இலங்கையில் மேற்கிற்கின் நலன்களுக்கும் இந்திய நலன் களுக்கும் இடையேயான பனிப்போர் திவிரமடைய ஆரம்பித்ததன் இன்னொரு வெளிப்பாடு குளோபல் தமிழ் போரம் நிகழ்த்திய மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கலந்து கொண்டமை எனக் கருதப்படுகிறது. இதே வேளை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மெலிபாண்ட் புலி சார் அமைப்பான குளோபல் தமிழ் போரம் நிகழ்த்திய கூட்டத்தொடரில் கலந்து கொண்டமைக்காக ஏலவே கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் மீள் குடியேற்ற விஷயத்தில் இலங்கை அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. இது தொடர்ந்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் தன்னைச் சந்தித்த உலகத் தமிழ் பேரவையினரிடம் உறுதி தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று (24.02.2010) இச்சந்திப்பு நிகழ்வுற்றது.
இலங்கையிலும் இம்மோதல் வெளிப்படையாக ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய சார் தன்னார்வ நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஐரோப்பிய ஒன்றிய நிதியில் இயங்கும் transparency international இற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது என அந்த அமைப்பச் சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.