தாலும் அது தவறு தான்.
5. ராஜினி லண்டனில் தீவிர புலி ஆதரவாளராகச் செயற்பட்டார். அவர் இலண்டனுக்கு விரட்டப்படவில்லை. மாறாக கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மருத்துவப்படிப்பை முடித்த சில வருடங்களின் பின்னர் மேற்படிப்பிற்காகவும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் தான் இலண்டன் சென்றார்.
6. முதலில் கொழும்பை “ராஜபக்ச முற்றம்” என்றழைப்பதே தவறு. கொழும்பில் தான் சுனந்த தேசப்பிரிய – “மாமனிதர்” குமார் பொன்னம்பலம் – தாரகி சிவராம் – கலாநிதி விக்கிரமபாகு என்று பலர் அரசியல் நடத்தினார்கள் – நடத்துகிறார்கள். பல காரணங்களால் வடக்கு கிழக்கில் இல்லாத சில உரிமைகள் (இடைவெளிகள்) கொழும்பில் இருக்கும். இன்னமும் இருக்கிறது. இதனைச் சிலர் பயன்படுத்துகின்றனர்.
பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டப வளாகம் என்பது ஒரு கட்டிடம் அல்ல. அங்கு பல (பெரிதும் சிறிதுமாய்) பல கட்டிடங்கள் உள்ளன. அங்கு பல காரியங்கள் நடக்கும். புத்தகக் கண்காட்சி கல்விக் கருத்தரங்கு என்று பல நடக்கும். பூபாலசிங்கம் புத்தகக் கடையும் ஒரு இடம் வைத்திருக்கும். அவர்கள் எல்லாரும் துரேராகிகள் அல்ல.
7. இல்லையே. ராஜன் கூலின் சகோதரர் டக்ளஸிற்கு இன்னமும் தலையிடி கொடுக்கும் ஒருவர். அரசாங்க ஆதரவாளர்களும் ராஜினியைத் தூக்கிப்பிடிக்கலாம். புலிகளை விமர்சிப்பதற்காக அவர்கள் மீது பழியைப் போடுவதற்காக அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள். (யூஎன்பியை விமர்சிப்பதததற்காக 1983 கலவரத்தை ராஜபக்ச தூக்கிப் பிடிப்பது போல) கட்டுரையாளர் சொல்வதுபோல அவர்களை வைத்து ராஜினியை மதிப்பிடுவது தவறு.
சில நாட்களிற்கு முன் ராஜினி நினைவு நாளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்த போடப்பட்ட தடைகள் அதனை மீறி வேறு இடத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தைக் கண்காணிக்க வந்த வேவுப்படைகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால் (நான் அங்கே இருந்தேன். கண்கூடாகக் கண்டேன்) இப்படியோசிக்க மாட்டீர்கள்.
வோட்டர்,
கட்டுரையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட முனைந்த வோட்டரின் ஆர்வத்திற்கு நன்றி. ஆர்வக் கோளாறிலோ அல்லது யாழ்ப்பாண கிறீஸ்தவ வேளாள மேட்டுக்குடிகளின் மேலுள்ள அலாதியான பற்றினாலோ என்னவோ வோட்டர் தனது முதலாவது புள்ளியில்ருந்தே சொதப்ப ஆரம்பித்துவிடுகிறார்.
1. செல்வநாயகம் குறித்து.. கிறீஸ்தவத்தில் ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிறீஸ்தவம் என்ற இரண்டு பிரதான பிரிவிகள் உள்ளன. கிறீஸ்தவர்களை ஆங்கிலிக்கன் ஆரம்பத்தில் பிரதிநிதித்துவம் செய்தது. பின்னர் ஆங்கிலிக்கன் பல பிரிவுகளாகப் பிரிந்தது. தென்னிந்தியத் திருச்சபை ஆங்கிலிக்கன் பிரிவைச் சார்ந்ததே. அதுவே தென்னிந்திய ஆங்கிலிக்கன் எனப் பின்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. உயர்தட்டு வர்க்கம் தொடர்பாக,
சிங்களப் பகுதிகளில் முதலாளித்துவம் ஆரம்ப நிலையில் உருவாகியபோது படித்த வியாபார உயர்வர்க்கம் ஒன்று தோன்றியது. அது பெரும்பாலும் கராவ சாதியினர் மத்தியில் உருவானது, அதற்குப் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன. குறிப்பாக கராவ சாதியினரின் நாடோடி மனோபாவமும் காரணமாக இருந்தது. அதே போல யாழ்ப்பாணத்தில் அந்த முதலாளித்துவ உயர் தட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் குழாமில் ராஜினி சார்ந்த வர்க்கம் பிரதானமானது. லிபரல்களான இவர்கள் புதிய சமூகத்தின் மேல்தட்டைப் பிரதிநிதித்துவப் படுத்த முனைந்து தோல்வி கண்டவர்கள். சிறு நில உடமையாளர்களான யாழ்ப்பாண மேல்தட்டு இந்தியா போன்று ஏக்கர்கணக்கில் நிலத்தை உடமையாகக் கொண்டவர்கள் அல்ல இவர்களும் மேல் தட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தினர். இதனை மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகங்களூடாக புலிகளிலிருந்து பிரித்தானியா வரை எழுதினால் தனிப்பட்ட தாக்குதல் செவதாகச் சொல்லுவீர்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன். சுருக்கமாக, கருநிலையில் உருவான மூலத்னத்தைக் கையகப் படுத்த முனைந்தவர்களில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் கிறீஸ்தவ மேட்டுக்குடிகள். சைவ வேளாளர்கள் நிலப்பிரத்துவ விழுமியங்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த இரண்டு பிரிவினருமே தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ மேலணிகளாக இறுதியில் அதிகாரத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்துகொண்டனர். இவர்காளிடையே நடைமுறைசார்ந்த முரண்பாடுகள் காணப்பட்டன. புலிகள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த அமைப்பு, தரகுமுதலாளித்துவத்தின் தாராளவாதப் போக்குடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் வெளியேற்றப்பட்டவர்களே ராஜினி சார்ந்தவர்கள். வாசகர்களை அதிகம் குழப்ப விரும்பாதபடியால் இவைபற்றி விரிவாக எழுதவில்லை. ஆனால் நீங்கள் பாவம் குழம்பிப்போனீர்கள்.
3. அரைகுறை அறிவு பற்றி:
முதலில் டீ,எஸ்.சேனாநாயக்கவின் மகனே டட்லி சேனாநாயக்க, இவர்கள் இருவரும் கிறீஸ்தவர்கள். ஜே.ஆர்,ஜெயவர்தனவும் கிறீஸ்தவரே. அவரது மகனுக்கு ஞனஸ்னானம் செய்யப்பட்டது. அரசியலுக்காக பௌத்த மதவாதம் பேசினார்கள். சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் அப்படியே. அவரது பேரன் கூட ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டார். மகிந்தவின் மகன்கள் (கத்தோலிகர்கள்) ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டார்கள். ரனில் விக்ரமசிங்கவும் ஆங்கிலிக்கன் கிறீஸ்தவர் என்பது உங்கள் மேலான கவனத்திற்கு உரித்தாகட்டும்.
4. முறிந்தபனை வெளியான காலம்:
அவர் கொல்லப்பட்ட போது நூல் வெளியாகி ஒரு சில மாதங்கள் ஆகிவிட்டன என்ற உங்களின் காலக்கண்டுபிடிப்பு சரியானதே.
5. ஐந்தாவது புள்ளியில், இலங்கையில் மேட்டுக்குடிகள் பற்றிச் சொதப்பியிருந்தாலும் ராஜினி குடும்பம் பற்றி முட்டையில் மயிர்புடுங்கும் அறிவு வைத்திருக்கிறீர்கள் என்பது பாராட்டுதலுக்குரியதே,
6. பண்டாரநாயகக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் நடத்துவதையும் அங்கு நடக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி நிகழ்வையும் ஒப்பிட்டு தவறான தகவலைத் தர முயற்சிக்கிறீர்கள். பண்டாரநாயக்க சவதேச மாநாட்டு மண்டபத்தை சாமானியர்கள் வாடகைக்கு அமர்த்திகொள்வது என்பது இயலாத காரியம். யுத்தம் முடிந்து இனவெறி உச்சத்திலிருந்த 2009 காலப்பகுதியில் சிங்கள ஊடகவியலாளர்கள் தேடித்தேடிக் கொல்லப்பட்டப்பட்ட நேரத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரே அரசியல் நினைவு நிகழ்வு இது மட்டும் தான். இது அப்போது புலிகளை அரசு அழித்தது சரியானதே என்பதற்கான குறியீடாக நடத்தப்பட்டது. வன்னியில் கொல்லப்பட்ட அப்பாவிகளை நினைவு கூருப்வர்கள் தேடித்தேடி அழிக்கப்பட்ட காலத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.
– ராஜினியைக் கொன்றது புலிகள் தான். புலிகளோ அல்லது ராஜினிக்குப் பின்னையவர்களோ அதனை மறுக்கவில்லை. நேரடிச் சாட்சிகள் உள்ளன.
-ராஜன் கூலின் சகோதர் அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய உள் முரண்பாடுகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பதவியைப் பெற முனைந்தவர். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தன்னை வி,சி ஆக நியமிக்குமாறு பசிலோடு நேரே பேசியவர். இதற்கான ஆதரம் கேட்டீர்களானால் பல் உண்மைகளை எழுதி கோழிச்சண்டை நடத்தவேண்டிவரும். நிற்க, யாழ்ப்பணத்தில் நடக்கும் கல்யாண வீட்டிலும் உளவுப் பிரிவு நடமாடுவது வழமை தான். அதற்காக அரசாங்கம் நடத்திய கொலைகளை இனப்படுகொலை என்று சொல்வதையே மறுக்கும் ஆதவாளர்கள் நடத்திய நினைவுக் கூட்டத்தில் உளவுத்துறை நடமாடியது மகிழ்ச்சியினாலோ என்னவோ?
நீங்க இரண்டுபேருமே முட்டையுல அதைதான் பிடுங்குகிறமாதிரி இருக்கு 🙁
வீட்டு எருமைகளை கொம்பு சீவி காட்டுக்கு அனுப்பினோம் பின்னாளில் அது வீட்டுக்கு பயன் தரும் என்று. ஆனால் காட்டு எருமைகளாக மாறிய அவை வீட்டுக்கும் நாட்டுக்கும் தீங்கு செய்ய புறப் பட்டன. தறி கெட்டு ஓடிய காட்டு எருமைகளை கண்டிப்பதாக கூறிய சில அறிவுள்ள? வீட்டு எருமைகள் காட்டு எருமையின் வாலில் தீப்பந்தத்தை கொளுத்திவிட்டு இவைதான் தறி கெட்ட காட்டு எருமைகள்… காட்டு எருமைகள்….. எனக் கூச்சலிட்டனர். விளைவு அவை முன்னரை விட முரட்டுத்தனமாக கூச்சலிட்டவரையும் மோதிவிட்டது. தம்மை புத்தி கூர்மை உள்ளவர்கள் எனக் கூறி தம்பட்டம் அடித்த அந்த வீட்டு எருமைகள் உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும் தறிகெட்டு போன காட்டு எருமைகளை சரியான வழியில் வழி நடத்தி மீளவும் வீட்டு எருமைகளாக மாற்றி இருக்கவேண்டும். அதுதான் அறிவியலுக்கும் அதனால் வரும் ஆளுமைக்கும் அழகு. இந்த அறிவியல் பந்தா காட்டிய வீட்டு எருமைகளை பின்னர் தான் தெரிந்தது ஓடுகாலி எருமைகள் என்று.
மாதன முத்தாக்கள் எனச் சிங்களவர்களை கேலி செய்வோர் (தமிழர்கள்) அந்த பேருக்குரிய அர்த்தத்தை இந்த அறிவியல் ஓடுகாலிகளுக்கு இனி கொடுத்து விடுங்கள்.
நீங்கள் வீட்டு எருமையா காட்டு எருமையா அல்லது எருமைகள் தலையைக் கொடுக்கட்டும் நான் லாபம் பார்ப்போம் என்று புறப்பட்டவரா தெரியாது. ஆனால் புலிகள் ராஜினியைக் கொன்றதற்கு ராஜினி மீதே பழிபோடும் உங்கள் முயற்சி அருமை.
தறி கெட்டு ஓடிய காட்டு எருமைகள் நடுவே என்ன செய்யலாம். ஒன்றில் கனடாவிற்கு ஓடி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு விசைப்பலகையில் யானையின் குதம் புசிப்பது பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்தலாம். அல்லது டக்ளஸ் போல புலி எதிர்ப்பைக் காட்டி அரசுடன் சேர்ந்து போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கலாம். அல்லது வாயைத் திறப்பது சாப்பிட மட்டும் தான் என்று அடங்கிப் போகலாம். அல்லது டெலோவினரை புலிகள் உயிருடன் கொழுத்திய போது சோடா கொடுத்து காட்டு எருமைக்குக் கொம்பு சீவி முள்ளிவாய்க்கால் வரை வழிநடத்தி விடலாம். இதெல்லாம் சரியல்ல என்றால் ராஜினி செய்தது போல நடுநிலையாக நின்று இலங்கை அரசு இந்திய அரசு மற்றைய இயக்கங்கள் ஆகியவற்றை விமர்சிப்பதுடன் புலிகளின் தவறையும் சுட்டிக் காட்டி அவர்களையும் சரியான வழிக்கு வருமாறு வலியுறுத்தலாம். (இதனை ராஜினி லண்டனிலேயே செய்தார்.) அதற்குத் தயாராகப் புலிகள் இல்லாத நிலையில் அவர்கள் நடைமுறைப்படுத்திய பாசிச அரசியலை மக்கள் நடுவில் அம்பலப்படுத்தலாம். அத்துடன் பயந்து வாய்மூடி இருக்காமல் உரிமையுடன் கேள்வி கேட்க மக்களைத் தூண்டலாம்..இதைத்தான் முறிந்த பனையில் ராஜினி செய்தார்.
அன்று அவருடன் நீங்களும் இன்னும் அநேகரும் சேர்ந்திருந்தால் அந்த அழுத்தம் காரணமாக புலிகள் திருந்தா விட்டாலும் அடக்கியாவது வாசித்திருப்பார்கள். ஆனால் அவர்களின் குரல் தனித்த குரலாக இருந்ததால் புலிகளால் அதனைச் சுலபமாக அழிக்க முடிந்தது. எனினும் உரிமை கோர முடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
முறிந்த பனை தான் தமிழ்ச்சமூகத்திலிருந்து நடுநிலையான சமூக நோக்குடன் விடுதலை அமைப்புகளை விமர்சித்து வந்த காத்திரமான முதலாவது புத்தகம். இது விடுதலை அமைப்புகளின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை மட்டுமல்ல அதன் பின்னணியிலிருந்த பாசிச அரசியலையும் தீர்க்கதரிசன அடிப்படையில் வெளிப்படுத்தியது. (தீப்பொறியும் அவ்வாறான முயற்சியாகவே புதியதோர் உலகம் நூலை வெளியிட்டது. ஆனால் கடைசியில் வெறும் அனுபவங்களின் கோர்வையாக அது மாறிப் போனது.)
இன்னுமொன்று: மனித உரிமைகளிற்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் என்றுமே பந்தா காட்டியவர்கள் அல்ல. தமது புத்திக்கூர்மையை தாமே மெச்சிக் கொண்டவர்களுமல்ல. மாறாக தமது கலாநிதிப் பட்டங்களிற்கு ஏற்ப வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் வாய்ப்பை உதறி விட்டு எங்கள் மததியில் பணி செய்தவர்கள். அதுவும் வெறுமனே விரிவுரையாளர் அல்லது கலாநிதி என்று தம்பட்டம் அடிக்காமல் ஆசிரியர் என்று போதனாசிரியர்களையும் இணைத்துச் செயற்பட்டவர்கள். மாணவர்களுடன் சரிக்குச் சமனாக சமூகப் பிரச்சினைகள் பற்றி விவாதித்தவர்கள். (சபா நாவலனைக் கேட்டால் அவர் தனது பல்கலைக்கழக அனுபவங்களைச் சொல்லக்கூடும்.) அத்துடன் ராஜினி இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் புனர் வாழ்விற்காக பூரணி இல்லத்தை ஆரம்பிதது நடத்துவது அன்னையர் முன்னணி என்பது போன்ற வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது என அதிகமாகவே செயற்பட்டார். இத்தனைக்கும் நடுவில் அனடமி துறைத்தலைவராகவும் அத்துறையின் ஒரே ஒரு விரிவுரையாளராகவும் செயற்பட்டார்.
மற்றவர்களிற்கு அத்தனை சீக்கிரமாக மாதனை முத்தா பட்டம் வழங்குவதில் எனக்கு இஷ்டமில்லை. சரியான நபரைக் கண்டுபிடிக்கும் வரை நீங்களே வைத்துக் கொள்ளங்கள்.
இப்போது சொல்லுங்கள் முறிந்த பனை சமூகத்தில் ஏற்படுத்திய கருத்தியல் ஆளுமை என்ன? ( புலிகள் இருந்த போதும் அவர்கள் அழிந்த பின்னரும்) … 0…00000….. தான். நாலு மேல்தட்டு வர்க்கத்தினர் சமூகத்தில் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருந்த அநீதிகளை பேசிய விதம் பாராட்டுக்குரியது. ஆனால் அது விவேகமான முறையில் சமூகத்தையோ அச் சமூகத்தின் பிரிக்கமுடியாத ஆயுத அமைப்புகளின் யனநாயக பண்புகளிலோ மாற்றத்தை உண்டாக்கவில்லை. அவர்கள் மாற்றத்தை உண்டாக்கக் கூடிய விதத்தில் முறிந்த பனையை எழுதவும் இல்லை.
கொலையை கொலை எனத்தானே எழுதமுடியும் எனப் பலர் கேட்கலாம். அதை சொல்லவும் எழுதவும் வெறும் சாமானியர்கள் போதும். வெறும் சாமானியர்கள் எழுதினாலும் விளைவு வில்லங்கமும் வெறுமையும்தான்.
மொத்தத்தில் முறிந்த பனை சமூக ஆளுமைக்கு வில்லங்கமே ஒழிய வினைத்திறன் அல்ல.
இராவணன்
எனது பின்னூட்டத்தை வாசித்து அதற்குப் பதிலளித்தமைக்கு நன்றி.
1. ஆங்கிலிக்கன் மற்றும் தென்னிந்திய திருச்சபைகள் வேறு வேறானவை தான். கிறிஸ்தவம் ரோமன் கத்தோலிக்கம் – லூதரன் (ஆங்கிலிக்கன் அல்ல) என பெரும் இரு பிரிவுகளாக உடைந்தது (அது நடந்தது 1500 களில் ஜேர்மனியில்.) இதன் பின்னர் இங்கிலாந்தில் இருந்து ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவிலிருந்து பிரிந்ததே ஆங்கிலிக்கன் பிரிவு. பின்னர் இதிலிருந்து பிரிந்ததே மெதடிஸ்ட். இதேவேளை அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்த குழுவினர் 1800 களில் அமெரிக்க இல்ங்கை மிஷன் என்ற பெயருடன் தென்னிந்தியா மற்றும் யாழ்ப்பாணத்தில் மதப்பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் தென்னிந்தியாவில் அமெரிக்க மிஷன் பிரிவு ரோமன் கத்தோலிக்கம் அல்லாத சகல பாரம்பரிய மதப்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தென்னிந்திய திருச்சபையாக உருவெடுத்தது. எனினும் இலங்கைப்பிரிவுகள் சுயாதீனமாக இயங்கின.
இந்தியாவில் தோள்றிய தென்னிந்திய திருச்சபை இலங்கைக்கும் பரவியது. இந்தியாவில் இத்திருச்சபை ஏனைய பல திருச்சபைகளை விழுங்கினாலும் இலங்கையில் அது நடைபெறவில்லை. அமெரிக்க இலங்கை மிஷன் மாத்திரமே இணைந்தது (இது பின்னர் பிரிந்தது வேறு கதை) . ஆங்கிலிக்கன் மற்றும் மெதடிஸ்ட் ஆகிய திருச்சபைகள் தனித்தே இயங்கின. செல்வநாயகம் கொழும்பில் ஆசிரியராகக் கடைமையாற்றிய காலத்தில் ஆங்கிலிக்கன் திருச்சபைக்குப் போயிருக்கிறாரே தவிர (கொழும்பில் அப்போது தென்னிந்திய திருச்சபை இயங்கவில்லை என்பதால்) அவர் (தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த) தென்னிந்திய திருச்சபை உறுப்பினர் மட்டுமே.
தென்னிந்திய திருச்சபை – ஆங்கிலிக்கன் – மெதடிஸ்ட் – பெந்தே கொஸ்து – மக்கள் சபை (முன்னர் தேவ சபை) – சுயாதீன சபைகள் -ஆகியவை “ரோமன் கத்தோலிக்கம் அல்லாதது” பிரிவுகளில் அடங்கும். சிலர் இதனை புரட்டஸ்தாந்து பிரிவு என்றும் அழைக்கிறார்கள். (ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்த்துது உருவானதால்) இப்பகுப்பு ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவு வகுத்த பிரிப்பே அன்றி இவர்கள் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் இல்லை.
2. உங்கள் கட்டுரையில் நீங்கள் கராவ சாதியைப்பற்றி எழுதவேயில்லை. நீங்கள் எழுதியது கொய்கம (இன்னொரு ஒலிபெயர்ப்பு கொவிகம) பற்றி. இவர்கள் தான் யாழ் வேளாளர்களிற்கு சமமான அந்தஸ்தில் வாழ்ந்தவர்கள். இப்போது குழப்புகிறீர்களா குழம்பிப் போய் இருக்கிறீர்களா?
யாழ் கிறிஸ்தவ உயர்குழாம் அரச உயர் பதவிகளுடனும் (ஆசிரியர் பதவி உயர்பதவி என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. இவர்கள் குறிவைத்தது கணக்காய்வாளர் நாயகம் (ஆடிட்டர் ஜெனரல்) பொலிஸ்மா அதிபர் இராணுவத் தளபதி என்ற உயர் பதவிகளை) கொழும்பை மையமாகக் கொண்ட வாழ்க்கைக்கும். அதனையே யாழ் இந்து உயர்குழாமும் தேடியது. இரு தரப்பினரும் வன்னி வெளிநாடுகளில் நிலபுலன்களைக் கொண்டிருந்தனர்.
ராஜினி அவரது சகோதரி நிர்மலா போன்றவர்கள் யாழ் மத்திய தர வர்க்கத்தில் இருந்து உருவான மாறுபட்ட சிந்தனைப் போக்குகளைப் பிரதிநிதிப்படுத்தியவர்கள். இவர்களிடையே மாக்சியத்தின் செல்வாக்கு இருந்தது. புலிகள் நிர்மலா முரண்பாட்டின் பின்னணி இக்கட்டுரைக்கு அவசியமல்ல.
உங்கள் கட்டுரையில் நீங்கள் ராஜினி பற்றி இப்படிக் குறிப்பிட்டிருந்தீர்கள்: “இவ்வாறான பின்னணியிலிருந்து வந்த ராஜனி திரணகம அதிகாரவர்க்கப் பெறுமானங்களுக்கு அப்பால், மனித உரிமை வாதி என்பதற்கு அப்பால் சமூகத்தை நேசித்தவராவிருந்தார். அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியலை முன்வைக்க முனைந்தவராகக் காணப்பட்டார். ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் செய்துகொள்ளவில்லை.” திடீரென்று இப்போது “புலிகள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த அமைப்பு, தரகுமுதலாளித்துவத்தின் தாராளவாதப் போக்குடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் வெளியேற்றப்பட்டவர்களே ராஜினி சார்ந்தவர்கள்.” என்று உளறுகிறீர்கள். ராஜினி வெளியேறியது (வெளியேற்றப்பட்டது அல்ல) அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியலை முன்வைக்க முனைந்தே. நிலப்பிரவுத்துவ தரகு முததலாளித்துவ முரண்பாட்டினால் இல்லை.
3. நீங்கள் சொன்ன அரசியல் உயர் குழாத்தினர் சேனநாயக்க பண்டாரநாயக்க ஜெயவர்தன ஆகியோரின் மூதாதையர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவத்தில் சேர்ந்து கொண்டது உண்மை தான். ஆனால் அநாகரிக தர்மபாலவிற்குப் பின்னால் அரசியல் செய்யப்போன அனைவரும் பௌத்தத்திற்குத் திரும்பினர். ஏனனில் கிறிஸ்தவ உயர்குழாம் ஆட்சி செய்ய முடியாது. இவர்கள் அனைவரும் சிங்கள பெளத்த மேட்டுக்குடி சிந்தனையையே வாழ்விலும் அரசியலிலும் பின்பற்றினார்கள். ஜே ஆர் மரண சாசனம் கூட இதனையே பிரதிபலித்தது. மகிந்த தன் அரசியலின் ஆரம்பத்தில் கிராம விழாவில் அழகியாகத் தெரிவாகிய ஒரு கத்தோலிக்கரை (ஆங்கிலிக்கன் அல்ல) மணம் செய்து கொண்டாரேயன்றி கத்தோலிக்கர் அல்ல.
4. தவறை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி
5. எனக்குத் தெரிவது ஒன்று தான். நான் (மட்டுமல்ல சபா நாவலன் மற்றும் பலர்) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் எங்கள் மத்தியில் எங்களில் ஒருவராக வாழ்ந்து எங்களிற்காகக் குரல் கொடுத்து எங்களோடு சேர்ந்து போராடி எங்களில் ஒருவராய் எங்களிற்காய் மரணித்த ராஜினியைப் பற்றி எனக்குள்ள ” முட்டையில் மயிர்புடுங்கும் அறிவு” அளவை விட உங்களிற்கு சிங்கள மேட்டுக்குடி மீது ஜெயவர்தனவின் பேரன் வரை அறிவு இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு எனக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகப் படும் “யாழ்ப்பாண கிறீஸ்தவ வேளாள மேட்டுக்குடிகளின் மேலுள்ள அலாதியான பற்றைப் “ போல உங்களிற்கும் சிங்கள கொவிகம மீது அலாதியான பற்று இருப்பதாக நான் சந்தேகப்படப் போவதில்லை. அறியும் ஆர்வம் இருப்பது நல்லது தான். யாழ்ப்பாண கிறீஸ்தவ வேளாள மேட்டுக்குடிகளின் மீது காதல் கொண்ட மனநோயாளி அல்ல. மேட்டுக் குடியையும் மத்திய தர வர்க்கத்தையும் வேறு பிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே எனது கோரிக்கை.
6. முதலாவது பண்டாரநாயகக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகம் வேறு அங்குள்ள மண்டபம் வேறு. இந்த வளாகத்தில் எத்தனையோ மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் ஒன்றில் தான் 20 வருட நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. பிரதான மண்டபத்திற்குப் பணம் கொடுத்து மாளாது. ஆனால் சிறிய மண்டபங்களை அதிக பணமின்றிப் பெற்றுக் கொள்ள முடியும். 2006- 2009ல் கொழும்பில் நிலவிய சூழல் வித்தியாசமானது. முதலில் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்காக புலிகளை விமர்சிக்கும் எவரையும் மகிந்த அரசு அனுமதித்தது. ராஜன் கூலின் சகோதரரிற்கு பல்கலைக் கழக உபவேந்தர் பதவி வழங்கப்பட்டது இதன் ஒரு பகுதி. (இதனூடாக அவரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியேற்றியது. ஏனனில் இவர் அங்கிருந்து கொண்டு பல சிங்கள பெளத்த முன்னெடுப்புகளைத் தடுத்துக் கொண்டிருருந்தார்.) இது போல இப்போது “என்னடா நாயே” என்று கூடக் கவனிக்கப் படாத ஆனந்த சங்கரியின் ஒவ்வொரு கடிதமும் அப்போது முக்கியத்துவப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்தது. இனப்பிரச்சினக்குத் தீர்வு என்று கூட தீவிரமாக உச்சரிக்கப்பட்டது. ஏன்? 2009 யுத்த முடிவில் சிங்கள மக்களிடமிருந்து “யுத்தத்தால் அகதிகளாகியுள்ள தமிழ் சகோதரர்களிற்கான” உணவு உடை முதலியவற்றை அரசாங்கமே முன்னின்று சேகரித்தது. இதற்கென பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அலுவலகம் கூட இயங்கியது. இதே நிலை தான் 2009 கடைசி வரை தொடர்ந்தது. இந்த சூழலில் தான் கொழும்பில் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி ராஜினி நினைவு தினமும் நடத்தப்பட்டது. அந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் பின் தான் நிலைமை மாறியது.
• புலிகள் அழிக்கப்பட்டது சரியானது என்பதின் குறியீடாக ராஜினி நினைவு தினமும் நடத்தப்பட்டது என்பதை ஆராயுமுன் புலிகள் அழிக்கப்பட்டது சரியானது தானா என்பதற்குப் பதில் சொல்லுங்கள். தமிழ் மக்களின் போராட்டம் ஆயுத முனையில் கடத்தப்பட்டு அழிவை நோக்கிப்போகையில் அரசியல் தலைமையற்றுப் போய் மக்கள் போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டு மட்டுமல்ல வெறும் கருவிகளாகப் பயன்பட்டுக் கொண்டிருந்த போது அரசு அவர்களை அழிப்பதை வேதனையோடு பார்பதைவிட வேறு என்ன வழி இருந்நதது? புலிகளின் அழிவின் பின்னராவது மக்கள் மயப்பட்ட அரசியல் தலைமை ஏற்படட்டும் என்று அதற்காக உழைப்பதை விட என்ன மார்க்கம் இருந்தது?
• ராஜினியைக் கொன்றது புலிகள் தான். என்றே நானும் நினைக்கிறேன். ஆனால் புலிகள் இதனை உரிமை கோரவேயில்லை. மாறாக 1989 -1990 காலப்பகுதியில் இதனை மறுத்தே வந்திருக்கிறார்கள். “ராஜினி திராணகமவிகொலைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை” என்று துண்டுப் பிரசுரம் கூட விநியோகித்தார்கள்.
• ராஜன் கூலின் சகோதர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பதவியைப் பெற முனைந்தவர். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தன்னை வி,சி ஆக நியமிக்குமாறு அரசில் இருந்தவர்களுடன் (பசிலோடு தானா என்பது தெரியாது. மகிந்தவுடன் பேசியதாகவும் இருக்கலாம்) நேரே பேசியவர். இதெல்லாம் உண்மை தான். இன்னும் சொல்லப்போனால் அவர் விசியாக நியமிக்கவே பட்டார். அப்போது புலிகள் தான் அவரது செயற்பாடுகளைத் தடை செய்தார்கள். இரண்டாம் முறை அவர் நியமிக்கப் படுவதற்காக போட்டியிட்ட போது டக்ளஸால் தோற்கடிக்கப் பட்டார். அதாவது 2009 கடைசி வரை இருந்த புலிகளை விமர்சிப்பவர்களிற்கு இருந்த ஜனநாயக சூழல் மூடப்பட்டு விட்டது என்பதற்காக சமிக்ஞை யாகவும் அதுஅமைந்தது.
• அரசு யாழ் யாழ்ப்பாணத்தில் நடாத்திய நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சித்தது; சில பேச்சாளர்களைப் பயமுறுத்தியது; பல்கலைக் கழகத்திலும் யாழ் மாநகர சபை நூலகத்திலும் நடை பெற இருந்த நிகழ்ச்சிகளிற்கு முதலில் அனுமதி தரப்பட்டு கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டது; நடைபெற இருந்த ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது; கடைசியில் வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் உளவுப்படை நடமாடியது – இது எல்லாம் மகிழ்ச்சியினாலா? நீங்கள் கூட உங்கள் கட்டுரையில் “எப்படிப்பட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் நடத்தவிடமாட்டோம் என்ற அரசியலைக் கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாகத் தெரிய வருகிறது.” என்று எழுதிவிட்டு இப்போது தடம் மாறுவது ஏன்? எப்படிப்பட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் நடத்தவிடமாட்டோம் என்ற அரசியலைக் கொண்டிருக்கும் (டக்ளஸ் – மகிந்த) நிர்வாகம் பல்கலைக் கழகத்தையும் யாழ் மாநகர சபையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தனக்குத் தலையாட்டுபவர்களை மட்டுமே அனுமதிக்க விரும்புகிறது. அதன் மூலம் மக்களைத் தொடர்ந்தும் ஒடுக்க விரும்புகிறது. ராஜினி மரணிக்கும் வரை ஒடுக்குமுறையாளர்களுடன் சமரசம் செய்ய மறுத்தார் என்பதாலும் ராஜினியின் நினைவுநாளை நினைவு கூருபவர்களும் ஒடுக்குமுறையாளர்களுடன் சமரசம் செய்து கொள்ள மறுப்பதால் அவர்களது நிகழ்ச்சிகள் தடுக்கப்படுகின்றன.
அட ஒன்றுமே தொியாதவா்களாக இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லைப்போல, இப்படி குழம்பிப்போவது மட்டுமல்ல மற்றவா்களையும் குழப்பிவிடுகிறாா்களே.
இளைஞா்கள் இயக்கங்களை தொடங்கி ஆயுதத்தை மட்டுமே நம்பியதன் காரணம் அங்கு நம்பிக்கை தரக்கூடியதாக வேறு எதுவும் இருக்கவில்லை அவ்வளவுதான்.
வோட்டர்,
ராஜினி திரணகம நினைவு நாளின் பிரச்சாரப் பீரங்கியும் அவற்றை ஒழுங்குபடுத்துபவர்களில் ஒருவரும் சிறீ ரெலோவின் முக்கிய உறுப்பினர். புலம்பெயர் நாட்டில் நடந்த விவாதம் ஒன்றில் இலங்கை இராணுவத்துடன் தாம் வேலை செய்கிறோம் என ஒத்துக்கொண்டார். நினைவு தினக் கூட்டத்தில் அவரின் பங்களிப்பு என்ன என்பதை ஆதரத்துடன் தர முடியும். உங்கள் கேள்விகளுக்கு நான் தந்த பதிலை நீங்கள் இன்னும் ஆதாரப் படுத்தியுள்ளீர்கள். மேலும் ஜே.ஆர், உட்பட பலர் அரசியலுக்காக மட்டுமே சிங்கள பௌத்தம் பேசினர் என்பதை நான் சொன்ன விடையங்களைத் தவிர்த்து மீண்டும் முனையவற்றையே ஒப்புவிக்கிறீர்கள்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை சிறு நிலப்பிரபுக்களதும், படித்தவேளாளர்களது ஆதிக்கமே இருந்தது என்பதையும் அதன் அரசியல் பின்னணியையும் விலாவாரியாகச் சொல்லியும்ம் உங்களுக்கு விளங்கவில்லை அல்லது விளங்காதது போல நடிக்கிறீர்கள்.
மேல்தட்டு வர்க்கம் என்பது மூலதனதை உடமையாக வைத்துக்கொண்டவர்கள் என்பது மட்டும் எமது நாடுகளின் குறிப்பான சூழலுக்குப் பொருந்தாது. மூலதனத்தை உடமையாக்குவதற்கான இயங்கு வெளியைக் கொண்டவர்களே மேல்தட்டினராகக் காணப்படுகின்றனர். தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கம் கூட ராஜினியை விட ஏழ்மையானவர். அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தமுயலும் வர்க்கப்பிரிவு யார் என்பதுவே இங்கு பிரச்சனை. சாதாரண மத்தியதர வர்க்கம் பல்கலைக்கழக நுளைவிற்காகப் போராடிக்கொண்டிருந்த போது பல்கலைக் வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களிற்குச் செல்வதற்கும் அரசுகளுடனும் அதிகார வர்க்கத்துடனும் இணைந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்ள இந்த வர்க்கத்திற்கு இயலுமானதாக இருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச மண்பத்தில் கூட்டம் நடத்திக் கண்ணீர்வடிப்பதற்கு அரசின் அனுமதியில்லாமல் முடியாது. இப்படி ஒரு அஞ்சலி எமக்குத் தேவையில்லை. அது ராஜினியை அவமானப்படுத்துவது. ராஜினியை எனக்குத் தெரியாது. அவர் கொல்லப்படும் போது எனக்குப் 16 வயதாக இருந்தாலும் என்னுடைய சுற்றத்தவர்களில் ஆளுமையால் பல விடியங்களைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
அதனால் தான் ராஜினி மேல்தட்டு வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் அவர் அந்த மனோபாவத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றேன். சுற்றிச் சுற்றி வந்து கடைசியில் ஒரு கூட்டத்தை நியாயப்படுத்த மட்டுமே நீங்கள் எழுதுவதாகத் தெரிகிறது.
இராவணன்
இந்திய பார்ப்பன சமூகத்திற்கு ஈடான வேளாள கிறீஸ்தவர்கள் இலங்கை அரசியலில் ஆளுமை மிக்கவர்கள். என்ற உங்கள்ட வாதம் தவறு. இலங்கையில் முன்னாள் சிங்கள கிறிஸ்வர்களே பௌத்தத்திற்கு மதம்மாறியே அரசியலை வளர்க்க வேண்டியிருந்தது.
ராஜினி திராணகமவை வைத்துப் சிறீ ரெலோ மட்டுமல்ல மேலும் பலர் வயிறு வளர்க்கலாம். அது ராஜினியின் தவறல்ல. திரிபுவாதிகள் லெனின் நினைவுநாள் நடத்துவதால் லெனின் தவறானவராகி விடுவதில்லை. எனினும் ஆதாரத்துடன் தரமுடியும் என்று சொல்வதை விடுத்து ஆதாரங்களை வெளியிடுவது நல்லது. அது போல உங்கள் வாழ்க்கையையும் வெளியிட்டால் நல்லது. நீங்கள் யார் என்பதும் தெரியவரும்.
அமிர்தலிங்கம் வாழ்வால் (ஆரம்பத்தில்) மத்திய தரத்தையும் சிந்தனையால் இந்து வேளாள உயர்குளாத்தையும் பின்பற்றினார். ராஜினி மேல்தட்டை வாழ்விலோ சிந்தனையிலோ பிரதிநிதித்துவப் படுத்தியவரல்ல. வாழ்வால் மத்தியதரத்தைச் சார்ந்த அவர் அடித்தட்டு மக்களை தனது சிந்தனையில் பிரதிபலித்தார். இலங்கைப் பல்கலைக் கழகத்திலேயே எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். பின்னர் உயர்கல்விக்காக புலைமைப் பரிசில் மூலமே இங்கிலாந்து சென்றார். காசு மெத்திய நிலையில் அல்ல. உயர்குழாம் நேரே வெளிநாட்டிற்கு ஓடியது. எவ்வளவு சொல்லியும் விளங்காதது போல நடிப்பது நீங்கள் தான்.
பண்டாரநாயக்க மண்டப வளாகத்தில் சிறிய மண்டபத்தில் கூட்டம் நடத்துவது முடியும். பெரிய பின்புலம் தேவையில்லை; அத்துடன் 2009ல் இருந்த சூழலை எவ்வாறு பயன்படுத்தி இக்கூட்டம் நடத்தப்பட்டது என்பதையும் விளக்கியுள்ளேன். திரும்பத்திரும்ப முயலுக்கு மூன்று கால் என்ற நிற்பது நீங்கள் தான். ஒருவேளை அப்போது கொழும்பு இருந்த நிலை அங்கே இருந்தவர்களிற்குத் தான் புரியுமோ?
நீங்கள் கூறும் மேல்தட்டு “ஆங்கிலிக்கன்” சிங்கள சமூகத்தலைவர்கள் (சேனநாயக்க -பண்டாரநாயக்க – ஜெயவார்தன) எந்த வகையில் ஆங்கிலிக்கன் சிந்தனையை வெளிப்படுத்தினார்கள் என்று கூறினால் நல்லது. இவர்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையே வெளிப்படுத்தினார்கள் என்பதற்கு என்னாலும் ஆதாரங்கள் தர முடியும்.
முதலில் சாதிவாதம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை அன்னியர்களாக்கப் முயற்சிக்கப்பட்டது. (அரசு சார்புக் குழுக்கள் இன்னமும் இந்தக் குட்டையைக்குழப்பி மீன்பிடிக்கப் பார்க்கின்றன.)
தமிழ் தூயவாதம் முஸ்லீம் மக்களை அந்நியர்கள் அகதிகளாக்கியது.
இனவாதச் செயல்கள் சிங்கள முற்போக்கு சக்திகளை எட்டி நிற்கவும் சக்தியற்றவர்களாக்கவும் துணைபோனது.
பாசிசம் மற்றும் அதிகார வெறி மூலம் மாற்று இயக்கங்களை நாறடிக்கப்பட்டன.
இப்போது கிறிஸ்தவர்களையும் அகற்றிவிடாதீர்கள். கடைசியில் ஏனென்று கேட்க யாருமே இருக்க மாட்டார்கள்.
எல்லா துன்பங்களையும் தாயகத்தில் பட்டவன் நான், புலம் பெயர்ந்து சில வருடங்களே (கூட்டு இனப் படுகொலைக்கு பின்னரே) ஆகின்றது.
மனித உரிமைகளிற்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் என்றுமே பந்தா காட்டியவர்கள் அல்ல என்கிறார் வோட்டர். எனது கூடிய விமர்சனம் முழுவதும் ராஜன் கூல், ஸ்ரீதரன், தயா சோமசுந்தரம் பற்றியே! இவர்களுக்கு நீங்கள் தொடர்ந்தும் வக்காலத்து வாங்கினீர்கள் என்றால் அவர்களின் குணாதிசியங்களை நடவடிக்கைளை நீங்களும் ஆமொதிபதாகவே இருக்கும்.
முறிந்த பனையில் 308 பேர் கையொப்பம் இட்டிருக்கலாம் ஆனால் அப்புத்தகத்தில் ஆளுமை செலுத்தியோர் மிகச் சிலரே. ராஜினி படுகொலை செய்யப்பட்ட எதிர்ப்பு நிகழ்வில் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை நானும் செய்துள்ளேன்.
நீங்கள் சொல்கிறீர்கள் இவர்களில் எவரும் பந்தா காட்டாத பரமசிவன்கள் எண்டு. இருக்கட்டுமே. அவர்கள் காட்டுவதையும் காட்டாததையும் மக்கள் அறிவார்கள்.
நான் பத்து தடவை எழுதிவிட்டேன் அதிர்ந்து பேசாத சுனந்த தனது சகாக்களுடன் இலங்கை அரசின் மனித உரிமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்த போது எந்த வித பண்பாடும் அற்று அந்த விவாதத்தை குழப்பி ஒரு மனித உரிமை வாதியின் கன்னத்தில் ஸ்ரீதரன் அறைந்தார். இதனை நான் கூறியபோது ஒற்றைச் சொல்லில் இச்சம்பவத்தை நான் அறியவில்லை என வோட்டர் கூறிவிட்டார். ஆக ஜனநாயகம் பேச்சுரிமை என்பதெல்லாம் என்ன? இயக்கங்கள் செய்தால் சொட்டை புத்திஜீவிகள்? செய்தால் …… பொட்டை ……???????????
நல்லது தாயகத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எப்போது போனீர்கள் என்று சொன்னால் வசதியாக இருக்கும்.
யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்தில் ராஜன் கூல், ஸ்ரீதரன், தயா சோமசுந்தரம் (முக்கியமாக முதலிருவரும். தயா சோமசுந்தரம் பொதுவாக மௌனமாகவே திரியும் ஒருவர்.) எப்படி மாணவர்களுடன் பழகினார்கள் என்று விசாரித்துப் பார்த்தால் தெரியும்.
சுனந்த விடயத்தில் நடந்தது என்ன என்று விலாவரியாக (இடம் திகதிகளுடன்) சொன்னால் விசாரிக்க வசதியாக இருக்கும். நீங்கள் சொன்னபடி பார்த்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதே.
ஸ்ரீதரன் மற்றும், ராஜன் கூல், இரத்தின ஜீவன் கூல் பதவிக்கும் பந்தாவுக்கும் ஆசைப்பட்டவர்கள். இதில் இரத்தின ஜீவன் கூலின் கூத்துகள் கேலிக்குரியவை, இவர் தனது DSc பட்டத்தை வைத்துக் கொண்டு முழு உலகையும் தனது அந்த பட்டத்தால் அளக்கலாம் என அகச் செருக்கு கொண்டவர் (இவர் முறிந்த பனையில் எழுதவில்லை எழுதியவரின் சகோதரர்). இவர்களின் அளப்ப்பரைகளை அளவீடு செய்ய முடியாது. சமூகப் பெறுமானம் அற்றவர்கள் அவ்வளவுதான்.
இரத்தின ஜீவன் கூல் விசி பதவிக்கு ஆசைப்பட்டதை அறிவேன். அதற்காக அவர் வெளியிட்ட சில அறிக்கைகளும் நடவடிக்கைகளும் கண்டிக்கப்படவேண்டியவையே. ஆனால் அவர் யாழ் இந்து மேலாதிக்க வாதம் டக்ளஸ் கும்பலின் அராஜகம் பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடந்த சிங்கள மேலாதிக்க நடவடிக்கைகள் புலிகளின் அராஜகம் என்பனவற்றிற்கு எதிராகப் போராடியவர். இதனால் தான் அவர் அனைவராலும் ஓரங்கட்டப்பட்டார்.
கோபாலசிங்கம் சிறிதரன் எப்படி யாழ் “ஆங்கிலிக்கன்” மேல்தட்டு வாதியானார் என்பதையும் வெளிப்படுத்தினால் நல்லது.
ராஜினியின் மேல் தட்டு வர்க்க யாழ்.கச்சேரியின் குத்தகை முகாமைத்துவவாதிகள் என்கிற போர்வையைக் கழற்றி,சிந்தனையில் புரட்சிவாதி எனும் லேபிள் ஒட்டுவதில்,யாராலும் வெற்றி காணமுடியாது.அக்கா அமெரிக்காவிற்கும்,தங்கை இலண்டனுக்கும் போனது,மேல்தட்டு வர்க்கதினரதில்லையென்றால், சாதரண வாக்காளர்கள் விளங்கிக் கொள்வார்களா? ”உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்.” என்கிற பொய்ச்சாட்சியங்களையோ,”என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப் படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்”. என்கிற விட்டில்பூச்சி தீர்க்கதரிசனத்தையோ வாசிக்கிற போது,இன்னொரு முகம்மதுவை யாரோ உருவாக்க முயலுகிறார்கள் என்பதே வெளிப்படையாகிறது. ”எங்களோடு இருந்தவர்” என்பதற்காக இந்த மேல்தட்டு வர்க்கத்தின் பிரகிருதியொன்றைப் புனிதப்படுத்த,அதன் உதட்டுக்குச் சிவப்புச்சாயம் அடிப்பவர்கள்,அதைவிடுத்து,அந்தப் பணையக் கைதிகளின் கால்நில இருப்பிற்கு வழி செய்வார்களா?
பிற்குறிப்பு:”புரோக்கின் பல்மைரா” ஆங்கில வாசகர்களுக்காய் எழுதப்பட்டது;ஆதாரங்கள்,ஆங்கில ”சற்றர்டே றிவியு”விலிருந்து தொகுக்கப்பட்டன.அதாவது ஆருக்கோ,எதற்காகவோ எழுதப்பட்டது
”நோ மோர் ரியேர்ஸ் சிஸ்டர்” என்கிற யூதத்தயாரிப்பான ஆவணப் படத்தில்,”புரோக்கின் பல்மைரா” வின் பங்காளர்கள் ஆருமில்லை.
பிற்குறிப்பு:”புரோக்கின் பல்மைரா” ஆங்கில வாசகர்களுக்காய் எழுதப் பட்டது ;ஆதாரங்கள்,ஆங்கில ”சற்றர்டே றிவியு”விலிருந்து தொகுக்கப்பட்டன.
“அதாவது ஆருக்கோ,எதற்காகவோ எழுதப்பட்டது”
இல்லை நண்பரே ஈழத்தின் மேல்தட்டு வர்க்கம் ஆங்கிலம் தாய் மொழியாக இருந்ததனால் போலும் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதினர். அநீதிகளை எம்மக்கள் மத்தியில் அம்பலப் படுத்த வேண்டும் என்று எழுதியவர்கள் எம்மக்களின் மொழி என்னவென்று UTHR அவர்களுக்கு தெரியவில்லை. அதுதான் அவர்கள் தமது மொழியான ஆங்கிலத்தில் எழுதினார்கள். அப்பத்தானே அவர்களை போல மேல்தட்டு சகாக்களான, ராதிகாகுமாரசாமி, லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் இன்னும் பல மனித உரிமை வாதிகளுக்கும் விளங்கும். சும்மா போங்கள் நாங்கள் பின்னாளில் தமிழிலும் தமிழ் ஸ்பீகிங் பீப்பில்ஸ் இக்கு எண்டு ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் வெளியிட்டனாங்கள்.
அப்படிப் பார்த்தால் இதுவரை வெளிநாடுகளிற்கு அகதிகளாக ஓடிய அனைவரும் அதிமேல்தட்டாக மாறிவிடும். ராஜினியாவது புலமைப்பரிசில் பெற்றுப் போனார். இலட்சக்கணக்கில் ஏஜென்சிக்குக் கொடுத்தவர்கள் யார்? மத்திய தர வர்க்கமா?
அப்படிப் பார்த்தால் ஏஜே கனகரத்தினவும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுதினார். வீட்டில் ஆங்கிலம் தான் பேசினார். முறிந்த பனையில் இந்திய இராணுவமும் அதனுடன்போராளிக் குழுக்களும் அம்பலப்படுத்தப் பட்டிருந்தன. அதனை ஆங்கிலத்தில் தான் செய்ய வேண்டியிருந்தது. தமிழ் மக்கள் மத்தியில் தான் அவர்கள் ஏற்கனவே அம்மணமாகி இருந்தார்களே. பின்னர் இது மொழி புலிகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் அம்பலப்படுத்தவும் தான்.
சரி போகட்டும்.
கட்டுரையில் “மக்கள் சார்ந்த அரசியல் என்பது மனித உரிமை, மனிதாபிமானம் போன்ற ஒற்றைப் பரிமாண தலையங்கங்களுக்குள் மட்டும் குறுக்கப்படுவதில்லை.
ராஜினி திரணகம மனித உரிமைவாதி என்ற அடையாளத்திற்கும் அப்பால் செல்ல முற்பட்ட ஒருவர். ” என்றும் “இவ்வாறான பின்னணியிலிருந்து வந்த ராஜனி திரணகம அதிகாரவர்க்கப் பெறுமானங்களுக்கு அப்பால், மனித உரிமை வாதி என்பதற்கு அப்பால் சமூகத்தை அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியலை முன்வைக்க முனைந்தவராகக் காணப்பட்டார். ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் செய்துகொள்ளவில்லை.” என்றும் சொல்லியிருக்க இதைப்படித்துவிட்டு ராகவன் “கட்டுரை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் எழுதப் பட்டுள்ளது. அதன் நடுநிலை தன்மைக்கு எனது பாராட்டுகள்.
“இன்று ராஜினியின் மரணத்தைத் தோளில் சுமந்துகொண்டு உலக உலா வரும் பிழைப்புவாதிகளை வைத்து ராஜினியை மதிப்பிடும், தவறிழைப்பு, தவறு!”
என்ற கட்டுரையாளரின் கருத்து மிகவும் உண்மையான கருத்து.” என்றெல்லாம் கனடா ராகவன் என்று தன்னைச் சொல்லிக்கொள்பவர் எழுதிவிட்டு இப்போது எழுதுவதின் நேர்மையை அவரே ரசித்துக் கொள்ளட்டும்.
கனடா போகுமளவிற்குக் காசு இருந்த கனடா ராகவன் வாழ்வால் மேல் தட்டா?. ஒடுக்கப்பட்ட கூலிவிவசாயிகளிடையே வேலைசெய்து பின்பு நாட்டை விட்டுத் தப்பிப் போயாக வேண்டிய கட்டத்தில் (இருந்திருந்தால் சுடப்பட்டிருப்பார்) தப்பி ஓடி பிரான்ஸ் பிறகு லண்டன் என்று திரிந்த சபா நாவலன் வாழ்வால் மேல் தட்டா? தமது காணிகளை விற்றும் கடன் எடுத்தும் வெளிநாடுகளிற்கு ஓடிய லட்சக்கணக்கான எங்கள் வாலிபர்கள் வாழ்வால் மேல் தட்டா?
ராஜினி பிறந்து வளர்ந்து பெரும்பட்டப் படிப்பு பெறும் வரையில்,அந்த சமூகத்தில் எந்த அடக்குமுறையும் இருக்கவில்லையா?அப்போதெல்லாம் வர்க்க சிந்தனை வழிவிடவில்லையெனும் புரிதல் யாருக்கெனும் உண்டா?
உயர்கல்விக்குப் போனவிடத்தில்,ஒரு தீவிரவாத சிங்கள இடதுசாரியைத் தேர்ந்தெடுப்பதுவும், உயர்பதவி கிடைத்தவிடத்தில் ஒரு தீவிர தமிழ்த்தேசியவாதத்தைக் கைப்பிடிப்பதுவும் மாபெரும் கொள்கைமுரணென யாருக்கும் படவில்லையா?
பிற்குறிப்பு:ஒரு முறை ஈரானில் புரட்சி ஏற்படுத்துவது என்ற போர்வையில் மேற்கத்தைய ஊடகங்கள் சென்றிருந்தன.அப்போது நேடா(Neda Agha-Soltan) எனும் அழகிய பெண் குண்டுபட்டு,அவர்களின் காமிராவை நோக்கிய கண்களோடு இறந்து போனாள்.
Don’t know what you are tring to say. Rajani like people until they left Jaffna for university studies had very little expoture to
open minded political or social thinking. One has to be fair to Rajani and the like. I may not agree with her but I do admire her courage to embrace the kind of politics she got involved in and the marriage to a rural Singhala youth from the lower rungs in their class with an arts degree .
பிழைகள் ஆயுத தாங்கிய அமைப்புகளில் மாத்திரம் இருந்தன என்பதில்லை. மாறாக பல்வேறு சமூக கட்டமைப்புகளிலும் இருந்தன. கண்ணை மூடிக்கொண்டு ராணுவ அமைப்புகளின் தவறுகளை மாத்திரம் விமர்சனம் செய்வதும். கண்ணை மூடிக்கொண்டு UTHR இன் சரியான (தகவல்கள்) பக்கங்களை ஏற்றுக் கொள்வதும் ஆரோக்கியமானது அல்ல அனைத்தையும் விமர்சனக் கண்ணோடு நோக்குவோம். வோட்டர் குறிப்பிட்ட விடயங்கள் பலவற்றுக்கு பின்னர் பல விளக்கங்களுடன் கட்டுரையாக பதில் தருகிறேன்.
உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் நடந்த புரட்ச்சியிலும் சமூக மாற்றங்களிலும் பலகலை கழகங்கள் மகாத்தான பணியை செய்துள்ளன, சமூகப் புரட்ச்சியின் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளன.
யாழ், கிழக்கு பல்கலை கழகங்களின் முற்போக்கான பனி என்ன?
கிழக்கு பல்கலைகழகம் சில குறைந்த பட்ச்ச பணியாவது செய்துள்ளன. யாழ் பல்கலைகழகத்தின் (“யாழ் புத்தி சீவிகள் “) குறைந்த பட்ச பனி என்ன?????????????? வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.
எனக்குப்பதில் கட்டுரை எழுதும் முன் உங்கள் வரலாற்றை வெளிப்படுத்துங்கள்.