இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து போயுள்ள நிலையில் இலங்கை அரச பசிசத்தை எதிப்பவர்களைப் புலிகள் அல்லது புலிகளின் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்த முயற்சிக்கிறது. இலங்கை அரசாங்கமும் புலம் பெயர் நாடுகளில் அரச ஆதரவுக் குழுக்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் தீவிரவாத இயக்கங்களுடன் புலிகள் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிலிப்பைன்ஸின் பிரதி வெளிவிவகார அமைச்சர் எர்லின்டா பெசிலியோ இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார் என பிரதியமைச்சர் நியோமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Professor G. L. Peiris is right in that they will come from all over the world to learn how to put a full stop to illegal and violent activities in any part of the world.