தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகிக்கும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பேரினவாத அரசின் பங்குதாரான வாசுதேவ மந்திரிப்பதவி வழங்கபடுவதற்கு முன்பதாக தமிழ்ப் பேசும் மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்படவேண்டும் என்று கூறி வந்தவர்.
ஒரே நாடு மற்றும் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் சம உரிமைகளை வழங்கி தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ், சிங்கள மக்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தந்திரோபாயத்தையே முன்னெடுக்கின்றது. இது பிழையான செயற்பாடாகும்.
எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாட்டின் எல்லைக்குள் வாழும் ஏனைய மக்களின் தனித்துவத்தைக் கூட அங்கீகரிக்க மறுக்கும் பேரினவாதியான வாசுதேவ நாணயக்கார, இடதுசாரியத்தை அழிக்கும் இன்னொரு விசவேர்.