இன்றைய நவதாராளவாத நெருக்கடிக்கும் கொலைகளுக்கும் வித்திட்டவரான இரும்புப் பெண் என அழைக்கப்பட்ட பிரித்தானிய முன்னை நாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணமானார். 1970 களில் அமரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனும் மாக்ரட் தட்சரும் இணைந்தே நவதாராளவாத உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கைக்கு வித்திட்டார்கள். இன்று உலகம் முழுவதும் இனப்படுகொலைகளையும், போர்களையும், அப்பாவி மக்களின் சாரி சாரியாகத்சாகடிக்கும் உலகையும் தோற்றுவித்திருக்கும் இவரது கொள்கைகள் இவரை உலகத் தலைவர்களுள் ஒருவராக்கியது. உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பு, உரிமைப் போராட்டம் நடத்துவோர் மீதான அழிப்பு மனோ நிலை போன்றவற்றைக் கொண்ட பாசிசக் கருத்துக்களை மக்கள் மத்தியில்ல் விதைத்தவர். அயர்லாந்து மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை கோராமாக ஒடுக்கியவர். பலரின் மரணத்திற்குக் காரணமானவர். பிரித்தானியாவின் ஆட்சியிலுள்ள பழமைவாதக் கட்சியும், தாராளவாதக் கட்சியும் எதிர்கட்சியான தொழிற்கட்சியும் பிரித்தானிய மக்களுக்கான மாற்றங்களை ஏற்படுத்திய முக்கிய தலைவரை இழந்துவிட்டது என்று இரங்கல் செய்தி விடுத்துள்ள்னர்.
உலகின் உழைக்கும் வர்க்கதின் பிரதான எதிரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாக்ரெட் தாட்சர், தனது இறுதிக்காலத்தை லண்டனில் வசதிபடைத்த விடுதியான ரிட்ஸ் ஹொட்டேலில் கழித்தார். அங்கேயே இறந்துபோனார்.