பிரதி அமைச்சரும் முன்னை நாள் புலிகளின் முக்கிய தளபதியுமான கருணா என்று அழைக்கப்பட்ட வினாயகமூர்த்தி முரளீதரனின் இணைப்புச் செயலாளரைக் கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் என்றைழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் தொடர்புடைய மூவரை இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களுள் பிரதீப் மாஸ்டர் என்பவரும் ஒருவர். இவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராவார்.
நேற்றைய தினம் பிள்ளையான் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இன்று பிள்ளையானின் வீடு முன்னறிவிப்புகள் எதுவுமின்றி சுற்றி வளைக்க்பபட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.