10.11.2008.
கோல்டன் ரேன்ச் என்ற பிலிப்பைன்ஸ் கம்பனிக்கு அரசாங்கம் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
மிகப் பெறுமதியான மரங்கள் உள்ள அடர்ந்த காட்டையும் நெல்விளையும் பூமியையும் விற்பனை செய்வதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விற்பனை விவகாரத்தில் இரண்டு பிரதான அமைச்சர்களும் அங்கம் வகிப்பதாகத் தெரிய வருகிறது.
26500 ஏக்கர் நிலத்தை தனியார் கம்பனிகளுக்கு வழங்க இலங்கை அரசு ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. 19600 ஏக்கர் ஐ.சி.ஐக்கும் 7500 ஏக்கர் அக்ரோ லங்கா பிரைடே நிறுவனத்திற்கும் விற்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலத்தின் விலை மிக குறைந்தளவிலும் தரகுப் பணம் மிகப்பெரியளவிலும் இந்த விற்பனையில் பெறப்படுவதாக அறியக் கிடைக்கிறது.
http://www.globaltamilnews.net/