.பிரித்தானியா ஹரோ லெஷர் சென்ரனின் முன்னால் அடையாள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று – 26.07.2014- நடைபெற்றது. இரண்டு பிரதான நோக்கங்களை முன்வைத்து ஆர்ப்பட்டம் நடைபெற்றதாக அதன் ஏற்பாட்டாளர்களான பறை- (சுதந்திரத்தின் குரல்) தெரிவித்திருந்தனர். அவர்கள் கூறுகையில், ‘முதலாவதாக இலங்கை அரசுடன் நேரடியாகத் தொடர்ப்புவைத்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் தெரிந்தெடுத்துத் இலங்கை அரச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற கலை நிகழ்ச்சிகளுக்குப் பண உதவி வழங்கி வருகின்றது.
தமிழ்க் கலைகளின் அழிப்பு அசுர வேகத்தில் புற்று நோய் போன்று பரவிவருகின்றது.
இலங்கை அரச ஆதரவுக் குழுக்களின் ஆக்கிரமிப்பு புலம்பெயர் தேசத்தில் நிறுத்தப்படவேண்டும் என்பதே இதன் முதலாவது நோக்கம்.’ என்றனர்.
இரண்டாவதாக, அவலத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் அழிக்கப்பட்டு தென்னிந்தியாவின் வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்கள் நிறைந்த கலாச்சார ஆக்கிரமிப்பு போராட்ட உணர்வுமிக்க புலம்பெயர் தமிழர்களை அழித்து வருகின்றது. இதற்கு எதிரான எதிர்ப்புக்குரல் எழவேண்டும்.
இந்த இரண்டு அடிப்படை நோக்கங்களை முன்வைத்தே அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அதனை முன்னெடுத்த -பறை(சுதந்திரத்தின் குரல்) தெரிவித்தனர்.
தென்னிந்திய சினிமா நடிகர்களைப் பிரதானப்படுத்தி நடைபெற்ற களியாட்ட நிகழ்ச்சிக்கு எதிரான அடையாள ஆர்ப்பாட்ட்டத்தில் நுளைந்த ஜீ.ரி,வி நிர்வாகத்தினர் சிலர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்ட ஏற்பாட்டளர்களிடம் கேட்டபோது ஜீ.ரி.வி நிர்வாகத்தின் அறியாமையையும் முட்டாள்தனத்தையும் இது காட்டுவதாகக் கூறினர். அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் புகுந்திருக்கும் தமிழ் நாட்டின் சினிமாக்கூத்தாடும் தொலைக்காட்சிகள் மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டம் என்றும், புலம்பெயர் மக்கள் மத்தியிலிருந்து தோன்றிய ஜீ,ரி,வி இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த வன்முறைகலந்த எதிர்ப்பு ஜீ.ரிவி இன் ஒட்டுமொத்த நிலைப்பாடா அல்லது சில நிர்வாகிகளின் வரம்பிற்கு மீறிய செயலா என்பது தெளிவற்றிருந்தது.
மக்கள் போராட்டங்களிலிருந்து அன்னியப்பட்டு களியாட்டங்களிலும் பழைமைவாத கலாச்சார கோட்பாடுகளிலும் மூழ்கியிருக்கும் சூழலில் இந்த அடையாள ஆர்ப்பாட்டத்திற்கு அளவுகடந்த வலுவைக் காணலாம்.
புலம் பெயர் போராட்ட வரலாற்றில் அழிக்கப்படும் கலை மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்க நடைபெற்ற முதலாவது அடையாளப் போராட்டம் இது. இங்குள்ள பிழைப்புவாதிகள் உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்து தமிழர்களின் கண்ணீரையும் இரத்ததையும் சதையையும் வியாபாரமாக மாற்றுவது இனிமேல் இலகுவானதல்ல என்பதை இந்தப் போராட்டம் பறைசாற்றியது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆரம்பம் பலரைக் கிலிகொள்ளச் செய்திருக்கும் என்பதை அங்கு தடுமாறி அலைந்த பலரையும் காணும்போது புரிந்துகொள்ளக் கூடியதாக்விருந்தது.
தமிழர்கள் அல்லாத இரண்டு குண்டர்கள் போராட்டத்தை நிறுத்துமாறு மிரட்டியதைக் காணக்கூடியதாகவிருந்தது. அடையாளப் போராட்டம் நிறைவுறும் வேளையில் அங்கு பிரித்தானியப் போலிசார் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் உரையாடியபடி போராட்டம் நிறைவுற்றது.
அற்புதம்
இடம்,பொருள்,ஏவல்,காலம் உணர்ந்து நடத்தப்பட்டசிறந்த போராட்டம்.வாழ்த்துக்கள்.
if you invited the public, more and more people could have come; i, myself heard about this but i did not where it was happening… no contact details.. valuable protest but badly organised…
தர்சினி இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு இங்குள்ள மீடியாக்களின் ஆதரவு (தமிழ் சிஎன்என் அதிர்வு லங்காசிறி மற்றும் வானொலிகள் தொலைகாட்சிகள் ) எவற்றினதும் இல்லை. எனினும் தொடர்து போராடுவோம்.
i went to the program, there were 1000 odd people, we could still hear the drum from outside, im with you guys, yes whatever you did was historical event. everyone was silent, for the 1st time in the history you came out and told the society that you won’t let this go… its just a start.. believe me it will go up to the heights
பேச்சு சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் ஆகியவற்ரை தடைசெய்வதும் பயங்கரவாதம்தான். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாவும் தமிழர்களை சிந்திக்கவும்விடவில்லை சிந்தித்தவர்களை கருத்துக்களைச் சொல்லவும் விடவில்லை.
இவ்வாறான போராட்டங்களே தமிழர்களை சரியெது பிழையெது என்பதனை தீர்மானிக்கவும் செயற்படவும் பங்களிக்கவும் வழிவகுக்கும்..
வாழ்த்துக்கள் ஏற்பாட்டாளர்களிற்கு.