1987 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடையே இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரைச் சுமந்துகொண்டு இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தந்தின் அடிப்படையில் இலங்கை அரசிற்கு உதவும் நோக்கோடு இலங்கையை ஆக்கிரமித்தது இந்திய இராணுவம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் திட்டமிட்ட யுத்தம் ஒன்றைத் தோற்றுவித்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அதன் துணைக்குழுக்களாக ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ போன்றவற்றை அழைத்து வந்தது. பத்மநாபா மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன், வரதராஜப் பெருமாள் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய அமைதிகாக்கும் படை என்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிரதான துணைக்குழுவாகச் செயற்பட்டது.
பல்வேறு படுகொலைகள், கைதுகள், பாலியல் வல்லுறவு என்று இந்திய இராணுவம் வடக்கையும் கிழக்கையும் கொலைக் கழமாக மாற்றியது.
1989 ஆம் ஆண்டில் வடகிழக்கை விட்டு வெளியேற ஆரம்பித்த இந்திய இராணுவம் தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை உருவாக்கியது. தெருக்களில் நடமாடும் இளைஞர்களைப் பலவந்தமாகக் கைது செய்து உருவாக்கப்பட்ட இந்த இராணுவத்தை சில உளவாளிகள் தலை தாங்கினர்.
தமிழ்த் தேசிய இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த அழிவுகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் தலைமை வகித்தவர்களில் ஒருவர் கேணல்.ஹரிகரன் என்ற இந்திய இராணுவ அதிகாரி.
கேணல் ஹரிகரினின் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வு துறையில் தலைமைப் பதவியை வகித்தவர். இலங்கையில் இந்திய இராணுவத்தின் போர்க்குற்றங்கள் அனைத்திலும் பங்கு வகித்தவர். ஆயிரமாயிரமாய் அப்பாவிகள் கொல்லப்பட்டதன் பின்னணியிலும், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னணியிலும் ஹரிகரனின் பங்கும் இருந்திருக்கிறது.
ஓய்வு பெற்ற பின்னர் இந்த உளவுத்துறை அதிகாரி ஈழப் போராட்டத்தில் தலையிடுகிறார்.
அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் தமிழர்களிடத்தில் இனிப் பிறக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்திய அரசு 80 களில் விடுதலை இயக்கங்களுக்குப் பயிற்ச்யளித்து அழித்ததைப்போன்று மேலும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்ற அச்சம் இக்கருத்து ஏற்படுத்துகின்றது. பிரபாகரனையும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலத்தையும் உளவாளிகள் கூடப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை இது மேலும் தெளிவாகக் காட்டுகின்றது. ஈழப் போராட்டம் என்பது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் இணைந்த போராட்டமாகவன்றி உளவுப்படைகளின் கோரக்கரங்களில் சிக்குண்டிருப்பதை இது காட்டுகின்றது.
1. பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் இனிப் பிறக்கப்போவதில்லை- கேர்ணல் ஹரிஹரன்
2. இலங்கை அகதிகள் தொடர்பில் கேர்ணல் ஹரிஹரன் எச்சரிக்கை! – புலிச் சந்தேகநபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம்.
“அவர்களுக்கு முன்னதாகவே இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்திருந்தது.”
அதன் பின்னரும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்துள்ளார்கள் என்றால்! இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் நலன் குறித்து இரண்டு ஒன்றுக்கு ஒன்று முரண் கருத்தியல் ரோ முன்னாள் அதிகாரியிடம் இருந்து வந்திருகிறது.
இவர்களால் இவ்வாறுதான் ஈழப் பிரச்சினை கையாளப் பட்டிருக்கும் என்பதுக்கு இது சிறு உதாரணம் தான். பல உதாரணங்கள் எம்மை கடந்து தெரிந்தும் தெரியாமலும் போய்விட்டன. இனிமேலும் இதுதான் நடக்கும் அது கரிகரன் வாயில் இருந்து வந்திருக்கிறது.
யாரும் நினைக்க வேண்டாம் பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் இனிப் பிறக்கப்போவதில்லை என கரிகரன் புகழ்வதாக. மாறாக அது அடக்கு முறைக்கு எதிராக போராடும் தமிழ் இனத்திற்கு வேறு ஒரு புரட்ச்சிகர தலைமை கிடைக்கப் போவதில்லை அடங்கி வாழ்தலே சிறப்பு என்ற இந்திய பேராதிக்கத்தின் தமிழர் மீதான எச்சரிக்கை யாகவும் இருக்கலாம்.
வன்னியில் இருந்து அகதியாக தமிழ் நாடு வந்து இருக்கும் அகதிகளை கிஞ்சித்தும் மனிதாபிமான நோக்கற்று புலனாய்வு கண்ணால் நோக்கும் இவர் புனர்வாழ்வு பெற்ற பின்னும் ஏன் தமிழ் நாடு வருவான் எனக் கேட்பதில் அவரின் வக்கிரமா அல்லது முன்னாள் போராளிகள் இலங்கை ராணுவத்தால் புனர்வாழ்வு பெற்ற பின்னும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்ற உண்மையை அறியாத தகவல் வறுமையா? என ஜோசிக்க தூண்டும், ஆனால் ஒன்றும் இல்லை. அடக்கி ஒடுக்கப் பட்டு நிமிர முடியாமல் மிதிபடும் தமிழர்கள் காலதி காலம் நிமிரவே கூடாது என்ற கொடிய ராணுவ புலனாய்வு பாசிச மூளை கரிகரனின் சிந்தனையில் நிழல் ஆடுகிறது அவ்வளவுதான். ஆம் இனிஒரு சொல்வது போல் மோசமான போர் குற்ற வாளியின் வாக்குமூலம் அவ்வளவுதான்.
தமிழினத்திற்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்களை புலிகளாக
காட்டி இலங்கைக்கு அனுப்புவதும். இந்தியாவின் நலன் கருதி
புலிகளின் பெயரால் உளவாளிகளாக செயற்படும் தமிழர்களை
வசதியாக வாழ வைப்பதுமே இந்திய உளவுப்படையினரின் செயல்.
இதனையே இலங்கை அரசும் கடைப்பிடிக்கின்றது.
எல்லாளன் , துட்ட கெமுனுவுடனான போரில் வீரச்சவை தழுவினார்.
போரில் எல்லாளனின் துணிவையும் ,நேர்மையையும் பார்த்து வியந்த கெமுனு எல்லாளனுக்கு அஞஞலி செலுத்த நினைவிடம் அமைத்ததோடு அவ்வழியால் செல்லும் மக்களை அஞஞலி செலுத்தவும் பணித்தான் ..