ஜே.வி.பி இலிருந்து பிரிந்து சென்று மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய குழுவின் பிரதானியான குமார் குணரட்ணத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாங்கொக் செல்வதற்காக விமான நிலையத்திற்குச் சென்றிருந்தபோதே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.