வழமையாக இராணுவத் தலையீடுகள் ஊடாக அழிக்கப்படும் சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்டதும் அவர்களிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கிறோம் என்ற தலையங்கத்தில் புதிய வடிவில் கொள்ளை ஆரம்பித்துவிடும். இலங்கையில் இரத்தமின்றி சர்வாதிகாரி ராஜபக்சவை ஏகாதிபத்தியங்கள் நீக்கியுள்ளன. ராஜபக்ச குடும்பத்தினால் சூறையாடப்பட்ட சொத்துக்கள் வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டதும் நாட்டைவிட்டு வெளியேறிய பசில் அமெரிக்காவில் தனது ஆடம்பர மாளிகையில் குடியேறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவிடமிருந்த விலையுயர்ந்த கார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இலங்கை அரசு இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிலியந்தல முன்னை நாள் வங்கி ஊழியர் ஒருவரின் வீட்டிலிருந்து லம்போகினி கார் இன்று மீட்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவருக்குச் சொந்தமான போதிலும் போலியான ஆவணங்களே காணப்படுவதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் சர்வாதிகாரிகளின் அழிவின் பின்னர் அவர்களின் ஊழலை மக்களுக்குக் காட்டிக்கொண்டே மற்றொரு ஊழல் புற்று நோய்போல வளர்ந்தது என்பதை இலங்கையின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மறன்ந்துவிடக்கூடாது.