ஒரே இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட தயராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழஹப்பெரும இக்கருத்தினை வெளியிட்டார்.
தமிழ் தரப்பிலிருந்து கடந்த 30இ 40 வருடங்களில் கிடைக்கபெற்ற சிறந்த சமிக்ஞை இதுவென தெரிவித்துள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழஹப்பெரும அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்;ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
“பிரிவினையைக் கைவிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “?
தாங்கள் என்றுமே பிரிவினை கோரவில்லை என்று தானே போன வருடம் தொட்டுச் சம்பந்தன் சொல்லி வருகிறார்!
மகிந்தர் எதையோ பிழையாக விளங்கிக் கொண்டிருக்க வேண்டும்.