ஐரோப்பியப் பொருளாதாரம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அந்த நாடுகள் மக்களிடமிருந்து வெகு இலகுவாக மறைக்கின்றன. பொருளாதாரத்தை மீளமைக்கிறோம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் திட்டமிட்டு வறிய சமூகம் ஒன்றை உருவாக்கி வருகின்றன அந்த நாடுகளின் அரசுகள். ஆசிய ஆபிரிக்க நாடுகள் போன்ற மூன்றாம் உலக நாடுகளைத் தமது நாடுகளுக்குள்ளேயே உருவாக்கிக்கொள்வதைச் சிக்கன நடவடிக்கை என்றும் புதிய உலக ஒழுங்கு என்றும் கூறுகின்றனர். பிரஞ்சு நாடு மீண்டும் இரட்டிப்பு நெருக்கடிக்கு உள்ளாகின்றது என்று அந்த நாட்டின் தேசியப் புள்ளி விபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுச் சேவையின் தரத்தைக் குறைப்பதனூடாகவும் சமூக நலத்திட்டங்களை அழிப்பதனூடாகவும் 14 மில்லியன் யூரோக்களை 2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு வழங்கும் நிலைக்குப் பிரஞ்சு அரசு தள்ளப்பட்டுள்ளது.
29 வயதிற்கு உட்பட்ட 1.9 மில்லியன் இளைஞர்கள் வேலையற்றவர்களாகியுள்ளனர்.
இதே வேளை 17 ரில்லியன் டொலர்களுக்கு மேலாக உலகம் முழுவதுமுள்ள பணக்காரர்கள் வரி கட்டாமல் கேமன் தீவுகளிலும் பிரிட்டிஷ் தீவுகளிலும் பதுக்கி வைத்துள்ளனர்.








