இதோ எனது பூமி
என் கால்களுக்கடியிலிருந்து
நழுவுகிறது
அரசியல் ஆணிகளாலும்
பிளவுமனக் கடப்பாறைகளாளும்
ஓங்கி அடித்தவண்ணம்
ஆக்கிரமிக்கும்
ஆடங்காத உயிரினங்கள் போல
ஆறாதநடனம் புரிகின்றனர்
எனது உலகு
பல கூறுகளாக்கப்படுகிறது
வெடிப்புகளின் நுனியிலிருந்து
கோசங்கள் புறப்பட்டு
புலரும் திசையெங்கும்
பீங்கான் கோப்பைகள் போல
சந்தமாய் உடைகிறது பூமி
இவர்கள்
தம்மை தேவர் என்றும்
அவர்களை அசுரர் என்றும்
அறிவிக்கின்றனர்
அவர்கள்
இவர்களை அரக்கர் எனவும்
தம்மை வானவர் எனவும்
அறிக்கையிடுகின்றனர்
அப்படியே
வெடிப்புகளிலும்
விரியும் பாதளங்களிலும்
வீழ்ந்து தொலைகின்றனர்
பிளவுபடும் பூமியில்
மனிதன் என்ற ஒன்றை
யாருக்கும் நினைவில்லை…
இப்போது எனது பூமி
என் கால்களுக்கடியிலிருந்து
நழுவுகிறது
வெடிப்புகளின் விரிசல்களில்
நான்
முகவரியற்றுத் தொலைந்து போகுமுன்
நாளை
எம் பேரன் வருவான்
மனிதம் என்ற சொல்லை
எங்காவது புதைக்கவேண்டும்
CONFLICTS are not created by Rebels or their leaders. On the contrary conflicts create rebels and rebellion.In ‘Ceylon’ (as ‘Sri Lanka’ is a name given by the then governments illegally against the safeguards enshrined in the First Independent Constitution Sec.29 (2) C and without the participation of Tamils in the so called Constitution Assembly). All Democratic agitations and negotiations by Tamils failed due to the intrasigencies of the majoritarian Sinhala governments, be it that of UNP or SLFP. So the inevitable result was the birth of Tamil Rebels of various colurs and hues finally ending up with LTTE as the sole rebellion Group which fact was accepted by the negotioators in the Cease fire agreement (CFA) with the Government signed by Government of Sri Lanka and LTTE leader. It is naive to expect democratic treatment of ‘disent’/ers’from a militaristic group. Long before LTTE or any other Tamil group dealt a single shot, the GOSL has started ‘massacre of Thamils’. Starting from the Massacre of Thamils in Igniyagala in 1956. All other massacres of Thamils are well documented now. It is sad that the so called neutralists, intellectuals and ‘socialists'(NIS) among Thamils seldom criticise the GOSL massacres and tortures and extra-judicial killings. In fact a lawfully and or democratically (?) elected government has the double responsibilty to safeguard its citizens due to its statutory obligations. The so called NIS are very keen to condemn rebel groups for Human Rights violations and do not do so in the case of the Government’s violations. And what did the so called Socialists win over for the Tamils using their democratic and highly intellectual talents? Sweet nothing. Did not people like V.Ponnampalam who contested against S>J>V> Chelvanayagam and his Vaddukoddai Resolution became disillusioned with the SINHALA Communists and became a Tamil Nationalist at the end. Did not Shanmugathasan state towards his tail end thatLTTE is much better than the JVP and the Pseudo Socialists as they area t least loyal to what they believed is correct. On another count, most of the Tamil diaspora intelectuals or who pose as intellectuals have come over to the west even before the massaacre of Tamils in 1977, leave alone 1983 pogrom against Tamils. So they have not felt or seen the undemocratic, dictatorial, tortures and massacres of Tamils or the effects of the draconialn Emergency Regulations or PTA. It is no wonder then that some of them even publicly declare that they are proud to call themselves as ‘Sri Lankans’. O>K> now LTTE is no more, what has those who were criticising LTTE for fighting a bloody war violently done or doing to gain the rights of the Tamils or to stop all human rights violation against the innocent people including the Sinhala journalists? They don’t even criticise those acts.
கவிஞரே தாங்கள் கனவுலகில் வாழ்கின்றீர்கள். யதார்த்தத்தில் மனிதம் இல்லை. உள்ளவரையும் அழித்துவிடுவதில் நாமோ அவர்களோ ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. யாரில் பிழையென சிங்களவர்களுடன் அல்ல எமக்குள்ளேயே நாகரிகமாக இருந்து பேசத் தெரியாதவர்கள் நாம். தவறைத் தவறென்று கூறவே சங்கடப்படுபவர்கள் அறிவுபூர்வமாகச் சிந்திப்பதற்குப் பதிலாக உணர்வுபூர்வமாகச் சிந்திப்பவர்கள். பேரன் வரட்டும் . . . அவனையாவது சுயமாகச் சிந்திக்க நாம் விடுவோமா?
கவிதையை எழுதி முடித்துவிட்டு ஓரே மூச்சில் இனியொருவிற்கு அனுப்பி விட்டு மறந்தே போனேன். அதற்புப் பின் மீண்டும் எடுத்து வசித்தபின் சில மாற்றங்கள் செய்யலாம் என்று தோன்றியது. இந்தக் கவிதையின் versjon 2. இங்கே காணலாம்.
http://www.enkavitai.com/index.php?option=com_content&view=article&id=137:2011-02-18-14-57-34&catid=3:miljo&Itemid=5
பிளவுகள்
இதோ எனது பூமி
என் கால்களுக்கடியிலிருந்து
நழுவுகிறது
அரசியல் ஆணிகளாலும்
பிளவுமனக் கடப்பாறைகளாளும்
ஓங்கி அடித்தவண்ணம்
ஆக்கிரமிக்கும்
அடங்காத உயிரினங்கள் போல
ஆறாதநடனம் புரிகின்றனர்
எனது உலகு
பல கூறுகளாக்கப்படுகிறது
வெடிப்புகளின் நுனியிலிருந்து
கோசங்கள் புறப்பட்டு
புலரும் திசையெங்கும்
பீங்கான் கோப்பைகள் போல
சத்தமாய் உடைகிறது பூமி
இவர்கள்
தம்மை தேவர் என்றும்
அவர்களை அசுரர் என்றும்
அறிவிக்கின்றனர்
அவர்கள்
இவர்களை அரக்கர் எனவும்
தம்மை வானவர் எனவும்
அறிக்கையிடுகின்றனர்
பிளவுபடும் பூமியில்
மனிதன் என்ற ஒன்று
இங்கு யாருக்கும் நினைவில்லை…
வெடிப்பின் நுனிவரை
அனுமதியின்றி நுழைகிறது
மௌனம்.
அகன்ற விரிசல்களுள்
எனது உடல் ஈர்க்கப்படுகிறது.
நாளை
என் பேரன் வருவான்
மனிதம் என்பதை
தேடி எடுப்பான்!
ஆடை கலைய
நிர்வாணமாய்த் தொலைந்தேன்
என சொல்லும் வரலாற்றிலிருந்து…
நட்புடன்
கவிதா
அன்பான கவிஞரே. உங்கள் கவிதையிலிருந்து ஈழப்போராட்டத்தின் போது எமது மக்களிற்கு ஏற்பட்ட இன்னல்களை நம் கண்முன்னே நிறுதிதுகிறீர்கள்….நன்றி