இன்று 30/01/2014 மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகனதாஸ் கரம்சந் காந்தியின் 67 ஆவது நினைவு நாள். தை மாதம் 30 ஆம் திகதி 1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். இந்தியாவின் சுதந்திரதிற்கான போராட்டம் மக்கள் போராட்டமாகக் கம்யூனிஸ்டுக்களாலும் தேசிய வாதிகளாலும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையில் பிரித்தானியர்களின் தேவைக்கேற்ற எதிரியாக உருவாக்கப்பட்டவரே மோகந்தாஸ் காந்தி. காந்தியின் மதவாதக் கொள்கைகளும் அகிம்சை என்ற சத்தியாக்கிரகப் போராட்டங்களும் பிரித்தானியர்களுக்கு எதிரான தேசியவாதிகளும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும், கம்யூனிஸ்டுக்களும் நடத்திய போராட்டங்களைக் காட்டிக்கொடுத்தது.
அதன் மறுபக்கத்தில் காந்தியின் தலைமையில் தோன்றிய இந்திய அதிகாரவர்க்கம் பிரித்தானியர்கள் நாட்டைச் சுரண்ட அனுமதித்த வர்க்கமாக அமைந்தது. இந்தியாவின் உற்பத்திமுறைய நவீனமயப்படுத்த மறுத்த காந்தி நவீனத்துவத்திற்கு காலனிய எஜமானர்களிடம் தங்கியிருக்குமாறு மக்களைக் கோரினார்.
தவிர, தமது அரசியல் உயர் பதவியைப் பயன்படுத்திக்கொண்ட காந்தி சிறு வயது இளம் பெண்களை நிர்வாணமாக்கி அருவருக்கும் அழகுபார்த்து பாலியல் துன்புறுத்தல்களில் ஈட்டுபட்டார் என்ற தகவல்கள் அண்மைக் காலங்களில் வெளியாகின.
இந்தியத் துணைக்கண்டத்தையே அவலத்திற்கு உள்ளாக்கிய மனநோயாளி ஒருவரைப் பற்றிய விம்பத்தை அதிகாரவர்க்கம் திட்டமிட்டுக் கட்டமைத்தது. தேசத் தந்தை என்றது. புத்தருக்கு அடுத்த மகான் என்ற புனைவுகளை ஏற்படுத்திற்று. காந்தியைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட அதே ஒளிவட்டம் இன்றுவரை தொடர்கிறது.
இவை அனைத்தையும் தெரிந்துகொண்டே மக்களை மந்தைகளாகும் கூட்டங்கள் ஆயிரம் காந்திகளை உருவாக்கிக்கொள்வார்கள்.
இவர்கள் மக்கள் மன்றத்தில் நிறுத்தத் தவறினால் பல நூறு வருடங்கள் அழிவுகள் தொடரும்.
What did Mahatma achieve. He created an Indian identity. He along with Sardar Vallabhai Patel and Qaid-de-Azam Mohammed Ali Jinnah are all from Gujarat to begin with. They had the means to go to England to study. Then Law was the only big thing to learn. Gandhi had practiced law in South Africa for two decades. Statue of Unity. Way to go Narendra Modi. You have to beat my friend Manesh Patel. Statue of Liberty. Lalith Sipahimalani. Bombay Bicycle Club, Indianapolis, Indiana, USA.
இந்த ‘மகாத்மா’ என்று அழைக்கப்படும் ‘காந்தி’ ஓர் மேல்தட்டு வர்க்கத்தில் பிறக்காவிட்டால் மகாத்மா ஆகியிருப்பாரா…?
1888 இல் இங்கிலாந்திற்கு சென்று சட்டம் பயின்று இருப்பாரா…?
1893 இல் ஆபிரிக்காவிற்கு சட்ட தொழிலுக்கு சென்று இருப்பாரா…?
அங்கிருக்கும் இந்தியரின் நிலை தெரிந்திருக்குமா…?
1915 இல் இந்தியா திரும்பி சுதந்திரத்திற்க்காக போராடி இருப்பாரா…?
1947 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்குமா…?