கிழக்கு மாகாணத்தைப் போன்று வட மாகாண மக்களும் சுதந்திரமாக வாழும் காலம் விரைவில் ஏற்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் காண்பதே தனது ஒரே எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.பொலன்னறுவை கல்கிரியாகம தேசிய நாமால் உயன பிரதேசத்தில் இதனை பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
450 ஏக்கர் கொண்ட இந்த மலைப்பிரதேசத்தை பார்வையிட்ட பிள்ளையான், வனவாசி ராஹ_ல தேரரிடம் தங்க முலம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றையும் கையளித்துள்ளார்.
தப்பில்லையே!
தமிழ்மக்கள் உலகம் பூராவும் குடிபெயர்ந்து எல்லாகண்டங்களிலும் எல்லா இன
மக்களுடனும் வாழப் பழகிவிட்டார்கள். அதாவது தமிழ்மக்கள் பொறுமைசாலிகள்
எதையும் அனுசதிரித்து நடப்பவர்கள். சிலவிஷமிகள் பொறுப்பில்லாமல் நடத்துகிற காரியங்களுக்காக சிங்களமக்களை பகைக்க முடியுமா? இது என்ன நியாயம்.
மற்றவரின் மதத்தைமதித்து நடப்பதும் பிறிதொருகாலச்சாரத்தை மதித்து நடப்பதும்
அதுவல்லவா மனிதநேயம்.மானிடன் கூடிவாழ்ழும் பண்புகள் அனைத்தையும் வரறே;போம்
கூடிவாழ்வதற்குகெதிரான அனைத்து பண்புகள் உறவுகள் அனைத்தையும் பகைகொள்வோம்.
மதவெறியையும் இனவெறியையும் எதிர்த்து போராடுவோம். ஐக்கியஇலங்கைகான ஒளிவீச்சை காண்பதற்காக காத்திருப்போம்