1776 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியாவைப் புயலும் மழையும் தாக்கி அதிக அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. வட இங்கிலாந்து மேற்கு வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தில் புயற்காற்று தொடர்ச்சியாக அழிவுகளை ஏற்படுத்திவருகிறது. இலங்கிலாந்து வானிலை மையம் இப்பகுதிகளைச் சிவப்பு எச்சரிக்கைக்கு உரிய பகுதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
வேல்சில் 87000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுளது. தேம்ஸ் நதியின் அளவு 60 வருடங்களின் பின்னர் உச்சத்தை அடைந்துள்ளது. மேற்கு லண்டன் சரே போன்ற பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. தேம்ஸ் நதிக்கு அருகாமையில் ஆயிரம் வீடுகளிலிருந்து இதுவரை மக்கள் வெளியெற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவல்ல முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தாமதமடைந்ததற்காகவும் டேவிட் கமரனின் பழமைவாதக் கட்சியின் மீது உரிமை அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் குறைகூறுகின்றன. ஐரோப்பாவில் அதிக அளவில் சமூக நலத் திட்டங்களை அழித்து ஏழைகளின் தொகைய அதிகரித்த கமரனின் அரசு 1400 இராணுவத்தை உதவிக்கு அனுப்பியதாக அறிவித்துள்ளது
.
“ஐரோப்பாவில் அதிக அளவில் சமூக நலத் திட்டங்களை அழித்து ஏழைகளின் தொகைய அதிகரித்த கமரனின் அரசு 1400 இராணுவத்தை உதவிக்கு அனுப்பியதாக அறிவித்துள்ளது”, two things to note here. One – what has the reduction of social services got to do with the floods. Two – you make it sound like the army is sent to harm the affected here.