காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசினால் உருவாக்கப்பட்ட பிள்ளையான் என்ற கிழக்கு முதலமைசர் தொடர்ந்து அரசியலில் நிலைக்கும் நோக்கோடு அரச எதிர்ப்பு அரசியல் நாடகத்தை ஆரம்பித்துள்ளார். பல குற்றச் செயல்களின் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தப்பட்ட பிள்ளையான், கடந்தவாரம் சுவிஸ் நாட்ட்டில் செங்களான் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சென்ற ஆதரவாளர்களோடு ஒன்று கூடல் ஒன்றை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முற்போக்கு முகமூடியணிந்த ஒருவரே இந்த ஒன்றுகூடலின் ஒழுங்கமைப்பாளராகச் செயற்பட்டார் என்ற செய்தியும் ஆதரங்களுடன் கிடைக்கபெற்றுள்ளது.
கருணா எனது நண்பன்! ஆனால் அரசியலில் எதிரி! சுவிட்சர்லாந்தில் பிள்ளையான் முழக்கம்.
ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் எனபடுகின்ற சந்திரகாந்தன் சுவிட்சர்லாந்தில் பல மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். அவ்வாறான சந்திப்பு ஒன்றில் பொதுமகன் ஒருவரால் : கருணாவுடனான தங்கள் உறவு எவ்வாறு உள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிள்ளையான் : ‘ கருணா தனிப்பட்ட வாழ்வில் எனது நண்பன், அனால் அரசியலில் அந்த நிலைமை கிடையாது! அவர் புலிகளியக்கத்திலிருந்து விலகி வந்தபோது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததை நானும் அறிந்திருந்தேன் நீங்களும் அறிந்திருப்பீர்கள், நாங்கள் அவற்றை அப்போது நம்பாமல் நிராகரித்தோம், அனால் தற்போது அக்குற்றச்சாட்டுக்கள் யாவற்றையும் அவரே நிரூபித்து காண்பித்துள்ளார்’ என பதிலளித்துள்ளதுடன் கருணா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.
Written By ilankainet at Monday, J
Who this rapist Pillaiyaan ? They are all the same.
நம்பிக்கைத் துரோகி கருணா , தனக்கு தலைவர் என்று இருந்தவரை ஏற்க மறுத்து கொள்கைவழி மாறி தானும் ஒரு தலைவராம் என்று பிள்ளையானையும் கூட்டிக்கொண்டு வந்தார். இன்று அதே கருணாவை உதறிதள்ளிவிட்டு இந்தப் பிள்ளையான் தான் தான் கிழக்குக்குத் தலைவன் என்று கருணா தலைமையை எற்க மறுத்து புது அவதாரம் எடுக்கிறார். இனி இதே பிள்ளையானின் தலைமையை உதறிவிட்டு, இன்னுமொரு தலைமை பிள்ளையானிடம் இருந்த்து உருவாகும். போங்கடா..நீங்களும் உங்கள் பித்தல் ஆட்டங்களும்.துரோகி கருணா உனக்கு இப்பொழுது புரியுமே, ஓர் அமைப்புக்கு தலைமை ஏற்று கொள்கைவழிநடந்து போராட்டத்தைநடத்துவது அப்படி ஒன்றும் சுலபம் அல்ல என்று.மது மாது போதையில் இருக்கும் உனக்கு இனி எப்போதுமே விளங்கப் போவதில்லை.நீ தலைவரை விட்டுப் பிரிந்ததிற்கு ஒரு வேளை அன்று கிழக்கு மக்கள் சில பேர் சந்தோசப்பட்டாலும், அதே மக்கள் இன்று உன் சுய ரூபம் தெரிந்து உன் மேல் காறித்துப்புவார்கள்:
கிழக்கு மாகாண சபையில் காணி , பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்கின்ற தீர்மானம், மாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் முடிந்த நிலையிலேயே அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கின்றது என கூட்டமைப்பின் பா.உ அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றுஇடம்பெற்ற பட்டிப்பளை மட்/வால்கட்டு தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பா.உ அரியநேத்திரன் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில், வடகிழக்கு இணைந்த ஒரு தாயகத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுய நிர்ணய உரிமையுடனும் வாழக்கூடிய காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய ஒரு தீர்வையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இப்போதுதான் கிழக்கு மாகாண சபையில் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்கின்ற தீர்மானத்தை கிழக்கு மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கின்றனர்.
கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்று வருடங்கள் முடிந்து அடுத்த தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்ற வேளையில்தான் அவர்களுக்கு இந்த ஞானம் பிறந்திருக்கின்றது.