தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், 200 புலிகளுடன் இருக்கும் அவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை அவரது மகனான சார்ல்ஸ் அன்டனி, புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.