சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை பிரிந்துபோவதற்கு மட்டுமேயான கோரிக்கையல்ல. இன்றைய உலக நியதியின்படி, சுயநிர்ணய உரிமை இரு வகைப்படும். ஒன்று, சுதந்திரத் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான உரிமை; இவ்வுரிமை புறவய சுயநிர்ணய உரிமை எனப்படுகிறது. மற்றையது, ஒரே நாட்டினுள், மத்தியில் கூட்டரசும் மாநிலத்தில் தனியரசுமாக இணைந்து வாழ்வதற்கான உரிமை. இது அகவய சுயநிரணய உரிமை எனப்படுகிறது. இதன்படி கூட்டரசின் அமைப்பு வடிவமும், கூட்டரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வும் யாராலும் யார்மேலும் திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அவை சம்பந்தப்பட்ட மக்களின் சுய விருப்ப முடிவுகளாகவும், சம்பந்தப்பட்டவர்கள், தமது நலனையும், தேசிய ஒருமைப்பாட்டின் நலனையும், தத்தமது தேசிய ஜனநாயகத்தின் நலனையும் மனதில் கொண்டு தமக்குத்தாமே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளாகவும் இருக்கவேண்டும். இதுதான் அகவய சுயநிர்ணய உரிமையாகும்.
உலக மக்களில் 40 விழுக்காட்டினர் அகவய சுயநிரணய உரிமை கொண்ட அரசியல் அமைப்பின் கீழ் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு தமக்குள் எழும் பிரச்சனைகளை அப்பப்போ தமக்குள் தாமே தீர்த்துக்கொண்டு, அவசியமானால் புதிய ஒழுங்குமுறைகளை ஆக்கிக்கொண்டு சுமுகமாகவே வாழப்பழகி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் மிகவேகமாக வளர்ந்துவரும் அனைத்து நாடுகளும் இதில் அடங்கும். பிறேசிலில் பிரிவினை தடைசெய்யப்பட்டுள்ளது. மக்கள் சீனத்தில் பிரிவினை மரணதண்டனைக்குரிய் குற்றமாகும்.ருஸ்யாவிலும், இந்தியாவிலும் கூட இதே நிலைதான்.
அகவய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு ஆட்சிமுறை பெயரளவிற்குக் கூட சிறீலங்காவில் இல்லை. ஆனால் 1963ஆம் ஆண்டு சிறி லங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 6வது சட்டத் திருத்தத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரிவினைக்கு எதிராகச் சத்தியப்பிரமாணம் எடுக்கவேண்டுமென்ற நிலை தோன்றியுள்ளது. இதனால் ஏற்படவுள்ள எந்த அதிகாரப் பரவலாக்கமும் இந்தச் சட்டச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும்.
ருஸ்யாவுக்கும் சிறிலங்காவிற்கும் இடையே சமீபத்தில் நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, இரு பகுதியினரும் தாம் ” பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஒருமுனைவாதம் ஆகிய மூன்று தீயசக்திகளுக்கு எதிராகவும் போராடுவோம்” என உறுதி எடுத்துக் கொண்டார்கள். அத்துடன், “பிராந்திய மற்றும் சர்வதேசியப் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்” ஒத்துழைக்கவும் பரஸ்பர ஆலோசனை பெறவும் ஒத்துக்கொண்டார்கள்.கஜகஸ்தான், ரஜிகிஸ்தான், உஷ்பாக்கிஸ்தான், கிற்கிஸ்தான், (Kazakhstan, Tajikistan, Uzbekistan, Kyrgyzstan) சீனா மற்றும் ருஷ்யா ஆகியநாடுகளின் இணைவே ஷங்காய் கூட்டமைப்பாகும்(SCO). இது 2001ஆம் ஆண்டு ஷங்காயில் அமைக்கப்பட்டது. இது, சீனாவின் பாதுகாப்புப் பதட்டத்தைத் தணிக்கவும், தனது உறுப்பினர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கவும்- குறிப்பாக சீனா, ருஷ்யா இடையேயான நம்பிக்கை – அனைத்து நாடுகளுக்கும் தலையிடியாகவுள்ள முன்சொன்ன மூன்று தீயசக்திகளைக் கையாளவும் என அமைக்கப்பட்ட ஒரு பிராந்திய பாதுகாப்பு அமைப்பாகும். இது கிழக்கின் நேட்டோ எனவும் அழைக்கப்படுகிறது.
வளர்ச்சி பெற்ற நாடுகள் என அழைக்கப்படும் (அவுஸ்ரேலியா உள்ளடங்கி) மேற்குலகம் தவிர்ந்த பிறநாடுகள் அனைத்துமே பிரிவினையை எதிர்ப்பதில் ஒருமுனைவாதிகளாக உள்ளன. பிரிவினையை எதிர்ப்பவர்கள் எல்லோரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி தமது நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். அது மஹிந்தவா அல்லது நீவினா என்றெல்லாம் பார்ப்பதில்லை. இதற்கான காரணங்களும் உண்டு.
1)ஒரு சிறிய தேசிய சந்தைகூட மேற்குலகிற்குப் போகக்கூடாதென்பது.
2) இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நேட்டோ நேரடியாகவோ சுற்றி வளைத்தோ இப் பிராந்தியத்தில் நுழைந்துவிடக் கூடாதென்பது. அது ஆப்கானிஸ்தானுடனேயே முடிந்துவிடவேண்டும்.
3)சரவதேச அரங்கில் தமது நாடுகளின் எண்ணிக்கை குறையக்கூடாதென்பது.
இந்திய சீன முரண்பாடு, ஆசியநாடுகளில் அதுவும் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் புதுப்புது நாடுகளின் உருவாக்கத்திற்கு சாதகமாக அமையுமென நம்பிக்கை வைத்தால் அது மிகப்பெருந்தவறாகும். இலங்கைவிடயத்திலும், பர்மாவிடயத்திலும் இந்த முரண்பாட்டால் அந்நாடுகளின் மக்களுக்கு எந்த ந்ன்மையும் கிடைக்கவில்லை. திபெத் விடயத்தில் இந்தியாவின் ந்டவடிக்கைக்கு சீனாவின் பதில் செயலும், அருணாச்சல்ப் பிரதேச விடயத்தில் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதில் செயலும் எதைக்காட்டுகின்றன இவ்விரு நாடுகளும் யுத்தம் தம்மேல் திணிக்கப்படுவதை விரும்பவில்லை.முடிந்தவரை யுத்ததைத் த்விர்த்துச் செல்லவே விரும்புகிறார்கள். ஆகவே இம்முரண்பாடு உலகின் இன்றைய போக்கைப் பெரிதாக மாற்றிவிடாது.
மேற்குலகம் தனது சந்தைகளைப் பாதுகாப்பதிலும், விஸ்தரிப்பதிலும் இரு விதமான நடைமுறைகளைப் பின்பற்றிவருகிறது.
ஒன்று, தமது சொந்தச் சந்தைகளின் பரப்பளவை விரிவுபடுத்துதல். அரசியல் ரீதியாக அவற்றை ஒரு நிறுவன ஒழுங்கிற்குக்கீழ் கொண்டுவரல். தனித்துப் போகும் போக்கை எந்த இராணுவ நிர்ப்பந்தமும் இன்றிப் படிபடியாக தணித்து இணைந்து போகும் போக்கை தன்னார்வமுறையில் படிப்படியாக வளர்த்தல். ஐரோப்பிய ஒன்றியம் இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு. இது வரவேற்கக்கூடிய ஒரு முற்போக்கு அம்சம். ஆனால் இதை நிறைவேற்றுவதற்காக சோவியத் குடியரசும்(USSR), பிற சோஸலிசக் குடியரசுகளும் துண்டுதுண்டுகளாக உடைக்கப்பட்டதுவும், உடைந்த நாடுகளின் சமுக உருவாக்கம் சிதைக்கப்பட்டதுவும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்விதம் உடைக்கப்பட்ட நாடுகளையும் சிதைக்கப்பட்ட சமுக உருவாக்கங்களையும் நிதி மூலதனத்தின் துணைகொண்டு, பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்து “சமாதானமாகத்” தமது சந்தைகளாக்கிக் கொண்டார்கள்.
இரண்டாவது, தமது ஆதிக்கத்தை நிறைவேற்றுவதற்கு உற்ற நண்பன் பிரிவினைவாதந்தான் என்பதை தமது ஐரோப்பிய அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்ட இவர்கள், அதே நண்பனின் துணைகொண்டு தமது எதிரிகளின்(ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்) சந்தைகளை உடைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஒன்றுடன் ஒன்று பகை முரண் கொண்ட சிறுசிறு தேசிய அரசுகளையும் சிறுசிறு பொருளாதாரங்களையும் அமைப்பதே அவர்களின் நோக்கமாகும். அப்போதுதான் அத்தேசிய அரசுகளின் தேசியத் தன்மையை அவர்களால நீத்துப்போகச் செய்யமுடியும்; அப்போதுதான் அச் சிறுபொருளாதாரத்தை கபளிகரம் செய்வது நிதிமூலதனத்திற்கு சுலபமானதாக இருக்கும். தாம் தம்மை ஒரு பெரிய பொருளாதாரமாக வளர்த்துவரும் அதேவேளை தமது எதிரிகளை சிறிய பொருளாதாரங்களாக்கி வருகிறார்கள். இதுதான் அவர்களின் இரட்டைத்தன்மையாகும்.
சுய நிர்ணய உரிமைபற்றிய அனைத்துலகக் கோட்பாடும் அனைத்துலகச் சட்டமும் இவர்களின் தேவைக்கொப்பவே ஆக்கப்பட்டுள்ளன. இதனால், மூன்றாம் உலகநாடுகளின் பிரிவினைவாதங்களையிட்டு மேற்குலகம் அஞ்சவில்லை, அவற்றைத் தமது நண்பர்களாக்கிக் கொள்ளவே விரும்புகிறார்கள். இவை பயங்கரவாதங்களாக இருந்தால் அதையிட்டும் அவர்கள் அஞ்சவில்லை. பல சந்தப்பங்களில் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் வேலையையும் செய்கிறார்கள். அப் பயங்கரவாதத்தை தமது சதிகளின் எடுபிடியாக ஆக்கமுடியாது போகும்போதோ அல்லது தொடர்ந்தும் தமது வளர்ப்புப் பிள்ளையாக வைத்திருக்க முடியாதபோதோ அவர்கள் சினங்கொள்கிறார்கள். அதன் பலனாக சாம-தான-பேத-தண்டத்தில் இறுதி ஆயுதமான தண்டத்தைப் பிரயோகிக்க ஆரம்பிக்கிறார்கள்.
தாராளவாதப் பொருளாதாரக் கோட்பாடுகளில் எவ்விதம் நடந்து கொள்கிறார்களோ அவ்விதமே சுய நிர்ணய உரிமைக் கோட்பாடுகளிலும் நடந்து கொள்கிறார்கள். தமது தேசிய நலனுக்கொப்ப தமது தேசியப் பொருளாதாரத்தின் பல சாளரங்களில் சிலவற்றை அப்பப்போ திறந்தும், மூடியும் வருவார்கள். ஆனால் பிறநாடுகளின் தேசியப் பொருளாதாரதிற்கு இவர்கள் வளங்கும் இடித்துரைப்புகளோ அனைத்துச் சாளரங்களை மட்டுமல்ல கதவுகளையும் பரக்கத்திற என்பதேயாகும். கொஞ்சம் கண் அயர்ந்தால் சுவர்களையே இடித்துவிடுவார்கள். தமக்கோர் நியாயம் பிறர்கோர் நியாயம் இதுதான் வாய்க்கால்களை வகுக்கும் இந்த வல்லவர்களின் இரட்டைத்தன்மையாகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பிருந்து இன்றுவரை வளர்ச்சிபெற்ற நாடுகள், “வந்தேறுகுடிகளை” உள்வாங்கியவண்ணமே வளர்ந்து வருகின்றன. இவ்விதம் உள்வாங்குவதைச் சுலபமாக்குவதற்காக தமது நாடுகளில் பன்முகத்தன்மையைப் பேணிவருகின்றன. பல வருடங்கள் ஆகியும் இன்னமும் குடியுரிமை பெறாமல் வாழ்ந்துவரும் மக்கள்கூட இந்த பல்முகத்தன்மையின் அரவணைப்பைப் பெற்றவர்களாகவே உள்ளனர். இருந்தும் பொருளாதார நெருக்கடி காலங்களின் போது, நீறுபூத்த நெருப்பாக இருந்துவரும் நிறபேத அடிப்படை இனவாதம்-racism- அங்கொன்றும் இங்கொன்றுமாய் வன்முறைகளாக தலைதூக்கவே செய்கின்றது. இவ் இனவாததை அரசியல் சிந்தனையாகக் கொண்ட அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இந் நாடுகளில் இன்னமும் வாழ்ந்தும் வளர்ந்தும் வருகின்றன. இவற்றிற்கு ஓர் பாரம்பரிய வரலாறும் உண்டு. இருந்தும் இன்றைய நிலையில் இவை பிரதான ஓட்டமாக இல்லை. அரசும் சமுகக்கட்டமைப்பும் இவற்றைத் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளன.
அதேபோல் அடுத்தபுறத்தில் தமது நாட்டின் வர்க்கக் கட்டமைப்புக்கும் தமது தேசிய மூலதனத்தின் உலகளாவிய ஏகபோகத்திற்கும் குந்தகம் விளையாத முறையில் இந்த “வந்தேறுகுடிகளின்” மீது தமது கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் செலுத்துவதற்கான ஒரு கட்டுமானத்தைக் கொண்டனவகையாக்வும் உள்ளன. இக் கட்டுமானம் மெல்லிய நூலிழைகளினால் கண்ணுக்குத் தெரியாத முறையில் பின்னப்பட்டதாக இருந்தாலும், இவ் “வந்தேறு குடிகளில்” எவரேனும் தாம் குடிபுகுந்த நாட்டின் சமுக சமநிலையைக் குலைக்க முயலுவார்களானால் அவர்களை கூண்டோடு நாடுகடத்தக்கூடியளவிற்கு இது பலமிக்கதாகவுள்ளது. எவ்விதமானாலும் இந் நாடுகளில் உயிரோட்டமுள்ள ஒரு பன்முகத்தன்மை வளர்ந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. மூலதனத்தின் தேசியத் தன்மையின் வளர்ச்சிக்கு பன்முகத்தன்மை அத்தியாவசியம் என்பதை ஏகபோக முதலீட்டாளர்கள் தவறின்றிப் புரிந்துகொண்டுள்ளதே இதற்கான காரணமாகும். அதேபோல் தேசியத் தன்மையை சிதைக்க பிரிவினைவாதம் அவசியம் என்பதையும் புரிந்துகொண்டுள்ளார்கள். இதனால்தான் தமது நாடுகளில் பன்முகத்தன்மையையும், மூன்றாம் உலகநாடுகளில் பல்முனைத்தன்மையையும் வளர்த்து வருகிறார்கள். இது இவர்களின் மற்றோர் இரட்டைத்தன்மையாகும்.
மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைவாதம், பிரிவினைவாதிகள் என்ற சொல்லாடல்கள் பிற்போக்குத்தனம், பிற்போக்குவாதிகள் மற்றும் தேசத்துரோகிகள் என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வசைமொழிகளாகவே காணப்படுகின்றன.
இன்றைய, அதாவது BRICஇன் உருவாக்கத்திற்குப் பின்னைய, அனைத்துலக இராணுவ சமநிலையையும் பொருளாதாரச் சமநிலையையும் வைத்து நோக்கும்போது;
(அ) மூன்றாம் உலக நாடுகளில் இருந்து எழும் பிரிவினை/தனிநாட்டுக் கோரிக்கைகள் மேற்குலகின் ஏகாதிபத்திய நலனுக்கு துணைபோவதாகவே அமைகின்றன. விரும்பியோ-விரும்பாமலோ, தெரிந்தோ-தெரியாமலோ இவ் இயக்கங்கள் மேற்குலகின் துணைப்படைகளாகவே மாறுகின்றன. இதனால் எந்த ஒரு மூன்றாம் உலகநாட்டு அரசும், மூன்றாம் உலக நாடுகளுள் இருந்து எழும் பிரிவினை/தனிநாட்டுக் கோரிக்கையையும் ஜீரணித்துக்கொள்ளமாட்டாது. எல்லோரும் ஒன்றுகூடி அதை அடக்கவே முயல்வார்கள். உள் நாட்டரங்கில் அக் கோரிக்கை நியாயமானதா இல்லையா என்பதையிட்டுக் கவலைப் படமாட்டார்கள். ஒரு முனை உலக ஆதிக்கத்தை எதிர்ப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் மேற்குலகுக்கும்கூட எதிராக இருக்கும் அல்லது எதிராக மாறக்கூடும் என எதிர்பாக்கப்படும் இயக்கங்க்கள் இதற்கு விதிவிலக்கு.
ருஷ்ய எல்லைக்குள் செச்சென்யா நடத்தும் உரிமைப் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு. ருஷ்யா எவ்வளவோ முயன்றும் SCO செச்சென்யாவைக் கண்டிக்கவில்லை. அதாவது மூன்றாவது உலக நாடுகள் ருஷ்யாவுக்கு ஆதரவாக ஒத்த குரல் கொடுக்கவில்லை. ருஷ்யாவின் ப்டுகொலைகளை எதிர்க்கவும் இல்லை. செச்சென்யா மேற்குலகுக்கு எதிரான வீச்சையும் கொண்டிருந்ததால் இந் நாடுகள் “நடுநிலை”வகித்தன.
அதேபோல் 18மாதங்களின் முன்பு ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்று தனி நாடான அப்கஹாசியா(Abkhazia) ம்ற்றோர் உதாரணமாகும். ருஷ்யாவின் உதவியுடன் பிரிந்த இச் சிறியநாடு இன்று ருஷ்யாவின் “உதவி”யுடன் வாழ்கிறது. NATO பக்கம் செல்லவிருந்த ஜோர்ஜியாவிற்குத் தொல்லை கொடுப்பதற்காக இப் பிரிவினை அரங்கேற்றப்பட்டது. இதற்காக 2008 ஆகஸ்டில் ஜோர்ஜியாவுடன் ஒரு யுத்தத்தையே ருஷ்யா நடத்தியது. மூன்றாம் உலக நாடுகள் இக் குட்டி நாட்டை இன்னமும் அங்கிகரிக்கவில்லை. இதுவரை ருஷ்யா தவிர்ந்த மூன்று நாடுகளே அங்க்கிகரித்துள்ளன. இதற்கான பிரதிபலனாக ருஷ்யா இக் குட்டிநாட்டினுள் தனது இராணுவத்தளத்தை அமைத்து வருகின்றது. இதற்காக 212,000 ஜோர்ஜியர்கள் உள்ளூர் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இத்தேதிவரை உள்ளூர் அகதிகளாகவே உள்ளார்கள். அது வன்னி முள்வேலி முகாமின் முன்னோடி.
(ஆ)இவ்வித இயக்கங்கள் அந்த அல்லது இந்த முகாமில் எந்த முகாமையும் சாராமல், எந்த முகாமினது கைப்பிள்ளையாக மாறாமல் நடுநிலை வகித்தால் உலகளாவிய எதிர்ப்புகள் குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. பெரிய பொருளாதாரங்கள் அல்லாத சில சிற்சிறிய நாடுகளின் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளூம் உண்டு. ஏனெனில் இரு முகாம்களிலும் உள்ள பெரிய பொருளாதாரங்கள் அனைத்துமே தனித்தோ கூட்டணி அமைத்தோ உலக ஆதிக்கத்திற்காக முயல்பவர்களாகவே உள்ளன. அத்துடன் மூன்றாம் உலகநாடுகளின் பெரிய பொருளாதாரங்கள் அனேத்துமே தத்தமது நாடுகளுள் காலனிகளைக் கொண்டவைளாகவும், தத்தமது நாடுகளுள் ஒர் மறுகாலனியக்க யுத்தத்தை நடத்திவருபவைகளகவும் உள்ளன. இலங்கை, பர்மா போன்ற சிறிய பொருளாதாரங்கள் கூட அவ்விதமானவைகளாவே காணப்படுகின்றன.
இச் சூழலில் இவ்வித நடுநிலை விரும்பும் இயக்கங்கள் இயல்பாகவே ஒரு தனி அணியாக உருவாகி வருகின்றன என்றோர் கருத்தும் உண்டு. இது நான்காவது அணி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, அகவய சுயநிர்ணய உரிமை கோருவோர்கள், பிரிந்து போகக் கோருவோர்கள், தனிநாடு கோருவோர்கள் ஆகியோரே இந்த நான்காவது அணியாகும். இவர்கள் நான்காவது உலகம் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எந்த ஒரு அனைத்துலக அல்லது பிராந்திய மட்ட அணிசேரலும் தேசியப் பொருளாதாரநலனை அடித்தளமாகக் கொணடதாக அமைவதே பொதுவான நியதியாகும். இதுதான் உண்மையாக இருந்தாலும் அனைத்து அணிகளும் பொருளாதாரத்தைத்தான் முன்நிலைப்படுத்தும் என்பதில்லை. அரசியலை முன்னிலைப்படுத்தியும்( அணிசேரா இயக்கம்), இராணுவச் சம நிலைப் பேணலை முன்னிலைப்படுத்தியும்(NATO) அமைவதுண்டு. இவ்விதமல்லாமல் சித்தாந்ததை மையமாகக் கொண்ட அனைத்துலக் அணிசேரல்களும் உண்டு. மார்க்சியர்களின் அணீசேரல் இவ்விதமானதே.
ஆனால் இந்த நாலாவது அணி “நாடுகளோ” தடைசெய்யப்பட்டவை அல்லது உலக அரங்கில் தனியான பிரதிநிதித்துவம் கோரும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்; தமக்கென்றோர் தேசியப் பொருளாதார அலகு இல்லாதவ்ர்கள். இது இரண்டுமேயில்லாத மார்க்சியர்கள் தமக்கென்றோர் பொதுவான உலகக் கண்ணோட்டமும், அரசியல் சித்தாந்தமும் உள்ளதால் உலகளவில் அணிசேர்கிறார்கள். ஆனால் இந்த நாலாவது அணியினரோ உலகக்ண்ணோட்டத்திலும் அரசியல் சித்தாந்தத்துறையிலும் தமக்குள் ஒரு ஒருமுகப்பாடு இல்லாதவர்கள். இவ்வணி, பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், பொருளாதாரப் பார்வையற்ற இன அபிமானிகள், மத அடிப்படைவாதிகள், சிறுமுதலாளித்துவ க்ற்பனாவதிகள், தம்மைத்தாமே “வர்க்கநீக்கம்” செய்துகொண்ட சமுகப் பைத்தியங்கள், இராணுவப் பிரபுக்கள் ஆகிய பிற்போக்கு அணியினரையும், முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், இனமானப்போராளிகள், விவசாயப் புரட்சியாளர்கள், கற்பனாவாதிகள் சமாதான விரும்பிகள், அடிப்படைமாற்ற விரும்பிகள்(Radicalists), உலகம் சிறிய பொருளாதாரங்களாக சிதறுண்டு போவதை விருபாதவர்கள், தேசபக்தர்கள் ஆகிய முற்போக்குப் பிரிவின்ரையும் கொண்ட ஒரு கதம்பக் கூட்டமாகும்.
இவற்றாலும் மற்றும் பிற காரணங்களாலும் நாலாவது உலக அணியின் உருவாக்கம் அவ்வளவு சுலபமானதாக அமையும் என எதிபார்க்கமுடியாது. ஆனால் அதற்கான வரலாற்றுத் தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. அவ்விதமானதோர் அமைப்பு வரலாற்றின் கட்டாயமாகவும் உள்ளது. 2009மே மாத இலங்கைப்படுகொலை இவ்விதமானதோர் அணியின் தேவையை உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த ஓர் பேர் நிகழ்வு எனக்கூறினால் அது மிகையாகாது. புறநிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. ஆகவே இக்கட்டாயம் நிறைவேற்றப்படும் என நம்புவோமாக. ஆனால் அதற்கான அகநிலை இன்னமும் தோன்றவில்லை. அதுவரை காலத்தைக் கனிய வைப்போம் என்ற மூலோபாயத்தையும் காலம் வரும்வரை பொறுத்திருப்போம் என்ற தந்திரோபாய்த்தையும் கடைப்பிடித்தலே இவ் இயக்கங்க்களின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் நல்லது, அவசியமானதுங்கூட.
அரசியல் அதிகாரம் தொடர்பானதோர் கோரிக்கை சரியா தப்பா எனத் தீர்மானிப்பது அது வரலாற்றின் அன்றைய காலகட்டத்திற்கு அவசியமா அவசியம் அற்றதா என்பதை மட்டும் வைத்துக் கொண்டல்ல, சாத்தியமா சாத்தியமற்றதா என்பதையும் வைத்துக்கொண்டுதான். சாத்தியமா சாத்தியமற்றதா என்பது உள்நாட்டரங்கினில் மட்டுமல்ல அனைத்துலக அரங்கிலும் வைத்து ஆராயப்படவேண்டியதொன்றாகும். அதிலும் ஒரு தேசிய அரசின் தோற்றமும் வளர்ச்சிக்குமான காரணிகளைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்துவது அனைத்துலக அரங்குதான். இலங்கைக்கு நடந்தது மட்டுமல்ல நேபாளத்தில் நடப்பதுவும் இதற்கோர் சிறந்த உதாரணங்களாகும். நேபாள மார்க்சியர்கள் தேசிய அரசு அமைப்பதற்கான அனைத்துத் தகமைகளும் பெற்றுள்ளார்கள் ஆனால் அனைத்துலக நிலமை அவர்களுக்குப் பாதகமானதாகவே உள்ளது. இதனால் தமது வேளைக்காக காத்திருக்கிறார்கள். வாழாவிருக்கவில்லை பல்தேசிய அரசாக ஆவதற்கான தயாரிப்புகளைச் செய்துவருகிறார்கள்.
இவற்றின் தொகுப்பாகக் கிடைப்பது, பிரிவினை/தனிநாட்டுக் கோரிக்கையானது இன்றைய உலக இராணுவ, பொருளாதாரச் சமநிலையைப் பொறுத்தவரை பொருத்தப்பாடானதாக அமையவில்லை என்பதேயாகும்.
இலங்கையின் உள்நாட்டரங்கினில் வைத்து இது சாத்தியமா சாத்தியமற்றதா என்பது விரிவாக ஆராயப்பட்வேண்டும்.
இக் கட்டுரை நாடுகளின் அணுகுமுறையைப் பற்றிக் கூறுகிற போது, அவற்றின் வரலாற்றின் முக்கியமான பகுதிகளையும் கருத்திற் கொண்டிருப்பின், விடயங்களைக் கூடிய தெளிவுடன் காண இயலுமாயிருந்திருக்கும்.
நேபாளத்தில் பிரிவினைக் கோரிக்கை எழ முன்னமே மாஓவாதிகள் பல் தேசிய சமஷ்டி பற்றிப் பேசத் தொடங்கி விட்டனர். அது, உலகளாவிய மட்டத்தில் உள்ள மார்க்சிச லெனினிச நிலைப்பாட்டை ஒத்தது.
சோவியத் யூனியனில் புரட்சிக்கு ஆதரவகத் தேசிய இனங்களின் ஆதரவைப் பெற சுயநிர்ணயக் கொள்கை உதவிற்று. அதை விட அது பழைய ரஷ்யாவின் ஒத்குமுறைக்கெதிரான மார்க்சிய நிலைப்பாடுமாகும்.
சீனாவின் நிலைப்பாட்டில் சீனாவின் எல்லை, இறைமை என்பன தொடர்பான ஏகாதிபத்திய குறுக்கீடு மேலாதிக்கம் என்பன சீன விடுதலைக்கு முன்பிருத்தே தொடர்ந்து வந்த பிரச்சனைகள். சீனாவின் மூன்று பிரதேசங்கள், முறையே, பிரித்தானிய, போர்த்துக்கேய, அமெரிக்க ஆதிக்கங்களின் கீழ் சீனாவிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தன. இன்னமும் ஒன்று பிரிந்தே உள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் பிரிவினை என்பது அமெரிக்க ஆதிக்க நோக்கங்களை நிறைவேற்றும் கருவியாகவே பயன்படுகிறது.
ஆபிரிக்காவிலும் அவ்வாறு முன்னம் நடந்துள்ளது.
கட்டுரை கூறும் அடிப்படையான நிலைப்பாட்டுடன் எனக்கு முரண்பாடில்லை.
பிரிவினை என்பது தன்னளவிலே புனிதமோ பெறுமதியோ உடையதல்ல.
ஆனால் பிரிந்து போகும் உரிமை இல்லாமல் ஒற்றுமை நீடிக்காது.
மிகத் தரமான நல்ல கட்டுரை. தற்போதைய சூழலில் இக் கட்டுரையை பிரசுரித்த இனியொருவுக்கும் இதை எழுதிய லோகனுக்கும் நன்றிகள்.லோகன் சொல்வதுபோல பிரிவினை/தனிநாட்டுக் கோரிக்கையானது இன்றைய உலக இராணுவஇ பொருளாதாரச் சமநிலையைப் பொறுத்தவரை பொருத்தப்பாடானதாக அமையவில்லை என்பது நுhற்றுக்கு நுhறு உண்மையாகும்.
“சுயநிர்ணய உரிமை இரு வகைப்படும். ஒன்று, சுதந்திரத் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான உரிமை; இவ்வுரிமை புறவய சுயநிர்ணய உரிமை எனப்படுகிறது. மற்றையது, ஒரே நாட்டினுள், மத்தியில் கூட்டரசும் மாநிலத்தில் தனியரசுமாக இணைந்து வாழ்வதற்கான உரிமை. இது அகவய சுயநிரணய உரிமை எனப்படுகிறது.”
இரண்டாவது சுயநிர்ணய உரிமை உண்மையில் சுயநிர்ணய உரிமையே அல்ல. ஆது லெனின் முன்வைத்த பிரிந்து போகும் உரிமையை மறுப்பது.
உண்மையில் அது ஐ.நா. உருவான பின்பு பெரும்பான்மை/ஆதிக்கத் தேசிய இனங்கள் தமது நலன்களைக் காத்துக் கொள்ளச் செய்த ஒரு பித்தலாட்டமே.
“சர்வதேச சமூகம்” சிலவற்றை ஏற்று மெச்சும், சிலவற்றைப் பழித்து நிராகரிக்கும். அது ஏனென்றுஏகாதிபத்தியம் பற்றி அறிந்தோர் அறிவர்.
தமிழ்ச் சூழலில் மிக அவசியமான ஆய்வுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் வரவேண்டுமென எனக்குள் எண்ணுவதுண்டு.இந்த வகைப்பட்ட கட்டுரைகள் அதிகமாக வருவதற்கான ஆய்வுத்தகமை சமகால நிகழ்வோட்டத்துடன்,அதுசார்ந்த மிகுந்த புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இந்தக் கட்டுரையாளர் மிக நேர்த்தியாக உலக நடப்பைக் குறித்த கண்ணோட்டத்தைக்கொண்டிருக்கிறார்.இவரது கட்டுரை முழுமையடைய வேண்டுமென விரும்புகிறேன்.அந்த வகையில் இன்றைய ஏசிய மூலதனவோட்டத்தையும்,அதுசார்ந்த அரசியல் நகர்வையும் கணிப்பதற்கான பெரும் வெளியைத் திரு.கிசோர் மபுபானி(kishore mahbubani )திறந்து விடுகிறார்.அவரது நூற்கள் மாறிவரும் ஏசியச் சூழலில் சீனவினது உள்ளக மாற்றங்களைப் புரிவதற்கு உதவிக்கொள்வது.
திரு.லோகன் மிகவும் திறம்பட உலகப் பொருளாதாரப் போக்குகளைப் புரிந்து இக்கட்டுரையை எழுதியிருப்பதால்அவரது கட்டுரையின் தர்க்கங் குறித்துக் கவனிக்கிறேன்.இதுள் கட்டுரையாளர் அவசியம் கவனிக்க வேண்டியவர்களில்இன்னொருவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கான(காட்டார்) ஆலோசகரும் இன்னாள் ஓபாமாவின் மிக நெருங்கிய ஆலோசகருமான பிரசென்ஸ்கி(Zbigniew Brzezinski).இவர்களது கண்டோட்டம்-வியூகமானது ஆசிய,அண்மைக் கிழக்கு நாடுகள் மற்றும் கஸ்ப்பியன் வலயத்தின் அரசியல்-எதிர்காலங்குறித்த தாக்கத்தை ஏற்படுத்துபவை.
கிசோரது கருத்தின்படி, இருஷ்சியாவின் தகர்வும்,சீனாவின் இருப்பும் பலமானவொரு அரசியல் உண்மையைச் சொல்வதாக இருக்கிறது.
சீனாவுக்குள் இருக்கும் சிறுபான்மைச் தேசிய இனங்களது பிரிந்துபோகும் கோரிக்கைகளைச் சீனா சட்டரீதியாகத் தடை செய்வதற்கு முன்னால் அத் தேசிய இனங்களது பொருளாதார ரீதியான அபிவிருத்தியை முடுக்கிவிட்டுப் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்தியபோது இக் கோரிக்கைகள் மெல்ல நீர்த்துப் போயினவென்பதும், இருஷ்சியா இதிலிருந்து விலத்திப் பொருளாதார ரீதியாக எதையுஞ் செய்யாது, தேசிய இனங்களை புறவயரீதியாகவொடுக்குவதற்கான அரசியல் அழுத்தங்களைச் செய்தபோது தேசிய இனங்கள் தமக்கான பிரிவினையைக் கருத்தியல் ரீதியாக வலுப்படுத்தி அவற்றைச் சமூக ஆவேசமாகவே கொண்டியங்கினர்.இது சமாகாலப் பிளவுக்குள் இருஷ்யாவைத் தள்ளியதென வாதிடும் கிசோர் ஆசிய வலயத்தின் மூளை என்பது கவனிக்கத்தக்கது.
பிரயோசனமான தளத்தை நோக்கி திரு.லோகன் தனது ஆய்வைச் செலுத்துகிறார்.இதன் உள்ளார்ந்த நியாயப்பாடு மிக நீண்ட தேடுதலோடுதாம் முழுமை பெறும்.எனவே,இது நோக்கித் தேடுதலுக்காக இருவரைச் சுட்டினேன்.இவர்களை லோகன் படித்திருக்கலாம்.என்றபோதும்,இவ்விருவரதும் தாக்கம் ஒரு பக்கம் கஸ்பியன் வலயத்தை ஆட்டிப் படைக்கிறது. மற்றவரது தாக்கம் இன்றைக்குப் புலியழிப்போடு,இந்தியாவில் ஒப்பிரேசன் கிறீன் கன்ற் எனப் பாய்கிறது.
http://www.youtube.com/watch?v=K92F2ZIuVA4&feature=related
http://www.youtube.com/watch?v=4GEcXVbsEX8&feature=related
kishore mahbubani:
http://books.google.de/books?id=Jj-XPYft7ekC&dq=kishore+mahbubani&source=bl&ots=tn8PD3o06F&sig=owQePTDP5Mnzx2621-Rxyk3xMZA&hl=de&ei=r6OCTPGEAYrNswbartHsCA&sa=X&oi=book_result&ct=result&resnum=15&ved=0CF0Q6AEwDg
The New Asian Hemisphere: The Irresistible Shift of Global Power to the East
The Grand Chessboard: American Primacy And Its Geostrategic Imperatives
http://www.amazon.com/Grand-Chessboard-American-Geostrategic-Imperatives/dp/0465027261
Zbigniew Brzezinski:
http://www.youtube.com/watch?v=XbuQF-jaOxc&feature=fvw
P.V.Sri Rangan:
“சீனாவுக்குள் இருக்கும் சிறுபான்மைச் தேசிய இனங்களது பிரிந்துபோகும் கோரிக்கைகளைச் சீனா சட்டரீதியாகத் தடை செய்வதற்கு முன்னால் …”
சீனாவில் எப்போது பிரிந்து போகும் உரிமை இருந்தது என்றும் எப்போது அது நீக்கப் பட்டது எனவும் விளக்கின் உதவியாக இருக்கும்.
உங்கள் பெயரை எதற்காக மறைத்து மசாலா மண்ணாங்கட்டியென வைத்துக் கேள்வி தொடுக்கிறீர்கள்? முக்காடு போடுபவர்களுடன் விவாதம் அவசியமில்லை!
சீனாவின் 90 வகைப்பட்ட இனங்களுள் “தேசிய இனங்களாக” அங்கீகரித்தவற்றைச் சொன்னேன்.அதுள், 70 சிறுபான்மை தேசியினங்கள் அங்கீகரிப்பட்டது, கான் தேசிய இனத்துக்குச் சமனமாக…இன்னும், இருபதுக்கு மேற்பட்டவர்களை இனங்களாக அங்கீகரிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது(இதற்குள் பிரிதல்-இணைதல் எல்லாம் சட்டவாக்க உரையாடல் மட்டுமே!)
சீனாவின் சனத் தொகையில் 92 வீதமானவர்கள் ( Han Chinese)தேசிய இனமாக இருக்கிறது மொத்தச் சனத் தொகையில்.இருந்தும், சீனா பொருளாதார ரீதியாகத் தனது மக்களினங்களுக்குள் சமச் சீரை முடிந்தவரைக் கடைப் பிடிப்பதால் அச்சீனம் வலிமையாக இருக்கிறது.
உங்களையோ மற்றவர்களையோ பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு எனது சொந்தப் பெயரில் பின்னூட்டம் எழுதுவதில் பாதுகாப்பு உட்பட்ட பிரச்சினைகள் உண்டு.
இணையத்தில் பின்னுட்டமிடுபவர்களில் பலர் வெளிநாடுகளில் இருக்கக் கூடும். எல்லோரும் அல்ல.
ஒரு வாதத்திற்கு நான் சுந்தரமூர்த்தி கணேசன் என்ற பெயரில் பின்னூட்டமிடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அது எனது சொந்தப் பெயர் தான் என்று எப்படி அடையாளம் காணப்போகிறீர்கள்?
இணையத்தில் ஆளைத்தெரியாமல் விவாதம் நடத்த முடியும். அதனை ஏற்றுக் கொள்ளாமல் இணையத்தில் விவாதிப்பது கடினம்.
இங்கே விவாதம் என்று எதுவும் இருந்தால் அது கருத்துக்களும் நிலைப்பாடுகளும் பற்றியதே ஒழிய சிலர் நடத்துகிற தனிப்பட்ட நிந்தனைத் தொடர்கள் போலல்ல.
எனவே கேள்விக்குப் பதில் சொல்ல இயலா விட்டால் அதை மூடிக் கட்ட ஏன் எகிறிக் குதிக்க வேண்டும்?
“சீனாவுக்குள் இருக்கும் சிறுபான்மைச் தேசிய இனங்களது பிரிந்துபோகும் கோரிக்கைகளைச் சீனா சட்டரீதியாகத் தடை செய்வதற்கு முன்னால் …” என எழுதினீர்கள். அடை உங்களால் நிலைநாட்ட முடியவில்லை.
(அது போக, ஒன்றை “ஏற்காததற்கும்” “தடை செய்வதற்கும்” பெரும் வேறுபாடுண்டு).
உங்களிடம் கேள்வி கேட்பது விவாதமாகும் என்றால், வாத்தியாரே நீங்கள் கற்க நிறையவே உண்டு.
(மண்ணங்கட்டிக் கதை எழுதினால் மண்ணங்கட்டிக் கேள்விகள் எழும். ஆனாலும் எனது கேள்விகள் பொறுப்பானவை. உங்கள் பித்தலாட்டத்தை நீங்கள் தான் சீறிப் பாய்ந்து அம்பலப்படுதிவிட்டீர்கள். )
பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
வச்ச இடத்தை விட்டு விட்டு வாசல் படியில் தேடுவான் இன்னும் ஒருவன்,
ஒன்றுக்கும் உதவாத கொயூனிஷியம் செத்துப்போய் நீண்ட நேரமாகிவிட்டது, நாறிப்போன மீனை நாளைக்குத்தான் சாகுமென்றானாம் ஒரு மோடன்,
இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே இவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே,
மசாலா ,நீங்கள் கேள்வி தொடுப்பதற்கு முன் நான் எழுதியதை புரிந்து படியுங்கள்.ஒரு துண்டு வாக்கியத்தை வைத்துச் சொதப்பாதீர்கள்.நான் எழுதியது”ஒரு தேசம் இனங்களது சுயநிர்ணயத்தின் உரிமைவழிப்பட்ட பிரிந்து போகும் உரிமையைச் சட்டரீதியாகத் தடை செய்வதற்குமுன்…”-(அத் தேசிய இனங்களது பொருளாதார ரீதியான அபிவிருத்தியை முடுக்கிவிட்டுப் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்தியபோது இக் கோரிக்கைகள் மெல்ல நீர்த்துப் போயினவென்பதும்…)
இது கூறுவது என்ன?
சீனா பின்னாளில் தடை செய்தது என்பதா?
இத்தகைய சட்ட உரையாடல்-செயற்பாட்டை அது செய்யாது பொருளாதார அபிவிருத்தி செய்ததென்பது என் கருத்து.
இதைவிட்டு,அல்லது பெயர்த்து உங்கள் வித்துவத்தை வெளிப்படுத்துவதற்காகக் கேள்வியைத் தொடுக்கிறீர்கள்.
சொல்லப்படும் வார்த்தைகளை உங்களுக்கேற்படி புரிவதும், பின்”பித்தலாட்டம்”என்றும் தீர்ப்பிடுவதற்கெடுக்கும் முயற்சியைவிட வேறு வகையில் முனையுங்கள்.
நான் இன்னும் கற்க வேண்டும் என்று தீர்ப்பிடும் உங்கள் ஆசிரியத்தனத்தை ,வசனங்களைப் புரிவதற்குப் பயன்படுத்தும்படி தாழ்மையோடு கேட்பேன்.அவ்வளவுதாம் இப்போதைக்கு.
முகமூடியை கழற்றி வீசிவிட்டு ,விவாதிக்க-கேள்வி கேட்க வாருங்கள்.அது,பரஸ்பரம் புரிவதற்கும் தோழமையை வளர்ப்பதற்கும் உதவும்.
தனக்குத் தெரியாத விடயங்களைப் பற்றி (“சீனாவுக்குள் இருக்கும் சிறுபான்மைச் தேசிய இனங்களது பிரிந்துபோகும் கோரிக்கைகளைச் சீனா சட்டரீதியாகத் தடை செய்வதற்கு முன்னால் …” ) எழுதுவதும் விளக்கங் கோரி எழும் கேள்விக்குப் பதில் சொல்லவோ தவற்றைத் திருத்தவோஇயலாமல் எகிறிக் குதிப்பதும் தோழமையை வளர்ப்பதற்கான (நானறிந்த) நடைமுறைகளல்ல.
பிற இடங்களிலும் உங்கள் இடுகைகளை நோக்கும் போது நீங்கள் தேடுவது தோழமையையோ தோழர்களையோ அல்ல என்பது தெளிவாகிறது.
தொடர்ந்து உரையாடிப் பயனில்லை என்பதால் இத்துடன்நிறுத்துகிறேன்.
பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
வச்ச இடத்தை விட்டு விட்டு வாசல் படியில் தேடுவான் இன்னும் ஒருவன்,
ஒன்றுக்கும் உதவாத கொயூனிஷியம் செத்துப்போய் நீண்ட நேரமாகிவிட்டது, நாறிப்போன மீனை நாளைக்குத்தான் சாகுமென்றானாம் ஒரு மோடன்,
இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே இவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே,,
I like it
“ஒன்றுக்கும் உதவாத கொயூனிஷியம் செத்துப்போய் நீண்ட நேரமாகிவிட்டது”
— அதுதான் இடையில சோஷலிசத் தமிழீழம் கேட்டுப் பார்த்தனீங்களோ?
உங்கட பம்மாத்து எனக்கு நான் சின்னப்பையனாக இருக்கேக்குள்ளேயே விளங்கீற்றுது.
உங்கள் மீதி வசனங்கள் உங்களுக்கே பொருத்தமானவை. நாறிப்போன மீன் பற்றிய உவமை உட்பட.
ஓமண்ணை ஒன்றுக்கும் உதவாத தமிழீழக் கனவு கலைஞ்ச பிறகு உங்களுக்கு முழு விரக்தி தான்.
உங்களின்டை ஞானம் இல்லததாலை தான் இந்தியாவிலையும் வேறை நாடுகளிலையும் சனம் போராடுது.
தமிழீழக்காறர் நாங்கள் அமெரிக்காவின்ரை காலை நக்குகிறதா இந்தியாவின்ரை காலை நக்குகிறதா எண்டு பட்டிமன்றம் நடத்துவம்.
தமிழீழக்கனவுக்கும் மேலே எழுதப்பட்டிருக்கும் விஷயத்துக்கும் என்னப்பு சம்பந்தம், மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் அப்பு முடிச்சு விழுகுது , கால் நக்குறதெல்லாம் அவையவையின் விருப்பமும் அவர்களது “அனுபவம் சம்பந்தப்பட்ட விஷயம்”, மேலை எழுதியிருக்கிற வாசகத்தை திருப்பி படியுங்கோ அப்பு, மறுமொழி தெரியாட்டி ரென்ஷன் படக்கூடாது, சயிக்கிள் சில்லு காத்துப்போனதுக்கு
வடக்கு வீதியிலை அங்கப்பிரதிஷ்டை செய்யிறவனுக்கு விளக்குமாத்தாலை அடிக்கலாமோ,பிழை அப்பு பிழை, அவசரப்படாதையுங்கோ ராசா,
உங்களின்ரை மொட்டந்தலை, உங்களின்ரை முழங்கால்!
சொல்லுங்கோ, உங்களின்ரை இடுகைக்கும் கட்டுரைக்கும் என்ன மோனை சம்பந்தம்?
எல்லாத்தையும் அறுத்துக் கொட்டிப் போட்டுக் கொம்யூனிஸ்ற் காறரிலை கோவிக்கிறதும் நக்கலடிக்கிறதும் உங்களுக்குச் சரி எண்டா. அதுக்கேத்த மறுமொழியும் அதே அளவு சரி தானே.
மோனை, நக்கலடிக்க உங்களிக்குள்ள உரிமை அப்புவுக்கும் இருக்குது ஆச்சிக்கும் இருக்குது — அவ்வளவுந் தான்.
அப்படி போடுங்கள் xxx !
போராடி புலி வீரர் சாகையிலே
காரோடி கொண்டிருந்தோர்
களப்பலி ஆகாரோ …
துப்பு கெட்டவர்
நாயிலும் கீழவர் ..
தப்பி ஓடி கனடாவில் (வெளிநாடுகளில் )நக்கட்டும் ..நாய்சாதி
-புதுவை இரத்தினதுரை –
மணியன்
உங்களை போலே தமிழீழம் கேட்டு விட்டு இடை நடுவில் ஓடி ஒளித்தவர்களை தான் புதுவை இங்கே குறிப்பிட்டார்.அந்த வீடியோக்களை வாங்கி “பாட்டுக்களை ” சரி பார்த்து கொள்ளுங்கள்.
Logan : மக்கள் சீனத்தில் பிரிவினை மரணதண்டனைக்குரிய் குற்றமாகும்
Garammasala:சீனாவில் எப்போது பிரிந்து போகும் உரிமை இருந்தது என்றும் எப்போது அது நீக்கப் பட்டது எனவும் விளக்கின் உதவியாக இருக்கும்.
contradiction or tautology?. please help
Ask the experts.
P.V.Sri Rangan இவ்வாறு சொல்லுகிறார்: ஒரு தேசம் இனங்களது சுயநிர்ணயத்தின் உரிமைவழிப்பட்ட பிரிந்து போகும் உரிமையைச் சட்டரீதியாகத் தடை செய்வதற்குமுன்…”-(அத் தேசிய இனங்களது பொருளாதார ரீதியான அபிவிருத்தியை முடுக்கிவிட்டுப் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்தியபோது இக் கோரிக்கைகள் மெல்ல நீர்த்துப் போயினவென்பதும்…)
இது கூறுவது என்ன?
சீனா பின்னாளில் தடை செய்தது என்பதா?
இத்தகைய சட்ட உரையாடல்-செயற்பாட்டை அது செய்யாது பொருளாதார அபிவிருத்தி செய்ததென்பது என் கருத்து.
கடைசி வரி உங்கள் கேள்விக்குப் பதிலளிக்குமென நம்புகிறேன்.
suganthy
உமக்கும் சேர்த்து தான் புதுவையின் கவிதை .
ஏனப்பு ராசாமார் கொம்யூனிஸ்ற் காறரெண்டாலே ரென்ஷன் பாட்டிகள்தானோ, எல்லாருக்கும் பட்டு பட்டெண்டு கோவம் பிச்சுக்கொண்டு வெருகுது, முடிஞ்சவரை மறுமொழியெழுத யோசியுங்கோ அப்பு , அச்சாப்புள்ளையள் கடியாதையுங்கோ , தெரியாட்டி மற்றவையை பாத்து ம் டக்கெண்டு வாய் வைக்கக்கூடாது ,
அந்தப்புள்ளை suganthy பாவம் தான் கேள்விப்பட்ட சந்தேகத்தை கேக்கப்போக , யோகன் கடிக்கிறார், மறுமொழி தெரியாட்டி கடிக்கலாமோ,,
அப்பிடியென்றால் புதுவையண்ணயின் பாட்டும் சரி நான் எழுதினபாடும் உங்களுக்கு சரியாத்தானே அப்பு பொருந்துது,,,
1),பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
2)இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே இவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே,,
அது தான் இந்தியாவிடமும் ,ஒபாமவிடமும் தமிழீழம் கேட்கிறீர்களே! ஞானத்தங்கமே,
நீங்கள் ஏதும் அறியவில்லை ஞானத்தங்கமே!
நீங்கள் ஏதும் அறியவில்லை ஞானத்தங்கமே
,பாட்டுடை தலைவன் என்று தன்னை வைத்தார் – அவரை
பாடி தொழுவதற்கு “மணியர்”களை வைத்தார்.
பூச்சியத்துக்குள்ளே (முள்ளி வாய்க்காலில் ) .ஒரு ராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருந்தார் ஒருவர்.
அவருக்கும் புரியவில்லை “மணியர்”களுக்கும் புரியவில்லை ஞானத்தங்கமே!
ஞானத்தங்கமே!
இவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விட்டு தள்ளி நின்று சிரிப்பார் (அமெரிக்கா ) ஞானத்தங்கமே! ஞானத்தங்கமே!
அவரிடம் மண்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசு படைக்க நிற்பார் ஞானத்தங்கமே!ஞானத்தங்கமே!
நீங்கள் ஏதும் அறியவில்லை ஞானத்தங்கமே
இப்பவுந்தான் தம்பி ரென்ஷனிலை ஏதேதோ புசத்திறீர், ,|தமிழீழம் ,ஒபாமா,இந்தியா முள்ளிவாய்க்கால், புலம்பெயர் தேசம், நாடுகடந்த அரசு, இவை ஒண்டுக்கையும் நான் வரயில்லையே, நீங்கள் வேறை ஏதோ பிரச்சினையிலை தவிக்கிறியள் போலை கிடக்கு, என்னென்னவோ சொல்லுறியள், வேறை யாருடையதோ பின்னோட்டத்தைப்பார்த்து, திடுக்கிட்டுப்போனியள் ,, நீங்கள் எழுதியது எதுவுமே என்னுடைய பினோட்டத்துக்கான பதிலாக இல்லையே, மாறி எழுதியிட்டியள் தம்பி நேரமாப்போச்சு நான் வரப்பொறன் ,
//இனிமேலாவது கேள்வியை ஒண்டுக்கு இரண்டுமுறை படிச்சிட்டு பதிலை எழுதுங்கோ ,எழுதிப்போட்டும் நிதானமாய்ப்பாத்து இது ஆருக்கு போகுதெண்டதை உறுதிப்படுத்தி, சொடுக்குங்கோ, ஏனெண்டால்,,,,,சயிக்கிள் சில்லு காத்துப்போனதுக்கு
வடக்கு வீதியிலை அங்கப்பிரதிஷ்டை செய்யிறவனுக்கு விளக்குமாத்தாலை அடிக்கலாமோ,பிழை அப்பு பிழை, அவசரப்படாதையுங்கோ ராசா
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி இந்த இனிமையான பாடல் இத்தனை பாடு படுகிறது.சபரிமலை,திருப்பதி, காசி என்ரெல்லாம் அலையும் தமிழா உன் க்குத்தான் ராமேஸ்வரம்,சீரங்கம்,பழனி என இருக்கிறதே.உள்ளம் பெருங்கோயில் அதை செம்மைப் படுத்து எனபதே பாடல்.
பாண்டியனின் அரசசபையில். நக்கீரன் முன்னிலையில் தருமியின் இக்கட்டான நிலமையை. சொக்கனே நேரில் வந்து தருமியை காத்த புண்ணியம் போல. இந்த மணியனை காத்தரவணைத்த தமிழ்மாறனே, நன்றியப்பா நன்றி. உள்ளம் பெருங்கோவில் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டோமாகில் , அதுதான் ஞானம் பிறந்தகதையாகிறது.
யோகன்
இப்பவாவது விளங்குகிறதா?
இரவல் வரிகளுடன் வருகிற தருமிமாரைக் காப்பாற்றுகிற தயாள குணம் உங்களிடம் இல்லை.
இல்லாவிட்டால் போகட்டும். இசுலாமியரையும், கிறிஸ்தவர்களையும் காய்கிற சிவனாரின் அவதாரமான தமிழ்மாறன் போல ஏன் உங்களால் மணியத் தருமியாரைப் பற்றி எதையாவது உளற முடியாது?
இருக்குமிடத்தை விட்டு (இலங்கையை )
இல்லாத இடந்தேடி (புலம் பெயர்ந்த நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசு)
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே!
இவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!
இதற்கும் சிலர் மணி கிலுக்குவார் ஞானத்தங்கமே!
“மணியர்” ஏதும் அறியவில்லை ஞானத்தங்கமே!! ஞானத்தங்கமே!!
மணியனின் பாட்டு யோகனுக்கு கரைக்கட்டாத்தானு ருக்கு. அவங்க மூனு னாலு பேருதான் பேரு மாத்திட்டு வருவானுங்க அவங்க எழுத்திக்கு ஆமா போடனும் இல்லன்னா
கோவப்படுவானுக. ஏந்தான் பொல்லாப்புன்னு னா கண்டுக்றதில்ல ,அவங்க பேரு மாத்திக்டாலும் எழுத்து காட்டிக்குடுத்திடுது இப்பெல்லாம் இனியொருவ விட்டுட்டு வேற தழத்துக்கு னாம் போயிடுரதுண்டு.
சுப்பு, நீங்க சொல்லறது நெசமுன்னா ஒண்ணுமே பேசமே போயிடலாமே.
அப்பறம் ஏம் மெனக்கெடரீங்க?
xxx
ராமேஸ்வரம்,சீரங்கம்,பழனி என ஊரெல்லாம் உள்ள திரு தலங்களுக்கு அலைந்து “நரியை பரியாக்கும் வித்தையை “தமிழ்மாறன் கற்றிருக்கிறார்.
ஆளுங்க எல்லாம் வெறுங் கிழவய்ங்க. அவய்ங்க கருத்தும் எழுத்தும் கொழந்தைத்தனமா இருக்கு,