அடம் வெரிட்டி என்பவருடனான தனிப்பட்ட உறவை அரச விவகாரங்களுடன் தொடர்பு படுத்தினார் என்ற குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து லியாம் போக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை உட்பட பல நாடுகளுடனான அரசியல் நடவடிக்கைகளில் அடம் வெரிட்டியும் தனிப்பட்ட உறவின் அடிப்படையில் லியாம் பொக்சுடன் இணைந்து செயற்பட்டார் என்று ஆதார பூர்வமாக நிறுவப்பட்டதன் பின்னதாக பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் பதவியை துறந்துள்ளார். லியாம் போக்ஸ் பதவியைத் துறந்த ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே லண்டனைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் உரிமையாளரான ஜோன் மோல்டன், தானும் பெருந்தொகைப் பணத்தை லியாம் போக்ஸ் கேட்டுக்கொண்டதன் அடிபடையில் அடம் வெரிட்டிக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டார். இலங்கை அரச விவகாரங்களில் இவ்விருவரும் இணைந்து செயற்பாட்டமையே ஆரம்பச் சர்ச்சைக்கு ஆதரமாக அமைந்தது.