ஒரு மாதங்களின் முன்னதாக பிரித்தானியாவில் வேலையற்றோர் தொகை குறைந்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட பிரதமர் டேவிட் கமரன், இன்று நீண்டகாலமாக வேலையற்று உதவிப்பணத்தில் வாழ்வோரின் தொகை தொடர்ந்து அதிகரிப்பதாக ஆதங்கப்படுகிறார். 2.51 மில்லியன் பிரித்தானியர்கள் வேலையற்றோராகப் பதிவு செய்துள்ளனர்.
அரசாங்கம் சிக்கன நடவடிக்கை என்று கூறி வேலை நீக்கம் செய்தமையால் சிவில் சேவையாளர்களின் எண்ணிக்கை 1999 ஆண்டிலிருந்த கணக்கிடப்பட்ட தொகையில் அதி குறைவானதாகக் காணப்படுகின்றது.
சமூக உதவித்திட்டங்களை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு அறிவித்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையின் குளிரில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.