14.11.2008.
அத்துருகிரியவில் காரொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.இவற்றுள் ஒருவரது சடலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினருடையது என தெரிவிக்கப்படுகிறது.
இச் சடலம் பிள்ளையானின் செயலாளர் ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோபனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கரடியனாறு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் வரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புலிகளின் நாமத்தை வைத்து அரசியல் வேலை செய்யும் வரை
இப்படியான சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.
புலிபாணி அரசியலைவிட்டு கிழக்குமக்கள் தமது சுயாதீன அரசியலை தேடிக்கொள்வது
கிழக்குமக்களின் கடமையாகும்.